பெங்களூரில் புக்பிரும்மா இலக்கியவிழா
உலக அளவில் நடக்கும் இலக்கியவிழாக்கள் சிலவற்றைக் கடந்து செல்லும் பார்வையாளனாகப் பார்த்துக் கடந்துவந்துள்ளேன். இந்திய அளவில் நடக்கும் இலக்கியவிழாக்களில் வெளியிலிருந்து பார்க்கும் இலக்கியமாணவனாகவும், அழைக்கப்பட்ட பார்வையாளராகவும் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தவனாகவும் இருந்துள்ளேன். தமிழ்நாட்டில் நடக்கும் சில இலக்கிய விழாக்களில் பங்கேற்புச் செய்து கலந்துகொண்டிருக்கிறேன்.
நாடகத்திற்கு மட்டுமாக இந்திய அரசாங்கத்தின் சங்கீத் நாடக அகாடெமி நடத்திய மண்டல, தேசிய நாடக விழாக்களில் பங்கேற்றுள்ளேன். விவாதங்களில் கலந்து கொண்டதுண்டு. அதுபோன்ற இலக்கிய/நாடகவிழாக்களை நடத்தும் வாய்ப்பைப் பரிசீலனை செய்யும்படி நான் இருந்த அமைப்புகளில்/நிறுவனங்களில் அவ்வப்போது முன்வைத்துள்ளேன். மதுரை நிஜநாடக இயக்கம் மதுரையில் சில நாடக விழாக்களைத் தமிழக எல்லைக்குட்பட்டதாக நடத்தியுள்ளது (1988 ,1990,1992). அவ்விழாக்களின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவனாக இருந்த நினைவுகள் இப்போதும் இருக்கின்றன.புதுவைப்பல்கலைக்கழகத்தில் இருந்தபோது நாடகவியலாளர்கள் சந்திப்பு ஒன்றை -1994 இல் நடத்தினோம். தென்னிந்திய மொழிகள் அளவில் இலக்கியத் திருவிழா ஒன்றைக் கோவை குமரகுரு கல்வி நிறுவன வளாகத்தில் நடத்திடத் திட்ட வரைவொன்றை அளித்தேன். ஆனால் கைகூடவில்லை.

புக் பிரம்மா இலக்கியவிழாவின் நிகழிடம் பெங்களூரு நகரின் புகழ்பெற்ற கோரமங்களாவிலுள்ள மருத்துவக்கல்லூரி வளாகம் அதன் செயிண்ட் ஜான் அரங்கமே மொத்த நிகழ்வுகளின் இடம். அங்குள்ள விடுதி அறைகளிலேயே தங்கும் வசதிகளும் உணவுக்கூடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. ஒவ்வொரு நாளும் காலையில் இசைநிகழ்ச்சி, பின்னர் தொடர்ந்து இரண்டு பொது அமர்வுகள்; பொது அமர்வுகளின் உரைகள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் மண்டபம் எனப் பெயரிடப்பட்டுள்ள பேரரங்கில் நடந்தன. அதில் 750 பேர் வரை அமர்ந்து கேட்கலாம்; பார்க்கலாம்.தென்னிந்திய மொழிகளான கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளுக்குமான சிறப்பு அரங்குகள் 75 -100 வரை அமரக்கூடிய சிற்றரங்குகளில் நடந்தன. அவற்றுக்கு மத்தனா, அக்சரா, அங்கலா,அனவரனா, புஸ்தகா, சின்னர லோகா, முகாமுக்தி எனப்பெயரிடப்பட்டு விதம்விதமான நிகழ்வுகள் நடக்கின்றன. பேச்சுகள் மட்டுமல்லாது சிறுவர்களுக்கான கதைசொல்லல், ஓவியக்காட்சிகள், புத்தக வெளியீடுகள், பனுவல் வாசிப்புகள், புத்தக விற்பனைக்கூடத்தில் கண்காட்சிகள் என முழுமையாக இலக்கியத்தோடு தொடர்புடைய ஒவ்வொன்றும் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

திட்டமிட்டுக் கொண்டபடி காலை 10 -12 வரை பேரங்கில் நடந்த அமர்வுகளில் புக்கர் விருதுக்குப் பின்னால் என்ற தலைப்பிலும், மொழிகளின் எல்லைகளைத் தாண்டி என்ற தலைப்பிலும் நடந்த அமர்வுகளில் கவனிக்கவேண்டிய புள்ளிகள் பேசப்பட்டன. புக்கர் விருதுபெற்ற பானு முஸ்தாக்கும் அவரது கதைகளை ஹார்ட் லாம்ப் என மொழிபெயர்ப்பு செய்த தீபா மஸ்தியும் மேடையிலிருக்க, அவர்களோடு கனிஸ்கா குப்தா, மௌதுஷி முகர்ஜி சுவேதா எர்ரம் ஆகியோர் கலந்துரையாடினார்கள். மூலப்படைப்பு, மொழிபெயர்ப்பு குறித்த முரண்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டன என்றபோதிலும் கவனமாக இரைச்சலின்றி நடந்து முடிந்தது. அத்தோடு இந்திய இலக்கியத்தின் சில கூறுகளை விளக்கிப் பேசிய அந்த அமர்வு ஒரு மணிநேரத்தில் நிறைவுற்றது. தொடர்ந்து நடந்த அமர்வில் ஜெயந்த கைக்கினி, கார்லோஸ் தமிழவன், கே.ஆர்.மீரா, சி.மிருணாளினி. ஜெயமோகன், ஆகியோருடன் சுசித்ரா ராமச்சந்திரன் விவாதங்களை எழுப்புவராக இருந்தார். வீட்டு மொழி ஒன்றாகவும் எழுத்து மொழி ஒன்றாகவும் இருக்கும் சூழல், பொது மொழியிலிருந்து விலகி வட்டாரமொழியில் எழுதும் போக்கு போன்றன அந்த அமர்வில் விவாதப்பட்டன. இந்த அமர்வில் இடைக்காலத்தில் பக்தி இலக்கியங்கள் வழியாகத் தென்னிந்திய மொழிகளுக்கிடையே நிகழ்ந்த ஊடும் பாவுமான தாக்கங்களை விவாதப்படுத்தியது குறிப்பிடத்தக்க ஒன்று. அந்த விவாதத்தை முன்னெடுத்தவர் மிருணாளினி என்னும் தெலுங்கு மொழிக்காரர்.
