பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு
50 நாட்கள் வரை எட்டாவது பருவம் குறித்து ஒரு குறிப்பும் எழுதவில்லை. ஆனால் ஏழு பருவங்களின்போது அப்படி இருக்கவில்லை. முதல் இரண்டு பருவங்களில் அன்றாடம் பார்த்துப் பல குறிப்புகள் எழுதியதுண்டு. பின்னர் அதில் ஆர்வம் குறைந்து விட்டது. அன்றன்றே பார்க்கும் வழக்கமும் இல்லாமல் போனது. ஆனால் இணையச்செயலி ஹாட்ஸ்டாரில் பார்த்துவிடுவேன். இப்போதும் பார்க்கிறேன்.
வெகுமக்கள் ஊடகங்களைக் கவனிப்பதைத் தொடர்ந்து செய்கிறேன். வெகுமக்கள் பண்பாடும் அரசியல் தீர்மானங்களும் எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதை விவாதித்து வருபவன் என்ற வகையில் இந்தியர்களின் மிகப்பெரிய பொழுதுபோக்கான கிரிக்கெட் விளையாட்டையும், தமிழர்களின் ஆகக்கூடிய நேரத்தை எடுத்துக்கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், அவற்றின் முதன்மை நேர நிகழ்ச்சிகளையும் பார்த்தாகவேண்டும் என நினைப்பவன். அந்த வகையில்தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளையும் பார்த்துவிடுவதைத் தவிர்ப்பதில்லை.
இந்தியாவின் மிகப்பெரிய பொழுதுபோக்குப் பொருளாதார முதலீடுகளை ஈர்ப்பதில் முதலிடம் எதற்கு என்ற போட்டி உச்சத்தில் இருக்கிறது. போட்டி உற்பத்தியை முக்கியமாகக் கருதிய முதலாளிய காலகட்டத்திலிருந்து, பின் முதலாளிய காலகட்டம் புதுப்புதுத் துறைகளுக்கு நகர்த்திக்கொண்டிருக்கிறது. இந்த நகர்வில் பன்னாட்டு மூலதனம் சேவைத்துறையையும் பொழுதுபோக்குத்துறையையும் உள்ளே கொண்டுவந்திருக்கிறது.
இந்தியப் பொழுதுபோக்குத் துறையின் முதலிடம் சினிமாவுக்குரியது. இப்போதும் அதற்குத்தான் முதலிடம். அடுத்த இடத்திற்குக் கிரிக்கெட் விளையாட்டு நகர்ந்துள்ளது, இவ்விரண்டையும் இணைக்கும் கருவியாகத் தொலைக்காட்சித் திரைகள் இருக்கின்றன. அதனால் அங்கு போட்டிகளும் இருக்கின்றன. இவற்றோடு போட்டியிட்டு வலம் வருபவை இணையச்செயலிகள். வியாபாரமும் போட்டிகளும் ஆண்டுதோறும் வடிவ மாற்றங்களை அடைந்துகொண்டே இருக்கின்றன.பண்பு மாற்றங்களும் தவிர்க்கமுடியாதவை. அவற்றில் பலமொழிகளில் நடக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று.
இவையெல்லாம் இல்லாத காலத்தில் இந்தியர்களுக்குப் பொழுதுபோக்காக இருந்தவை கோயில்களும் திருவிழாக்களும் கடவுளர்களும் மட்டுமே. நிலவுடைமைக் காலத்துக் கோயில்கள் எல்லாவற்றையும் இணைத்த பெரும்பேரங்காடிகள்.பெருங்கோயில்கள் தொடங்கி வட்டாரக்கோயில்கள், குலசாமிக் கோயில்கள், ஊர்க்காவல் தெய்வங்கள் என விதம்விதமான அங்காடிகளாகக் கோயில்கள் இருந்தன. அவற்றின் வியாபாரங்களிலும் போட்டிகள் உண்டு. வணிகமும் உண்டு.
*******
கடந்த ஆண்டு முடிந்த - பிக்பாஸ் -7 பற்றி இரண்டே குறிப்புகள் மட்டுமே எழுதினேன். முதல் குறிப்பு நடிப்பின் தீவிரம் வெளிப்பட்ட காட்சி தொடர்பானது. மற்றையது முடிவுகள்- வெற்றிபெற்றவர்கள் குறித்தது.
