மந்தையின் ஆடுகள் : பற்றும் வெறியும்
ஏமாறுதல் - ஏமாற்றுதல் என்ற இரண்டு சொற்களில் எது முந்தியது என்று கேட்டால் உடனே பதில் சொல்ல முடியாது. முட்டை முந்தியதா? கோழி முந்தியதா? என்ற கேள்விக்குப் பதில் சொல்ல முடியாததைப் போல இதற்கும் பொருத்தமான பதிலைச் சொல்ல முடியாது. ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்தல் எப்போது தொடங்கியதோ அப்போதே ஏமாற்றுதலும் ஏமாறுதல் தொடங்கியிருக்கிறது. ஆதாமை ஏவாளும், ஏவாளை ஆதாமும் ஏமாற்றவே செய்திருக்கிறார்கள்.
அறிவுத்தள வீழ்ச்சி
வெகுமக்கள் ஊடகங்களில் பேசுபவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் அரசியல் வியாக்கியானங்கள் எழுதும் ஆளுமைகளும் கூட அதே மனநிலையைத் தான் வெளிப்படுத்துகிறார்கள். தான் நடத்திய கூட்டத்தில் இறந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தைக் கூட அரசியல் பரப்புரையின் பகுதியாக மாற்றும் நிகழ்ச்சி நிரலைக்கூட விவாதிக்கும் மன
நிலையை ஒருவரும் வெளிப்படுத்தக் காணோம்.
அறிவார்ந்த மனிதர்களின் வீழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?
********
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஏமாளிகள் கோவைக்காரகள் அல்லது கொங்கர்கள் எனப் பேசுவதும் நம்புவதும் சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள மந்தைப் போக்கு. இதேமாதிரியான பல மந்தைப்போக்கை -கும்பல் பண்பாட்டை அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் சினிமாவும் நாடகங்களும் அவ்வப்போது உருவாக்கியிருக்கின்றன.ஏமாற்றுவதோடு தொடர்புடைய லஞ்சம் அல்லது கையூட்டு அப்படிப்பட்ட பழைய சொற்கள் அல்ல. அவை தொழில்புரட்சிக்குப் பின்னால் உருவான முதலாளிய உற்பத்தியோடும் வாழ்க்கைமுறையோடும் தொடர்புடைய சொற்கள். ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகக் கையூட்டுத் தருவதற்கே தனியார் நிறுவனங்கள் கணக்கில் காட்டாத தொகைகளை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.
ஒரு புறம் இதனைக் கடுமையாக விமரிசனம் செய்து கொண்டே முதலாளிய அரசுகளின் நிறுவனங்களும் ஊடகங்களும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அனுமதிக்கவும் செய்கின்றன. கூட்டமாகத் திரளும்போது லஞ்சத்தையும், ஏமாறுவதையும் கெட்டசெயலாக நினைக்கும்/ பேசும் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாக இருக்கும்போது அவற்றை அனுமதிக்கிறார்கள்; செயல்படுத்தவும் செய்கிறார்கள். பின்னர் குற்றவுணர்வுடன் வருந்தவும் செய்கிறார்கள். இந்தப் போக்குக்குப் பின்னால் உருவாவது வன்மமும் வெறுப்பும். தன் வெறுப்பும் கூட அதன் விளைவுதான்
மந்தைத்தனம்
இயல்பான விருப்பங்களைப் பற்றாகவும், பற்றின் அளவைத் தாண்டவைத்து வெறியாகவும் மாற்றுவதில் நமது காலச் சமூக ஊடகங்கள் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றன. வெறியாக மாறும்போது மனிதர்கள் வன்மம் கொண்டவர்களாக மாறிப் பகைமை உணர்வுக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மூளையைத் தொலைத்துவிட்டுச் சிந்திக்க மறந்து கூட்டத்தின் போக்குகளுக்குள் (Trends) சிக்கிக் கொள்கிறார்கள். தங்களின் திறனைக் கைவிட்டுக் கூட்டத்தின் பகுதியாகக் கலந்து விட்டதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அண்மையில் உருவான சில மந்தைப் போக்குகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
சமூகத்தில் எழும்பி வரும் ஒவ்வொன்றைக் குறித்தும் அங்கதமாகவும் எள்ளலாகவும் எழுதும்படி தூண்டுகின்றன சமூக ஊடகங்கள். அதன் வழியாக உருவாகும் மந்தைப்போக்குப் பின்விளைவுகளைக் குறித்துக் கவலைப்படப் போவதில்லை. மந்தையில் கலப்பது தன்னிலையைத் தொலைத்துக் காணாமல் போகும் விருப்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
***
இளையராஜாவின் திரையிசைப்பாடல்களை ரசித்தவர்களை ரஹ்மானின் இசைக்கு எதிர்நிலைப்பாடு எடுக்கச் செய்வதில் தொடங்கும் வன்மம் சாதிப்பற்று, சமயப்பற்று என மாறி வன்மப்பேச்சுகளாக மாறுவதைப் பார்க்கிறோம். அதன் தொடர்ச்சியில் இசையின் விற்பனையும் வணிக நிறுவனங்களும் இருக்கின்றன. இசையின் ரசிகர்களை வணிகச் செயல்பாடுகள் குறித்தும், காப்புரிமை குறித்தும் பேச வைக்கின்றன. சினிமா என்னும் கூட்டுச் செயல்பாட்டைக் கூறுகட்டிச் சிதைத்துப் பாடலாசிரியர், இசைக் கோர்வையாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பகை முரண்பாடுகளைக் கூர்தீட்டுகின்றன.
