உதிரியாய்ச் சில குறிப்புகள்
அவரின் பிற எழுத்துகளை வாசித்ததில்லை. நேரிலும் அறிந்ததில்லை. ஆனால் அவரது முகநூல் குறிப்புகளின் தொடர் வாசகன். நிமோஷினி என்ற அந்தப் பெயரைக் கூடப் புனைபெயராக இருக்கும் என்றே நினைத்துக் கொண்டு வாசிப்பேன். இப்போது அவரது குறிப்புகளைத் தொகுத்து நூலாக்கியிருக்கும் "கொமாரன் குறிப்புகள்" வாசிக்கக் கிடைத்தது.
இந்தக் குறிப்புகளைத் தொடர்ச்சியாக வாசிக்கத் தொடங்கிய அரைமணி நேரத்திலேயே ' இப்படித் தொடர்ச்சியாக' வாசிக்க வேண்டியதில்லை என்று தோன்றியது. அதனால் அந்த வாசிப்பை மாற்றிக் கொண்டு ஆங்காங்கே வாசித்தேன். தாண்டித் தாண்டி வாசித்தபோதும் அந்த எழுத்துக்குள் தனது தன்னிலையை - கடந்த கால நினைப்புகளை -இப்போதைய இருப்பை - மறைக்காமல் சொல்லிவிடத் துடிக்கும் வெளிப்படைத்தன்மை இருப்பதை வாசிக்க முடிந்தது.
மாதச்சம்பளக்காரராக இருந்து நடுத்தர வர்க்க வாழ்க்கைக்குள் நுழைந்த ஒருவரின் குறிப்புகள் என்று இதனைச் சொல்லிவிடலாம். ஆனால் நடுத்தரவர்க்க நுழைவு தரும் சுகதுக்கங்களின் மீது விலகல் மனநிலையோடு அலைந்த ஒரு உதிரி மனிதனை வாசிக்கத் தரும் குறிப்புகள் என்ற நிலையில் இலக்கியப்பனுவலாக மாறிவிடும் குறிப்புகள் எனவும் சொல்லத்தோன்றுகிறது.
இப்போது பணி ஓய்வில் இருக்கும் எழுத்தாளர்களில் பலர் இலக்கிய வாசிப்பில் ஈடுபட்டதோடு எழுத்தார்வத்தையும் வளர்த்துக் கொண்டு தங்களின் அடையாளத்தைக் கச்சிதமாக வெளிப்படுத்தியவர்கள். தங்கள் நேரத்தை வேலைத்தளத்திற்கும் இலக்கியத்திற்கும் பிரித்து வழங்கித் தங்களை வெற்றிபெற்றவர்களாக ஆக்கிக் கொண்டவர்கள் உண்டு. சில நபர்கள் இரண்டு நிலையிலும் வெற்றி பெற்றிருப்பார்கள். சிலர் தங்கள் அலுவலகத்தில் பத்தோடு பதினொன்றாக இருந்துவிட்டு, இலக்கியத்திற்குப் பங்களித்து வெற்றிகரமாக வலம் வருவார்கள். அத்தகையவர்களின் ஓய்வுக்காலம் முழுமையான இலக்கியவாதி என்பதில் அவர்களே நினைக்காத அளவுக்குக் கவனம் பெற்று, விருதுகள், கொண்டாட்டங்கள், அங்கீகாரங்கள் என்று மாறியிருக்கும். அந்த மாற்றத்தின் பின்னால் அவர்களின் விடாமுயற்சியும் ஈடுபாடும் தங்களைச் சுற்றி இருக்கும் மனிதர்களைக் கவனித்து எழுதும் ஆற்றலும் இருந்திருக்கும். அத்தகைய ஈடுபாட்டைக் காட்டத்தவறிய ஒரு உதிரிமனநிலையை இந்தக் கொமாரன் குறிப்புகள் வாசிக்கத் தருகின்றன.
அலுவலக நடைமுறைகள், அதற்குள் எழும் நட்புகள், முரண்கள், காதல், காமம், ஏமாற்று, தன்முனைப்பு எனத் தனிமனதனாகத் தான் உணர்ந்ததையும் புறநிலையில் சமூகமும், சென்னை என்ற பெருநகர வெளியின் இயக்கங்களும் இந்தக் குறிப்புகளில் தொடர்ச்சியின்றி பரப்பப்பட்டுள்ளன.
அந்தக் குறிப்புகளுக்கு இடையில் இடம்பெற்றுள்ள கவிதைகளைத் தனியாகவே தொகுத்து நூலாக்கி இருக்கலாம். சில கவிதைகள் மட்டும் இங்கே:
இந்த நகரம்
முன்புபோல இல்லை
மாறிவிட்டது.
பள்ளிவிட்டுத்
திரும்புகையில்
கூழாங்கற்கள்
சேகரித்திருக்கிறேன்
இன்று கூழாங்கற்கள்
எதுவும் இல்லை
குப்பைக்கூளங்களில்
அருகில் பாதைகள்
கூழாங்கற்கள் கிடைக்கும்
பூமியில் ஒரு நதியில்
ஈரம் ஒளிந்திருக்கும் (107)
***
தாயம் தான் விழுகிறது
ஒவ்வொரு முறையும்
சூரியன், நிலவு,
அனைத்துமே தாயங்கள் தான்
ஈரஞ்சு, ரெண்டாறு,
விருத்தங்கள் விழாமல்
திரும்பத்திரும்ப தாயம்தான்
விழுகிறது.
கவிஞன் என்பதே தாயம்
என உணரும் வரை
தாயம்தான் விழுந்தது.
