நவீன கவிதைகளை வாசிக்கும்போது....
இருப்பை எழுதும் கவிதைகள்
வேறொரு ஊரில்250ஆம் எண் அறையில்சேர்ந்தாற்போலபத்து நாள் தங்கிவிட்டுசொந்த வீட்டின்சொந்த அறையில் வந்து படுத்தால்வீட்டைவிட்டு வந்துஏதோ ஒரு விடுதி அறையில்வந்து தங்கி இருப்பதுபோலஅன்னியமாக உணர்கிறேன்நான் சற்றுநேரம்எங்காவது நின்றிருந்தால்என் பாதத்திலிருந்துவேர் ஒன்று கிளம்பிபூமிக்குள் பாய்ந்துவிடுகிறது/16.9.2025
இருப்பைக் குறித்த இந்தக் கவிதைக்குள் மனித இருப்பு உடலாகவும் மனதாகவும் இருப்பதைப் புரிந்து கொள்கிறோம். “பாதத்திலிருந்து கிளம்பும் வேர்” என்னும் படிமம் கண்ணுக்குத் தெரியாத அரூபமாக ஆகி, அது மதுரையில் தங்கி விட்டது என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது. மனித இருப்புகள் முதன்மையாக வெளிகளில் இருப்பதைக் குறித்த விசாரணைகளாகத் தொடங்குகின்றன. அத்தொடர்ச்சியில் காலத்தில் இருப்பதைக் குறித்த விசாரணைகளாகவும் நகர்கின்றன.
வெளியோ, காலமோ அவற்றின் பண்புகளைச் சிதைத்துச் சிதைத்துக் கவிதையாக்கி இருப்பை எழுதிக்காட்டுகிறார்கள் நவீனத்துவ கவிகள். வெளியின்/ காலத்தின் சிற்றலகுகள் தொடங்கிப் பேரலகுகள் வரையிலான விரிவுகளாக மாறும் இருப்பியல் கவிதைகளைத் தொடர்ச்சியாகத் தமிழில் எழுதித் தந்த கவிகளில் இப்போதும் அதிலிருந்து விலகாமல் இருப்பவர்களாகச் சிலரைச் சொல்லலாம். அதனை உறுதிசெய்யும் விதமாக அவர்களின் ஒரு தொகைக் கவிதைகளை அவ்வப்போது வெளியிடுகிறார்கள். சுகுமாரன்,தேவதச்சன், எம்.யுவன், மோகனரங்கன்,சங்கர்ராம சுப்பிரமணியன், திருக்கூனன் கண்டராதித்தன், இளங்கோ கிருஷ்ணன், போகன்சங்கர், கருணாகரன், இளங்கோ, அனார் ஆகியோரின் கவிதைகளை ஒரு தொகுதியாக ஏதாவது ஓர் இதழில் வாசிக்கும்போது அந்தத் தொடர்ச்சியை வாசிக்கலாம். இதனை உணர்ந்தவர்களாகத் தங்களின் இதழ்களில் – உயிர்மை, காலச்சுவடு, அம்ருதா, அகழ் போன்ற இதழ்களின் ஆசிரியர்கள் ஒரு சிறுதொகையாகத் தருகிறார்கள்.
இந்த மாத உயிர்மையில் எம்.யுவனின் ஒரு தொகுதிக் கவிதைகள் அச்சிடப்பட்டுள்ளன. மனிதனின் இருப்பைப் பிரபஞ்சத்தின் இருப்பாகப் பேசும் அக்கவிதைகள் பலதளங்களைச் சுட்டுகின்றன – தான் இருப்பதாக நம்பும் மனிதர்கள் என்னென்னவாகவெல்லாம் இருப்பதாக நினைக்கிறார்கள் என்பதை ஒவ்வொரு கவிதையிலும் மாற்றிமாற்றிச் சொல்லிப்பார்க்கிறார் யுவன். இப்பிரபஞ்சத்தில் இயற்கைப்பொருள்களின் இருப்பாக மனிதர்களும் இருக்கிறார்கள். அந்த இருப்பு, வெளியின் இருப்பாகவும் காலத்தின் இருப்பாகவும் இருக்கிறது. வெளியும் காலமும் பேரலகாக மட்டுமே புரிந்துகொள்ளப்படவேண்டியன அல்ல. இரண்டுக்குள்ளும் பகுதிகளும் சிற்றலகுகளும் உள்ளன. இந்த நிலையை வாசித்துக்களிக்கும் விதமாக எம். யுவன் எழுதிய 7 கவிதைகளையும் எனது வாசிப்புக்களிப்புக்காக கவிதைத் தொகுப்பில் சேகரித்து வைத்துள்ளேன். அவற்றிலிருந்து இந்த இரண்டு கவிதைகளை மட்டும் தருகிறேன். வாசித்துப்பாருங்கள்.
