எட்டுப்பட்டிகளும் பதினெட்டுப்பட்டிகளும்
சில எண்கள் சார்ந்து சில மரபுத்தொடர்கள் உருவாகியிருக்கின்றன; சில நம்பிக்கைகளும் உள்ளன. மூன்று, ஆறு, எட்டு, ஒன்பது முதலான எண்களோடு கடவுள்களுக்குத் தொடர்புகள் உண்டு. மும்மூர்த்திகள், ஆறுமுகன், நமசிவாய நமஹ என்னும் எட்டெழுத்து, நமோ நாராயணாய நமஹ என்னும் ஒன்பது எழுத்து போன்றன கடவுள்களின் அடையாளங்கள். பெருமாள் என்னும் நாராயணனோடு ஒன்பது எழுத்து தொடர்பில் இருக்க, நெல்லைக்குப் பக்கத்தில் தாமிரபரணிப்படுகையில் பெருமாள் இருக்கிறார். அவரது கோயிலுக்குப் பெயர் எட்டெழுத்துப் பெருமாள் கோயில்.
எட்டு, பதினெட்டு என்ற எண்கள் தமிழ்நாட்டுக்கிராமங்களில் அதிகம் சொல்லப்படும் எண்கள்கூட. எட்டுப்பட்டி ஜமீன், பதினெட்டுப்பட்டி ஜமீன்கள் இருந்த காலத்தை நினைவூட்டும் அந்த வழக்காறுகள் சில வரலாற்றைச் சொல்வன. சின்னதான ஜமீன்தாரின் ஆளுகைக்குள் எட்டுக்கிராமங்கள் அடக்கம். அதைவிடப் பெரிய ஜமீன்தாரின் ஆளுகையில் பதினெட்டுக் கிராமங்கள் அடக்கம். எனது ஊரான தச்சபட்டி என்னும் கிராமம் எழுமலை ஜமீனில் அடக்கம். அந்த ஜமீன்தாரின் கீழ் பதினெட்டு ஊர்கள் இருந்தன என்பதற்கு ஆதாரமாக ஒரு நிகழ்வு இருந்தது அங்கு கொண்டாடப்படும் முத்தாலம்மன் திருவிழா இப்போதும் கூட எப்போதாவது நடக்கிறது. ஒரே நேரத்தில் பதினெட்டு அம்மன்கள் கிளம்பி அந்தந்த ஊர்களுக்குப் போகும். கிளம்பும் இடம் என்பது பானை வனையும் குயவர்களின் தொழிற்கூடம் தான். பதினெட்டு அம்மன்களும் ஒரே நேரத்தில் கண் திறக்கப்பட்டுக் கிளம்பும்; ஆனால் மூன்று ஊர்களில் இருந்த குயவர்களின் கூடங்களிலிருந்து.
நான் பார்க்க எழுமலையிலிருந்து ஒரே நேரத்தில் ஒன்பது அம்மன்கள் கிளம்பின. வரும் வழியில் அந்த ஜமீன்தாரின் பெரிய வீடு இருக்கும்.அங்கே நின்று அந்தக் குடும்பத்தினரின் மரியாதையை ஏற்றுக்கொண்டு அம்மன்கள் கிளம்பிச் செல்லும் . ஒவ்வொரு ஊர்க்காரர்களும் தங்கள் கொண்டாட்டத்தை வெடிகள் மூலமாகவும், ஏற்பாடு செய்த நாதஸ்வரக் கச்சேரிகள் மூலமாகவும் கெத்துக்காண்பிப்பார்கள். அன்றிரவு முழுவதும் எழுமலையின் பேருந்து நிலையத்திற்கு அருகில் போடப்பட்ட மேடையில் திறமான நாதஸ்வரக் கலைஞர்களின் கச்சேரியைக் கேட்டிருக்கிறேன். அது ஒருவிதப் போட்டிதான். அடுத்த திருவிழாவரை அந்த இசைக்கச்சேரி மட்டுமே நினைவில் இருக்கும். என் தந்தையின் காலத்தில் எழுமலையிலிருந்து ஒரே நேரத்தில் பதினெட்டு அம்மன்களும் கிளம்பியதாகவும் பின்னர் மூன்று ஊர்களுக்குப் பிரித்து அளிக்கப்பட்டதாகவும் சொன்னார். அந்தப் பிரிப்பில் சாதியப்பாகுபாடு இருந்ததாகவும் சொன்னார். அந்தத் திருவிழாவை நடத்த குறிப்பிட்ட கால இடைவெளியெல்லாம் கிடையாது. ஏழாண்டு இடைவெளி, பத்தாண்டு இடைவெளி என அவ்வப்போது நடத்துவார்கள். இதுவரை நான் ஆறு முத்தாலம்மன் திருவிழாக்களைப் பார்த்திருக்கிறேன். ஒன்று நடந்தபோது பாண்டிச்சேரியில் இருந்தேன்; போகவில்லை. சுதந்திரத்துக்குப் பின் பதினெட்டு ஊர்களிலும் ஏதாவது பஞ்சாயத்து என்றால் ஜமீன்தாருக்கு முன்பெல்லாம் தகவல் தெரிவிக்கப்படுமாம். அவரோ, அவரது சார்பில் ஒருவரோ வருவார்களாம். எனக்கு விவரம் தெரிந்த காலத்தில் அந்த வழக்கம் நின்று போய்விட்டது. நிலமானிய காலத்து அதிகாரம் நின்றுபோனதின் அடையாளம் அது. ஆனால் முத்தாலம்மன் திருவிழா நிலமானிய காலத்து பண்பாட்டு நடவடிக்கை. திடீரென்று சமூகத்தின் கூட்டு நனவிலியிலிருந்து கிளம்பிவிடும்