கிரிக்கெட் தீவிரமான தேசப்பற்றின் அடையாளமாக உருவாகிப் பாகிஸ்தானில் இந்திய அணியும், இந்தியாவில் பாகிஸ்தான் அணியும் விளையாட முடியாத நிலை உருவாகி விட்டது. எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்ல வைத்தார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்த்தார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொண்டார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். எப்போதும் இந்திய அணியே வெல்ல வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிப்பிற அணிகளை எதிர்க்கவேண்டிய நிலையை உருவாக்கியதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியவை ஐபிஎல் போட்டிகள்.
தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்போது இந்தக்கும்பல் மனோபாவத்திற்கு ஐபிஎல் வட்டாரத் தன்மையைக் கொண்டுவந்திருக்கிறது. அதற்குள்ளும் சில நேர்மறைக்கூறுகள் இருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி பெங்களூரின் புதல்வராகிறார். தமிழ்நாட்டு வீரர்கள் குஜராத் அணியிலும் கொல்கத்தா அணியிலும் கோலோச்சுகிறார்கள். எல்லா அணிகளிலும் மேற்கிந்திய அணியின் திறமையான ஆட்டக்காரர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாற்றம் கிரிக்கெட்டில் நடந்துள்ள மிகப்பெரிய வரவேற்கத்தக்க மாற்றம்.
ஐபிஎல் ஆட்டங்களின் நேர்மறைத் தன்மைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன சமூக ஊடகங்களின் மந்தைத் திரட்சி. தேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் திறமைகளை ரசித்த ரசிகர்களை அணிகளின் ஆதரவாளர்களாக மாற்றி இடத்தோடும் மொழியோடும் பிணைத்துப் பற்றை வெறியாக்கும் வேலை இது. தொடக்கப்போட்டிகளில் வெளிப்படாத வன்மமும் வெறியூட்டங்களும் கடைசிக்கட்டப் போட்டிகளின் போது கூர்மையானதின் பின்னணியில் சமூக ஊடகங்களின் பங்கு இருக்கின்றது. கடைசி நான்கு அணிகள் என்றான பின் ஒவ்வொரு அணியின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாது, விளையாட்டு மைதானங்களிலும் மோதல் போக்கை -மந்தையாகிக் கூச்சலிடுவதில் இணைந்தார்கள். இப்படித் திரட்டுவதிலும் அணிகளின் வணிக நோக்கங்களும் இருக்கின்றன. வணிகக் குழுமங்களின் லாபநோக்கமும் இருக்கின்றது.
****
மாவட்டம் சார்ந்த உணவுப் பண்டங்களைப் பற்றிய பேச்சை அடுத்த மாவட்டத்தைக் கேலி செய்யும் ஒன்றாக மாற்றுவதில் சமூக ஊடகங்களின் எழுத்துகளும் படங்களும் போட்டிபோட்டுக் கொண்டே இருக்கின்றன. உணவு விருப்பம், வட்டாரப்பேச்சுமொழி போன்றன ஒருவிதத்தில் நிலவியலின் இயல்புகள். ஆனால் அவற்றைக் கேலியும் கிண்டலுமாக மாற்றிப் பிறர்மீதான பகையாக மாற்றுகின்றன சமூக ஊடக எழுத்துகள். உருவக்கேலி, சாதிப்பகை, சமயவெறுப்பு எனப் பழக்கவழக்கங்கள் மீதான வன்மப் பேச்சாக மாற்றிவிடுகின்றன சமூக ஊடகங்கள். கோவையின் அரிசிம்பருப்பு, மதுரையின் வடைகள், திருநெல்வேலி அல்வாக்கள், சென்னையின் பிரியாணிக் கடைகள், பரோட்டாக்கடைகளின் சால்னாக்கள் என ஒவ்வொன்றின் மீதான அங்கதப் பேச்சுகள், மனிதக்கூட்டங்களின் மீதான வன்ம வெளிப்பாடுகளாக மாறுவதைத் தவிர்க்க நினைப்பதில்லை அதில் இயங்குபவர்கள்.