ஐம்பூதமும் அதற்கு மேலும்
----------------------------------------
மனிதர்கள் நம்பிக்கைகளை உருவாக்குகிறார்கள்நம்பிக்கைகள் மனிதர்களை.அருவி இறங்கி ஓடுகிறதுஓடும் நதி அருவியாய்ப் பாய்கிறதுவிளைந்த கதிர் விதைநெல்லாகிறதுவிதைநெல் விளையவெனப் புதைகிறதுமரத்துண்டு கரியாகிறதுகரி தீப்பற்றித் தழலாகிறது.முகத்தைச் சற்றே திருப்பினால்நீளம் அகலமாகும் அகலம் நீளமாகும்ஓரங்குலம் எழும்பினாலும்உயரம் ஆழமாகும்.சூரியன்தினசரி உதித்தாலும் மறைந்தாலும்கிழக்கு கிழக்காக நீடிப்பதுஒரு வசதி கருதிநான் நானாகத் தொடர்வதும்நீ நீயாக இருப்பதும் அதுவே தானோ.இத்தனைக்கும்அபூர்வமானதொரு கணத்தில்நானும் நீயும் நீயும் நானுமாகமாறவும் செய்கிறோம்.ஆகவே ,எந்தப் பூதமும் புதிதில்லைகாற்றும் நீயும் நானும் உள்பட.
பார்த்தாயா..------------------இந்தக் காலைப்பொழுதுசாம்பல்நிறமாக இருக்கிறதுசன்னத்தூறலாக பன்னீர்ப்பூ மணமாககீழ்வானை ஒட்டி மங்கலாய்த் தொங்கும்வெளிறிய நிலவாகமுழுக்கத் திறக்காத வெளிச்சச் சிமிழாகஒரு ஜன்னலில் நுழைந்துமறு ஜன்னலில் வெளியேறும்காற்றலையாகசாந்தம் ததும்பும் நீர்த்தொட்டியின் சிற்றலையாகஉரத்து ஒலிக்கும் சேவலின் குரலொலியாகதாய்மடு முட்டப் பாயும் இளங்கன்றாகஇன்னும்வரலாற்றிலிருந்து பிதுங்கி வெளியேறும்புத்தம் புதிய தினமாகஎட்டாம் தேதியாக புதன்கிழமையாகவெகுதொலைவில் நாதசுரம் ஒலிக்கும்முகூர்த்த நாளாகஅப்புறம்என் கவனத்தில் தைக்காதஏதேதோ தடயங்களாகஒரு ஓரத்தில்கொஞ்சமே கொஞ்சம்பல்துலக்கத் தயங்கி நிற்கும்நீயாகவும் இருக்கிறது பார்த்தாயா!