அதன் பின் விரலில்
தாயங்கள் பூக்கக் காணோம்.
கவிஞன் என்பதே தாயம்
கவிதை என்பதும் தாயம்.(69)
***
இரவு
படுக்கை கலைகிறது
நானும்.(91)
***
வீசியெறிந்த துப்பட்டாவைத்
தேடிவந்து தருகையில்
அறிந்தேன்.
வீசியெறிந்தவைகளில்
துப்பட்டா மட்டும்
இல்லையென.(90)
*****
சிறு, குறு, நெடுங்கவிதைகளெனப் பல பக்கங்களில் இவை அச்சிடப்பட்டுள்ளன. அதே போல் ஒவ்வொரு குறிப்புகளும் சிறு,குறும் புனைகதைகளுக்கானவை.
நிமோஷினியின் குறிப்புகளை வாசித்து முடித்தவுடன் கொஞ்சம் திட்டமிட்டிருந்தால் ஒரு 'நான் லீனியர் நாவலின் வடிவத்தைக் கொண்டு வந்திருக்க முடியும் என்றும் தோன்றியது. அதற்கு ஒரு பனுவல் உருவாக்கத் தொகுப்பாளர் – காப்பி எடிட்டர் -உதவி தேவை. ஆனால் தமிழில் அப்படியொரு தேவையை எவரும் உணர்ந்ததில்லை. இந்நூலின் எழுத்தாளரும் வெளியிட்ட பதிப்பாளரும் நூலாக்கத்தில் தேவையான அளவு கவனமும் செலுத்தவில்லை. பக்க வரைவுகளும் வாசகர்களுக்கு உதவும் விதமான எழுத்துருக்களும் தேர்வு செய்யப்படவில்லை என்பதும் சுட்டிக் காட்டப்படவேண்டிய ஒன்று.
**********************************
முருகன் அரசியல்
மதுரையில் நேற்று நடந்த 'முருகன் மாநாடு' பக்தர்களின் மாநாடல்ல; அரசியல் நோக்கம் கொண்ட மாநாடு. தமிழுக்கும் பக்திக்கும் அதிகத்தொடர்பு உண்டு எனக் காட்டுவதன் மூலம் ஒன்றிய அரசின் ஆளுங்கட்சி தனக்குத்தான் தமிழோடு நெருங்கிய உறவு உண்டு எனக் காட்டும் நுண்ணரசியலின் வெளிப்பாட்டு அதற்குப் பின்னால் இருக்கிறது. இந்த அரசியலைப் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததிலிருந்தே தொடர்ந்து வெவ்வேறு விதமாகச் செய்கிறது. 2014 இல் தருண் விஜய் என்பவர் நபர்களைத் தன்பக்கம் இழுப்பதன் மூலம் முன்னெடுத்தார்.இப்போது நடப்பது வெகுமக்களை முருகன் பேரில் திரட்டும் நோக்கம் கொண்டது.
அரசியல் என்பது மக்களைத் திரளாகப் பார்த்து அவர்களின் வாழ்வியல் சிக்கலில் மாற்றங்களை ஏற்படுத்தி, ஈடேற்றுவதற்காகச் செய்யும் திட்டங்களும் செயல்பாடுகளும். ஆனால் பக்தி தனிமனிதர்களை - அவர்களது மனச்சிக்கலிலிருந்து விடுவித்து ஈடேற்றம் செய்வதற்கான வினைகள் சார்ந்தது. அது நம்பிக்கைகள், சடங்குகள், வழிபாடுகள், மனமாற்றங்கள் சார்ந்தது மட்டுமல்ல ஆன்மீகச் சிந்தனைகளை உள்வாங்குவதும் ஆகும்.
ஆன்மீகத்தையும் அரசியலையும் இணைத்துச் செய்யப்படும் அரசியல் தவறானது என்பது மக்களாட்சி அரசியல். ஆன்மீகத்தையும் அரசியலையும் கலக்கும் அரசியலைத் தவறானது எனச் சுட்டிக்காட்டும் நவீன அரசியல் இந்துத்துவர்களுக்கு ஏற்புடையதல்ல. ஐரோப்பாவில் உருவாகி வளர்ந்த நவீனக் கல்வி, நவீனத்துவச் சிந்தனை, நவீன அறிவியல் என அனைத்தையும் ஏற்காதவர்கள். அவர்கள் பக்தியைச் சடங்காகவும் பலியிடல்களாகவும் மட்டுமே நினைக்கிறார்கள். ஆன்மீக மனமாக நினைக்கவில்லை.
வட இந்தியாவில் ராமனுக்காக மக்களைப் பலி கொடுத்து ருசிகண்ட கூட்டம் அது. தமிழ்நாட்டு முருகனுக்குப் பலியிடலை உருவாக்கப்போவதில்லை. காவடி எடுப்பவர்களாகவும் வேல் சுமப்பவர்களாகவும் மாற்ற நினைக்கிறார்கள். பாதயாத்திரையையும் பரிந்துரைப்பார்கள்.
