மூன்று குறிப்புகள் -ஒரு விளக்கம் -சில தகவல்கள்,
கி.ரா. நினைவரங்கம்
திருநெல்வேலிக்குப் போய்த்திரும்பும் ஒவ்வொரு முறையும் கோவில்பட்டியில் அமைந்துள்ள அந்த நினைவரங்கத்திற்குச் சென்று பார்த்துவரவேண்டும் என்று நினைப்பதுண்டு. ஆனால் கோவில்பட்டிக்குள் நுழையாமல் தாண்டிச்செல்லும் இடைநில்லாப் பேருந்துகளில் ஏறிவிடுவதே பெரும்பாலும் நிகழ்ந்துவிடும். அதனால் கி.ரா. நினைவரங்கத்தைப் பார்ப்பது தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது. நாகம்பட்டி மனோ கல்லூரியில் நடக்கும் கவிதைப் பயிலரங்குக்குக் கோவில்பட்டிக்குள் சென்று இன்னொரு பேருந்தில் ஏறித்தான் செல்லவேண்டும் என்பதால் இந்த வாய்ப்பு கிடைத்துவிட்டது.
பயிலரங்கின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் இரா.சேதுராமனிடம் என் விருப்பத்தைச் சொன்னபோது மாற்று ஏற்பாடாக இருசக்கர வாகனப் பயணத்தைச் சொன்னார். 25 கிமீ. தூரத்தைப் பின் சீட்டில் உட்கார்ந்து பயணிக்கும் சிரமம் இருந்தாலும் நினைவரங்கத்தைப் பார்த்துவிட்டுப் பேருந்து நிலையம் சென்று திருமங்கலம் பேருந்தைப் பிடிக்க நல்லதொரு ஏற்பாடாகத் தோன்றியது. வந்து பார்த்துவிட்டுத் திரும்பினேன்.
நினைவகத்தை எப்படிப் பயன்படுத்துவது என்ற முன் திட்டம் எதுவும் இல்லாமல் நினைவரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைப் பராமரிக்கப் பணியாளர்கள் எல்லாம் இருக்கிறார்கள். ஆனால் பார்க்கப் போகிறவர்களுக்குப் பார்ப்பதற்குக் கட்டடம் மட்டுமே உள்ளது. கி.ராவை நினைத்துக்கொள்ளவும் அறிந்து கொள்ளவும் எதுவும் இல்லை. எட்டயபுரத்தில் இருக்கும் பாரதி நினைவகங்கள் அளவுக்காவது உருவாக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் கோவில்பட்டியிருந்து ஏற்பாடு செய்யப்படும் கல்வி/இலக்கியச் சுற்றுலா ஏற்பாடுகளுக்குள் எட்டயபுரம், ஒட்டப்பிடாரம், கயத்தாறு, பாஞ்சாலங்குறிச்சி முதலான இடங்களை உள்ளடக்கிய ஒரு நாள் சுற்றுலாவைப் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஏற்பாடு செய்து கி.ரா.நினைவரங்கத்தையும் உள்ளடக்கச் செய்யலாம். அதற்கு முன்பு அங்கே செய்யவேண்டிய நூலகங்கள், காட்சிப்பொருட்கள், வாசிப்புக்கூடம், கரிசல் சொற்களின் ஓசைநயத்தையும் நாட்டார் கதைகளையும் சொல்லிக்கொண்டிருக்கும் ஒலிப்புக்கூடத்தையும் உருவாக்க வேண்டும். இந்த முயற்சியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தையோ அதன் கீழ் இயங்கும் கல்லூரியையோ உள்ளடக்கவேண்டும். இல்லையென்றால் அழகாக உருவாக்கப்பட்டுள்ள வளாகம் பயன்பாடு இல்லாமல் போய்விடும்.