---------------------------------------------------------------------------------------------------
சாருவின் நேரடிக்கவிதைகள்
ஏப்ரல் 25, 2025எனது தொடர்வாசிப்புகளில் ஒன்று சாருநிவேதிதாவின் வலைப்பக்கம் தினசரி போய்வருவது எனக்கு வழக்கமில்லை. வாரத்தில் ஒருமுறையாவது சென்று வாசித்துவிட்டு வந்துவிடுவேன். அண்மைக்காலத்தில் தனது வலைப்பக்கத்தில் தொடர்ந்து கவிதைகள் எழுதிக்கொண்டிருக்கிறார். நேற்றைய தேதியிட்டு வந்துள்ள கவிதைகளின் தலைப்புகள்:
கவிதையின் நுட்பங்கள் எனச் சொல்லப்படும் படிமம், உள்ளுறை, குறியீடு என எதற்கும் முக்கியத்துவம் தராமல் எழுதப்படும் நேரடிக்கவிதைகளாக - PLAIN POETRY- இருக்கின்றன. கவிதையின் சொல்லும் பாத்திரமாக இருப்பவரைக் கூட அவர் பூடகமாக்கவில்லை. அவரது புனைகதைகளிலும் கட்டுரைகளிலும் இருப்பதுபோலவே அவரே கவிதை சொல்லியாகவும் இருக்கிறார். கேட்கும் இடத்தில் வாசிக்கும் ஒவ்வொருவரும் இருந்துகொள்ளும்படியான வடிவம் இது. தமிழ் மரபில் சங்கப்புறக்கவிதைகளில் - காஞ்சித்திணைக் கவிதைகளின் வடிவம். முதுமொழிக்காஞ்சி, பொருண்மொழிக்காஞ்சி குறிப்பான நிகழ்வுகள் இருக்காது; ஆனால் கவியின் நிகழ்காலத்தை நினைவூட்டும் விதமாக இருக்கும். அதே நேரம் எல்லாக்காலத்திற்கும் உரியதாகவும் அமையும். அப்படியான வடிவம். தொல்காப்பியத்தில் இடம்பெறாத பொதுவியல் திணையிலும் இவ்வகைக்கவிதைகள் எழுதப்பெற்றுள்ளன.தோக்யோவில் வாங்கிய ஷூஆதலினால்இருள் படிந்த இல்லம்அமிர்தம் வேண்டி நின்றேன்…பரோல்
சாருநிவேதிதா இப்போது எழுதும் அந்தக் கவிதைகள் அவற்றின் தொடர்ச்சியாக இருக்கின்றன. இப்படிச் சொன்னால் நவீனத்துவக் கவிகள் ஒத்துக் கொள்வதில்லை என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் தமிழின் சிந்தனை மரபும் இலக்கியமரபும் நவீனத்துவக்குள்ளும் பின் நவீனத்துவக்குள்ளும் தொடர்கின்றன.
இன்று வாசித்த ஐந்து கவிதைகளில் ஒன்றை மட்டும் இங்கே தருகிறேன். ஆர்வமுள்ளவர்கள் அங்கே சென்று மற்றவற்றை வாசித்துக்கொள்ளலாம்.
இருள் படிந்த இல்லம் /April 25, 2025
பக்கத்து வீட்டு பால்கனிக்கும்என் வீட்டு பால்கனிக்கும் இடையேபதினைந்தடி இருக்கும்இங்கே தும்மினால் அங்கேயும்அங்கே தும்மினால் இங்கேயும்கேட்கும்அந்தரங்கமேயில்லை,ஒரு படுதா போடலாமென்றஎன் யோசனை மனையாளால்நிராகரிக்கப்பட்டது.சூரிய ஒளியைப் படுதாமறைத்து விடுமாம்.தலைவனுக்கு வயது 55தலைவிக்கு 50மகள் வயது 20எல்லாம் குத்துமதிப்புதான்இது தவிர தலைவனின் தாய் தந்தைஅவர்களின் வயதுநமக்குத் தேவையில்லைகாலை ஐந்து மணிக்குபால்கனி சாளரங்கள் திறக்கப்படும்தலைவி யோகா செய்வாள்ஏதோ என் வீட்டுக்குள்ளேயே இருந்துசெய்வதுபோல் இருக்கும்(படுதா கூடாது, சூரிய ஒளியைமறைக்கும்)இப்படியேஎன் வீட்டுக் காரியங்கள்அங்கேயும்அந்த வீட்டுக் காரியங்கள்இங்கேயும்நடப்பதுபோல் தோற்றம்கொள்ளும்மாதமொருமுறை வேதமந்த்ரங்கள்ஒலிக்கும்போது அன்றுஅமாவாசையெனத் தெரிந்து கொள்ளலாம்தெரிந்துகொண்டு என்ன செய்ய?