இந்திய/ தமிழ் கூட்டு நனவிலி மனதிற்குள் இருக்கும் எட்டு, பதினெட்டு போன்ற எண்களின் நினைவை நமது சினிமாக்காரர்கள் திரும்பத்திரும்ப நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். கிராமிய சினிமா அல்லது மண்வாசனை சினிமா என்ற அடையாளத்தோடு வரும் படங்களில் இந்தச் சொற்றொடர்கள் வந்து விழுந்து விடுகின்றன.அந்த எண்களோடு சேர்ந்து நாட்டாமைகள் என்ற சொற்களும் சேர்ந்து கொள்வதுண்டு. நாட்டாமைகள் அந்தக் காலத்து ஜமீன்தார்களின் பதிலிகள். நிலவுடைமையாளர்கள்; பெருந்தனக்காரர்கள். எட்டு எட்டாய் மனித வாழ்க்கையைப் பகுத்துப் பேசிய ஒரு பாட்டால் பெயர் பெற்றவர் உச்சநடிகர் ரஜினிகாந்த். பாட்ஷா படத்தில் இடம்பெற்ற அந்த பாடலுக்குப் பின்னர் தன்னைத் தமிழ்நாட்டின் நாட்டாமைகளில் ஒருவராக நினைத்துக்கொண்டார் என்பது கூடுதல் தகவல். அதனால் அவ்வப்போது தமிழ்நாட்டுக்கான கருத்துச் சொல்லியாக ஊடகங்களில் தோன்றுகிறார். ஆனால் அந்தப் பாடலை எழுதியவர். திராவிட அடையாளம்/ பகுத்தறிவு சிந்தனை கொண்ட பாடலாசிரியர் வைரமுத்து என்பதை மறந்துவிடக்கூடாது. சினிமாவிற்கு எழுதப்படும் பாடலில் வெளிப்படுவது பாத்திரமனநிலை. கவியின் தன்னிலை அல்ல.
***********
இப்போதும் எட்டுப்பட்டி, பதினெட்டுப்பட்டி என்ற மரபுத்தொடர்கள் தேர்தல் காலத்தில் பயன்பாட்டுக்கு வந்துவிடுகின்றன. அதிலும் உள்ளாட்சித்தேர்தல் காலத்தில் அதன் புழக்கம் அதிகம். உள்ளாட்சி அமைப்புக்களுக்கு நடக்க வேண்டிய தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அச்சு மற்றும் செய்தி ஊடகங்களின் மையப்பொருளாக இருப்பவை உள்ளாட்சி அமைப்புக்கள் தான். இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு ஊடகங்களின் கவனம் முழுவதும் அவை பற்றித் தான் இருக்கும்.தேர்தல்கள் முடிந்து பதவி ஏற்பது வரை இந்தக் கவனம் நீடிக்கும். அதன் பிறகு ஊடகங்கள் வேறு பக்கம் கவனத்தைத் திருப்பி விடும். மக்களும்கூட அப்படித்தான்.
தேர்தல்களம் என்பது போட்டியின் களம். ஆனால் கிராமங்களில் நடக்கும் கோழிச்சண்டை, ஆட்டுக்கிடாய் மோதல் மாதிரியான களம் அல்ல. மனிதர்கள் ஒருவரோடு மோதிக் கொள்ளும் மல்யுத்தக் களம் போன்றதும் கூட அல்ல. உடல் வலிமையில் சமநிலை இருப்பதாக நம்பும் இருவர் மோதி , ஒருவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கும் போட்டி முடிவுகள் இங்கு இல்லை. இப்போட்டி பலருக்கும் இடையே நடக்கும் போட்டி. போட்டியில் பங்கேற்கும் நபரின் பலம் என்பது குறிப்பிட்ட வட்டாரத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு பலம் தான். உண்மையில் ஒருவரின் பலம் என்பது அவரே உண்டாக்கிக் கொள்ளும் பலம் அல்ல; அவரைப் பற்றி உண்டாக்கப் படும் கருத்து பலம் தான் அது.