**************
இது நல்லதொரு இலக்கியச் செயல்பாடு
வேரல் பதிப்பகம் தனது கவனத்துக்குரிய இலக்கிய வடிவமாகக் கவிதையைத் தேர்வுசெய்து இலக்கியச் செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. ஓராண்டுக்குள்ளாகவே குறிப்பிடத்தக்க கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுத் தனது அடையாளத்தைக் கவனிக்கத்தக்க அடையாளமாக மாற்றியிருந்தது. இப்போது அடுத்தகட்ட நகர்வாகக் கவிதை நூல்களுக்கான போட்டி ஒன்றை அறிவித்து முடிவுகளை அறிவித்துள்ளது. அறியப்பட்ட கவிகளில் ஐவரை -தேவதேவன், கார்த்திக் திலகன், பூவிதழ் உமேஷ், லறீனா அப்துல் ஹக், வெள்ளளூர் ராஜா - விருதுக்குரியவர்களாகத் தேர்வு செய்துள்ளதோடு, இன்னும் தொகுப்பாக அச்சிடப்படாத கவிதைகளை அச்சிட்டுப் புதிய தொகுப்புகளைக் கொண்டுவரவும் திட்டமிட்டுள்ளது. அதற்குரிய கவிகளாக அய்யனார் ஈடாடி, கு.விநாயகமூர்த்தி, ஏ.நஸ்புள்ளாஹ், தர்மினி, சௌமியா, ஏகாதசி, அஸ்மா பேகம், எஸ்தர் ராணி, ஷாராஜ், ரேவதிராம் ஆகியோர் பட்டியலிடப்பட்டுள்ளனர்.
இலக்கிய வடிவம் ஒன்றில் அதிகக்கவனம் செலுத்தி இதழ்களை வெளியிட்ட சிற்றிதழ்களின் காலம் திரும்ப வராது என்றாலும் பதிப்பகமாக ஒரு வடிவத்தில் கவனம் செலுத்துவது பாராட்ட வேண்டிய ஒன்று.
இந்தச் செயல்பாடுகளில் பதிப்பகத்தின் வணிகநோக்கம் இருந்தாலும், அதையும் தாண்டிக் கவிதை என்னும் இலக்கிய வடிவத்தின் மீதான அக்கறை இருப்பதை அறியமுடிகிறது. தமிழின் அறியப்பட்ட கவிகளின் கூட்டுச் செயல்பாடொன்று இதன் பின்னணியில் இருக்கும் என்பதில் ஐயமில்லை. வேரல் பதிப்பகத்தின் இந்த முன்னெடுப்புகளுக்காகப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கவிதை வடிவத்திற்காக வேரல் பதிப்பகம் முன்னெடுக்கும் இந்த இலக்கியச்செயல்பாடுகள் கவிதை வடிவத்தைப் பல தளங்களுக்கு எடுத்துச்செல்ல வேண்டும் என எதிர்பார்க்கிறேன். தமிழ்க் கவிதை சார்ந்து செயல்பட நிறைய வேலைகள் உள்ளன. கவிதைப் பட்டறைகளை ஒருங்கிணைத்துப் புதிய கவிகளை உருவாக்குதல், கவிதா நிகழ்வுகளை அரங்கேற்றுதல், கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து தமிழ்க்கவிதையின் அழகியல், வரலாறு எனத் திறமான பங்களிப்பைச் செய்ய முடியும்.
வேரல் பதிப்பகம் போலவே மனோன்மணியின் புது எழுத்து கவிதைக்காகவே பெரும்பான்மை வெளியீடுகளைச் செய்தது என்பதும் இப்போது நினைவில் வருகிறது. அதேபோல் நாடக இலக்கியத்திற்காக மட்டும் வெளிவந்த 'நாடகவெளி' யும் அதனளவில் தமிழின் அரங்கியல், நாடகவியலுக்குப் பெரும்பங்களிப்புச் செய்த இதழ். இவற்றுக்கெல்லாம் வணிக நோக்கம் என்பது இரண்டாவது நிலையே. அதனதன் அளவில் அந்த வடிவத்தின் செழுமைகளையே முதன்மையாகக் கருதின. சிறுகதைகளை மட்டும் அச்சிட்ட இதழ்களும் உண்டு. வாராந்திரப் பத்திரிகைகளின் வெளியீட்டகங்களே மாதந்தோறும் சிறுகதைகளை மட்டும் வெளியிடும் இதழ்களை நடத்தியுள்ளன. மாதநாவல்களை வெளியிட்ட இதழ்களும் தமிழில் ஏராளம் உண்டு.
வருத்தத்திற்குரிய மறைவு
குமரகுருபரன் விருது நிகழ்வில் நடந்த கவிதை பற்றிய உரையாடலைச் சுருதி தொலைக்காட்சி வழியாகக் கேட்டு முடித்தேன். இந்த விருதுவிழாவில் ஏற்பாடு செய்த இவர்களின்- மனுஷ்யபுத்திரன், வெயில், போகன் சங்கர் - உரையாடலைத் தமிழக அரசு நடத்தும் இலக்கியவிழா நிகழ்வின் பகுதியாக அமைக்க முடியாது என்பதுதான் நடப்புநிலை உண்மை. இங்கு கலை, இலக்கியம், தத்துவம், சமூக அறிவியல் புலங்கள் என ல்லாமே அதனதன் அளவில் சிறு,குறு வட்டங்களுக்குரியதாகவே இருக்கின்றன. ஒட்டுமொத்தப் பெருந்திரளுக்குரியதாக இருப்பன என்று அரசியலையும் சினிமாவையும் கூடச் சொல்ல முடியாது. இந்திய/ தமிழக அரசியலும் சினிமாவும் கூட அவற்றுக்குள் தனித்தனி அடையாளங்களோடு தனித்தனிக் கூட்டங்களொடுதான் உரையாடலைச் செய்கின்றன.