தலைவன் வாரவிடுமுறைக்கணவன் போலஒவ்வொரு சனிக்கிழமைஇரவு எட்டு மணிக்குத் தொடங்கும்சண்டை நள்ளிரவுதான் ஓயும்சண்டையின் அம்சங்கள்:கைகலப்பு இராதுஇருவர் குரலும் ஏழு தெருவுக்குக்கேட்கும்கூச்சல் கேட்டுதெருநாய்கள் குரைக்கத் தொடங்கும்ஒரு கட்டத்தில்மனிதக் குரல்களுக்கும்நாய்களின் குரல்களுக்கும்வித்தியாசம் தெரியாதபடிகூச்சல் ஒன்றாகிஅசுரரூபமெடுத்துக்கிடுகிடாய்த்துப் போகும்தெருமேற்கத்திய நாடென்றால்போலீஸை அழைக்கலாம்இங்கே அழைத்தால் நம்மைப்பைத்தியமென்னும் சமூகம்என்னதான் அறைக்கதவைஅடைத்தாலும் சண்டைச் சத்தம்சவ்வைக் கிழிக்கும்சமயங்களில் தலைவிஅறைக்குள் போய் தாளிட்டுக்கொள்வாள் அப்போதுதான்மகளின் பிரவேசம் நடக்கும்கத்தி அலறியபடி அறைக்கதவைஉடைப்பாள் மகள்இந்த சனி ஞாயிறு சண்டைஅடுத்த சனி ஞாயிறு வரைஎன் மனதை ரணமாக்கும்அதோடு பல கேள்விகளும்தோன்றும்…ஏன் அவர்கள் அலுப்பே இல்லாமல்சண்டையிலேயே வாழ்கிறார்கள்?சண்டையில் எப்படி இத்தனை ஒழுங்கு?அவர்களுக்குள் செக்ஸ் முடிந்து எத்தனைகாலமிருக்கும்?மற்ற நேரங்களில் தமிழில் பேசுபவர்கள்சண்டையில் மட்டும் ஆங்கிலத்துக்குத் தாவுவதேன்?சண்டையில் ஏன் ஒரு கெட்ட வார்த்தைகூடப் புழங்குவதில்லை? (இதை என்னால் நம்பவே முடியவில்லை)நான்சென்ஸ், இடியட் போன்றசாதா வார்த்தைகளும் தென்படுவதில்லையே?மற்றபடிஅந்த இல்லத்திலிருந்து ஒழுகிவரும்இருண்மை என்எழுத்தில் படிந்து விடாமலிருக்ககொஞ்சம் அதிகமாகக்குடிக்க வேண்டியிருக்கிறது
தேவதச்சனின் சலனச் சித்திரங்கள்
ஏப்ரல் 20, 2023
தமிழில் எழுதும் கவிகள் ஒவ்வொருவரின் கவிதையியலை - வெளிப்பாட்டு முறையை அறிந்து வாசிக்கத் தொடங்கிவிட்டால், அவர்களின் புதிய கவிதைகள் வரும்போது வாசிக்காமல் தவிர்க்கமுடியாது. எப்போதும் கவிதைக்குள் தன்னை - தன்னிலையைச் சொல்லுமிடத்தில் வைத்துக் கொண்டு முன்னே இருக்கும் எல்லாவற்றையும் காட்சிப்பொருளாக்குவது தேவதச்சனின் கவிதைப்பாங்கு. அக்காட்சிப்பொருட்களுக்குள் உயிருள்ளனவும் உண்டு; உயிரற்றனவும் இடம்பெறுவதுண்டு. மனிதர்களும் இடம்பெறுவார்கள்; மனிதர்கள் அல்லாத உயிரினங்களும் இடம்பெறுவதுண்டு.
முதன்மையாக அவர் தனது சொற்களால் செய்து காட்டுவது காட்சியின் வரைபடம். வரையப்படும் அக்காட்சிக்குள் நிலையாக நின்றுகொண்டிருக்கும் இருப்பைவிடவும், அசைவுகளோடு கூடிய - நகர்வுத்தன்மை பொருட்களை நிரப்பிக் காட்டுவார். அவ்வாறு நிரப்பப்பட்ட காட்சியை விரிப்பதின் நோக்கம், அதன் மீதான கவிதைசொல்லியின் பார்வைக்கோணத்தை - மனச்சாய்வைச் சொல்லி விட்டு ஒதுங்கிக்கொள்வதாக இருக்கும். ஒதுங்கிக் கொண்டபின் எழும் உணர்வலைகள் கவியிடமிருந்தும், கவியால் உருவாக்கப்பட்ட கவிதை சொல்லியிடமிருந்தும் விலகிக் கவிதையை வாசிப்பவர்களின் உரிமையாகி விடும். அவர்கள் அதுபோன்ற காட்சிச் சித்திரத்தில் - சலனக்காட்சிகளில் தங்களின் இடம் என்னவாக இருந்தது என்பதை நினைத்துக்கொள்வார்கள். அப்படி நினைக்கத்தூண்டுவதே தேவதச்சனின் கவிதையியல் பாங்காக இருந்துவருகிறது.
