அலைதலும் தனிதலும் -1

அலைந்து திரிதலின் பல நிலைகளைக் கடந்திருப்பதுபோலவே தனித்திருத்தலின் அனுபவங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் தனித்திருத்தல் பத்து வயதில்.

நான்காம் வகுப்பு அரையாண்டுத் தேர்வு விடுமுறை.கமலை வடத்தில் தாவி ஏறிச்சாடித் தடுமாறாமல் இருக்க இரண்டு பக்கத்திலும் கைகளை நீட்டி மாடுகளின் பின்முதுகில் கை வைத்தபோது விழுந்தது ஒரு அடி. இடது பக்க மயிலைக்காளை அடித்தால் முதுகில் விழும். வலதுபக்கச் செவலையின் அடி கன்னத்தில் விழுந்தது.கன்னம் வீங்கியது. கண்ணுக்கு வந்தது கன்னத்தோடு போனது என்று நினைத்திருந்த நேரத்தில் மாட்டு வாலில் கட்டியாக இருந்த சாணித்துகளொன்று கண்ணுக்குள் இறங்கி ஒருவாரத்திற்குப் பின் ரத்தச் சிவப்பில் கொப்பளம் காட்டியது. முலைக்கட்டியிருக்குன்னு பெரியம்மா அத்திபட்டி மாரியம்மனுக்கு விளக்குப் போடுவதாக நேர்ந்தார். வெங்கலத்தாம்பாளத்தில் வெண்சங்குரசி ஒத்தடம் கொடுத்துப் பார்த்தார்கள். வெளிமருத்துவம் தாண்டி அமுதப்பால், நந்தியாவட்டைச் சாறு என்ற கைமருத்துவத்தில் இறங்கி உள்மருத்துவத்திற்கு நகர்ந்தது. ஒருமாதம் பள்ளிக்கூடம் போகவில்லை.
சுத்திப்பட்டிக்கெல்லாம் தாய்க்கிராமம் எழுமலை. அங்கிருந்தவர் அரை வைத்தியர். அவரது பெயருக்குப் பின்னால் பி.எச்.எம்.எஸ். என்று போட்டிருந்ததாக ஞாபகம். கண்ணுக்குள் போடும் ட்யூப் மருந்தொன்றைத் தந்துவிட்டு மதுரையில் போய் கண்ணாஸ்பத்திரி ஒன்றில் காட்டுவதே நல்லது என்று சொல்லிவிட்டார். கண்வலி தீராது என்பதோடு, கண்பார்வையும் போய்விடும் என்று பயமுறுத்தியும்விட்டார். அந்தக் காலத்தில் மதுரையில் புகழ்பெற்ற கண்ணாஸ்பத்திரிகள் இரண்டு. சத்தார் கண்ணாஸ்பத்திரி முதலிடம்; நயினார் கண்ணாஸ்பத்திரி இரண்டாமிடம். நயினார் ஆஸ்பத்திரிக்குப் போவதென்று முடிவானது. அழைத்துப் போகப்போவது மாமா. எங்கள் ஊரிலேயே மதுரைக்கு மாதம் ஒருமுறையாவது போய்வருபவர் அவர்தான். காலையில் போய் மாலையில் திரும்பிவிடலாம் என்றுதான் கிளம்பினோம். மூன்று நாட்கள் காலையிலும் மாலையிலும் வந்து காட்ட வேண்டும் மருந்துபோடுவோம். அதில் சரியாகவில்லை என்றால் அறுவைச் சிகிச்சைதான் என்று சொல்லி விட்டார்கள்.
நினைத்து கவனிக்காமல் விட்ட கண்ணைப் பதம்பார்த்தது. மாடென்றால் இரண்டு கைகளையும் இரண்டு மாடுகளின் தோளில்படித்தபோது. மருத்துவக் காரணமாக
ஆரம்பப்பள்ளிக் காலத்தில் அலைதல் என்பது இல்லவே இல்லை; ஆனால் தனித்திருத்தல் நடந்தது. பத்துநாள் தனியாக - தன்னந்தனியாக இருக்கவேண்டியதாகிவிட்டது. அதுவும் புதிய இடத்தில் அறிமுகம் இல்லாத மருத்துவமனையின் அறையொன்றில்.
காலையில் எழுந்து பள்ளிக்கூடம் கிளம்பும்முன் சில வேலைகள் இருக்கும்.வேலைகள் எளிமையான வேலைகள் தான். காலையில் எழுந்துவிட வேண்டும் என்பதுதான் சிரமம்.
பெரும்பாலும் மாடுகளுக்கும் ஆடுகளுக்கும் சேவை செய்யும் வேலைகள் தான். சூரியன் வருவதற்கு முன்பே எழுந்து மாடுகளுக்குத் தண்ணி காட்ட வேண்டும். கொட்டத்திலிருந்து மாட்டைக் கழற்றிக் குழிதாடிவரை கொண்டுவந்து முதல் கலக்கலைச்செய்துவிட்டுக் கயிறை என் கையில் கொடுத்துவிட்டுப் போய்விடுவார்கள். கொடாப்பைத் திறந்து ஆட்டுக்குட்டிகளை அவைகளின் அம்மாக்கள் படுத்துக் கிடக்கும் இடத்திற்கு ஓட்டிச் சென்று பால்குடிக்கவிட வேண்டும். கிடை இல்லாத நாட்களில் ஆடுகள் எப்போதும் சாவடி முன்னாலோ ஓடைக்கரையிலோ கமலை இறைப்புக்கு ஒருஜோடி காளைகள் எப்போதும் கட்டுத்தறியில் இருக்கும். பாலுக்காகவும் நெய்க்காகவும் ஒரு பசுமாடு என்று சொல்வதைவிடக் குறிப்பிட்ட இடைவெளியில் போடும் கன்றுக்குட்டிக்காகவே மாடு வளர்த்தார்கள். இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை ஆடுகளோடும் மாடுகளோடும் தொடர்புடைய வேலைகள் தான். அந்தக் காலத்தில் எங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்