இவ்விரண்டு அமர்வுகளுக்குப் பிறகு நாவல் இலக்கியம் பற்றிய இரண்டு அமர்வுகளில் முழுமையாக இருந்தேன். முதல் அமர்வு நான் பங்கேற்ற அமர்வு. புதிய நூற்றாண்டில் புதிய நாவல்கள் என்ற தமிழ்நாவல்கள் அமர்வில் அண்மைக்கால நாவல்களின் போதாமையை நாவலாசிரியர்கள் மூவரும் முன்வைத்தனர். நாவல்களுக்குள் தத்துவம், உரிப்பொருள் சார்ந்த வாழ்வியல் உண்மை, வெளிப்பாட்டு முறையிலும், பாத்திர உருவாக்கத்தில் முழுமையின்மை போன்றவற்றைச் சுட்டிக்காட்டினர். அந்த முன்வைப்புகள் எப்போதும் தமிழ்ச் சிற்றிதழ் மரபினரின் சொல்லாடல்கள் தான். ஆனால் எனது உரையில் 2000 -க்குப் பின் தமிழ்நாவல் எழுத்துகளில் அலைவுறு வாழ்க்கையும் இடப்பெயர்வுகளும் எழுதப்படுகின்றன. அவற்றின் விவரிப்பில் பண்பாட்டு நிலவியல் விவரணைகள் அதிகம் காட்சிப்படுத்தப்படுகின்றன என்பதைச் சுட்டிக்காட்டியதோடு வட்டார நாவல்கள் மறைந்து இனவரைவியல் நாவல்கள் எழுதப்படுகின்றன. அவை தமிழின் ஐந்நில அடையாளம் உருவாக்கலை நோக்கி நகர்ந்துள்ளது என்பனவற்றைக் குறிப்பிட்டேன். அத்தோடு எழுத்தாளர்கள் தங்களது எழுத்து வழியாக உருவாக்கப்பட்ட அடையாளத்தை அழிப்பதை மனதில் கொண்டு தொடர்பற்ற நாவல்களை எழுதத்தொடங்கியிருக்கிறார்கள். அதன் பின்னணியில் பின் நவீனத்துவத்தின் சூழல் இருக்கிறது என்பதையும் சொன்னேன். அந்த அமர்வுக்குத் தமிழ்நாட்டிலிருந்து வந்த எழுத்தாளர்களும் பெங்களூரு நகரிலிருந்து பங்கேற்ற பார்வையாளர்களுமாக வந்து நிரம்பியிருந்தார்கள். தமிழ்நாட்டில் இப்படியொரு கலந்துரையாடல் நடந்தால் இவ்வளவு பேர் பங்கேற்பாளர்களா? என்றொரு கேள்வியை அமர்வின் முடிவில் சொல்லிக் கொண்டே வெளியேறினார். குறிப்பிட்டேன்.

அங்கிருந்து வெளியே வந்தபோது முன்னோடி எழுத்தாளர்களோடு உரையாடும் முகாமுக்தி – நேர்காணல் ஒரு மரத்தடி நிகழ்வாக நடந்துகொண்டிருந்தது. எழுத்தாளர் ஜெயமோகனோடு நடந்த அந்த உரையாடலை இருந்து கேட்க முடியவில்லை. ஒலிபெருக்கி வசதி இல்லாத நிலையில் பின்வரிசையில் இருந்தவர்களுக்கு எதுவும் கேட்கவில்லை. அதனால் பக்கத்தில் இருந்த புதிய புத்தகங்களில் இருந்து பக்கங்கள் வாசிக்கப்பட்ட அரங்கில் இருந்து கேட்டேன்.
பிற்பகலில் நடந்த இரண்டு தமிழ் அமர்வுகளை முழுமையாகக் கேட்க முடியவில்லை. தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைப்பேராசிரியர் இரா.காமராசு, சென்னை வைணவக்கல்லூரிப் பேராசிரியர் எம். எழுமலை, நாட்டுப்புறக்கலைஞர் அம்பிகாவதி ஆகிய மூவரும் பங்கேற்ற நாட்டார்கலைகள் -தொன்மையும் வரலாறும் என்ற அமர்வும், தமிழகச் சிற்பக்கலை குறித்த அமர்வுமாகும். அந்த அமர்வில் கிறித்தவக்கல்லூரியின் ஓய்வுபெற்ற பேரா. பாலுசாமியுடன் அவரது மாணவர் முனைவர் ரவிக்குமாரும் முனைவர் முருகனும் உரையாடினார்கள். பேரா. பாலுசாமியின் ஆய்வேடு சிற்பக்கலை குறித்த ஒன்று என்பதைப் பலரும் அறிந்திருக்கக் கூடும். இரண்டையும் கொஞ்சம் கொஞ்சம் பார்த்துவிட்டு நகரவே முடிந்தது.