******
சமூக ஊடகங்களில் எப்போதும் மந்தைத் திரளுக்குரிய கச்சாப்பொருளாக இருப்பது பெண் x ஆண் எதிர்வு நிலை. பெண்களின் உடல் அழகை ரசிப்பவர்களாகவும் வெளிப்படையான காமத்தை வேண்டுபவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பலர் பொது நிலையில் பெண் வெறுப்பாளர்களாகத் திகழ்கிறார்கள். பெண்ணியம் பேசுபவர்களை வெறுப்பதாக வெளிப்படும் அவர்களின் நிலைப்பாடுகள், எப்போதும் பெண்களின் ஆளுமைத் திறனைக் குறைத்து மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இருப்பதையும் மறுக்க முடியாது. திரைப்படங்களில் காட்டப்படும் பெண்களின் ஆளுமையையும் ஊடகங்களில் செயல்படும் பெண்களின் நோக்கங்களையும் எள்ளலுடன் பேசுவதின் வழியாக உருவாக்கப்படும் மந்தைப்போக்கு – ட்ரெண்ட் – முடிவில் பெண் வெறுப்பாக மாறும் என்பதை உணர்வதில்லை. பள்ளிக்கல்வியின் தேர்தல் முடிவுகளில் பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதையும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெறுவதையும் மதிப்பெண்கள் வாங்குவதையும் கூட ஏற்கும் மனநிலை இல்லாமல் எதிர்மனநிலையை வெளிப்படுத்துவதற்குச் சமூக ஊடகங்கள் தரும் சுதந்திரம் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது.
***
அரசியல் விஞ்ஞானத்தில் பரப்பியல் வாதம் (பாப்புலிசம்) என்ற கலைச்சொல் ஒருவித எதிர்மறைத் தன்மையோடு விளக்கப்படும் கலைச்சொல் என்றாலும் பொதுப்புத்தி சார்ந்த வெற்றிக்குப் பல நேரங்களில் உத்தரவாதமான ஒன்று. வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும். செய்திகள், நிகழ்வுகள் மட்டுமே புனைவுகளாக ஆக்கப்படும் என்றில்லை.
ஓர் இயக்கம் முன் வைக்கும் கொள்கைகள், கொள்கைகளை முன் வைக்கும் நபர்கள் போன்றனவும் கூடப் புனைவுகளாகவே கட்டமைக்கப்படுவது பரப்பியவாதத்தின் அம்சங்களே. இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பரப்பியல்வாதத்தைத் தங்களது கருத்தியல் அடிப்படையாகக் கொண்டவையே என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகமே அதில் முன்னோடியாக இருந்த இயக்கம் என்பதை அதன் கடந்த கால வரலாற்றின் பக்கங்கள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் பா.ஜ.க.வின் இயக்கமும் பரப்பியல்வாத அடிப்படைகளைக் கொண்டதே.
நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள் வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த - populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.
மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும்போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைகிறது. அதன் மூலம் 'பொது மக்கள்' என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்கிறது. அப்படியொரு கவசம் கிடைத்தவுடன் அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை.
பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்துவத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான்.
இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள்வாதமும், வலதுசாரிகள் பயன் படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது. வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன.
அறிவுத்தள வீழ்ச்சி
கரூரில் நடந்த நெரிசல் மரணங்களுக்குப் பின்னரும் அவரை அரசியல் ஆளுமையாகவும், அவர் ஆரம்பித்துள்ள தமிழக வெற்றிக்கழகத்தை அரசியல் கட்சியாகவும் பொருட்படுத்திப் பேசும் தமிழ்நாட்டுக் கட்சிகளின் நோக்கத்தைக் கூட ஓரளவு புரிந்துகொள்ள முடிகிறது. இப்போது ஆட்சியிலிருக்கும் திராவிட முன்னேற்றக்கழகத்தை ஆட்சியிலிருந்து இறக்கும் ஒற்றை நோக்கம் மட்டுமே அவர்களின் இலக்கு. அதற்காகத் திமுக. தலைமையிலான கூட்டணியைவிடப் பலமான கூட்டணியை உருவாக்க வேண்டிய நெருக்கடி இருக்கிறது; அதனால் ரசிகத்திரளைத் திரட்ட முடியும் விஜயை ஆதரித்துப் பேசுகிறார்கள். அப்படிப் பேசும்போது தமிழகத்தை உலுக்கிய 41 பேரின் மரணத்தை மறைக்கிறோம் என்ற குற்றவுணர்வின்றி அரசியல் பேசுகிறார்கள். எல்லா விதத்திலும் குற்றவுணர்வற்ற வாக்கரசியல்வாதிகள் அப்படித்தான் பேசுவார்கள் .