ஒருவரைப் பற்றிய கருத்து அவர் வாழும் வாழ்க்கை முறையாலும் பிறரோடு கொள்ளும் உறவு முறையாலும் உண்டாக்கப்படும். மக்களாட்சி முறைக்கு மாறிய பின்பு ஒருவரைப் பற்றிய கருத்தைத் தீர்மானிப்பதில் அவர் சாந்துள்ள கட்சியும் அதன் கொள்கைளும் முக்கிய பங்கு வகிப்பனவாக மாற்றம் பெறுகின்றன. இவர் இப்படிப் பட்டவர்; அவர் சார்ந்த கட்சி இத்தகைய கொள்கைகளைக் கொண்டது; அதனால் அவரது வாழ்க்கை முறையும், பழகும் முறையும் இவ்வாறு இருக்கும் என்று நம்பப்பட்டது. இன்று நடைமுறையில் ஒருவரைப் பற்றிய கருத்துருவாக்கத்தில் அரசியல் கட்சிகளின் கொள்கைகள் இடம் பிடித்துள்ளனவா? கேள்வியை எழுப்பிக் கொள்ளுங்கள். பதிலைப் பின்னர் பார்ப்போம்.
எல்லாக் கட்சிகளும் இந்திய தேசத்தின் பொதுக்குடிமைச் சட்டங்களை ஏற்றுக் கொண்டவைகளாக இருக்க வேண்டும் என வலியுறுத்தப் படுவதின் பின்னணிகளை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். அப்படிச் சொல்வதின் நோக்கம் என்ன? ஒவ்வொரு கட்சியும் அக்கட்சிகளின் ஒவ்வொரு உறுப்பினரும் இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படைகளை - குறிப்பாக குடிமைச் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பதுதான். சட்டத்தின் அதிகாரமும் சட்டப்படியான நிர்வாகமும் நடைபெற வேண்டும் என்பதுதான். அதனை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்புக்கு வருபவர்கள் குடிமைச் சமூகத்தின் நோக்கத்தை அறிந்தவராக இருக்க வேண்டும். அப்படி அறிந்தவர்கள்தான் ஊராட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகளாக வருகிறார்களா.? இந்தக் கேள்வியையும் எழுப்பி வைத்துக் கொள்ளுங்கள்.
சுதந்திர இந்திய நாட்டின் ஜனநாயகக் கட்டமைப்பு வலிமையாக இருக்க வேண்டும்; பல தளங்களில் ஆட்சி அதிகாரம் செயல்பட வேண்டும். ஒவ்வொரு தளத்திலும் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; அந்த அதிகாரத்தைச் செயல்படுத்த விரும்பும் பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவர்களின் நிர்வாகத்தை அருகில் இருந்து மக்கள் கண்காணிக்க வேண்டும்; தங்களுக்குத் தேவையான நலத்திட்டங்களை அதன் வழியாக நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் அந்த அமைப்புகளில் உறுப்பினர்களாகும் நபர்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கும் நிலையில் அந்தந்தப் பகுதியின் பிரச்சினைகளை நன்கு அறிந்து அதை நிறை வேற்றுவர் என்ற உயரிய நோக்கமும் விருப்பமும் அதன் பின்னணியில் இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட உள்ள நபர்கள் அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். ஆனால் பகுதியின் தேவையை நிறைவேற்றும் நோக்கங்கள் கொண்டவர்களாக இருக்கிறார்களா? இது இன்னொரு கேள்வி. கேள்விகளைக் கேட்டுக் கொண்டே போகலாம். பதில் கிடைத்தால் நல்லது.
ஒரு தேசத்தின் கட்டமைப்பு எத்தகைய குடிமைச் சமூகக் கட்டமைப்பாக இருக்கிறது என்பதைப் பொறுத்தே அந்த தேசத்தின் பொருளாதார, சமூக வாழ்வின் மேன்மைகளும் அமையும் என்பது அறிஞர்களின் சிந்தனை வெளிப்பாடு மட்டும் அல்ல; நடைமுறை உண்மையுங்கூட.