இதன் பிறகு மலையாளத்தில் உருவாகிவரும் புதிய நாவல் குரல்களை விவாதப்படுத்திய அமர்விலும் முழுமையாக இருந்தேன். மலையாளத்தை வாசிக்கவும் பேச்சைக் கேட்கவும் முடியும் என்பதால் மலையாள அமர்வுகளைத் தேடிய மனம். முகம்மது அப்பாஸ் ஒருங்கிணைத்த அமர்வில் பினேஷ் புத்தப்பணம், நிம்ன விஜயன் என இரண்டு இளம் எழுத்தாளர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பு செய்த அப்பாஸ் இளையவர்களின் எழுத்தின் நுட்பங்கள், வாசகப்பரப்பு, புதியனவற்றைக் கண்டுபிடித்து எழுதும் தன்மை போன்றனவற்றைப் பேசவைத்தார். இருவரும் தங்கள் நாவல்களின் ஊடாகப் பயணம் செய்து பார்வையாளர்களின் கைதட்டலைப் பெற்றார்கள். முதல் நாள் கலந்து கொண்ட அமர்வுகள் அவ்வளவுதான். ஆனால் மாலையில் நிகழ்த்துகலைக்காகக் காத்திருந்து பங்கேற்றேன்.
இரண்டாம் நாளில்...
இலக்கிய விழா நடக்கும் வளாகத்தைப் புல்லாங்குழல் இசைபரவி வரும்போது காலை உணவுக்கூடத்தில் இருந்தேன். வேகம் கூட்டிக் காலை உணவை முடித்துவிட்ட் பேரரங்கில் நுழையும்போது அரங்கின் பாதி நிறைந்திருந்தது. புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியின் முடிவில், இலக்கியப்பனுவல்களும் கருத்தியல்களும் என்ற பொருண்மையிலான அமர்வு தொடங்கியது. இலக்கியப்பனுவல்களுக்குள் மறைந்திருக்கும்ம் கருத்தியல்களால் இலக்கிய உருவாக்கம் தடையாகிவிடுகின்றது என்ற கருத்தின் மேல் நடந்த விவாதமாகக் கட்டமைக்கப்பட்டிருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளரும் பத்தி எழுத்தாளருமான அனுஜா சந்திரமௌலி(சிவகாசி) ஒருங்கிணைத்த அந்த அமர்வுக்கு சொற்களும் சொற்களும் எனத் தலைப்பிடப்பட்டிருந்தது. கன்னடத்தின் நாடகக்காரரும் கவியுமான ஹெச். எஸ்.சிவப்பிரகாஷ், மலையாளத்திலிருந்து பால் சக்கரியா, தெலுங்கிலிருந்து வோல்கா ஆகியோருடன் தமிழ்நாட்டிலிருந்து அஜீதன் பங்கேற்றார். மற்ற மூவரும் தங்கள் எழுத்துகளுக்குள் ஊடாடும் அரசியல், சமூகக் கருத்தியல் நிலைபாடுகளை முன்வைத்து விவாதித்தார்கள். அதைச் செய்யும் அனுபவம் இல்லாத நிலையில் அஜீதன் தன்னையொரு தத்துவத்துறை மாணவர் என்பதைக் காட்டும் விதமாக விவாதத்தில் பங்கேற்றார். சாதிகளின் நாடான இந்தியாவில் யாருடைய மரபை எழுதுவது முதன்மை பெறுகிறது என்ற நோக்கில் விவாதித்த அடுத்த அமர்வில் என்னால் முழுமையாக இருக்க முடியவில்லை. தொடர்ந்து தமிழ் அமர்வுகள் இருந்ததே காரணம்.
இளையதலைமுறையின் சிறுகதைகள் சாதனைகளும் சாத்தியங்களும் எனத்தலைப்பிடப்பட்ட அந்த அமர்வை ஒருங்கிணைத்தவர் மூத்த சிறுகதை ஆசிரியர் எம்.கோபாலகிருஷ்ணன். அவரோடு இன்னொரு மூத்த எழுத்தாளர் இமையமும் பங்கேற்றார். இளைய தலைமுறைச் சிறுகதை ஆசிரியர்களாக மயிலன் சின்னப்பன், அகரமுதல்வன், லாவண்யா ஆகியோர் பங்கேற்று அவரவர் பார்வையில் பெயர்களையும் போக்குகளையும் சுட்டிக் காட்டினார்கள். நேற்று நாவல் அமர்வில் நான் முன்வைத்த அடையாளத்தை அழித்தல் அல்லது கைவிடல் போக்கு சிறுகதைகளில் இருக்கின்றன என்பதை மயிலன் தனது உரையாடலில் வைத்தார். அதேபோல் தமிழ்ச் சிறுகதைகளின் கதைவெளிக்குள் இந்தியப் பரப்பைத் தாண்டிய வெளிகள் இடம்பெறுவதும் சுட்டிக்காட்டப்பட்டது. நான் அவ்வப்போது எழுதிக்காட்டிய விஜயராவணன், சுஜா செல்லப்பன், தெய்வீகன், கார்த்திக் பாலசுப்பிரமணியன் போன்றவர்களைப் புதிய தலைமுறை எழுத்தாளர்களில் கவனிக்கத் தக்கவர்களாகக் குறிப்பிட்டுப் பேசியதைக் கேட்க முடிந்தது. இந்தப் பெயர்களை எழுத்தாளர் இமையம் ஒரு பட்டியல் போல போட்டுக்காட்டினார்.இணைய இதழ்களில் வருகை ஏற்படுத்தியுள்ள நல்லது கெட்டதும் அந்த அமர்வில் விவாதப்பொருளாக இருந்தது.