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று ஊடகங்களின் போக்கும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தான். ஊடக முதலாளிகளின் அரசியல் சார்புக்கேற்ப நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அளிக்கும் ஊடக ஆசிரியர்களின் நிலைபாடே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கும் மேலாக ஊடகங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசும் அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எல்லாம் குற்றவுணர்வைத் தொலைத்தவர்களாகவே பேசுகிறார்கள். அதிலும் கவனித்துப் பார்த்தால் ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை ஆதரிக்கும் பிராமணியப் பத்திரிகையாளர்களும் அரசியல் விமரிசகர்களும் போட்டிபோட்டிக்கொண்டு விஜயின் அரசியலைப் பொருட்படுத்தி வியாக்யானங்கள் செய்கிறார்கள். இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் தான் திமுக. வின் மேடைப்பேச்சு அரசியலும் நடிகர் அரசியலும் வெற்றுக்கூச்சல்கள் என்றும் பிம்ப வழிபாட்டு மனநிலை என்றும் பேசியவர்கள்.
புரிந்துகொள்ளவே முடியாத ஒன்று ஊடகங்களின் போக்கும் அவற்றின் நிகழ்ச்சிகளும் தான். ஊடக முதலாளிகளின் அரசியல் சார்புக்கேற்ப நிகழ்ச்சி நிரலைத் தயாரித்து அளிக்கும் ஊடக ஆசிரியர்களின் நிலைபாடே ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அதற்கும் மேலாக ஊடகங்களின் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசும் அரசியல் விமர்சகர்கள், பத்திரிகையாளர்கள் எல்லாம் குற்றவுணர்வைத் தொலைத்தவர்களாகவே பேசுகிறார்கள். அதிலும் கவனித்துப் பார்த்தால் ஒன்றிய ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க.வை ஆதரிக்கும் பிராமணியப் பத்திரிகையாளர்களும் அரசியல் விமரிசகர்களும் போட்டிபோட்டிக்கொண்டு விஜயின் அரசியலைப் பொருட்படுத்தி வியாக்யானங்கள் செய்கிறார்கள். இவர்களும் இவர்களின் முன்னோடிகளும் தான் திமுக. வின் மேடைப்பேச்சு அரசியலும் நடிகர் அரசியலும் வெற்றுக்கூச்சல்கள் என்றும் பிம்ப வழிபாட்டு மனநிலை என்றும் பேசியவர்கள்.
வெகுமக்கள் ஊடகங்களில் பேசுபவர்கள் மட்டுமல்லாமல் சமூக ஊடகங்களில் அரசியல் வியாக்கியானங்கள் எழுதும் ஆளுமைகளும் கூட அதே மனநிலையைத் தான் வெளிப்படுத்துகிறார்கள். தான் நடத்திய கூட்டத்தில் இறந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தைக் கூட அரசியல் பரப்புரையின் பகுதியாக மாற்றும் நிகழ்ச்சி நிரலைக்கூட விவாதிக்கும் மன
நிலையை ஒருவரும் வெளிப்படுத்தக் காணோம்.
அறிவார்ந்த மனிதர்களின் வீழ்ச்சியை எப்படிப் புரிந்துகொள்வது?
பக்திநிலையை உருவாக்குதல்
திரும்பத்திரும்பச் சொல்லப்பட்ட சொற்களின் அதனை உறுதி செய்கின்றன. கூடும் கூட்டம் அவரது சொற்களைக் கேட்க வந்த கூட்டம் அல்ல. அவரது அரசியலை உள்வாங்க வந்த கூட்டமல்ல. அவரைப் பார்க்க வந்த கூட்டம். 41 பேரின் மரணத்திற்கு முன் சொல்லப்பட்ட சொற்களும், மரணத்தில் பிள்ளைகளைப் பறிகொடுத்த பெற்றோர்களும் உறவினர்களும் சொல்லும் சொற்களும் அதுவாக இருக்கின்றன. இந்தச் சொற்களே அவரைக் கரூராக வரத்தேவையில்லை என்று முடிவுசெய்ய வைக்கின்றன. எனது செலவில் அழைத்துவந்து, நல்ல உணவளித்து, தங்கவைத்து, அருகில் நின்று தொட்டுப் பேசவும் துயரம் தோய்ந்த சொற்களால் ஆறுதல் சொல்லித் தன்னைப் பதியவைக்கவும் முடியும் என்று உறுதி செய்துள்ளன. தனித்தனியாக அவரோடு நின்று படம்பிடித்துக் கொள்ளும்போது குடும்ப உறவுகளின் மறந்துபோகும் என்ற நம்பிக்கை உறுதியாகிவிட்டது. இதனைக் கரூரில் செய்வதைவிடத் தனி இடத்தில் நல்லதொரு உள்ளரங்கப் படப்பிடிப்பாக (Indoor Shooting) செய்வதே சிறப்பாக இருக்கும் என முடிவுக்கு வந்துள்ளார். சொந்த வாழ்வில் நடக்கும் ஒவ்வொன்றுக்கும் தலையில் எழுதப்பெற்ற விதியே காரணம் என நம்பும் சமய நம்பிக்கையின் இன்னொரு வெளிப்பாடே பக்தி மனநிலை. தலைவிதியை மாற்றும் சக்தி தான் வணங்கும் தெய்வத்திற்குத் தரும் பலியிடலுக்கு உண்டு என நம்புவதும், அதற்கென விழாக்களை ஏற்பாடு செய்து, சடங்குகளோடு நடக்கும் பலியிடல்களை இங்கே நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். நடப்பன எல்லாம் விளங்கலாம்.