இந்தியாவின் குடிமைச் சமூக அமைப்பு ஆங்கிலேயர்களின் வருகையால் பலவிதங்களில் மாற்றம் பெற்றது என்பது உண்மை. கல்வி, மருத்துவம், போக்குவரத்து போன்ற துறைகளில் ஆங்கிலேய அரசாங்கம் ஏற்படுத்திய மாற்றங்கள் தான் இன்று பல்கிப் பெருகி வளர்ந்திருக்கின்றன. மைய அரசின் வலிமை, நோக்கம் போன்றவற்றை நெறிப்படுத்தி அதில் கவனம் செலுத்தித் தங்கள் வியாபார வெற்றியைச் சாதித்துக் கொண்ட ஆங்கிலேயர்கள் கிராம அளவில் மாற்றங்களை ஏற்படுத்தாமல் விட்டு வைத்தனர் என்று சொல்ல வேண்டும். அப்படியான மாற்றங்களைச் செய்ய வேண்டிய தேவை அவர்களுக்கு அப்போது ஏற்படாமல் இருந்ததுகூடக் காரணமாக இருக்கலாம்.
அதே நிலையை இந்திய சுதந்திரத்திற்குப் பின்னும் நமது தேசத்து அரசுகளும் தொடர்ந்து கொண்டிருப்பது ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது. வட்டாரங்களில் அதிகாரம் செலுத்தி வந்த ஜமீன்தார்களை மானியம் கொடுத்து ஒழித்து விட்டதாக வரலாறு சொல்கிறது. ஜமீன்தார்களின் அதிகாரம் என்பது ஒரு நபரின் அதிகாரம் அல்லது ஒரு குடும்பத்தின் அதிகாரம் என்று மட்டும் கருதினால் அந்த அதிகாரம் ஒழிந்து விட்டது என்று மகிழ்ச்சி அடையலாம். ஆனால் இந்தியக் கிராமங்களில் ஜமீன்தார்களின் அதிகாரம் என்பது சாதிகளின் அதிகாரம் தான். ஒவ்வொரு கிராமத்திலும் ஆதிக்க சாதியாக எது இருக்கிறதோ அதுதான் அங்கு அதிகாரத்தை நிலை நாட்டுகிறது.
குடிமைச் சமூக அமைப்பில் நிர்வாகிகளாகப் பங்கேற்கும் உறுப்பினர்கள் பற்றிய கருத்துருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றுவதாக இருப்பது அவரது சாதி தான் என்பது வெளிப்படையான ஒன்று. பாராளுமன்றத்தேர்தல் முதல் உள்ளாட்சித் தேர்தல் வரை போட்டியிடும் நபர்களைப் பற்றிய கருத்தை அவரது சாதி பலமும் பணபலமும் சேர்த்து தான் உருவாக்குகின்றன. இன்று இவ்வெளிப்பாட்டின் அடுத்த கட்டமாக ஒவ்வொரு அரசியல் கட்சியும் ஒவ்வொரு சாதிப் பின்னணியுடன் அடையாளப்படுத்தப்படும் நிலைக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன.
கோயில் திருவிழாக்கள், மழை, நோய், கலவரம் போன்ற அவசரக்காலத் தேவைகள் எவை என்று அறிந்து அவற்றை நிறைவேற்றிக் காட்டுவதன் மூலம் மனிதநேயம் மிக்கவர்கள் என்ற நேர்மறைக் குணம் கொண்டவர்களாகத் தோற்றமளிக்கும் நாட்டாமைகளைப் பெரிய மனிதர்கள் என்று அழைப்பது வெளிப்புறத் தோற்றம் தான். உள்ளே அவர்கள் கேள்விக்கு அப்பாற்பட்டவர்களாக வலம் வருபவர்கள் என்பதுதான் உண்மை. சிவில் சட்டம் என்பதற்குப் பதிலாகக் கிராமமரபு எனப் புதிய சட்டவிதிகளைத் தான் அவர்கள் நடைமுறையில் பின்பற்றுவார்கள்.
பொதுக்குடிமை [சிவில்] சமூகத்திற்குத் தொடர்ந்து சவால் விடும் இவர்களின் அதிகாரம் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலின் போது வெளிப்படையாகத் தெரிய வருவதும் உண்டு. பெரியவர் போட்டி போடுகிறார் அவரை எதிர்த்து யாரும் நிற்க வேண்டாம் என்ற மனநிலையை உருவாக்கி வைத்திருப்பது பெருந்தன்மையான நாட்டாமைக்குணம். அதன் தொடர்ச்சியாகத் தான் தேர்தல் நடத்தி மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் என்ற நடைமுறைக்கெதிராக அப்பதவிகளை ஏலம் விட்டு முடிவு செய்யலாம் என்பதையும் கருத வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களும் அரசியல் அதிகாரத்தின் பலனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு தனித் தொகுதிகள் ஒதுக்கப்பட்டால் கிராமத்தின் பெரும்பான்மை என்ற பெயரில் அந்தப் பஞ்சாயத்துக்களில் தேர்தலே நடத்த விடாமல் தடுப்பதும் நாட்டாமைக் குணத்தின் வன்மையான வெளிப்பாடு அல்லாமல் வேறல்ல.