அதே அரங்கில், தியோடர் பாஸ்கரன் ஒருங்கிணைத்த தமிழ் இலக்கியமும் திரைப்படங்களும் என்ற அமர்வில் இளைய தலைமுறைச் சிறுகதைக்காரர்களான செந்தில் ஜெகந்நாதனும், லட்சுமிஹரும் இடம்பெற்றிருந்தார்கள். தமிழ்ச்சினிமாவின் வரலாற்றைக் கவனித்துப் பேசும் தியோடர் பாஸ்கரன் ஏழைபடும் பாடு தொடங்கி திரைக்கு வராத சினிமாவரை சுட்டிக்காட்டிப் பேசினார். நாவல், சிறுகதை என்ற புனைகதை வடிவங்களிலிருந்து உருவாகும் சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும்; என்னவெல்லாம் இந்த மாற்றத்தில் நிகழக்கூடும் என அவரது உரை சுட்டிக்காட்டியது. தொடர்ந்து பேசிய செந்தில் ஜெகந்நாதன் நாவல் வடிவத்தைவிடச் சிறுகதை வடிவம் சினிமாவுக்கு ஏற்ற ஒன்று கருத்தோட்டத்தில் தனது கருத்துகளை முன்வைத்தார். அந்தப் போர்வை ஆரம்பம் உச்சம் முடிவு என்ற ஓரங்க நாடக வடிவமே சினிமா என்ற கோணத்திலிருந்து உருவாகும் பார்வை. தமிழின் வணிக சினிமா அந்தக் கோணத்தில் தான் கட்டமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. யுவபுரஸ்கார் விருதாளரான லட்சுமிஹர் தன்னைச் சினிமாவிற்குள் இருக்கும் ஒருவராகவே காட்டிக்கொண்டார். படப்பிடிப்புக்கு முன் நடக்கும் கதை விவாதங்கள், திரைக்கதை ஆக்கம், வசனம் எழுதுதல் என்ற வேலைகளுக்குள் எழுத்தாளரின் இடம் குறித்த பார்வை அது. அவரது சொந்த அனுபவம் சார்ந்து விவரித்த உரை. தொடர்ந்து சில கேள்விகளோடு விவாதமும் நடைபெற்றது.
முடிந்து வரும்போது முகாம் முகம் நிகழ்வில் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சல்மா பார்வையாளர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். இந்த இரண்டுமாக இருப்பதின் பாடுகள் அவரது பதில்களில் இருந்தன. மதிய உணவுக்குப் பின் தமிழின் தொன்மையும் தொடர்ச்சியும் என்ற அமர்வு. முழுவதும் கல்விப்புலப் பார்வையில் அமைந்த இந்த அமர்வில் பேரா. பக்தவச்சல பாரதி பல்துறை ஆய்வு முறையியல்களுடன் தமிழின் தொன்மையை நிறுவும் பன்னாட்டு ஆய்வாளர்களின் கருத்தை முன்வைத்துத் தனது மானிடவியல் தரவுகளையும் விவரித்தார். மரபணுக்களில் ஒற்றுமை, பெயர்ச்சொற்களின் வேர் போன்றன ஆதாரங்களில் இருந்தன. இரா. பாலகிருஷ்ணனின் தொடர்ந்து பேசும் சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்ற மையம் இவரிடமும் இருக்கிறது. பெயராய்வுகளை மட்டும் வைத்து விவாதித்துச் சொல்லும் முடிவுகள் எப்போதும் கேள்விக்குரியவை. அந்த அமர்வில் பங்கேற்ற பேரா. பெரியசாமி ராஜா தமிழின் அறத்தையும் சம்ஸ்க்ருதத்தின் தர்மத்தையும் இணைநிலைப்படுத்தி அக்கருத்தியலின் தொன்மையும் தொடர்ச்சியையும் நிகழ்காலத்திற்குக் கொண்டுவந்தார், இன்னொரு பங்கேற்பாளராக முனைவர் ரத்தினக்குமார் முதல் நாள் நாவல் அமர்வில் சொன்ன ஒன்றிலிருந்து தொடங்குவதாகக் குறிப்பிட்டுத் தன் உரையில் தொடர்ச்சியைக் காட்டினார். பெரும்பரப்பை வெளியாகக் கொண்டு எழுதும் நாவல் வடிவத்தில் அகத்திணை மரபுகள் எழுதப்படுகின்றன எனக் குறிப்பிட்டேன். அதில் குறிஞ்சித்திணை மரபை மட்டும் எடுத்துக்கொண்டு சங்கப்பாடல்களில் இடம்பெறும் கருப்பொருள் பின்னணியும் உரிப்பொருள் காட்சிகளும் 10 க்கும் மேற்பட்ட நாவல்களில் விரவி நிற்பதைச் சொன்னார். அந்நாவல்கள் அனைத்தும் மேற்குத்தொடர்ச்சி மலைப்பின்னணியில் எழுதப்பட்டவை. இப்பார்வை மேலும் ஆய்வுக்குரிய பகுதிகளைச் சுட்டக்கூடியன.
