மெல்லினக்கவிதைகள் - ஒரு குறிப்பு

 நேர்க்காட்சிகளாகவும், கற்பனையாகவும் காட்சிச்சித்திரங்களை வரைபவர்கள் மென்வண்ணங்களால் தீட்டும்போது வெளிப்படுவது வரையப்படும் ஓவியக்காட்சிகளின் மென்மையியல் மட்டுமல்ல; வரையும் ஓவியரின் மென்மைக்கலையியலும் அழகியலும் தான்.

அதே நிலையைத்தான் மென்சொற்களால் கவிதை எழுதும் கவிகளும் செய்கிறார்கள். அடுக்கி அடுக்கி உருவாக்கப்படும் காட்சிக்குள் ஒரு பூனையின் மியாவ்வயும் வண்ணத்துப்பூச்சியின் அசைவையும் எழுதிக்காட்டும்ப்போது நிகழ்காலத்தின் வெளிப்பாடுகளாக விரிந்துள்ளன. அதற்குப் பதிலாகத் தன்னையே - தன்னையொத்த ஒரு பெண்ணைத் திரியவிடும்போது இழந்ததின் மீட்பலைகளாக விரிந்து ஒரு மெல்லிய சோகசித்திரத்தை உருவாக்கிவிடுகின்றது. முதல் கவிதையில் உருவாக்கப்படும் சோகம், மற்ற இரண்டு கவிதைகளிலும் ரசனையின் வெளிப்பாடுகளாகவும் உயிர்களின் மீதான பற்றுதல்களாகவும் வெளிப்பட்டுள்ளன.

கவிதை உருவாக்கும் அழகியல் என்பது எழுதிக்காட்டப்படும் சித்திரிப்புகளின் வழி உருவாக்கப்படும் உணர்வுகளால் கடத்தப்படுகின்றன. கவி. இன்பாவின் இந்தக்கவிதை அதை மட்டுமே செய்திருக்கின்றன. வேறெங்கும் கண்களைச் சுழற்றவே இல்லை. வாசிப்பவர்களையும் அவரது கண்கள்வழியே பயணிக்கக்கோருகிறது. ஆனால் வாசிப்பவர்கள் கண்களின் நாலாபக்கமும் சுழலும் என்பதும், அதன் வழியாக உருவாகும் நினைப்புகளுக்குக் காரணங்களைத் தேடவும் செய்யவும் வாய்ப்புண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

நவீனத்துவமும் பாரதியும்

தணிக்கைத்துறை அரசியல்