சமகாலத் தமிழ்க்கவிதைகள் அல்லது நவீனத்தமிழ்க் கவிதைகளின் முதன்மையான போக்குகள் சிலவற்றையாவது அடையாளப்படுத்தி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதனை அடையாளப்படுத்துவதில் உள்ள சிக்கலைகளைத் தொட்டுவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.
கவிதை குறித்த இந்த உரையாடலைப் போலச் சில உரையாடல் நிகழ்வுகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்துள்ளேன். அந்த ஏற்பாட்டில் எந்தவிதமாகவும் இலக்கியம் படித்த மாணவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதைப் பின்னர் வகுப்புகளில் நடத்திய உரையாடல்கள் வழியாக அறிந்துள்ளேன். ஆனாலும் முயற்சிகளைக் கைவிட்டதில்லை. நவீனத் தமிழ்க்கவிதையின் முதன்மையான போக்குகளின் ஒன்று தனியன்களின் அலைவு மனம். அதனை உதிரிகளின் மனநிலை என்றும் அடையாளப்படுத்தலாம்.
மூன்று பெண் கதைகள்

ஒரு சினிமாவின் உரிப்பொருள் என்னும் உள்ளடக்கம், அதன் வழியாக இயக்குநர் சொல்ல நினைத்த செய்தி, அவரின் நேர்மறையான நோக்கம் போன்றன கூட படத்தின் காட்சிகளால் திசைமாற்றம் அடையும் வாய்ப்புண்டு. அதைவிடவும் படத்திற்கு வைக்கப்படும் தலைப்பும் எதிர்விளைவுகளைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்தும். மதயானைக்கூட்டம் என்ற தலைப்பு அப்படியொரு எதிர்நிலை அர்த்தத்தையே உண்டாக்கியது. அத்தோடு படத்தின் காட்சிகளில் வெளிப்பட்ட உணர்வுகளும் அதற்கு ஒத்துப்போகும் நிலையிலேயே இருந்தன. ஆனால் சாராம்சமாக இயக்குநரின் விக்ரம் சுகுமாரனின் பார்வைக் கோணத்தில் சிக்கல் இருக்கவில்லை. நேர்மையான நோக்கத்தோடு தான் முடிந்தது. இந்தச் சிக்கல் தேவர்மகன் வந்தபோதும் இருந்தது. இரண்டு படங்களுமே படத்தில் பேசப்பட்ட சாதியின் இருப்புக்கு ஆதரவான படமாகவே பார்க்கப்பட்டன; பேசப்பட்டன.
தேவர் மகன் படம் கமல்ஹாசனின் நட்சத்திர அந்தஸ்து, திரைக்கதையின் செய்நேர்த்தி, பாத்திரங்களை ஏற்று நடித்த பிரபலமான நடிகர்கள், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் முழுமைத்தன்மை, அவற்றை உள்வாங்கிய நடிப்பு தேவர்மகனைத் தூக்கி நிறுத்தின. இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களின் பன்முகத்தன்மையுமெனத் தேவர் மகனை முழுமையான படமாக ஆக்கித் தந்தன. படத்தின் உரிப்பொருள் விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் படமாக்கல் சிறப்பால் வெற்றிப்படமாக ஆனது. ஆனால் மதயானைக்கூட்டத்தில் அத்தகைய முழுமைத்தன்மை இருக்கவில்லை. பங்கேற்றவர்களுக்குப் போதிய வணிக மதிப்பும் இருக்கவில்லை. அதனால் பார்வையாளர்களைப் போய்ச்சேரவில்லை. நல்ல படங்கள் தரக்கூடிய இயக்குநராக வரவேண்டிய விக்ரம் சுகுமாரனின் மறைவு வருத்தத்திகுரியது.
பொருட்படுத்தத்தக்க உரையாடல்
தேவர் மகன் படம் கமல்ஹாசனின் நட்சத்திர அந்தஸ்து, திரைக்கதையின் செய்நேர்த்தி, பாத்திரங்களை ஏற்று நடித்த பிரபலமான நடிகர்கள், அவர்களுக்காக உருவாக்கப்பட்ட பாத்திரங்களின் முழுமைத்தன்மை, அவற்றை உள்வாங்கிய நடிப்பு தேவர்மகனைத் தூக்கி நிறுத்தின. இளையராஜாவின் பின்னணி இசையும் பாடல்களின் பன்முகத்தன்மையுமெனத் தேவர் மகனை முழுமையான படமாக ஆக்கித் தந்தன. படத்தின் உரிப்பொருள் விவாதம் பின்னுக்குத் தள்ளப்பட்டுப் படமாக்கல் சிறப்பால் வெற்றிப்படமாக ஆனது. ஆனால் மதயானைக்கூட்டத்தில் அத்தகைய முழுமைத்தன்மை இருக்கவில்லை. பங்கேற்றவர்களுக்குப் போதிய வணிக மதிப்பும் இருக்கவில்லை. அதனால் பார்வையாளர்களைப் போய்ச்சேரவில்லை. நல்ல படங்கள் தரக்கூடிய இயக்குநராக வரவேண்டிய விக்ரம் சுகுமாரனின் மறைவு வருத்தத்திகுரியது.