கரூரில் நடந்த மரணங்களுக்குப் பின்னும் அவரது செல்வாக்கை ஊதிப்பெருக்கும் ஊடகங்கள், நடிகரைப் பார்க்க வந்த கூட்டத்தை அவரது கட்சிக்கான பலம் என்றே விவாதிக்கின்றன. அரசியலில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு நிலையிலும் மந்தைகளாக்கும் போக்கே இங்கு ஊக்கவிக்கப்படுகின்றன. மந்தைகளாக மனிதர்களை மாற்றும் அந்தப் போக்கில் விரும்பத்தோடு செயல்படும் ஊடகங்கள் இருக்கும் வரை கூட்டம் சேர்க்கும் வாய்ப்புள்ளவர்களே இங்கு அரசியல்வாதிகளாகப் பட்டம் கட்டுவார்கள்.
********
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த ஏமாளிகள் கோவைக்காரகள் அல்லது கொங்கர்கள் எனப் பேசுவதும் நம்புவதும் சமூக ஊடகங்கள் உருவாக்கியுள்ள மந்தைப் போக்கு. இதேமாதிரியான பல மந்தைப்போக்கை -கும்பல் பண்பாட்டை அச்சு ஊடகங்களும் தொலைக்காட்சி ஊடகங்களும் சினிமாவும் நாடகங்களும் அவ்வப்போது உருவாக்கியிருக்கின்றன.ஏமாற்றுவதோடு தொடர்புடைய லஞ்சம் அல்லது கையூட்டு அப்படிப்பட்ட பழைய சொற்கள் அல்ல. அவை தொழில்புரட்சிக்குப் பின்னால் உருவான முதலாளிய உற்பத்தியோடும் வாழ்க்கைமுறையோடும் தொடர்புடைய சொற்கள். ஒப்பந்தங்களைப் பெறுவதற்காகக் கையூட்டுத் தருவதற்கே தனியார் நிறுவனங்கள் கணக்கில் காட்டாத தொகைகளை ஒதுக்கி வைக்கிறார்கள் என்பதுதான் நடைமுறை உண்மை.
ஒரு புறம் இதனைக் கடுமையாக விமரிசனம் செய்து கொண்டே முதலாளிய அரசுகளின் நிறுவனங்களும் ஊடகங்களும் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அனுமதிக்கவும் செய்கின்றன. கூட்டமாகத் திரளும்போது லஞ்சத்தையும், ஏமாறுவதையும் கெட்டசெயலாக நினைக்கும்/ பேசும் ஒவ்வொருவரும் தனிமனிதர்களாக இருக்கும்போது அவற்றை அனுமதிக்கிறார்கள்; செயல்படுத்தவும் செய்கிறார்கள். பின்னர் குற்றவுணர்வுடன் வருந்தவும் செய்கிறார்கள். இந்தப் போக்குக்குப் பின்னால் உருவாவது வன்மமும் வெறுப்பும். தன் வெறுப்பும் கூட அதன் விளைவுதான்
மந்தைத்தனம்
இயல்பான விருப்பங்களைப் பற்றாகவும், பற்றின் அளவைத் தாண்டவைத்து வெறியாகவும் மாற்றுவதில் நமது காலச் சமூக ஊடகங்கள் மறைமுகக் காரணிகளாக இருக்கின்றன. வெறியாக மாறும்போது மனிதர்கள் வன்மம் கொண்டவர்களாக மாறிப் பகைமை உணர்வுக்குள் தள்ளப்படுவார்கள். ஒவ்வொருவரும் தங்கள் மூளையைத் தொலைத்துவிட்டுச் சிந்திக்க மறந்து கூட்டத்தின் போக்குகளுக்குள் (Trends) சிக்கிக் கொள்கிறார்கள். தங்களின் திறனைக் கைவிட்டுக் கூட்டத்தின் பகுதியாகக் கலந்து விட்டதற்குப் பல உதாரணங்கள் உள்ளன. அண்மையில் உருவான சில மந்தைப் போக்குகளை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்.
சமூகத்தில் எழும்பி வரும் ஒவ்வொன்றைக் குறித்தும் அங்கதமாகவும் எள்ளலாகவும் எழுதும்படி தூண்டுகின்றன சமூக ஊடகங்கள். அதன் வழியாக உருவாகும் மந்தைப்போக்குப் பின்விளைவுகளைக் குறித்துக் கவலைப்படப் போவதில்லை. மந்தையில் கலப்பது தன்னிலையைத் தொலைத்துக் காணாமல் போகும் விருப்பம் என்பதை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ளவேண்டும்.