***
இம்மாத உயிர்மையில் (ஏப்ரல்,2023)அச்சிடப்பெற்றுள்ள மூன்று கவிதைகளும் விரிக்கும் சலனக்காட்சிகள் பலரும் எதிர்கொண்ட காட்சிகளாக இருக்க வாய்ப்புகள் உண்டு. அதற்குள் அவர் உருவாக்கி இருத்தி வைத்திருக்கும் ‘ஒருதடவை’ ‘ ஒருவிநாடி’ ‘ ஒரு தலைகீழ் மலர்’ என்ற சொற்களின் வழி எப்போதும் வெளிப்படும் அவரது கவிதைத்தன்மையை - சலனச்சித்திரிப்புகள் வழியாக உணர்த்தும் நிலைபாட்டை - தன்னிலையின் விலகலை வாசிப்பவர்களுக்குக் கடத்திக்காட்டுகிறார். அவர் கடத்தும் காட்சிகளை நீங்களும் சந்தித்திருந்தால் இந்தக் கவிதைகள் உங்களுக்கும் விருப்பமான கவிதைகளாக மாறிவிடும் வாய்ப்புகளுண்டு. வாசித்துப்பாருங்கள்.
1.ஒரு தடவை---------------------ஒரு தடவைக்குமேல்ஒரு இலைமரத்திலிருந்துஉதிர்வதில்லைஒரு தடவைக்குமேல்அதைக்குனிந்துஎடுக்க முடிவதில்லைஇந்தஒரு தடவைப்பிரபஞ்சத்தின்விளிம்பில் அமர்ந்திருக்கிறேன்ஒரு தடவையாவது அவளின்கண்கள் என்மேல்படவேண்டுமென்றுஒரு தடவைகூடஅரசர்களின் கண்கள் என்மேல் பட்டுவிடக்கூடாதென்று2.லிப்ட்-----------லிப்டில்அருகில் நின்றவளைஒரு விநாடி பார்த்தேன்சாலையில்மரண ஊர்தியில்செல்பவரை ஒரு விநாடி பார்த்தேன்இரும்படிக்கும் லேத் பட்டறையில் ஓங்கிய கையை ஒரேஒருவிநாடி பார்த்தேன்ஒருவிநாடி என்னும் எரிநட்சத்திரங்கள் வெடிக்கும் இருளில்நின்று கொண்டிருக்கிறேன்வருத்தமாக இருக்கிறது3.தலைகீழ் மலர்--------------------பூங்காவிலிருந்து,நீலநிற ஆடை போர்த்தியகைக்குழந்தையோடுவெளியே வருகிறாள்இளந்தாய்.விரியத்திறந்து கிடக்கும்இரும்புக் கேட்டைக் கடக்கையில்தாழக்குனிந்துகுழந்தையின் கன்னத்தில் ப்ச்என்று முத்தமிடுகிறாள்சாலையில் நின்றுகொண்டிருந்த என்னுள்ஒரு தலைகீழ் மலர் அசைந்துஉதிர்ந்ததுபூமிக்கு வந்த மலர்கள்இப்படி வந்தவைதான் போலும்.
****************************************************
கூட்டம்- ஒற்றை .
இவ்விரண்டில் எது முந்தியது என்று கேட்டால் ஒற்றையென்னும் தனிமையே முந்தியது எனச் சொல்பவரும் உண்டு. கூட்டமாக இருந்தவர்களே தனியர்களாக மாறினார்கள் என்பவர்களும் உண்டு. ஒன்றுக்குப் பின் உருவானதே இரண்டு, மூன்று, பத்து, நூறு, ஆயிரம், லட்சம், கோடி என்னும் எண்ணுப்பெயர்கள்.