வட்டப்பாதையின் புதிர்த்தன்மை
தொன்மையைத் தேடுதல், பழம்பெருமை பேசுதல், பொற்காலங்களைக் கண்டறிதல் போன்றன வலதுசாரிகளின் கருத்தியல் செயல்பாடு என்று விமரிசனம் செய்த கட்டுரைகளை எழுதியவர்கள் இடதுசாரித் திறனாய்வாளர்கள். திராவிட இயக்கத்தலைவர்களும் மேடைப்பேச்சாளர்களும் சங்ககாலத்தைப் பொற்காலமாகவும், பிற்காலச் சோழர்காலத்தைப் பாராட்டத்தக்க நிர்வாக நடைமுறைகள் உருவான தமிழ் மன்னராட்சிக் காலமாகவும் எழுதியும் பேசியும் வந்தபோது அவற்றை மறுத்துப் பொற்காலக்கனவுகள் நிகழ்காலத்து வாழ்க்கையை மாற்றாது; எதிர்காலத்திற்கான போராட்டங்களை முன்னெடுக்கத் தடைகளாக இருக்கும் எனப்பேசினார்கள் மார்க்சிய அடிப்படையிலான வரலாற்றுப் பொருள்முதல்வாத ஆய்வாளர்கள். இயங்கியலின் அடிப்படையில் வரலாற்றைப் பேசவேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் அண்மைக்காலப் போக்குகள் அப்படியே தலைகீழாக மாறிவிட்டன.
பழைய பொற்காலக் கனவுகளைக் கைவிட்டுவிட்ட வலதுசாரிகள் உலகமயம் என்னும் நிகழ்காலப் போக்கோடு விவாதங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனைப் புரிந்துகொண்டு பெருந்திரள் மக்களைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைக் கைக்கொண்டு தேர்தல் அரசியலில் வெற்றிகளைப் பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இடதுசாரி எழுத்தாளர்களும் பண்பாட்டு அமைப்புகளும் தொன்மையைத் தேடிக் கொண்டிருக்கின்றன. பழையனவற்றைக் கண்டுபிடிக்கும் தொல்லியல் ஆய்வுகளில் ஈடுபடுதல், வரலாற்றுப்புனைவுகளைப் படைத்துப் பின்னோக்கி நகர்த்துதல் எனச் செயல்படுகின்றார்கள். அரசியலை ஆணையில் வைப்போம் எனப் பேசி வழிகாட்ட வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னொரு பாதையில் பயணிக்கின்றன. இந்த மாற்றம் வரலாறு வட்டப்பாதையில் பயணிக்கும் ஒன்று என நம்பும் ஒன்றாக ஆகியிருக்கிறது.
உயிர்மை வெளியிட்ட நான்கு நூல்களில் மூன்று நூல்களை வாசித்திருக்கிறேன். பாலபாரதியின் புகாரற்ற கூழாங்கற்கள் என்ற கவிதை நூலின் சில கவிதைகளை மேடையில் வைத்து வாசித்தேன். விவரிப்பின் வழியாகக் காட்சிப்படுத்துதல் வகைக்கவிதைகளாக இருந்தன. ஆத்மார்த்தியின் கத்திரிப்பு - சிறுகதைத்தொகுப்பில் உள்ள 9 கதைகளில் பாதிக்கும் மேல் அச்சில் வந்தபோதே வாசித்துள்ளேன். தலைப்புக்கதையான கத்தரிப்பூ வந்தபோதே அது குறித்து எழுதியதுண்டு. பரிசல் கிருஷ்ணாவின் கையெழுத்தில் உருவான மையல் தொகுப்பிலுள்ள மனுஷ்யபுத்திரனின் காதல் கவிதைகளும் முன்பே வாசித்தவையே. சில ஆயிரம் காதல் கவிதைகளில் 153 கவிதைகளைத் தேர்வு செய்த பரிசல் கிருஷ்ணாவின் காதல் மனம் என்னவென்று தொகுப்பாக வாசிக்கும்போது தோன்றலாம்.