ஓர் எழுத்தாளருக்கு அரைமணி நேரத்தை ஒதுக்கித் தரும் முகாமுக அரங்கில் பிற்பகலில் இமையத்திற்கு ஓர் அமர்வு இருந்தது. அவரது கதைகள் உருவாகும் விதத்தைச் சொன்ன இமையத்துடன் சில கேள்விகளுக்கே நேரம் இருந்தது. பெங்களூர் கிருஷ்ணசாமி அவரது பாத்திரங்கள் ஆங்காரத்தை வெளிப்படுத்துகின்றன; ஆனால் அடங்கிப் போய்விடுகின்றன என்ற அவதானத்தைக் குறிப்பிட்டுக் கேள்வியை எழுப்பி விவாதத்தை நகர்த்தினார்.

அதற்கு முன்னதாக நானும் தமிழவனும் தெலுங்கு மொழியில் நூல்களை வெளியிடும் சாயா நிறுவனத்தின் மொழிபெயர்ப்பாளருடன் சந்திப்பு நிகழ்ச்சியில் முழுவதுமாக அமர்ந்தோம். ஈழப்போராட்டப் பின்னணியில் ஆங்கிலத்தில் எழுதப்பெற்ற நாவல் ஒன்றைத் தெலுங்கில் மொழிபெயர்த்த உமாவுடன் பதிப்பாளர் கலந்துகொண்ட அமர்வு. அரசியல் எழுத்து, போராட்ட எழுத்து, ஆங்கிலத்திற்குள் தமிழ் வெளி, தமிழ்மொழி போன்றன இடம் நிலையில் அவற்றைத் தெலுங்கில் மொழியாக்கம் செய்யும்போது கிடைத்த அனுபவங்களைச் சொன்னார் மொழிபெயர்ப்பாளர். அந்த நாவல் ஈழப்போராட்டப் பின்னணையைக் கொண்டது என்பது உரையாடல்களின் வழியாக அறிய முடிந்தது.
மூன்றாம் நாளில்...
ஒவ்வொரு நாளும் ஒருமணி நேர இசைக்கச்சேரியுடன் தொடங்கிய இலக்கியத்திருவிழா, மூன்றாவது நாளில் பண்டிட் கணபதி பட் ஹசநகியின் இந்துஸ்தானி சங்கீத ஆலாபனைகளுடன் தொடங்கியது. அதன் நிறைவில் முதல் அமர்வு தமிழ்ச் சங்க இலக்கியத்தின் எதிரொலிகள்: தென்னிந்திய மொழிகளின் சமகால இலக்கியங்களுக்கு ஆதாரமாக அல்லது வேராக இருப்பது குறித்து (Echoes of Sangam: Reimagining Roots in Contemporary South Indian Literature") பெருமாள் முருகனுடன் இசைவாணர் டி எம் கிருஷ்ணா நடத்திய உரையாடல் என்பதாக நிகழ்வுத் தலைப்பு இருந்தது. ஆனால் சங்கப்பாடல்களைக் கர்நாடக இசையின் கட்டமைப்பான பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற கட்டமைப்பில் பாடுவதற்கான கீர்த்தனையாக எழுதும் பெருமாள் முருகனின் திட்டம் ஒன்றின் செய்முறை (demo) நிகழ்வாக வெளிப்பட்டது.
இரண்டு குறுந்தொகைப் பாடல்களை அந்தக் கட்டமைப்பில் மெட்டமைத்துப் பாடினார் டி.எம். கிருஷ்ணா. கையறுநிலைத் துறையில் ஒன்று. இன்னொன்று வினைமேல் சென்ற தலைவன் தலைவியைக் காண விரையும் முல்லைப் பாடல். சங்கப்பாடலின் உரிப்பொருள் மாறாது, பாடலின் தொனியும் வரும் விதமாக கர்நாடக இசையின் கட்டமைப்புக்கேற்ப அதே வரிகளோடு பெருமாள் முருகன் சில சொற்களையும் சேர்த்து எழுதிக் கொடுத்திருந்தார். முதல் பாடலைக் கேட்ட பொது கையறுநிலையின் துயரத்திற்கு - அதன் உள்ளார்ந்த தொனிக்கு முகாரி ராகம் பொருந்துமா? என்ற ஐயம் தோன்றிக்கொண்டே இருந்தது. ஒரே உரிப்பொருளில் அமையும் வெவ்வேறு பாடல்களை ஒரே கீர்த்தனையாக எழுதிய இன்னொரு பாடலின் இசையடுக்குப் பாடலின் காட்சிப்படிமங்களோடு இணைந்து நின்றதாகத் தோன்றியது. இதை விமரிசித்தோ, மறுத்தோ பேசுபவர்களுக்கான பதிலாக- சங்கச் செவ்வியல் பாடல்களுக்கு உரையெழுதுவது, புதிய கவிதையாக மாற்றி எழுதுவது, நிகழ்த்துக்கவிதைகளாக உருமாற்றுவது என நடக்கும் போக்குகளில் இதுவும் ஒன்று என்பதாக இருவரும் வினாத்தொடுத்துப் பதிலையும் சொன்னார்கள்.