கிராமங்களை நகரங்களின் எதிர்வுகளாகக் கட்டமைக்கும் காலம் முடிந்துபோவதாக.
கவிதாசரண், ஜன் - ஜீலை 2002

நாட்டாமைகளின் நேர்மையையும் மனிதாபிமானத்தையும் நாயகத் தனமாக்கிப் பல வெற்றிப் படங்களைத் தயாரிக்கும் தமிழ் திரைப்பட உலகம் விவேக் மாதிரியான காமெடி நடிகர்களைக் கொண்டு விமரிசனமும் செய்கிறது. காமெடி அந்த நேரத்தில் சிரிப்பை வரவழைத்துவிட்டுக் காணாமல் போய்விடும். நாட்டாமைக் குணத்தின் வேட்டைக் காடாக இருக்கும் இந்தியக் கிராம சமுதாய அமைப்பில் அடிப்படை மாற்றங்கள் உருவாக்காதவரை இந்திய ஜனநாயகத்திற்கு உள்ள சவால்கள் குறையப் போவதில்லை. பயங்கரவாதம் வெளியிலிருந்து வருவன மட்டும் அல்ல. உள்ளிருந்து கிளம்புவனவும் கூடத்தான்.
---------------------------------------------

தினமலர்/ செய்திமலரில்( 01-10-06) எழுதிய கட்டுரையின் இற்றைப்படுத்திய வடிவம்
நமது கிராமங்களும் நமது நகரங்களும்
கடந்த ஒரு நுற்றாண்டுத் தமிழ்க் கலை, இலக்கியங்கள்- குறிப்பாக சினிமாக்கள், ‘நகரங்கள்‘ என்பதனைக் கிராமங்களின் எதிர்வுகளாகவே சித்திரித்து முடித்துள்ளன.
நகரங்கள் காங்கிரீட் வனங்கள். நல்ல காற்று இல்லை. வானத்தில் புகைப் படிவம். மரங்களில் எண்ணெய்ப் புகை. தெருக்களில் வேகம், ஆபத்து, விபத்துக்கள் உண்டு. மனிதநேயம் இல்லை. ஆனால் கிராமங்களோ காற்றுக்குச் சொந்தமான வீதிகள் கொண்டவை; நீலவண்ண வானம் உண்டு; வாய்க்கால்கள் உண்டு; வரப்புகள் உண்டு; ஆறுகள் உண்டு; தோப்புகள் உண்டு. எளிமை, அந்நியோன்யம், உறவு, நேசம் இப்படி ஏராளமான ‘உண்டுகள்‘ உண்டு.
மொத்தத்தில் கிராமங்கள் பண்பாட்டின் உறைவிடங்கள், நகரங்கள் அழிவிடங்கள், நகரங்களில் பெண்கள் இல்லை; அடங்காப் பிடாரிகள் உண்டு. கன்னிப்பெண்கள் இல்லை; யுவதிகள் உண்டு. காளையா்களும் வாலிபா்களும் இல்லை; இளைஞா்களும், சண்டியா்களும் உண்டு. அடக்கம் இல்லை; மரியாதை இல்லை; பணிவு இல்லை; கற்பு…..? என்ன அா்த்தம் ……? இப்படிப் பல இல்லைகளின் கூடாரமாக நகரங்கள்.
கிராமம் கனவு; நகரம் யதார்த்தம். வாய்ப்பு கிடைத்தால் நமது படைப்பாளிகள் கனவை நனவாக்கிவிடுவார்கள். இல்லையென்றால் கனவையாவது கண்ணில் மறைத்து வாழப் பழகுவார்கள். அப்பாவிகளான கிராமத்து மனிதா்களை, அவா்களின் உழைப்பை நகரவாசிகளின் புத்திசாலித்தனமும் ஏமாற்றுகளும் களவாடுவதில் நமது படைப்பாளிகளுக்கு உடன்பாடு இல்லை.
