பெறும் பிளவுகள் ஏற்பட்டுவிட்டன.
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் மீது தனக்கிருக்கும் பொறுப்பைக் கைகழுவும் சட்டமுன்வரவு /திருத்த வரைவு சட்டசபையில் வைக்கப்பட்டுள்ளது. முழுமையாக அரசின் பிடியிலிருந்து விலகும் அரசு உதவிபெறும் கல்லூரிகள் விரும்பினால் தனியார் பல்கலைக்கழகங்களாக மாறிக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சிகளில் சில எதிர்ப்பு தெரிவிக்கின்றன. பொருளாதாரப் பின்னணி கொண்ட தனியார்களால்/ முதலாளிகளால் நடத்தப்படும் கல்லூரி நிர்வாகங்கள் எதிர்க்கப்போவதில்லை. ஏனென்றால் அவை தனியார் பல்கலைக்கழகங்களாக ஆவதின் மூலம் அதிகப்படியான லாபம் பெறும் வாய்ப்புண்டு. அதே நேரம் சமூக அறக்கட்டளைகள் மூலம் நடத்தப்படும் கல்லூரிகளில் சில எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அவற்றால் தனியார் பல்கலைக்கழகங்களாக ஆகமுடியாமல் போகலாம். அப்போது அக்கல்வி நிலையங்கள் மூடப்படும் வாய்ப்புண்டு. அல்லது பக்கத்தில் இருக்கும் தனியார் பல்கலைக்கழகங்களின் இன்னொரு வளாகமாக மாறும் வாய்ப்புகள் ஏற்படும். ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கு இதன் பாதிப்பு எப்படி இருக்கும் என்று விளக்கிச் சொல்லும் அமைப்புகள் இல்லை.
அரசு உதவிபெறும் கல்லூரிகளின் செயல்பாடுகளில் பல்கலைக்கழகப் பிரதிநிதியாக இருந்துள்ளேன். அவற்றின் மாணவர் சேர்க்கை, ஆசிரியர் தேர்வு, தேர்வு நடத்தும் முறை, உள்கட்டமைப்பு மேம்பாடு போன்றவற்றைக் கண்காணிக்கும் குழுக்களில் இருந்துள்ளேன். அந்த அனுபவத்திலிருந்து சிலவற்றைச் சொல்லத் தோன்றுகிறது. ஒன்றிய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு, மாநில அரசின் உயர்கல்வி வாரியம் போன்றன தங்கள் பொறுப்பைக் கைகழுவும் வேலையைத் தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆகின்றது. தனியார் மயம் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தொடக்க ஆண்டுகளிலிருந்தே இந்தப் போக்கு தொடங்கிவிட்டது. அதனைத் தொடக்கத்திலேயே சுட்டிக்காட்டி எதிர்ப்புநிலை எடுக்கத் தவறிவிட்டன கல்லூரிகளின் நிர்வாகங்களும் ஆசிரிய சங்கங்களும் மாணவர் அமைப்புகளும். அதன் விளைவாக அரசுத்துறை சார்ந்த உயர் கல்வியில் தேக்கமும் மாற்றங்களும் நடக்காமல் போய்விட்டன .
இருப்புநிலையைத் தக்கவைப்பதும் காலப் பொருத்தமற்ற கல்வித்திட்டங்களும் பாடத் திட்டங்களும் அப்படியே தொடர்ந்தன. அதே நேரம் தன்னாட்சிக்கல்லூரிகளும் தனியார் பல்கலைக் கழகங்களும் மாற்றங்களோடு கூடிய கல்வித் திட்டங்கள், பாடத்திட்டங்கள் மூலம் புதிய நம்பிக்கைகளைத் தந்தன. அதனால் தமிழ்நாட்டின் நடுத்தரவர்க்கம் அத்தகைய கல்வி நிறுவனங்களை நோக்கிக் குவிந்தார்கள் என்பதுதான் கடந்த 15 ஆண்டுகளின் நிலை.
இதைப் பின்வரும் உதாரணங்கள் வழியாகப் புரிந்துகொள்ளலாம். அரசுப்போக்குவரத்துப் பேருந்துகள் இருந்தாலும் வசதியான ஆம்னி பேருந்துகளில் கூடுதல் பணம் கட்டிப் பயணிக்கும் மனநிலை உருவாகிவிட்டது என்பதை மறுக்கமுடியாதுதானே? சாதாரணப்பெட்டிகள் கொண்ட ரயில்கள் குறைக்கப்பட்டு வந்தே பாரத், இண்டர்சிட்டிகள், தேஜஸ் போன்ற கூடுதல் வசதி - கூடுதல் கட்டணத்தை ஏற்றுப் பயணிக்கும் பயணிகள் உருவாகிவிட்டார்கள் என்பதும் நடந்துகொண்டே இருக்கின்றனவே.
*******
கொங்குப் பகுதியிலும் சென்னையிலும் மதுரையிலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளை விடவும் தனியார் பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டங்களுக்கே மாணவர் சேர்க்கை முதலில் நடந்து முடிகின்றது. ஒரே கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடங்களும் சுயநிதிப் பாடங்களும் இருக்கும் நிலையும் உள்ளன. சுயநிதிப்பிரிவுகளின் பாடங்கள் தான் நடுத்தரவர்க்கத்தின் விருப்பமாக இருக்கின்றன.