உலக அளவில் புகழ்பெற்ற பயில்முறை நடிப்புப் ( ) பயிற்சிகளை உருவாக்கியவர் ஸ்டானிஸ்லாவ்ஸ்கி. அவரின் கண்டுபிடிப்புகளில் முக்கியமான ஒன்று உள்ளுறையும் நினைவுகள் ( EMOTIONAL MEMORIES) மீட்டல். அதனைச் சரியாகக் காட்சிப்படுத்தும் விதமாக ஒரு போட்டி இருந்தது. அந்தப் போட்டியைச் சரியாகப் பயன்படுத்தித் தன்னை வெளிப்படுத்தினார் நடிகை விசித்ரா. தமிழ்ச் சினிமாவில் பலவிதமான பாத்திரங்களில் நடித்த அனுபவம் பெற்றிருந்த நடிகை விசித்ராவிற்கு அது இயல்பாகவே கைகொடுத்தது. அதனாலேயே கடந்த பருவத்தின் முக்கியமான போட்டியாளர்களில் ஒருவராகக் கடைசிவரை தொடர்ந்தார் விசித்ரா. அந்தக் காட்சிகள் தந்த உற்சாகத்தில் விரிவான பதிவொன்றை எழுதினேன். பின்னர் அமைதியானேன்.
இரண்டாவது குறிப்பு ஓர் ஆதங்கத்தின் வெளிப்பாடு.இறுதிப்போட்டியில் இடம்பிடிப்பார்; வெற்றிபெறுவார் என ஒருவரை நினைத்திருந்தேன். எனது எதிர்பார்ப்பைப் பொய்யாக்கிய பூர்ணிமா ரவியின் பின்வாங்கலை ஒட்டி எழுதியது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போக்கில் என்னவெல்லாம் செய்யலாம்; எப்படி விளையாண்டால் ஒவ்வொரு வாரமும் வெளியேற்றப்படாமல் இருக்க வாய்ப்புண்டு என்பதைத் திட்டமிட்டுக் கொண்டு செயல்பட்டார் என்றாலும், அவரளவில் அவர் மீது நம்பிக்கை இல்லை என்ற மனநிலையையும் வெளிப்படுத்தினார். அந்த மனநிலை காரணமாகவே இடையில் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு வெளியேறினார்.
இறுதிச்சுற்றுவரை வந்து முதலிடம் பெற்றுள்ள அர்ச்சனா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்த காலகட்டத்தில் நல்திறக்கட்டமைப்பு கொண்ட நாடகத்தனத்தை உருவாக்கிக் கொண்டு அவர் மீது கவனம் தொடரும்படி பார்த்துக்கொண்டார். ஆரம்பத்திலேயே அனாதையாக்கப்பட்ட ஒருவரின் நிலையை உருவாக்கி அழுகையும் சோகமும் வெளிப்பட, இயல்பாகவே உள்ளே இருந்த மூத்தவர்களின் நட்பையும் ஆதரவையும் பெற்றார். அதன் பிறகும் மோதலும் அதிர்ச்சியும் கழிவிரக்கமும், ரகசியங்களும் கொண்டதான பங்கேற்புகளோடு கடைசிவரை வந்து வெற்றிக்கனியைப் பறித்துப் பெருந்தொகையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். 100 நாட்கள் ஓடிய வெற்றிப்படம் முடிந்துவிட்டது.