பொருட்படுத்தத்தக்க உரையாடல்
குமரகுருபரன் விருது நிகழ்வில் நடந்த கவிதை பற்றிய உரையாடலைச் சுருதி தொலைக்காட்சி வழியாகக் கேட்டு முடித்தேன். இந்த விருதுவிழாவில் ஏற்பாடு செய்த இவர்களின்- மனுஷ்யபுத்திரன், வெயில், போகன் சங்கர் - உரையாடலைத் தமிழக அரசு நடத்தும் இலக்கியவிழா நிகழ்வின் பகுதியாக அமைக்க முடியாது என்பதுதான் நடப்புநிலை உண்மை. இங்கு கலை, இலக்கியம், தத்துவம், சமூக அறிவியல் புலங்கள் என ல்லாமே அதனதன் அளவில் சிறு,குறு வட்டங்களுக்குரியதாகவே இருக்கின்றன. ஒட்டுமொத்தப் பெருந்திரளுக்குரியதாக இருப்பன என்று அரசியலையும் சினிமாவையும் கூடச் சொல்ல முடியாது. இந்திய/ தமிழக அரசியலும் சினிமாவும் கூட அவற்றுக்குள் தனித்தனி அடையாளங்களோடு தனித்தனிக் கூட்டங்களொடுதான் உரையாடலைச் செய்கின்றன.
சமகாலத் தமிழ்க்கவிதைகள் அல்லது நவீனத்தமிழ்க் கவிதைகளின் முதன்மையான போக்குகள் சிலவற்றையாவது அடையாளப்படுத்தி விவாதிப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதனை அடையாளப்படுத்துவதில் உள்ள சிக்கலைகளைத் தொட்டுவிட்டு விலகிப் போய்விட்டார்கள்.
கவிதை குறித்த இந்த உரையாடலைப் போலச் சில உரையாடல் நிகழ்வுகளைப் பத்து ஆண்டுகளுக்கு முன்பு பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்துள்ளேன். அந்த ஏற்பாட்டில் எந்தவிதமாகவும் இலக்கியம் படித்த மாணவர்கள் பங்கெடுக்கவில்லை என்பதைப் பின்னர் வகுப்புகளில் நடத்திய உரையாடல்கள் வழியாக அறிந்துள்ளேன். ஆனாலும் முயற்சிகளைக் கைவிட்டதில்லை. நவீனத் தமிழ்க்கவிதையின் முதன்மையான போக்குகளின் ஒன்று தனியன்களின் அலைவு மனம். அதனை உதிரிகளின் மனநிலை என்றும் அடையாளப்படுத்தலாம்.
மூன்று பெண் கதைகள்
2025 ஜூன் மாதக் காலச்சுவடுவில் மூன்று சிறுகதைகள் - பெருந்தேவி, சுஜா செல்லப்பன், சுஜாதா செல்வராஜ்- எனப்பெண்கள் எழுதிய கதைகள். மூன்று கதைகளிலும் பெண்களே மையப்பாத்திரங்கள். இம்மூன்று எழுத்தாளர்களின் எழுத்துகளை முன்பே வாசித்துள்ளேன். அவர்களுக்கென்று எழுதும் பாணி அல்லது கதைகளுக்கான வெளிகள் எனத் தனித்துவத்தை உருவாக்கிக் கொண்டவர்கள். அந்த அடையாளங்கள் இவற்றிலும் தொடர்கின்றன.
கிராமிய வாழ்க்கையில் துயரங்களை ஏற்றுக் கடக்கும் இன்னொரு பெண்ணை - கணவனின் மரணத்திற்குப் பின்னர் விருப்பமில்லாமலேயே - சுற்றியிருப்பவர்களுக்காக வெள்ளைச்சேலையை ஏற்றுக் கொள்ளும் பெண்ணொருத்தியை - காளியப்பனின் மனைவி ராமாயியை எழுதிக் காட்டியுள்ளார் சுஜாதா செல்வராஜ். இந்தியப் பெண்களின் குடும்ப வாழ்க்கையின் அவலங்களுக்கு வடிகாலாக இருக்கும் தெய்வங்களின் மீதான நம்பிக்கைகளும் அவற்றுக்குச் செய்யும் சடங்குகளும் கூடப் பொய்த்துப்போகும் நிலையில் கையறு நிலையில் - செய்வதறியாது திகைத்து நிற்கும் பெண்ணொருத்தியை - செல்வி என்ற பெண்ணைத் தனது 'மயானக்கொள்ளை' கதையில் எழுதிக் காட்டியுள்ளார் பெருந்தேவி. இந்தக் கதைக்குத் தொடர்பில்லை என்றாலும் இப்போதிருக்கும் அரசின் செயல்பாடுகள் மீதான விமரிசனத்தைச் சொல்வதற்குச் செல்வியின் ஆட்டோ பயணத்தைப் பயன்படுத்திக் கொண்டது கூடுதல் கவனத்திற்குரியது.
சுஜா செல்லப்பனின் 'தாழொடு திறப்ப' என்ற தலைப்பிட்ட கதை, நேரடியாகத் தலைப்பின் வழியாகவோ, பாத்திரத்தின் இருப்பின் வழியாகவோ எளிதில் உணர்த்திவிடாத கதை. முந்திய கதைகளில் எழுதியதுபோலவே உளவியல் சிக்கலையே எழுதியுள்ளார். அடுக்கு மாடிக்குடியிருப்பொன்றின் 23 -வது மாடியில் தனித்திருக்கும் பெண்ணொருத்தியின் அச்சநிலையின் பரிமாணங்கள் தான் கதை. கருநீல வானமும் மழையும் காற்றும் என்ற சூழலில் வீட்டுக்குள் பாம்பொன்று நுழைந்துவிட்டதாக நினைத்துக் கொள்ளும் பெண்ணின் தவிப்பு மனம் விவரிக்கப்படுகிறது. புதுமைப்பித்தனின் கயிற்றரவு கதையை நினைவூட்டும் விவரிப்பு. பாம்பா? கயிறா? என்ற குழப்பம் போல இந்தக் கதையில் நிழலா? நினைப்பா? உண்மையா? எனத் தவிக்கும் தனிமையை எழுதிக்காட்டியிருக்கிறது.