மதிய உணவு இடைவேளை என்று தனியாக இல்லாத நிலையில் மதியம் ஒருமணிக்குத் தொடங்கிய மொழிபெயர்ப்பு முயற்சிகளும் புதிய உலகமும் புதிய மனிதர்களும் என்ற தமிழ் அரங்கில் கவிதை, புனைகதை, புனைவல்லாத எழுத்துகள், விளிம்புநிலை எழுத்துகள் என்ற வகைப்பாட்டில் உரைகளாக நான்குபேர் நிகழ்த்தினர். அமர்வை ஒருங்கிணைப்பு செய்த மோகனரங்கன் கவிதை மொழி பெயர்ப்புகளின் விரிவான பட்டியலைத் தந்தார். சிலவிடுபடல்கள் இருந்ததைப் பார்வையாளர்கள் சுட்டிக்காட்டினார்கள். அதேபோல் புனைகதை மொழிபெயர்ப்புகளின் பட்டியலை இல. சுபத்திராவின் உரை தந்தது. பட்டியலாக இல்லாமல் வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்த மொழிபெயர்ப்புகள் என்பதாக இருந்தது அவரது உரை. விளிம்புநிலை எழுத்துகளின் மொழிபெயர்ப்புகள் என்ற தலைப்புக்குள் நின்ற சிவக்குமார் அதற்குள்ளும் பாலியல் தொழில் சார்ந்த பெண்களின் சுயசரிதைகளைக் குறித்தே உரையாற்றினார். தலித், திருநங்கைகள் என அவரது பரப்பை விரித்திருக்கலாம். அவையும் தமிழில் மொழிபெயர்ப்புகளாக வந்துள்ளன. கமலாலயனின் பேச்சு சிறுவர் இலக்கியம், கல்வி குறித்த, அறிவியல் பார்வை குறித்த, களச்செயல்பாடுகள் குறித்த கட்டுரை எழுத்துகள் மொழி பெயர்க்கப்பட்ட்டுள்ளதை முன்வைத்தது. மொத்தத்தில் தகவல் திரட்டுகளாக நான்கு உரைகளுமே இருந்தன.
இந்த அமர்வைத் தொடர்ந்து இரண்டு தமிழ் அமர்வுகள் ஒரே நேரத்தில் இருந்தன. தமிழ் இணைய இதழ்கள் வளர்ச்சியும் வாய்ப்பும் அமர்வு 2 மணிக்குத் தொடங்கியது. 2.30 க்கு முகாமுகம் அமர்வில் பெருமாள் முருகனோடு நேரடி உரையாடல் ஒன்றும் அவரது நூல் வெளியீடு ஒன்று இருந்தது. அதைத்தொடர்ந்து ஜீரோ டிகிரி பதிப்பகம் லட்சுமி சரவணக்குமாரின் பன்றி வேட்டை நாவலையும் அங்கு வெளியிட்டது. இவை எதற்கும் போகாமல் அந்த நேரத்தில் நடந்த நாடக நிகழ்வு ஒன்றுக்குப் பேரரங்கில் அமர்ந்துவிட்டேன் - B studios என்ற நாடகக்குழு நடத்திய ராமேஸ்வரன் காக்குலு என்ற தெலுங்கு நாடகம். நடிப்பு, உத்தி போன்றவற்றில் நவீனத்தன்மைகள் வெளிப்படாத தெலுங்கு நாடகம், பெண்களுக்கு இழைக்கப்படும் துயரமொன்றின் காரணமாக அதிகாரத்தில் இருந்த ஆண் காவல் அதிகாரிக்கு ஏற்படும் மன உளைச்சலைக் காட்சிப்படுத்தியது. குற்றமனத்தின் கொந்தளிப்பை ஒளியமைப்பின் வழியாக உருவாக்கிய பகுதிகளில் தேர்ச்சியும் திறனும் இருந்தது.
நிறைவாகக் கலந்துகொண்ட அமர்வு சங்க இலக்கியத்தைக் கற்றல்:நுட்பமும் ஆழமும். அந்த அமர்வைச் சித்ரா பாலசுப்பிரமணியம் ஒருங்கிணைத்தார். அறிவியல் துறை மாணவியாகவும் பறவை பார்ப்பவராகவும் சங்க அகப்பாடல்களின் இடம்பெற்ற நெருஞ்சி, நொச்சி, காகம், மயில், குருகு போன்றவற்றின் வழியாக உணர்த்தப்படும் உள்ளுறைப் பொருள், இறைச்சிப்பொருள் போன்றவற்றை கலைச்சொற்கள் வழியாகப் பேசாமல் தனது சொந்த ரசனை சார்ந்து வியந்து பேசி ரசிக்க வைத்தார் கோவையைச் சேர்ந்த நித்யா. பேராசிரியரும் கவிஞருமான பச்சியப்பன் தனது வகுப்பறை அனுபவத்தோடு தொல்காப்பியக் கவிதையியல் வழியாகச் சங்கப்பாடல்களைப் பாடம் சொல்வதோடு நில வெளிகளை உள்ளடக்கிய புதுக்கவிதைகளை வாசிப்பதையும் முன்வைத்தார். இந்த அமர்வோடு சங்க இலக்கியங்களைப் பேசிய மூன்று அமர்வுகள் இடம்பிடித்ததைச் சிறப்பாகக் குறிப்பிட வேண்டும்.
இன்னும் சில (நிகழ்த்துக்கலை) குறிப்புகள்
இதுபோன்ற விழாக்களில் பங்கேற்கும்போது மனசு அதன் போக்கில் அங்குமிங்கும் அலைந்துகொண்டே திரியும். அதே நேரம் இந்த 'ஓருடலை வைத்துக் கொண்டு' இவ்வளவுதான் முடியும் என்ற சமாதானமும் தோன்றிவிடும். விழாவுக்கான நிகழ்ச்சி நிரல் வந்தவுடன் அமர்வுகள் எல்லாவற்றிலும் பங்கேற்றுப் பார்க்காவிட்டாலும் நிகழ்த்துக்கலைகளாக அரங்கேறுவனவற்றைத் தவறவிடக்கூடாது என நினைத்தேன். ஒவ்வொரு நாளும் மாலையில் பெரும் நிகழ்வுகள் ஏற்பாடாகியிருந்தன. அதேபோல் பிற்பகல் 2.00 மணியளவில் ஒருமணி நேர நிகழ்வுகள் இருந்தன. காலையில் இசை ஆலாபனைகள் ஒரு மணி நேரம். மதிய நிகழ்வுகளை முழுவதும் பார்க்க முடியவில்லை. அதே நேரத்தில் தமிழ் அமர்வுகள் இருந்தன.