கூட்டத்தின் பகுதியாக இருக்கும்போதே தனியராக நினைத்துக்கொள்ளவும் விரும்புகிறது மனம். தனிமனிதருக்குள் சமூக மனிதரும், சமூக மனிதராக இயங்குபவருக்குள் தனிமனிதரும் இருக்கிறார்கள். இது அறிந்த உண்மை. அவரவரளவில் அறிந்த உண்மை. கவிதை எழுதும் கவிகளும் இந்த உண்மையை அறிந்தவர்களே. அறிந்த உண்மையைச் சொல்லுவது கவிதையாகுமா? ஆகலாம்; ஆகாமலும் போகலாம். கவிதையாக்க நினைக்கும் கவி, அதனை நேரடியாகச் சொல்லாமல் இன்னும் சில சங்கதிகளைச் சேர்த்துச் சொல்லும்போது கவிதையாக்கம் நடக்கிறது. இனி அந்தக் கவிதை:
கூட்டமாய் இருந்தவர்கள் பிரிந்தார்கள்.
ஒரு கோடியில் இருக்கும் ஒருவன் உணவை உண்டான் இன்னொருவன்
இன்னொரு கோடியில் இருக்கும் ஒருவனின் இடத்தைப் பிடித்தான் இன்னொருவன்
சின்னக்கூட்டங்கள் உண்டாகின
‘ஒற்றையாக – ஒற்றையாக’ என்றொருவன் குரல் கொடுத்தான்
“ இங்கே சேருங்கள்- இப்படிச் சேருங்கள்” என்றும் ஒருவன் குரல் கொடுத்தான்
குழப்பமின்றிச் செயல்பட்டார்கள்.
கூட்டமாய் இருந்தவர்கள் பிரிந்தார்கள் கூட்டமாக ஒற்றையாக
புதுப்புதுக் குரல்கள் கிளம்ப ஆரம்பித்தன
ஒற்றையாக இருக்கத் துவங்கியவர் கூட்டமாக இருந்தார்கள் –
கூட்டமாக இருக்கத்துவங்கியவர் ஒற்றையாக இருந்தார்கள்
எஸ்.வைத்தியநாதன், விருட்சம் கவிதைகள், ப.45
இந்தக் கவிதைக்கு கவி வைத்தியநாதன் வைத்த தலைப்பு: கூட்டமாக – ஒற்றையாக.
கூட்டம் –ஒருவன் என்ற எதிர்வுகளை முன்னிறுத்தும் இக்கவிதைக்குள் மூன்று பகுதிகள் உள்ளன. கவி பார்த்தது; கவி கேட்டது; பார்த்ததும் கேட்டதுமான இருப்பின் மேல் கவியின் எண்ணம் அல்லது கருத்து. அம்மூன்று பகுதிகளை வரிசைப்படுத்திவிடலாம். பார்த்தது ஒரு கூட்டம். கேட்டது ஒற்றை- ஒற்றையாக; இங்கே சேருங்கள் – இப்படிச் சேருங்கள்.
கவி பார்த்த கூட்டத்தில் பத்துப்பேர்.. இல்லை ஐம்பது பேர்.. நூறு, ஆயிரம், லட்சம்.. இருக்கலாம். அதிகமாகவும் இருக்கலாம். குறைவாகவும் இருக்கலாம். ஆனால் பார்த்தது கூட்டம். கும்பல்.. கும்பலுக்கென்று ஒரு மனோபாவம் உண்டு.