***
இளையராஜாவின் திரையிசைப்பாடல்களை ரசித்தவர்களை ரஹ்மானின் இசைக்கு எதிர்நிலைப்பாடு எடுக்கச் செய்வதில் தொடங்கும் வன்மம் சாதிப்பற்று, சமயப்பற்று என மாறி வன்மப்பேச்சுகளாக மாறுவதைப் பார்க்கிறோம். அதன் தொடர்ச்சியில் இசையின் விற்பனையும் வணிக நிறுவனங்களும் இருக்கின்றன. இசையின் ரசிகர்களை வணிகச் செயல்பாடுகள் குறித்தும், காப்புரிமை குறித்தும் பேச வைக்கின்றன. சினிமா என்னும் கூட்டுச் செயல்பாட்டைக் கூறுகட்டிச் சிதைத்துப் பாடலாசிரியர், இசைக் கோர்வையாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பகை முரண்பாடுகளைக் கூர்தீட்டுகின்றன.
கிரிக்கெட் தீவிரமான தேசப்பற்றின் அடையாளமாக உருவாகிப் பாகிஸ்தானில் இந்திய அணியும், இந்தியாவில் பாகிஸ்தான் அணியும் விளையாட முடியாத நிலை உருவாகி விட்டது. எந்தக் கோப்பையாக இருந்தாலும் இந்திய அணியே வெல்ல வேண்டும் எனத் தீச்சட்டி ஏந்தி நேர்த்திக் கடன் சொல்ல வைத்தார்கள்; வேத மந்திரங்கள் ஓதி யாகம் வளர்த்தார்கள். இந்திய அணிக்குக் கோப்பை கிடைக்க வில்லையென்றால் தோல்விக்குக் காரணமான வீரர்களின் வீட்டின் மீது கல்லெறிந்தார்கள்; கொடும்பாவி கொளுத்திக் கோபம் கொண்டார்கள். அதிலும் பாகிஸ்தானோடு மோதி இந்திய அணி தோற்றுப் போய்விட்டால் கையை வெட்டிக் கொள்ளவும், காலை உடைத்துக் கொள்ளவும் கூடத் தயாராகி விட்டது இந்திய ரசிக மனோபாவம். எப்போதும் இந்திய அணியே வெல்ல வேண்டும் என்ற மனநிலையை உருவாக்கிப்பிற அணிகளை எதிர்க்கவேண்டிய நிலையை உருவாக்கியதில் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தியவை ஐபிஎல் போட்டிகள்.
தேசப்பற்றின் ஊற்றாகவும், வெற்றி தோல்விக்காக விடுமுறை அளிக்கும் நிகழ்வாகவும் ஆகிவிட்ட கிரிக்கெட்டின் பின்னணியில் அசைவது என்ன? பெரும் கும்பல் மனோபாவம் தான். இந்தக் கும்பல் மனோபாவம் தன்னெழுச்சியாக உருவான கும்பல் மனோபாவம் அல்ல என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்று. இப்போது இந்தக்கும்பல் மனோபாவத்திற்கு ஐபிஎல் வட்டாரத் தன்மையைக் கொண்டுவந்திருக்கிறது. அதற்குள்ளும் சில நேர்மறைக்கூறுகள் இருக்கின்றன. டெல்லியைச் சேர்ந்த விராட் கோலி பெங்களூரின் புதல்வராகிறார். தமிழ்நாட்டு வீரர்கள் குஜராத் அணியிலும் கொல்கத்தா அணியிலும் கோலோச்சுகிறார்கள். எல்லா அணிகளிலும் மேற்கிந்திய அணியின் திறமையான ஆட்டக்காரர்கள் கொண்டாட்டத்திற்குரியவர்களாக இருக்கிறார்கள். இந்த மாற்றம் கிரிக்கெட்டில் நடந்துள்ள மிகப்பெரிய வரவேற்கத்தக்க மாற்றம்.
ஐபிஎல் ஆட்டங்களின் நேர்மறைத் தன்மைகளைச் சிதைத்துக் கொண்டிருக்கின்றன சமூக ஊடகங்களின் மந்தைத் திரட்சி. தேர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர்களின் திறமைகளை ரசித்த ரசிகர்களை அணிகளின் ஆதரவாளர்களாக மாற்றி இடத்தோடும் மொழியோடும் பிணைத்துப் பற்றை வெறியாக்கும் வேலை இது. தொடக்கப்போட்டிகளில் வெளிப்படாத வன்மமும் வெறியூட்டங்களும் கடைசிக்கட்டப் போட்டிகளின் போது கூர்மையானதின் பின்னணியில் சமூக ஊடகங்களின் பங்கு இருக்கின்றது. கடைசி நான்கு அணிகள் என்றான பின் ஒவ்வொரு அணியின் ஆதரவாளர்களும் சமூக ஊடகங்களில் மட்டுமல்லாது, விளையாட்டு மைதானங்களிலும் மோதல் போக்கை -மந்தையாகிக் கூச்சலிடுவதில் இணைந்தார்கள். இப்படித் திரட்டுவதிலும் அணிகளின் வணிக நோக்கங்களும் இருக்கின்றன. வணிகக் குழுமங்களின் லாபநோக்கமும் இருக்கின்றது.