முதல் நாள் காலையில் அனைவரும் வந்து சேரவே 10 .00 மணி ஆகிவிடும் என்பதால் காலையில் நேரடியான இசை நிகழ்ச்சி இல்லை. ஆனால் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் ஏற்பாடான இசைக்கச்சேரிகள் ஆகச்சிறந்த தேர்ச்சியுடன் இசையை வழங்கும் நிகழ்வுகளாக இருந்தன. முதல் நாள் -8 ஆம் தேதி மதியம் நடந்த லட்சுமி சந்திரசேகரின் சங்கரவ்வா . ஒராள் நாடகம். தேடலையும் கேள்விகளையும் அடுக்கிக்கொண்டே இருந்த ஒன்று. முழுவதுமாகப் பார்க்க முடியாமல் போய்விட்டது. ஆனால் அன்று மாலை இரண்டு மணி நேரம் நடந்த ஜெயஶ்ரீ குழுவினரின் நாடகப்பாடல்கள் கச்சேரியை முழுவதுமாகப் பார்த்தது குதூகலமான அனுபவம். 1984 இல் பெங்களூரில் நடந்த தென்மண்டல நாடகவிழாவில் துர்க்கிர அவலம் நாடகம் நிகழ்த்துவதற்கு வந்தபோது மேடையேறிய கன்னட நாடகத்தில் இருந்தவர் ஜெயஶ்ரீ. தேசியநாடகப் பள்ளியில் படித்துவிட்டு வந்த பிரசன்னா போன்ற நாடகக்கலைஞர்கள் தீவிரமாகச் செயல்பட்ட காலம். அப்போதிருந்த பல மேடைகளில் ஜெயஶ்ரீயின் மேடை இருப்புகளைப் பார்த்திருக்கிறேன். கிரிஷ் கர்னாடின் நாகமண்டலத்தில் அவர் தான் குருட்டவ்வாவாக நடித்தார். சினிமாவிலும் அவர்தான்.
9 ஆம் தேதி நடந்த பண்டிட் பிரவின் கோட்ஹிண்டியின் புல்லாங்குழல் இசை, அரங்கத்திற்குள் இருந்த ஒருவரின் ஐம்புலன்களுக்குமான வெளிகளையும் மெய்யுணர்வு களையும் பயணங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரோடு இணைந்து வாசிக்கும் தாளக்கருவிக் கலைஞர்களோடு ஏற்படுத்திக்கொள்ளும் போட்டித் தன்மையையும் உச்சத்தை நோக்கிய நகர்வுகளும் கைதட்டலுக்கான இடைவெளியுமென விரித்துக்கொண்டே போகலாம். அன்று மதியமும் மானசி பிரசாத் குழுவினரின் ஆறுகளும் மழையும் என்ற பொருண்மையோடு கூடிய இசைக்கச்சேரி இருந்தது. முழுவதும் நின்று பார்க்க முடியவில்லை.

இந்த நிகழ்வில் பாடுவதற்காக அவர்கள் தேர்வு செய்திருந்த பாடல்கள் எல்லாமே கீர்த்தனை நாடகப்பாடல்கள். தசாவாதாரக் கதைகள், சிவபுராணங்கள், நாட்டார்கதைகள் எல்லாம் இசைநாடகங்களாக நடிக்கப்பட்ட மரபிலிருந்து பாடல்களைத் தேர்வு செய்து பாடினார்கள். பாடும்போது அந்த நாடகங்களின் காட்சிகளைக் கொண்டுவரும் விதமாக இசையின் பரப்பும் ஏற்ற இறக்கங்களும் மேடையெங்கும் அலைந்துகொண்டிருந்தன. இதுபோன்ற நாடகப்பாடல்கள் தமிழிலும் இருந்தன; இருக்கின்றன. நவீன மேடையேற்றத்துக்குரியதாக ஒருவர் வடிவமைத்தால் திரும்பவும் உயிர்ப்பிக்கலாம்.
9 ஆம் தேதி நடந்த பண்டிட் பிரவின் கோட்ஹிண்டியின் புல்லாங்குழல் இசை, அரங்கத்திற்குள் இருந்த ஒருவரின் ஐம்புலன்களுக்குமான வெளிகளையும் மெய்யுணர்வு களையும் பயணங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அவரோடு இணைந்து வாசிக்கும் தாளக்கருவிக் கலைஞர்களோடு ஏற்படுத்திக்கொள்ளும் போட்டித் தன்மையையும் உச்சத்தை நோக்கிய நகர்வுகளும் கைதட்டலுக்கான இடைவெளியுமென விரித்துக்கொண்டே போகலாம். அன்று மதியமும் மானசி பிரசாத் குழுவினரின் ஆறுகளும் மழையும் என்ற பொருண்மையோடு கூடிய இசைக்கச்சேரி இருந்தது. முழுவதும் நின்று பார்க்க முடியவில்லை.