சேற்றில் கால் வைத்தவா்களின் உழைப்பைச் சுரண்டி, நகரத்துத் தார்ச் சாலைகளாக, பங்களாக்களாக, கார்களாக, குளிரூட்டிய அரங்குகளாக மாற்றுவதில் படைப்பாளிகள் எரிச்சல் அடைந்திருக்கிறார்கள்; கோபம் அடைந்திருக்கிறார்கள். வருத்தம் தோய எழுதியுள்ளார்கள். கவிதைகளாக, புனைகதைகளாக, சினிமாக்களாகப் படம்பிடித்துள்ளார்கள். பல்வேறு நேரங்களில், ‘பட்டிக்காடா? பட்டணமா?‘ எனக் கேட்டுப் பட்டிக்காடே சிறந்தது எனச் சொன்னது உண்டு. ‘பெரிய இடத்துப் பெண்‘ நகரத்திலிருந்து வந்தவளாகக் காட்டி, விவசாயியின் விவேகத்திற்கு முன் தோற்றவளாகக் காட்டியது உண்டு. கெட்டு ‘பட்டணப் பிரவேசம்‘ செய்தவா்களை நகரம் திரும்பவும் அனுப்பிவிடுகிறது கிராமத்திற்கு சின்னக் கவண்டா்களின் பஞ்சாயத்துத் தீா்ப்புகள், ‘நாட்டாமை‘ களின் நோ்மையான அதிகாரங்களுக்கு முன்னால், நீதிபதிகளும் அதிகாரிகளும் தலை வணங்கியதாகக் காட்டியதுண்டு. பார்வையற்ற கிராமத்துப் பெண்ணிற்கு வாழ்க்கை அளிக்க முன்வந்த தெருக்கூத்துக் கலைஞனைக் கொலைகாரனாக ‘அவதாரம்‘ செய்ய வைத்தது நகரம்தான்.
இவையும், இவை போல்வனவும்தான் கிராமங்கள் x நகரங்கள் என்கிற கட்டமைப்புகள். இதன் இன்னொரு உதாரணம் சேரனின் பாண்டவர் பூமி. அதைப் பற்றிப் பேசுவதற்கு முன்னால் அப்படம் சார்ந்த ஒரு நிகழ்வு.
இப்போதெல்லாம் திருப்பூருக்குப் பல தடவை போக நோ்ந்துவிட்டது. வருடத்தில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று தடவைக்குக் குறையாமல், சொந்தக் கிராமத்திற்குப் போவது போலத் திருப்பூருக்கும் போக வேண்டியுள்ளது. காதுகுத்து, கல்யாணம், சடங்கு, இல்லையென்றால் சாவு….. இப்போது எனது கிராமத்தின் மூன்று பங்கு வீடுகள் சிதைந்து கிடக்கின்றன. விளக்கு போடக்கூட ஆட்கள் இல்லை. திருப்பூா்தான் அவா்களின் வாழிடமாக மாறிவிட்டது. திருப்பூரிலிருந்து எங்கள் கிராமம் 200 கி.மீ. தூரம்.
அந்தத் தடவை போனது தம்பியின் வீட்டுப் பால் காய்ச்சல் விசேஷத்துக்கு. தம்பி சித்தப்பாவின் மகன். பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் சித்தப்பாவிடம் சொல்லிக்கொள்ளாமல் திருப்பூா் போனவன். கூலிவேலை, காண்ட்ராக்ட் வேலை எனக் கடுமையாக உழைத்து, வாடகை இடத்தில் சாயப் பட்டறை போட்டான். சொந்தமாக நிலம் வாங்கிப் போட்டான். இப்பொழுது கீழே வீடுகள். தொழிலாளா்கள் குடியிருப்பதற்கேற்ப ஓா் அடுப்படி; அடுத்து ஓா் அறை. வரிசையாக நான்கோ, ஐந்தோ. மாடியில் பட்டறை. மனிதா்களின் கடுமையான உழைப்பின் வெளிப்பாடுகள். இனி அவா்கள் கிராமத்திற்குத் திரும்ப மாட்டார்கள் என்பது முடிவாகிவிட்ட ஒன்று. திரும்ப வேண்டிய தேவைகளும் இல்லை. மதுரையில் பஸ் ஏறியபோது மணி பதினொன்று. காலை நாலுமணிக்கெல்லாம் போய்விடலாம். எல்லாரும் தூங்கிக் கொண்டிருப்பார்கள் என்று நினைத்துப் போன எனக்கு ஆச்சரியம். புதிதாகக் கட்டிய கட்டடத்தின் முன்னால் பரப்பப்பட்ட மணலில் அமா்ந்து “டூரிங் தியேட்டரில்“ படம் பார்ப்பது போல் படம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். திரைக்குப் பதில் டி.வி. பெட்டியும் சி.டியும் இருந்தன. இரண்டு படங்கள் ஓடி முடிந்து போன நிலையில் திரும்பவும் முதலில் பார்த்த ‘பாண்டவா் பூமி‘ யைப் பாரத்துக் கொண்டிருந்தார்கள். படம் பார்த்தபோதே பலரின் கண்களில் கண்ணீா். முதலில் பார்த்தபொழுது வராத கண்ணீா் திரும்பவும் பார்க்கின்ற பொழுது அதிகமாகிவிட்டது. பாண்டவா் பூமி படம் சொந்தக் கிராமங்களில் வாழ முடியாமல், நகரத்திற்கு - திருப்பூருக்குப் போனவா்களின் கதையாகப் பார்க்கப்பட்டதின் விளைவு, அவா்களின் அழுகையாக வெடித்தது.