அனுபவங்களைப் பெண்கள் எழுதிக்கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தாண்டிக் குறிப்பிட்ட சூழலில் பெண்களை நிறுத்திக் காட்டும் இந்தக் கதைகள் அந்தத் தன்மைக்காக வாசிக்கப்பட வேண்டிய கதைகள்.
சிலைகளுக்கு விடுதலை எப்போது?
முதன்முதலில் திருநெல்வேலிக்குப் போன ஆண்டு 1982. பரீக்ஷா ஞாநி எழுதிய 'பலூன்' நாடகத்தை நிஜநாடக இயக்கம் தயாரித்து மேடையேற்றியது. மக்கள் சிவில் உரிமைக்கழகத்தின் சார்பில் பாளை சண்முகம் ஏற்று நடத்திய வழக்கு ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக மதுரையில் மேடையேற்றிய பின் பாளையங் கோட்டையில் நிகழ்த்துவதற்காகத் திருநெல்வேலி சந்திப்பு ஒன்றில் தங்கியிருந்தோம். அதிகாலை 5 மணிக்கு எழுந்துவிட்ட நானும் மு.ராமசுவாமியும், தாமிரபரணி ஆற்றைக்கடந்து பாளையங்கோட்டைக்கு நடந்தே போனோம். லூர்து நாதன் சிலைக்குப் பக்கத்தில் அவரது வீடிருந்தது. விடிந்திராத அதிகாலையில் நடந்தபோது அது தூரமாக இருக்கவில்லை.
நேற்று நெல்லையின் சந்திப்புப்பகுதி விடுதியொன்றில் தங்கியிருந்த எனக்கு அந்த நாளும், அதிகாலை நடையும் நினைவுக்கு வந்தது. அதேபோல் அதிகாலை 5 மணிக்குத் தனியாகவே நடக்கத்தொடங்கினேன். புதிய பேருந்து நிலையத்திற்குள் நுழைந்து ஆற்றுப் பாலத்தில் வெளிச்சம் வராத காலையில் நடந்து போனேன். தாமிரபரணி நதி எப்போதும்போல நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் புதிதாகப் பார்ப்பவர்களுக்கு உறைந்து நிற்கும் ஆறாகவே தோன்றும்.
பாளையங்கோட்டை வரை நடப்பது இப்போது முடியாது. வண்ணாரப்பேட்டை சபாநாயகர் சிலையைச் சுற்றிவிட்டுத் திரும்பிவிட்டேன். அங்கிருந்து சிலைகளை படம்பிடித்தபடி வந்தேன். வரும்பாதையில் இருக்கும் அகில இந்தியக்காங்கிரஸ் கமிட்டியின் அலுவலகத்தின் முன்னால் முன்னாள் பிரதமர் திருமதி இந்திரா காந்தியும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் திரு. கு. காமராசரும் நிற்கின்றார்கள். அடுத்ததாக தாமிரபரணிப் பாலம் தொடங்கும் இடத்தில் முன்னாள் முதல்வர் திரு. எம்ஜி ராமச்சந்திரன் சிலை. பாலத்தைத் தாண்டி வந்தால் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலை. திரும்பவும் இன்னொரு முன்னாள் முதல்வர் திரு. சி.என். அண்ணாதுரையின் சிலை. பேருந்து நிலையத்தின் நுழைவு வாயிலில் சட்டமேதை அம்பேத்கரின் சிலை. அதனருகில் இருக்கும் பலகைக்கல்லில் உட்கார்ந்து யோசித்தபோது எத்தனை ஆண்டுகளாக அம்பேத்கரும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரும் கூண்டுக்குள் இருக்கிறார்கள் என்ற எண்ணம் ஓடிக்கொண்டே இருந்தது. சாதிகளுக்குள் மோதல் நடக்கும் நகரம் திருநெல்வேலி என்ற அடையாளம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? என்ற கேள்வியும் எழுந்தது.
ஆன்மீகத் தலைவராகக் கருதப்படும் முத்துராமலிங்கத்தேவரும் நாட்டின் அரசியல் சட்டத்தை எழுதிய அறிஞர் அம்பேத்கரும் கூண்டுக்குள் இருப்பது அந்த நகரத்திற்கு எந்தவிதத்திலும் பெருமையில்லை என்பதைச் சொல்லத் தோன்றியது. நெல்லையில் மட்டும் அல்ல; தமிழ்நாட்டில் எந்த ஒரு ஊரிலும் எந்த ஒரு தலைவரின் சிலையும் கூண்டுக்குள் அடைக்கப்பட்டிருப்பது தமிழ்நாட்டுக்குப் பெருமையில்லை. உள்ளூராட்சி அமைப்புகள் தொடங்கி மாநில அரசுவரை கவனம் செலுத்தித் தலைவர்களின் சிலைகளுக்கு விடுதலை அளிக்க வேண்டும்.
ஆங்கிலம் வேண்டும்
ஆங்கிலத்தை அந்நியமொழியாக நினைப்பது அறிவீனம். காலனி ஆதிக்கமொழி எனச் சொல்லி விரட்டிவிட நினைப்பது இந்தியர்களைக் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டும்படி மாற்ற நினைக்கும் முயற்சி. உலகம் முழுக்கப் பரவியிருக்கும் பா.ஜ.க.வின் ஆதரவாளர்களே ஆங்கிலத்தை ஒதுக்கவேண்டும் என்ற குரலை விரும்ப மாட்டார்கள். அப்படி விரும்பினால் அவர்கள் மற்றவர்களுக்கு யோசனை சொல்லிவிட்டுத் தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் ஆங்கிலத்தை மறைமுகமாகக் கற்றுக்கொள்ளும் உத்தியை வைத்திருப்பார்கள்.