இந்த மேடையில் பேசுவதற்காக ரமலோவ் நாவலிலிருந்து எடுத்த குறிப்புகள் எதனையும் மேடையில் சொல்லவில்லை. அந்நாவலைப்படித்த உடன் இதற்கு முன்பு கடல் பற்றி எழுதப்பட்ட பல பனுவல்கள் எனக்குள் வந்தன. முதலில் வந்தது பட்டினப்பாலை. ஆனால் இது நாவல் என்பதால் வண்ணநிலவனின் கடல்புறத்தில், தோப்பிலின் ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், பானுமதி பாஸ்கோவின் கடலோரகிராமம், ஜோ.டி.குரூஸின் ஆழிசூழ் உலகு, கொற்கை எனத்தமிழில் படித்த நாவல்களோடு கடலும் கிழவனும், செம்மீன் என மொழிபெயர்ப்பில் வாசித்தவைகளும் வந்தன. அத்தோடு ஜே.எம்.சிஞ்சின் ரைடர்ஸ் ஆப்தி சீ என்ற நாடகமும் நினைவுக்கு வந்தது. இரண்டு தடவை பார்த்த நாடகம். நினைவுக்கு வந்த இன்னொரு நாடகம் சாபம் - எஸ்.டி. கோலரிட்ஸின் "ரைம்ஸ் ஆப் ஏன்சியண்ட் மெரினர்ஸ்" என்ற கவிதையை நாடகமாக்கி மேடையேற்றினோம். இயக்கியவர் வங்கதேச ஆய்வு மாணவர் செஸ்துர் ரகுமான்.
இவை எல்லாம் தந்த அனுபவங்களைத் தாண்டிய அனுபவங்களைத் தரும் நாவலாகச் சரவணன் சந்திரனின் 'ரமலோவ்' இருக்கிறது. தமிழில் ஒவ்வோராண்டும் உலக நாவல் இலக்கியத்தின் உரிப்பொருள்களை எழுதும் - உலக நாவலாசிரியர்களின் எடுத்துரைப்புக்கீடாகச் சொல்முறையைக் கையாளும் நாவல்கள் ஒன்றிரண்டாவது வந்துகொண்டிருக்கின்றன. இந்த ஆண்டு -2025 இல் வந்துள்ள இந்த நாவல் -ரமலோவ் - அப்படியொரு நாவல். எனது கூற்றுப் பொய்யெனச் சொல்ல நீங்கள் நாவலை வாசித்துவிட்டுப் பேசவேண்டும். மதுரைப் புத்தகக் கண்காட்சியில் வாங்க வேண்டிய நாவல். வாழ்த்தும் பாராட்டும் சரவணன் சந்திரனுக்கு
ஒரு விளக்கம்

புதிய நாவல் வெளியீடு

சரவணன் சந்திரனின் 'ரமலோவ்' நாவலை வெளியிட்டுச் சுருக்கமாக வாழ்த்துரை சொல்லவேண்டும் என்பது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரின் வேண்டுகோளாக இருந்தது. 'வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லாதவன்' என்பதான எண்ணம் கொண்டிருப்பவர் உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்யபுத்திரன். அந்த நல்லெண்ணத்தை எப்போதும் கெடுப்பதில்லை.

ரோஜாவின் பெயர் - என்ற தலைப்பில் உம்பர்ட்டோ ஈக்கோவின் நாவல் எம்.டி.முத்துக்குமாரசாமியின் மொழிபெயர்ப்பில், எதிர் பதிப்பகம் வழியாக வெளிவந்து நல்ல கவனம் பெற்றுவருவதைக் கடந்த 10 நாட்களாக முகநூலின் பல பதிவுகள் காட்டின. நாவல் பரபரப்பான விற்பனையில் இருப்பதால் இன்னொரு பரபரப்பும் அதனோடு சேர்ந்து
கொண்டிருக்கிறது.எம்.டி.முத்துக்குமாரசாமியின் முதல் மனைவி மரணம் தொடர்பில் அப்போது செய்தித்தாள்களிலும் வார இதழ்களிலும் வந்த செய்திகளின் அடிப்படையில் கோமதி எழுதி ஊடகம் இதழில் வந்த கட்டுரையை -30 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது பகிர்ந்து பரபரப்பை உண்டாக்குவதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. அந்தக் கட்டுரையை எழுதிய கோமதி இப்போதும் அதே நிலைபாட்டோடு நிவேதிதா லூயிஸின் பதிவில் பின்னூட்டம் இட்டுள்ளார். ஆனால் அந்தப் பொய்யைப் பரப்பியவர்கள் பேரா. அ.ராமசாமியும் ரவிக்குமாரும் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) என்று இன்னொரு அவதூறைப் பரப்புகிறார் பொதியவெற்பன் என்று தெரிகிறது (அவர் எனது நட்புப்பட்டியலில் இல்லை) . எனது பெயரையும் ரவிக்குமாரின் பெயரையும் குறிப்பிட்டுச் சொல்வது அவதூறு மட்டுமல்ல; நீண்ட கால வன்மத்தின் வெளிப்பாடு.