நீங்களும் நானும்கூடக் கும்பல்களை – கூட்டங்களைத் தினந்தோறும் பார்க்கிறோம்; சந்திக்கிறோம். பேருந்தைப் பிடிக்க அலைமோதுபவர்களாக .. ஆலைச்சங்கொலி கேட்டு உள்ளே நுழைபவர்களாக ; வெளியேறுபவர்களாக .திரையரங்கில் மௌனம் காப்பவர்களாக ; விசிலடித்துக் களியாட்டம் செய்பவர்களாக… திருவிழாவில், ஊர்வலத்தில், பேரணியில் ஜபக்கூட்டங்களில், காவியுடையுடன், மஞ்சளாடைகளுடன், கருஞ்சட்டையுடன், செஞ்சட்டையுடன், வெள்ளை அங்கிகளுடன்…
மாணாக்கர்களாக.. யுவதிகளாக.. தாய்க்குலமாக , உடன் பிறப்புகளாக, ரத்தத்தின் ரத்தங்களாக .. ரசிகர் மன்றச் செயல்வீரர்களாக.. தலைவிகளின்/ தலைவர்களின் வருகைக்குத் தவம் இருப்பவர்களாக, பேருரைக்கு ஆரவாரம் செய்பவர்களாக, பிள்ளையார் சிலைகளுக்குப் பாலூட்டுபவர்களாக, அல்லாஹூ அக்பருக்குத் தலை கவிழ்பவர்களாக, கட் அவுட்டுகளுக்குக் கற்பூர ஆரத்தி எடுப்பவர்களாக.. ஓட்டுப்பெட்டியில் வாக்களிக்கின்றவர்களாக..
கும்பல்களுக்குத் தான் எத்தனை எத்தனை அடையாளங்கள். ஓரடத்தில் ஓரடையாளம்; இன்னொரு இடத்தில் இன்னொரு அடையாளம்; மற்றொரு இடத்தில் வேறொரு அடையாளம். மாறக்கூடிய –மாற்றிக்கொள்ளக்கூடிய அடையாளங்கள். கூட்டம் தன்னிச்சையாக – ஒற்றை ஒற்றையாகக் கூடுவதும் உண்டு. இங்கே சேருங்கள்; இப்படிச் சேருங்கள் என்று அழைக்கப்பட்டுக் கூட்டப்படுவதும் உண்டு.
உணவு, உறையுள் இரண்டும் ஒவ்வொரு தனிமனிதருக்கும் தேவையான அடிப்படைகள். தனிமனிதர்கள் தங்களுக்கான உணவைத் தேடுவதாகச் சொல்லி அடுத்தவர்களின் உணவை எடுத்துக்கொள்கிறார்கள். அடுத்தவர்களின் உணவை எடுத்துத் தனது கூட்டத்திற்கு வழங்குவதன் மூலம் தலைவர்களாகிறார்கள். இன்னொருவனின் இடத்தைப் பிடுங்கி, தங்கள் வீடுகளாக, ஊர்களாக, நாடுகளாக மாற்றிக்கொள்கிறார்கள். கூட்டம் சேர்க்கவும், சேர்த்த கூட்டத்தைப் பிரித்துப் போடவும்தான் எத்தனை முயற்சிகள். எத்தனையெத்தனைப் புதுப்புதுக் கோஷங்கள்; கூச்சல்கள்; கொள்கைகள். தேசியத்தின் பெயரால், மாநிலத்தின் பெயரால், மதத்தின் பெயரால், இனத்தின் பெயரால், வர்க்கம், சாதி, பாலெனப் பலப்பலவாய்க் கோஷங்கள். ஆனால் நடப்பது என்ன..? சேர்வதும் பிரிவதுமாய்.. கூட்டமாய்.. தனியராய்.. ஒற்றையாய்.. கூட்டமாய்..
தான் பார்த்த கூட்டத்தைப் பற்றிப் பேசிய கவி, தான் கேட்ட கோஷங்களை, உள்ளே நுழைத்ததின் மூலம் கவிதையின் தளத்தை விரிவுபடுத்துகிறார். ஊர், நாடு,தேசம் என எல்லை கடந்து நடக்கும் சமூக நிகழ்வைப் பேசும் கவிதை அதற்குள் செயல்படும் அதிகாரப்போட்டியை உள்ளுறையாக்கித் தரும்படி அமைத்துக்கொள்கிறது. அதனை நேர்கூற்றுச் சொல் மூலம் –
ஒற்றையாக இருக்கத்துவங்கியவர்கள் கூட்டமாக இருந்தார்கள்
கூட்டமாக இருக்கத்துவங்கியவர்கள் ஒற்றையாக இருந்தார்கள்
மனிதனின் அகத்திற்குள்ளான வினாக்களாகச் சுருக்கிக் கொள்கிறது. புறச்சூழலை முன்வைத்து அகத்தை விசாரிக்கும்போது கவிதை உள்ளே உள்ளே பயணிக்கும் தொனியை உருவாக்கிக் கொள்கிறது.
கருத்துகள்