மகிழ்ச்சி
பல்கலைக்கழகத்திற்குத் தரமதிப்பீட்டுக்குழு ( NAAC) வந்து போயிருக்கிறது. இதற்கு முன்பு மூன்று முறை வந்தபோது உயர்ந்த தரப்புள்ளிகளைப் பெறப் பல்வேறு குழுக்களில் பணியாற்றிய நினைவுகள் உள்ளன. B, B+, A, என நகர்ந்து. இப்போது A+ கிடைத்துள்ளது. வளாகத்தில் பச்சையமும் சுத்தமும் நிறைந்திருந்ததைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நாமிருந்த இடம் தரமான கல்வி வளாகம் என்பதில் ஏற்படும் மகிழ்ச்சி.
விருதாளர்களுக்கு( புரஸ்கார்) வாழ்த்து
யுவபுரஸ்கார் விருதுபெற்ற விஷ்ணுபுரம் சரவணனின் கதைகளை வாசித்ததுண்டு. மதிப்பீடு செய்யும் நோக்கில் வாசித்ததில்லை. யாவரும் பதிப்பகம் வெளியிட்ட ---- பிற கதைகள் வரிசையில் சிலரின் தொகுப்புகளை பதிப்பாளர் என்னிடம் வழங்கினார். அப்போது லட்சுமிஹரின் தொகுப்பை வாசித்துள்ளேன். இப்போது அவரது ஊர் உசிலம்பட்டி என்று சொல்கிறார்கள். அந்தப் பின்னணி கதைகளில் அதிகம் வெளிப்படவில்லை. அது கட்டாயமும் இல்லை. அப்போது எழுதத்தோன்றவில்லை. இருவருக்கும் வாழ்த்து.
சாகித்திய அகாடமியின் முதன்மை விருது, இளைமையோர் (யுவபுரஸ்கார்) விருது, குழந்தைமை (பாலபுரஸ்கார்) விருது போன்றவற்றில் புறநிலை தாக்கத்தை உண்டுபண்ண வேண்டும். புதிய எழுத்தாளர்களையும் புதிய எழுத்துகளையும் வாசித்துச் சொல்வதின் மூலமும் விமரிசனப்படுத்துவதன் மூலமும் அந்தத் தாக்கத்தை செலுத்தமுடியும். தொடர்ச்சியாக வாசித்து விமரிசிக்கப்படும் எழுத்துகளை/ எழுத்தாளர்களைத் தேர்வுசெய்யும்போது தேர்வுக்குழுவைக் கேள்வி கேட்கலாம். அதையெல்லாம் செய்யாமல் விருது அறிவிக்கப்பட்ட பின் பேசுவதுதான் இங்கே நடக்கிறது. இதுவரை விருதுபெற்ற யுவபுரஸ்கார் எழுத்தாளர்களின் தொடர்ச்சியான எழுத்துகள் அடுத்த கட்ட நகர்வுக்கு உள்ளாகியிருக்கிறதா என்ற மதிப்பீடுகள் இங்கே நடக்கவில்லை. தமிழில் எழுதப்படும் குழந்தைமை எழுத்தில் உருவாகிவரும் தனித்தன்மை என்ன என்ற விவாதம் இல்லை. எங்கிருந்து தொடங்குவது என்று அகாடமியே வழிகாட்டலாம். ஆனால் அகாடெமியும் அதன் தேர்வுக்குழுக்களும் ரகசியக் கூட்டங்களோடு முடிந்துவிடுகின்றன.
ஆய்வு நெறியாளராக நிறைவு நிலை
சு.வேணுகோபால் புனைகதைகளில் கிராமிய வாழ்வு - என்ற தலைப்பில் நேற்று பொதுவாய்மொழித்தேர்வு நடந்தது. ஆய்வாளர் சா.அனுசுயா தனது கடைசிக் கட்டத்தேர்வை முடித்து முனைவர் பட்டம் பெறும் தகுதியுடையவர் என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. இந்த நடைமுறைக்காகப் புறநிலை வல்லுநராக வந்திருந்தார் நண்பர் பேரா. இரா.காமராசு ( தமிழ்ப்பல்கலைக்கழகம்) . இந்தப் பொதுவாய்மொழித்தேர்வுடன் எனது கல்விப் புலப்பொறுப்புகள் முடிவு பெற்றுள்ளன. இதுவரை 16 பேர் எனது நெறியாள்கையில் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். இதுதான் கடைசி. கடைசி என்று சொல்வதைவிட நிறைவு நிலை என்று சொல்லிக்கொள்ளலாம்.
