கல்யாணி என்னும் முன்மாதிரி
பேரா. கல்யாணி அவர்களுக்குத் தமிழக அரசு நடத்திய நிகழ்வொன்றில் விருது அளித்துக் கௌரவித்துள்ளது. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற அந்நிகழ்வைத் தமிழ்நாட்டரசின் பள்ளிக்கல்வித்துறை நடத்தியுள்ளது. உயர்கல்வியும் வேலைவாய்ப்பும் கிடைக்கும்; கிடைக்கச் செய்துள்ளது இந்த அரசு என்பதைச் சொல்வதற்காக நடத்தப்பட்ட அந்த விழாவில் பிரபா கல்விமணி எனத் தன்னை அழைத்துக்கொண்ட பேரா.கல்யாணிக்கு தகுதிவாய்ந்த அந்த விருதை வழங்கிய அரசுக்குப் பாராட்டையும் விருதுபெற்ற அவருக்கு வாழ்த்தையும் சொல்லிக் கொள்கிறேன்.
நெல்லை மாவட்டத்தின் காவல் கிணறு பகுதியைப் பிறப்பிடமாகக் கொண்டிருந்தாலும் அவரது ஊராக அறியப்படுவது திண்டிவனம். அங்கு பழங்குடி இருளர்களின் கல்வி மேம்பாட்டுப் பணிக்காகத் தொடங்கப்பட்ட அமைப்பு பழங்குடி இருளர் பாதுகாப்புச் சங்கம் மற்றும் பழங்குடியினர் கல்வி அறக்கட்டளை. அதன் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் .பிரபா.கல்விமணி (எ) கல்யாணி. அதற்காகவே இந்த விருது என்றாலும், அவரது நீண்ட நாள் கல்விசார் பணிகளும் நினைக்கப்படவேண்டியவை. அரசுக் கல்லூரிப் பேராசிரியராக அவரது அனுபவங்கள் தொகுத்துப் பதிவு செய்யப்படவேண்டியவை. வகுப்பறையில் கற்பித்தல் என்பதைத்தாண்டி அமைப்புகளைப் படிப்பதும், அவற்றைப் பயன்படுத்துவதும் என்ற அனுபவக்கல்வியைப் பலருக்கும் வழங்கியவர் அவர். இருளர் பழங்குடியினர் பாதுகாப்பு சங்கத்திற்கு முன்பு அவர் உருவாக்கிய அமைப்பு மக்கள் கல்வி இயக்கம். அதன் இயக்கங்களின் போதுதான் எனக்கு அவரோடு நேரடிப் பழக்கம் ஏற்பட்டது. அவ்வமைப்பு திண்டிவனம் பகுதியில் நடத்திய கல்விசார் விழிப்புணர்வுச் செயல்பாடுகள் சிலவற்றில் நான் பங்கேற்றுள்ளேன். அவர் உருவாக்கிய தாய்த்தமிழ்ப் பள்ளி தமிழ்நாட்டுப் பள்ளிகளில் ஒரு முன்மாதிரி
திண்டிவனம் அரசு கல்லூரியில் இயல்பியல் துறைப் பேராசிரியராக இருந்த அவரது பெயரை முதன் முதலில் சொன்னவர் நிஜநாடக இயக்கத்தின் நிறுவனர் மு.ராமசுவாமி. விழுப்புரத்தில் நெம்புகோல் என்ற அமைப்பில் இயங்கிய அரசியல் விழிப்புணர்வுகொண்ட இளையோர்களுக்கும், மாணவர்களுக்கும் தெருநாடகப்பயிற்சிப்பட்டறை ஒன்றை நடத்திவிட்டு வந்த அனுபவங்களைச் சொன்னபோது அந்த அமைப்பின் பின்னணியில் கல்யாணி, பழமலை போன்ற அரசுக்கல்லூரி ஆசிரியர்கள் இருந்து செயல்படுகிறார்கள் என்று சொன்னார். அப்போது நான் முதுகலை மாணவன். அந்தப் பெயரை இடதுசாரிக் கலை, இலக்கிய இதழ்கள் சிலவற்றிலும் வாசித்திருந்தேன்.
பேரா.கல்யாணி எனக்கு நேரடியாக ஆசிரியர் அல்ல. ஆனால் எனக்குப் பலவிதமான கற்பித்தலைச் செய்தவர் அவர். ஏட்டுக்கல்வி எதனையும் அவரிடமிருந்து கற்றுக்கொண்டதில்லை. அனுபவங்கள் வழியாகக் கற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கியவர் அவர். அமைப்புகளைப் புரிந்துகொள்வது, பங்கேற்பது, விலகுவது, எதிர்ப்பது, பயன்படுத்துவது என்பதைக் குறித்த அறிவை அவரோடு பழகிய பலருக்கும் கடத்திக்கொண்டே இருப்பவர். பாண்டிச்சேரியில் இருந்த எட்டாண்டுக்காலத்தில் அவரைச் சந்தித்த போதிலும், அவரைப்பற்றி நண்பர் ரவிக்குமாரோடு உரையாடியபோதிலும் அவரது அணுகுமுறைகளை உள்வாங்கி இருக்கிறேன். அவரிடமிருந்து கற்றுக்கொள்ளுதல் என்பதைப் பற்றிச் சொல்லும்போது இதனைச் சொல்வது சரியாக இருக்கும்.
நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றிற்காக இசைக்கலைஞர் எம்.டி. ராமநாதனைப் பற்றி ஒரு ஆவணப்படத்தை இயக்கினார் அவரது பேத்தி சௌதாமினி. இப்போதும் ஆவணப்படங்களை எடுத்துக் கொண்டிருக்கும் ஆர்.வி. ரமணி. புனே திரைப்படக்கல்லூரியின் மாணவியான சௌதாமினி, தனது தாத்தாவின் இசைமேதைமையையும் பயிற்றுவிக்கும் முறையையும் அப்படத்தில் காட்சிப்படுத்துவதற்காக நாடக நடிகர்கள் பயிற்சி பெறும் காட்சிகளைப் படமாக்க நினைத்தார். அதற்காக அவர் அணுகிய நாடகக்குழு மதுரை நிஜநாடக இயக்கம். அந்தப் படம் எடுக்கப்பட்டபோது நான் மதுரையிலிருந்து பாண்டிச்சேரிக்குப் பெயர்ந்துவிட்டேன் என்றாலும் முன்னால் நிஜநாடக இயக்க உறுப்பினர் என்ற நிலையில் என்னையும் அந்தப் படத்தில் நடிக்க அழைத்துக்கொண்டது நிஜநாடக இயக்கம். அந்தப் படத்திற்கான படப்பிடிப்பு சென்னையில் சோழமண்டலக்கடற்கரையின் மணல் குவியல்களுக்குள் நடந்தது.
எம்.டி.ராமநாதனின் கற்பித்தல் முறை என்பது நேரடியாக எதனையும் கற்பிக்கும் முறையாக இருக்காதாம். அவர் பயிற்சி செய்வதையும் பாடுவதையும் அவரது மாணாக்கர்கள் அருகிருந்து பார்த்துப் பார்த்துப் பழகிக் கொள்ள வேண்டும். பயிற்சி செய்யவேண்டும்; வெளிப்படுத்த வேண்டும். அரங்கியலிலும் அப்படியான பயிற்சி முறைகளைச் செய்பவர்கள் உண்டு. நடிகர்களுக்கு ஒவ்வொரு அசைவுக்கும் குரலுக்கும் தேவையான பயிற்சிகளை அளித்து உருவாக்குபவர்கள் உண்டு. அப்படி இல்லாமல் ஒரு நாடகத்தை இயக்கும்போது உடனிருந்து பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொள்ளச் செய்பவர்களும் உண்டு. திரைப்பட இயக்குநர்களிலும் இவ்வகையான இயக்குநர்களைப் பார்க்கமுடியும். நடித்துக் காட்டிப் போலச் செய்யத்தூண்டுபவர்களாக இருப்பவர்களும், நடித்துக்காட்டாமல், நடிகர்களோடு பேசிப்பேசி அவர்களுக்குள்ளிருக்கும் திறனைக் கொண்டுவருபவர்களும் உண்டு. ஸ்டானிஸ்லாவ்ஸ்கியின் முறைமை நடிப்பு(Method Acting) கோட்பாட்டில் இவ்விருவகைகளையும் விவாதித்துள்ளார். பயிற்சிகளையும் சொல்கிறார். குரோட்டோவ்ஸ்கியும் இந்த முறைகளை விளக்கியிருக்கிறார்.
நடிப்பைக் கற்றுக்கொள்ளுதல் என்பதை அப்படியே அமைப்புகளைக் கற்றுக்கொள்ளுதல் என்பதற்கு நகர்த்தினால் கல்யாணியின் கற்பித்தல் அணுகுமுறை புரியவரும். இந்திய சமூகத்தில் இருக்கும் சமூக அடுக்குகளின் வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு செயல்படுவதற்கு அவரது முறைமைகள் நல்லதொரு பயிற்சிகள். சாதி, மதம், ஊர், என்பனவற்றோடு கட்சிகளைத் தாண்டி அரசுகளைப் பற்றிய பார்வையை அவரிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். அரசுகளை மட்டுமல்லாமல் சமூகத்திற்குள் இருக்கும் பேரமைப்புகளையும் நுண் அமைப்புகளையும் அதன் இருப்போடு விளக்கியெல்லாம் அவர் பாடம் நடத்துபவரல்ல. ஆனால் அவர் இயங்கும் முறைகளைக் கொண்டு நல்ல மாணாக்கர்கள் பாடம் கற்றுக் கொள்வார்கள்.

அமைப்புகளை விளக்குவது, விவாதப்படுத்துவது, பங்கேற்பது, விமரிசனத்திற்குள்ளாக்குவது, மறுப்பது எனத் தொடர்ச்சியாகத் தன் பயணத்தைக் கொண்டவர் பேரா.கல்யாணி . அதே நேரம் அமைப்புகளை உருவாக்குவதும், கட்டமைப்பதும், நெகிழ்ச்சிப்படுத்துவதும், பயன்பாட்டுக்குரியதாக மாற்றுவதும் என்பதும் அவரது இணைநிலைச் செயல்பாடுகளாக இருந்துள்ளன. இந்த நகர்வுகளும் இயங்குதலும் தான் தீவிரமான கலகச் செயல்பாடுகளையும் அமைப்பல்லா அமைப்புகளையும் முன்வைத்த கல்யாணியை அரசின் கவனத்திற்குக் கொண்டுபோய்ச் சேர்த்துள்ளது. எந்த அரசோடும் அமைப்புகளோடும் நெருங்கிய உறவைப் பேணாத அவரைக் கவனப்படுத்தி விருது வழங்கவேண்டும் என நினைத்த திராவிட முன்னேற்றக் கழக அரசின் செயல் ஆச்சரியம் தரும் ஒன்று.
கருத்துகள்