எந்தப் படைப்பும் - எழுத்தானாலும் சரி, காட்சிரூப வெளிப்பாடானாலும் சரி - வாசகனை உள்ளிருந்து வாசிப்பவனாக (Inside Reader) பார்வையாளனாக மாற்றி விடும்நிலையில் அவனைத் தனக்குள் இழுத்துக்கொள்ளும் மாயத்தைச் செய்துவிடும். அதன் பின்பு அவன் வெறும் ‘பார்வையாளன்‘ என்ற நிலையிலிருந்து மாறி பங்கேற்புப் பார்வையாளனாக (Participatory Audience) மாறி விடுவான். அப்படி மாறும் நிலையில், அவன் சிந்தனைபூர்வ நிலையிலிருந்து தவறி, உணா்வுபூர்வ நிலைக்குள் நுழைவதும் நடந்துவிடும். அதன் பின்பு அவனது பயணம் அப்படைப்பாளியின் பயணத்தோடு இணைந்து, அந்தப் படைப்பு தரும் முடிவோடு ஒன்றிவிடும் நிலைக்குத் தள்ளப்படும். இதுதான் அங்கு நடந்து கொண்டிருந்தது.
இரண்டு குடும்பங்களுக்கிடையே பெண் கொடுத்தல், காதலுக்குத் தடை, அதன் காரணமாகக் கொலை, அதனைத் தொடா்ந்து கிராமத்தை விட்டு வெளியேறி திருப்பூருக்குப் போய் பதிய தொழிலில் இறங்கிப் பணம் சம்பாதித்துவிட்டுத் திரும்பவும் கிராமத்திற்கு வந்து, சொந்தமாக வீடு கட்டி, அதில் தங்கையின் மகளைத் தம்பிக்குத் திருமணம் செய்து வைத்து, இழந்த பெருமையைத் திரும்பவும் கொண்டுவர விரும்பும் ஒருவனின் (ராஜ்கிரண்). கதை; திருப்பூருக்கு பிழைக்கப்போன கிராமத்தான் ஒவ்வொருவனின் கதையாகவும் பார்க்கப்பட்டதின் பின்னணியில் நவீன யுகத்தின் கிராமம் நகரம் என்கிற எதிர்வு நிலை செயல்பட்டுள்ளது.
தன்விருப்பம் போலக் கணவனைத் தோ்ந்தெடுக்கப் பெண்ணை அனுமதிக்காத குடும்பம், அதை மீறியவளைத் தண்டிக்கிறது. காதல் செய்த இருவரும் கொலை செய்யப்படுகின்றனா். அவளைக் காதலித்தவன் மரபான விவசாயத்திற்கு எதிரான நவீன உழவுக் கருவியான டிராக்டரை ஊருக்குள் கொண்டுவந்தவன், கிராமத்துக் கூலி விவசாயிகள் வேலை இழந்து இடம்பெயரக் காரணமானவன் எனக் கதை பண்ணுவதின் மூலம் சேரன் தன்னை எந்திரமயமாதலுக்கு எதிரானவராக நிறுத்திக்கொள்கிறார்.
மரபான வேளாண்மை, கூலி விவசாயிகளுக்கு ஆதரவு, அன்பான தாயின் பிரிவுக்குக் காரணமானவனைப் பழிவாங்கல், உறவுக்குள் பெண்ணுக்குத் திருமணம் என்கிற தளங்கள் சொந்தக் கிராமத்தை நேசித்தல் என்பதோடு இணைந்துநிற்கின்றன. இதற்கு மாறாக காதல் திருமணம், பொறாமை, பழிவாங்கல், எந்திரமயமாக்கிக் கூலித் தொழிலாளா்களின் வயிற்றில் அடித்தல், பாசமான, தாயில்லாத , தங்கைகள் இல்லாத குடும்பம் என்பதை நிறுத்துவதன் மூலம் எதிர்வைக் கட்டமைக்கிறார் சேரன். இந்தப் படத்தின் கதைக்குள்ளேயே - குறிப்பான வெளிக்குள்ளேயே கூட கிராம வாழ்வு இறந்த காலத்தில் வன்முறை நிரம்பியதாகவும், நிகழ்காலத்தில் நம்பிக்கைகள் அற்றதாகவும், எதிர்காலத்தில் பெண்களின் தியாகங்களை வேண்டுவனவாகவும்தான் இருக்கிறது.