நான் ஆய்வாளராக ஆனபோது, எனது முனைவர் பட்ட ஆய்வுக்குத் தற்கால இலக்கியத்தைத் தேர்வுசெய்யும் விருப்பம் இருந்தது. குறிப்பாகக் கரிசல் இலக்கியப்பரப்பையும் அதில் பூமணி எழுதிய புனைகதைகளில் வெளிப்பட்ட கிராமிய வாழ்வின் தன்மைகளையும் ஆய்வு செய்ய நினைத்தேன். ஆனால் எனது நெறியாளரும் திறனாய்வாளருமான தி.சு.நடராசன், திறனாய்வு நோக்கில் குறிப்பிட்ட காலகட்டத்து இலக்கியங்களை வாசிக்கும் தலைப்பொன்றைத் தேர்வு செய்யத்தூண்டினார். தமிழில் அதற்கு முன்பு சங்க கால இலக்கியம், சோழர்காலக் காப்பியங்கள், அறநெறிக்காலத்துப் பின்புல நிலைமைகள் பற்றியெல்லாம் நடந்த இலக்கிய ஆய்வுகள் தமிழக வரலாற்றுக்கு உதவியுள்ளன. அதன் தொடர்ச்சியில் 'நாயக்கர் கால இலக்கியங்களை' ஆய்வுக்கான தரவுகளாகக் கொள்ளலாம் என்று வலியுறுத்திய நிலையில் எனது தலைப்பை மாற்றிக்கொண்டு ஆய்வேட்டை முடித்து முனைவர் பட்டம் பெற்றேன். பின்னர் எனது விருப்பத்துறை திறனாய்வாகவும் வெகுமக்கள் பண்பாட்டை உருவாக்கும் சினிமா, நாடகம், தொலைக்காட்சி என நகர்ந்தது சொந்தக் கதை.
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளியில் என்னிடம் ஆய்வு செய்ய வந்தவர்களுக்கு வழங்கிய தலைப்புகளின் இரண்டு தன்மைகளைக் கவனப்படுத்த நினைத்தேன். ஒன்று அரங்கியல் போக்குகளில் ஒன்றின் தாக்கத்தை ஆய்வு செய்வது; இன்னொன்று குறிப்பிட்ட ஆளுமையின் பங்களிப்பை அவரின் தனித்தன்மையோடு மதிப்பிட்டுச் சொல்வது. இந்த நோக்கில் சென்னை நகரத்து நவீன நாடகக் குழுக்களின் நிகழ்த்துதலைக் குறித்தொரு ஆய்வேட்டை உஷா(கல்யாணராமன்) முடித்து முனைவர் பெற்றார். திருப்பூர் கிருஷ்ணன் இந்திரா பார்த்தசாரதி நாடகங்களை ஆய்வு செய்தார். இவ்விரண்டையும் முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிவிட்டேன். என்னிடம் தொடங்கிய இன்னும் இரண்டு ஆய்வாளர்கள் நண்பர் கே.ஏ.குணசேகரனிடம் தொடர்ந்தார்கள். ஒருவர் சிபு எஸ் கொட்டாரம்(திருச்சூர்) இன்னொருவர் செஷ்துர் ரகுமான்( வங்கதேசம்)
நெல்லைக்கு வந்தபிறகும் இதே நிலையை ஆய்வுத்தலைப்பு தருவதில் பின்பற்றினேன். தமிழ் இலக்கியத்தின் போக்குகள் மையமாக்கிப் பரந்துபட்ட ஆய்வுத்தலைப்புகளைத் தருவதும், குறிப்பான ஒருவரை ஆய்வுக்குட்படுத்துவதும் என்ற பொதுப்போக்கு. இதைத்தாண்டி ஆய்வாளரின் விருப்பங்கள் இருந்தால் அதனை ஏற்று விட்டுவிடுவது. முனைவர் (பி. எச்டி) பட்டத்திற்கு மட்டுமல்லாமல் இளம் முனைவர் பட்டமான எம்பில்) பட்டத்திற்குத் தலைப்புகள் தரும்போதும் இதனைப் பின்பற்றியதுண்டு.
இந்த அடிப்படையில் பெண்ணியம், தலித்தியம், பண்பாட்டு நிலவியல், ஈழப்போர் இலக்கியம், புலம்பெயர் இலக்கியம்,இருத்தலியம், நவீனத்துவம் போன்றன போக்குகளாக அறியப்பட்டுத் தலைப்புகள் தரப்பட்டன. குறிப்பான எழுத்தாளர்களைக் குறித்த ஆய்வுத்தலைப்புகளில் நாஞ்சில் நாடன், பூமணி, இமையம், வண்ணதாசன், பாவண்ணன், திலகவதி, தமிழ்மகன், ஏக்நாத், தோப்பில் முகம்மது மீரான், ஶ்ரீதர கணேசன், சூடாமணி, உமாமகேஸ்வரி எனப் பலரையும் ஆய்வாளர்கள் ஆய்வு செய்தார்கள். செய்யப்பட்ட ஆய்வுகளில் தமிழின் தொல்காப்பியக் கவிதையியலை அடிப்படையாகக் கொண்ட இலக்கிய வாசிப்பு, விவாதம், மதிப்பீடு இருக்கும் விதமாக இயல்பகுப்புகள் அமைக்கப்பட்டு தமிழுக்கான முன்மாதிரி/ வகைமாதிரிகள் முயற்சி செய்யப்பட்டுள்ளன. அவையெல்லாம் நூறு சதவீதம் சிறப்பான ஆய்வேடுகள் என்று நினைக்கவேண்டியதில்லை. ஆனால் இவர்களையெல்லாம் -இவற்றையெல்லாம் பல்கலைக்கழகத்தின் இலக்கியத்துறைகள் கவனத்தில் கொள்ளவேண்டும் என்ற அளவில் முக்கியமானவை. அந்த வகையில் நிறைவாகச் சு.வேணுகோபாலின் புனைவுகளின் மீதான ஆய்வோடு நிறைவு பெற்றுள்ளது எனது நெறியாளர் நிலை. நெறியாளராகத் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.

கருத்துகள்