நடுத்தரவர்க்கத்திற்கும் கீழே இருக்கும் பொருளாதார நிலையும் பின்னணியும் உள்ளவர்கள் தான் அரசு உதவிபெறும் பாடப்பிரிவுகளுக்கு வருகிறார்கள். அந்தப் பிரிவுகளில் பாடம் நடத்தும் நல்ல சம்பளத்தோடு புதியனவற்றைக் கற்றுத்தராத பாடத்திட்டத்தை நடத்திகொண்டிருக்கின்றனர். ஆனால் சுயநிதிப் பிரிவு ஆசிரியர்கள் குறைவான சம்பளத்தில் திறன் வளர்க்கும் பாடங்களைக் கற்பிக்கவும் கூடுதல் வகுப்புகளை எடுக்கவுமான நெருக்கடியில் இருக்கின்றார்கள்.

இதிலிருந்தும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றன அரசு கல்லூரிகள். பெரிய பிளவுடன் சம்பளம் வாங்கும் ஆசிரியர்களுடன் சாதாரணமான பட்டப்படிப்புகளை- காலத்திற்குப் பொருத்தமற்ற பாடப்பிரிவுகளை நடத்துகின்றார்கள்.இந்தப் பிளவுகளையும் வேறுபாடுகளையும் விவாதிக்காமல், தடுத்து நிறுத்தாமல் கடந்து வந்துவிட்டோம். இப்போது அரசு உதவி பெறும் கல்லூரிகளைக் கைகழுவும் பெரிய நிகழ்வு வரும்போது குரல் எழுப்புகின்றோம். அடுத்து அரசு கல்லூரிகளும் தனியார் வசம் ஒப்படைக்கப்படும் வாய்ப்பு வரும். அப்போது உயர்கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கை பெருமளவு குறையும். இந்தியாவில் இவ்வளவுபேருக்கு எதற்கு உயர்கல்வி என்று கேள்வி எழுப்பப்படும். அப்போது இந்த நடுத்தரவர்க்கமும் ஊடகங்களும் ' ஆமாம்; பயன் தராத இந்தப் பட்டப்படிப்புகள் எதற்கு? ' என்பதுபோன்ற கருத்துருவாக்கத்தை செய்யவும் முனைவார்கள்.
*****************
நிகழ்கால வாழ்க்கைமுறை ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தந்துள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளுதல். தன்னை வெளிக்காட்ட -தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன.
அனைவருக்கும் கல்வி; வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி, 14 வயதுவரை உள்ள ஆண் பெண் இருபாலாருக்கும் இலவசமாகக் கட்டாயக் கல்வி என ஒவ்வொரு ஐந்தாண்டுத் திட்டங்களின் போதும் லட்சியங்களும் இலக்குகளும் முன் மொழியப்பட்டுள்ளன. அப்படியான முன் மொழிவுகளைச் சொல்லாவிட்டால் நமது அரசுகள் ஜனநாயக அரசுகள் எனத் தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது. ஆகவே லட்சியங்களையும் திட்டங்களையும் முன் மொழிவதிலிருந்து அவை எப்போது பின் வாங்குவதில்லை.
கற்றவர்களாக ஆக்க வேண்டும் எனத் திட்டமிடும்போதே என்ன வகையான கல்வியைத் தர வேண்டும் எனக் கொள்கை முடிவை எடுப்பது மிக முக்கியமானது. ஆனால் நமது அரசுகள் அதைச் செய்வதே இல்லை; தொடர்ந்து தள்ளிப் போட்டுக் கொண்டே வந்துள்ளன. எழுதப் படிக்கத் தெரிந்து கொள்வதைத் தாண்டி ஒருவருக்குத் தரப்படும் கல்வியின் மூலம் அவர் அடையப்போகும் பலன் என்ன என்பதைக் கொண்டே கல்விக்கான கொள்கையை உருவாக்க முடியும். காலனியாதிக்கத்திலிருந்து விடுபட்ட இந்தியர்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்பதில் எந்தவிதத் தெளிவும் இல்லாததால் கல்வியை வழங்குவதற்கான திட்டமிடலில் அவசரம் காட்டிய அதே வேகத்தைக் கல்விக் கொள்கையை உருவாக்குவதில் காட்டவில்லை. பிரிட்டிஷாரின் நோக்கம் அவர்களது அரசுக்கும் தொழில் வளர்ச்சிக்கும் தேவையான எழுத்தர்களையும் மேற்பார்வையாளர்களையும் உருவாக்குவது என்பதை முன் வைத்து அதற்கான கல்வியை வழங்கினார்கள். அதே நிலைபாட்டை நாம் எப்படித் தொடர முடியும்? என்றொரு கேள்வியைக் கேட்டுக் கொண்டால் கூடப் போதும் நமக்கான கல்விக் கொள்கையை நோக்கி நகர்ந்திருக்க முடியும்.

கருத்துகள்