பொது நிலையிலும் கூடத் தமிழ்நாட்டுக் கிராமங்கள் இப்படித் தான் உள்ளன. தமிழகக் கிராமங்களின் கடந்த காலம் வன்முறைகள் நிரம்பியதுதான். பெரும்பான்மை மக்கள் - குறிப்பாகத் தலித்துகளும் பெண்களும் அடிமைகள்தான். அவா்களின் மூக்கிற்குள் சுத்தமான காற்று நுழைந்திருக்கலாம். கைகளைச் சுற்றியிருந்த கயிறுகள் நாக பாஷாணங்கள். பண்ணையடிமைகளாகவும், வைப்பாட்டிகளாகவும் வாழ்ந்த காலம், இறந்த காலம். நிகழ்காலமும் நம்பிக்கைகள் எதையும் தந்து விடவில்லை வெண்மணிகளில் எரிபட்டதும் ஊஞ்சனைகளில் கொளுத்தப்பட்டதும் மறந்துபோனவை அல்ல. கொடியங்குளங்களும் குண்டுபட்டிகளும் நிகழ்ந்துகொண்டுதான் உள்ளன. பாப்பாபட்டியும் - கீரிப்பட்டியும் நிகழ்கால ஜனநாயக சமூகத்தைக் கேலி செய்யும் அடையாளங்கள். எதிர்காலம் இவா்களின் தியாகத்தால் தன்னை எழுதிக் கொள்ள முடியுமே ஒழிய அதனை அவா்கள் மறுக்கின்ற பொழுது, எதிர்காலம் என ஒன்று இல்லாமல்தான் போகும். விடுதலை உணா்வு கொண்ட தலித்துகளும் பெண்களும் தியாகங்களுக்குத் தயாராய் இல்லை; ஆக தமிழ் நாட்டுக் கிராமங்களுக்கு எதிர்காலமும் இல்லை.
ஒரு தலித், கிராமத்தை விட்டு வெளியேறிய பின்பு அடிமைத் தளையிலிருந்து விடுபடுதலின் சாத்தியம் அதிகம். இந்து மதம் நகர உருவாக்கத்தின் போது கூட சாதிவாரியான தெருக்களை முன்மொழிந்த கடந்த காலம் முடிந்து கொண்டிருக்கின்றது. நகர விரிவாக்கங்கள் பல சாதி மனிதா்களின் தொகுப்பாக - கலப்பாக - மாறிக்கொண்டிருக்கின்றன. அதில் குடியேறி, செருப்புப் போட்ட கால்களுடன், மணிக்கட்டு வரை மூடிய சட்டையுடன் வீதிகளில் நடந்து மாசு நிறைந்த நகரக் காற்றைச் சுவாசித்தாலும், கிராமங்களுக்குத் திரும்பப் போவதில்லை. திரும்பிப் போய் காலணிகளைக் கையில் தூக்கிக்கொண்டு, மேல்சட்டையைக் கழற்றி இடுப்பில் கட்டிக் கொண்டு, ஒதுக்குப்புறமாக நடக்கப் போவதில்லை.
நகா்மயமாதலுக்கும் எந்திரமயமாதலுக்கும் எதிராகக் கிராம வாழ்க்கையை - மரபான வேளாண்மையை - மனிதநேயமும் சகிப்பும் கொண்ட பண்பாட்டை முன்வைக்கும் நவீன எழுத்தாளா்கள் இனியும் அதைத் தொடா்வது பற்றிச் சிந்திப்பார்களாக. அப்படி நீங்கள் தொடா்கிறீா்கள் என்றால் அது உங்கள் கிராமங்கள்தான். அவா்களுடையன அல்ல. அதாவது இடைநிலை ஆதிக்க சாதிகளின் கிராமங்கள். அவா்களுக்குத்தான் வயல்கள் உண்டு. அவா்களுக்குத் தான் உத்திரம் போட்ட வீடுகள் உண்டு. ஊஞ்சல் கட்டிய முற்றங்கள் உண்டு. பெரிய எழுத்துப் புராணங்கள் அடுக்கிய பரண்கள் உண்டு.

கருத்துகள்