****
மாவட்டம் சார்ந்த உணவுப் பண்டங்களைப் பற்றிய பேச்சை அடுத்த மாவட்டத்தைக் கேலி செய்யும் ஒன்றாக மாற்றுவதில் சமூக ஊடகங்களின் எழுத்துகளும் படங்களும் போட்டிபோட்டுக் கொண்டே இருக்கின்றன. உணவு விருப்பம், வட்டாரப்பேச்சுமொழி போன்றன ஒருவிதத்தில் நிலவியலின் இயல்புகள். ஆனால் அவற்றைக் கேலியும் கிண்டலுமாக மாற்றிப் பிறர்மீதான பகையாக மாற்றுகின்றன சமூக ஊடக எழுத்துகள். உருவக்கேலி, சாதிப்பகை, சமயவெறுப்பு எனப் பழக்கவழக்கங்கள் மீதான வன்மப் பேச்சாக மாற்றிவிடுகின்றன சமூக ஊடகங்கள். கோவையின் அரிசிம்பருப்பு, மதுரையின் வடைகள், திருநெல்வேலி அல்வாக்கள், சென்னையின் பிரியாணிக் கடைகள், பரோட்டாக்கடைகளின் சால்னாக்கள் என ஒவ்வொன்றின் மீதான அங்கதப் பேச்சுகள், மனிதக்கூட்டங்களின் மீதான வன்ம வெளிப்பாடுகளாக மாறுவதைத் தவிர்க்க நினைப்பதில்லை அதில் இயங்குபவர்கள்.
******
சமூக ஊடகங்களில் எப்போதும் மந்தைத் திரளுக்குரிய கச்சாப்பொருளாக இருப்பது பெண் x ஆண் எதிர்வு நிலை. பெண்களின் உடல் அழகை ரசிப்பவர்களாகவும் வெளிப்படையான காமத்தை வேண்டுபவர்களாகவும் காட்டிக்கொள்ளும் பலர் பொது நிலையில் பெண் வெறுப்பாளர்களாகத் திகழ்கிறார்கள். பெண்ணியம் பேசுபவர்களை வெறுப்பதாக வெளிப்படும் அவர்களின் நிலைப்பாடுகள், எப்போதும் பெண்களின் ஆளுமைத் திறனைக் குறைத்து மதிப்பீடு செய்யும் நோக்கத்தில் இருப்பதையும் மறுக்க முடியாது. திரைப்படங்களில் காட்டப்படும் பெண்களின் ஆளுமையையும் ஊடகங்களில் செயல்படும் பெண்களின் நோக்கங்களையும் எள்ளலுடன் பேசுவதின் வழியாக உருவாக்கப்படும் மந்தைப்போக்கு – ட்ரெண்ட் – முடிவில் பெண் வெறுப்பாக மாறும் என்பதை உணர்வதில்லை. பள்ளிக்கல்வியின் தேர்தல் முடிவுகளில் பெண்கள் அதிகமான எண்ணிக்கையில் இருப்பதையும் அதிகமானவர்கள் தேர்ச்சி பெறுவதையும் மதிப்பெண்கள் வாங்குவதையும் கூட ஏற்கும் மனநிலை இல்லாமல் எதிர்மனநிலையை வெளிப்படுத்துவதற்குச் சமூக ஊடகங்கள் தரும் சுதந்திரம் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது.
***
அரசியல் விஞ்ஞானத்தில் பரப்பியல் வாதம் (பாப்புலிசம்) என்ற கலைச்சொல் ஒருவித எதிர்மறைத் தன்மையோடு விளக்கப்படும் கலைச்சொல் என்றாலும் பொதுப்புத்தி சார்ந்த வெற்றிக்குப் பல நேரங்களில் உத்தரவாதமான ஒன்று. வெகுமக்களிடம் தங்கள் இயக்கத்தை வேகமாகக் கொண்டு போய்ச் சேர்க்க விரும்பும் இயக்கம், புனைவான சில செய்திகளையும், நிகழ்வுகளையும் உருவாக்கி அவற்றைக் கதைகளாக மாற்றிக் கட்டமைப்பது பரப்பியல் வாதத்தின் முக்கியமான போக்கு. கட்டமைக்கப்பட்ட புனைவுகளைப் பேச்சுகளாகவும், காட்சிகளாகவும் முன்னிறுத்திப் பெருங்கூட்டத்தை ஏற்கச் செய்ய இயலும் என்ற நம்பிக்கை அதன் அடிப்படை. அத்தகைய நம்பிக்கையில் செயல்படும் இயக்கத்தைப் பரப்பியவாத இயக்கம் (Populist movement) என அரசியல் விஞ்ஞானம் சுட்டும். செய்திகள், நிகழ்வுகள் மட்டுமே புனைவுகளாக ஆக்கப்படும் என்றில்லை.