மாலை நிகழ்வு தமிழ்நாட்டின் டி.எம். கிருஷ்ணாவின் வாய்ப்பாட்டுக்கச்சேரி. கர்நாடக சங்கீதக் கச்சேரி. பல தடவை பார்த்ததும் கேட்டதுமான மனநிலை. இந்தியச் செவ்வியல் இசைக்கச்சேரிகளில் இசைக் கருவிகளுக்குள்ளும், இசைக்கருவிகளை வாசிப்பவர்களுக்கும் வாய்ப்பாட்டுக்காரர்களும், மேடையில் இருப்போருக்கும் பார்வையாளர்களுக்கும் இயல்பாக உருவாகும் போட்டியும் பயணமும் எப்போதும் நல்ல விவாதங்களாக மாறிவிடும். அதனை டி.எம்.கிருஷ்ணாவும் உருவாக்கித்தந்தார்.
மூன்றாம் நாள் நிகழ்த்துக்காட்சிகள் ஒன்றையும் தவறவிடவில்லை காலையில் நடந்த இந்துஸ்தானி இசை நிகழ்ச்சி ஏற்ற இறக்கங்களற்ற நதியின் பிரவாகம்.பண்டிட் கணபதி பட், பண்டிட் வியாஸ்மூர்தி கட்டி, பண்டிட் ஶ்ரீதர் மந்த்ரே ஆகியோரின் ஜுகல்பந்தி வகையான கச்சேரி. பாபநாசம் மலையிலிருந்து இறங்கிவரும் தாமிரபரணியின் நகர்வுகளின் நினைவுகளைக் கொண்டுவந்தது.
இரண்டு மணிக்கு ஜான் பஷீர் இயக்கத்தில் ராமேஸ்வரன் காக்குலு. பெண்கள் மீது நடக்கும் அத்துமீறல், காவல் துறையின் தவறான அணுகுமுறை, அதனால் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட பாதிப்பு, அதிலிருந்து தப்ப நினைத்த ஒருவரின் கடைசிப்பயணமாக ராமேஸ்வரக் கடலுக்குள் காணாமல் போனது எனக் காட்சிகள் அமைந்திருந்தன. ஒரு காவல் அதிகாரியின் மனச்சாட்சியின் வெளிப்பாடாக வடிவமைக்கப்பட்டிருந்த நாடகம், காதலிக்கும் இருவரைக் காட்டும் போது நடப்பியல், தவறிழைத்துவிட்டேன் என்ற நினைப்பின்போது மனப்போராட்டக் கற்பனை, அதிகார உறவுப் பாத்திரங்களின் போது வலுவான உரையாடல் என நாடகத்தன்மையின் சிறப்புகளை கொண்டிருந்தது.

மாலையில் மலையாளத்தின் கதகளி.துரியோதன வதம்; பாரதக்கதையின் சில காட்சிகள். துரியோதனின் சபையில் அவமானப்பட்ட திரௌபதியின் சபதமும் கிருஷ்ணனிடம் வேண்டுகோளும். அதனைக் கேட்டுக்கொண்ட கிருஷ்ணனின் திட்டம். வீமனை அனுப்பித் துரியோதனனுடன் மோதல், அவனின் வீழ்ச்சி. திரௌபதையின் சாபத்தை முடித்தல். இந்தக் காட்சிகளுக்கான தொடக்கமும் முடிவும் என வடிவமைக்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு மூன்று மணி நேரம், நான்குமணி நேரம் எனக் கதகளி நிகழ்ச்சிகளைக் கேரளத்தில் பாத்திருக்கிறேன். இந்தக் குழுவின் ஆடைகளும் அணிகளும் துல்லியமான வண்ணங்களோடும் முத்திரைகளோடும் இருந்தன. அநேகமாகப் பங்கேற்ற கலைஞர்களில் சிலராவது பெங்களூரின் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்களாக இருப்பார்கள் என்று தோன்றியது. குரல்வளமும் தாளத்திற்கான முத்திரைகளும் வண்ணக்கலவைகளும் எனக் காட்சிதரும் கதகளிக்கிணையான தெருக்கூத்து தமிழ்நாட்டின் கலையாக எல்லா இடங்களுக்கும் சென்று சேரவில்லை என மனதில் ஒரு கீற்று ஓடிக்கொண்டே இருந்தது.
மாலை நிகழ்ச்சிகள் ஒவ்வொன்றுக்கும் அரங்கு நிரம்பிய பார்வையாளர்கள். இலக்கியவிழாவுக்கு வந்தவர்கள் மட்டுமல்லாது பெங்களூரின் பொதுப்பார்வையாளர்களும் குடும்பத்தினரோடு வந்து பார்த்துவிட்டுப் போனார்கள்.இவைமாதிரியான நிகழ்ச்சிகளும் பார்வையாளர் பங்கேற்கும் தமிழ்நாட்டு நகரங்களில் எப்போது நடக்கும் என்ற கீறலும் ஓடிக்கொண்டே இருக்கிறது. அத்தோடு தமிழ்நாட்டரசும் இத்தகைய இலக்கியத் திருவிழாவை நடத்திட முடியும். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் நூலகத்துறையும் பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்திய மண்டல அளவிலான இலக்கிய விழாக்கள் அந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டன. தமிழ்நாட்டின் இலக்கிய அமைப்புகளோ, பதிப்பகமோ முன்னின்று இலக்கியச் செயல்பாடுகளுக்கு உதவும் புரவலர்களின் உதவியோடு இத்தகைய இலக்கியத்திருவிழாவை நடத்திட முடியும். விரிந்து பரந்து கிடக்கும் கல்வி வளாகங்கள் அதனைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கருத்துகள்