பாண்டிச்சேரி பல்கலைக்கழக நிகழ்கலைப்பள்ளியில் பணியாற்றியபோது எனது முகவரியிலிருந்து ஊடகம் என்றொரு இதழ் வந்தது. தகவல் தொடர்பு சாதனங்களான திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், அச்சு இதழ்களின் வழியாகப் பண்பாட்டு அரசியலின் போக்குகள் எப்படிக் கட்டமைக்கப்
முதல் இதழ் வந்தபோது ஆசிரியர் குழுவில் என்னோடு இன்னும் மூன்று பேர் இருந்தனர்.அவர்கள் அருணன், ப்ரதிபா ஜெயச்சந்திரன், குமார். இரண்டாவது இதழின்போது மதுரை நண்பர்கள் ஊடகத்தின் ஆசிரியர் பொறுப்பில் இருக்க விரும்பவில்லை எனச் சொன்னதால் குமார் பெயர் நீக்கப்பட்டது. நாங்கள் மூவர் மட்டுமே இருந்தோம். கோமதி எழுதிய கட்டுரையை வெளியிடுவது தொடர்பில் நடந்த விவாதங்களுக்கு ஆதாரங்கள் இப்போது இல்லை. ஆசிரியர் குழு நண்பர்களின் கருத்துக்களின் மீது இன்னொருவர் தலையிடுவது இல்லை.ஆசிரியர் குழுவில் இருந்த அருணன் கோமதியின் கணவர். ஆசிரியர் குழுவில் இருந்த மூவரில் நானும் ஒருவன் தான். நானே தீர்மானிப்பவன் அல்ல ரவிக்குமார் ஊடகத்தில் எழுதினார்.அவ்வளவுதான். ஆனால் பொதியவெற்பன் நாங்கள் தான் அந்தப் பொய்யைப் பரப்பினோம் என்று சொல்கிறார்.
இதன் மேல் எனது நிலைபாடு இதுதான்: கருத்தியல் தளத்தைவிடச் செயல்பாட்டுத்தளமே முதன்மையானது என நினைப்பது ஒரு பார்வை. குறிப்பாக அடையாள அரசியலை மையப்படுத்திச் செயல்பாட்டுத் தளங்களில் இயங்குவதாக நினைப்பவர்களின் வாதங்கள் கருத்தியல், இலக்கியப்பெறுமதி, கலை, இலக்கியங்களின் உருவாக்க மனநிலை போன்றவற்றை இரண்டாம் நிலையில் வைத்துப் பேசுகின்றன. எப்போதும் அதனைக் கொண்டே எல்லாவற்றையும் எடைபோடவேண்டும் என நினைக்கிறார்கள். அதனைத் தவறெனச் சொல்வதற்கில்லை. அவர்களின் நிலைபாடு அது. இளம்பருவத்தில் அத்தகைய கோளாறுகளுடன் நானும் அப்படி இருந்திருக்கிறேன்.
************************
-The Name of the Rose (Italian: Il nome della rosa [il ˈnoːme della ˈrɔːza]) is the 1980 debut novel by Italian author Umberto Eco. It is a historical murder mystery set in an Italian monastery in the year 1327, and an intellectual mystery combining semiotics in fiction, biblical analysis, medieval studies, and literary theory. It was translated into English by William Weaver in 1983.

படுகின்றன என்பதை முதன்மையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பெயர் சூட்டப்பட்டது. முதல் இதழில் பெரும்பாலும் எங்கள் நோக்கத்தில் பிசகாமல் கட்டுரைகளை வெளியிட்டோம். ஆனால் இரண்டாவது இதழில் கொஞ்சம் விலகல் நடந்தது. அப்படியான விலகலில் கோமதி எழுதிய அந்தக் கட்டுரையும் வெளியிடப்பட்டது.

கருத்துகள்