ஓர் இயக்கம் முன் வைக்கும் கொள்கைகள், கொள்கைகளை முன் வைக்கும் நபர்கள் போன்றனவும் கூடப் புனைவுகளாகவே கட்டமைக்கப்படுவது பரப்பியவாதத்தின் அம்சங்களே. இந்திய அரசியல் கட்சிகள் பெரும்பாலும் பரப்பியல்வாதத்தைத் தங்களது கருத்தியல் அடிப்படையாகக் கொண்டவையே என்றாலும், திராவிட முன்னேற்றக் கழகமே அதில் முன்னோடியாக இருந்த இயக்கம் என்பதை அதன் கடந்த கால வரலாற்றின் பக்கங்கள் தெரிவிக்கின்றன. அதனை எதிர்ப்பதாகப் பாவனை செய்யும் பா.ஜ.க.வின் இயக்கமும் பரப்பியல்வாத அடிப்படைகளைக் கொண்டதே.
நிகழ்கால ஊடகங்களின் அடிப்படைத் தத்துவமாக பாப்புலிசம் ( populism ) என்னும் பெருந்திரள் வாதம் தான் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. பாப்புலிசம் என்ற சொல் லத்தீன் மொழியிலிருந்த - populus- என்ற சொல்லிலிருந்து உருவான ஒரு சொல். ஆங்கிலத்தில் பீயூப்பிள்- People-என்பதே மூலச்சொல். அதன் பொருள் மக்கள் என்பதுதான். தேசத்தின் மக்கள் என்ற அர்த்தத்தில் தேசப்பற்றையும் சேர்த்துக் கொள்ளும் இயல்புடையது.
மக்கள் ஆட்சி, மக்கள் கலை, மக்கள் சினிமா என ஒவ்வொன்றோடும் அது சேரும்போது பெருந்திரளின் சார்புடையது என மாற்றம் அடைகிறது. அதன் மூலம் 'பொது மக்கள்' என்னும் கவசத்தைத் தனதாக ஆக்கிக் கொள்கிறது. அப்படியொரு கவசம் கிடைத்தவுடன் அதன் உதவியுடன் ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களையும் அர்த்தங்களையும் அழித்துவிட்டுப் புதிய அர்த்தங்களை எழுதுவதில் தயக்கம் காட்டுவதே இல்லை.
பெருந்திரளை வசப்படுத்துவது என்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட பாப்புலிசம் உறுதியான தத்துவத்தையோ, இலக்குகளையோ வைத்துக் கொள்வதில்லை. மக்கள்கலை எனச் சொல்லிக் கொண்டாலும் மக்களின் ரசனையுணர்வையும் வாழ்க்கை முறையையும் மாற்றுவதற்கு உறுதியான கலை இலக்கியக் கோட்பாடு எதனையும் பின்பற்றுவதும் இல்லை. இதில் ஆச்சரியமான ஓர் உண்மை என்னவென்றால் பெருந்திரள் வாதம் என்பதை வலதுசாரிகளும் விரும்புகின்றனர்; இடதுசாரிகளும் விரும்புகின்றனர் என்பதுதான்.
இடதுசாரிகள் சொல்லும் பெருந்திரள்வாதமும், வலதுசாரிகள் பயன் படுத்திய பெருந்திரள் வாதமும் அடிப்படையான வேறுபாடுகள் சிலவற்றைக் கொண்டிருந்தாலும் மைய நோக்கம் அதிகாரத்தை நோக்கி நகர்தல் என்பதும், ஏற்கெனவே இருக்கும் அடையாளங்களை அழித்துவிட்டுப் புதிய அடையாளங்களை எழுதுதல் என்பதுமாகத் தான் இருக்கிறது. வலதுசாரிப் பெருந்திரள் வாதம் தேசியம், புனித இனம், கலப்பற்ற பண்பாடு, கடவுளால் உருவாக்கப்பட்ட நினைவுச் சின்னம் என்பதான அடிப்படைவாதச் சொற்களை உத்திகளாகப் பயன்படுத்தி அதிகார மையங்களைக் குறி வைக்கின்றன என்றால், இடதுசாரிப் பெருந்திரள்வாதம் அதிகாரத்தை நோக்கி நகர உழைக்கும் வர்க்கம், நடுத்தர வர்க்கம், விவசாயக் கூலிகள், ஏழைகள், பாமரர்கள், பாட்டாளி வர்க்கம் என்பதான சொல்லாடல்களை உற்பத்தி செய்கின்றன.
.jpeg)
கருத்துகள்