***** ********
இந்த எட்டாம் பருவத்தின் 50 நாட்களில் எந்தவொரு நிகழ்வும் எழுதும்படியான காட்சிகளைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ச் சினிமாவின் முதன்மை நடிகர் கமல்ஹாசனுக்குப் பதிலாக இன்னொரு முதன்மை நடிகர் விஜய்சேதுபதி ஒருங்கிணைப்புச் செய்கிறார் என்ற புத்தாக்கம் தவிரப் போட்டியாளர்கள், நிகழ்ச்சிக் கோர்வைகள் என எதிலும் புத்தாக்கம் இல்லை. அவரவர் துறைகள் சார்ந்து தனித்திறன் எதுவும் இல்லாத சாதாரண நபர்களே போட்டியாளர்களாக அறிமுகம் செய்யப்பட்டார்கள். வயதிலும் சினிமாவிலும் சாதாரணமான பங்களிப்பு செய்திருந்த ரன்ஜித் தவிரப் பேச்சுக்கலையில் சிறந்திருந்த முத்துக்குமரன், கானாப்பாடல் உருவாக்கத்தில் ஓரளவு அனுபவம் பெற்றிருந்த ஜெப்ரி தவிர மற்றவர்கள் பெரும்பாலும் தொலைக் காட்சிகளின் பல்வேறு நிகழ்ச்சிகளில் இடம்பிடித்தவர்களாக இருந்தார்கள். பாதிக்கும் மேல் விஜய் தொலைக்காட்சியின் நபர்கள். சில வாரங்களுக்குப் பின்னர் நுழைந்தவர்களும் கூடச் சாதாரணப் பங்கேற்பாளர்களாகவே இருக்கிறார்கள். சில வருடங்களில் தமிழர்கள் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர் நாடுகளிலிருந்து உருவாக்கப்பட்ட பங்கேற்புகள் இந்த முறை இல்லாமல் போய்விட்டது.
கருத்துக்கூறுதலில் தயக்கமின்மை, உடல் திறன் காட்டும் விளையாட்டுகளில் ஈடுபாடு, கூட்டுப்போட்டிகளில்/ நிகழ்வுகளில் பாத்திரங்களை உருவாக்கிப் பங்கேற்றல் போன்றன பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெளிப்பாடுகள். இவற்றில் ஒவ்வொருவரும் தங்களை நிறுவவேண்டும். புத்திசாலித்தனத்தையும் உடல் வலிமையையும் நுட்பமான செயல்திறன்களையும் காட்டுவது முக்கியம். அத்தோடு தனது உடல் வனப்பானது; மற்றவர்களைக் கவர்ந்திழுக்கும் தன்மை அதற்கு இருக்கிறது என நம்பவேண்டும். அந்த நம்பிக்கையோடு அழகைக் காட்டுவதிலும், ஆடையணிகளைத் தேர்வுசெய்து அணிவதிலும் அவரவர்கள் தங்களின் தனித்துவம் காட்டுவதும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் உத்தி. உடல் வனப்பு மீது நம்பிக்கையில்லாதவர்கள் அவற்றிற்கிணையாக வேறு திறன்கள் தன்னிடம் இருக்கிறது என நினைக்கவேண்டும். இதன் வழியாகப் பார்வையாளர்களின் வாக்குகளைப் பெறுகிறார்கள்;அடுத்த வாரத்திற்கான நீட்டிப்பைத் தக்க வைக்கிறார்கள். குறைவான வாக்குகளைப் பெறுகிறவர்கள் வெளியேறுகிறார்கள்.
இந்தப் பருவத்தின் புத்தாக்கமாக நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கருதிய ஆண்கள் X பெண்கள் பால்வேறுபாட்டுப் பிரிப்பும் அணிச்சேர்க்கையும் போட்டி மனப்பான்மையை உருவாக்கியது, ஆனால் தனித்திறன்களைக் காட்டத் தடையாக இருந்தது. அதனால் நிகழ்ச்சிக்குக் அழகியல் ரீதியான கலைத்தன்மையையோ, பொழுதுபோக்கு சார்ந்த சுவாரசியத்தன்மையையோ உருவாக்கவில்லை.
எதிர்ப்பாலினத்தவரை நோக்கிய விளையாட்டுகளையும் வெற்றி பெறுதலையும் ஊக்குவித்த இந்தப் பிரிப்பு, போட்டியாளர்களின் தனித்தன்மைகள் எவையெல்லாம் என்று காட்ட வாய்ப்பே வழங்கவில்லை. ஆண்கள் அணி வெல்வதா? பெண்கள் அணி வெல்வதா? என்ற போட்டியில் இந்தியத் தமிழ் பொதுப்புத்தியின் மனநிலையையே தொடர்ந்தார்கள். ராணியால் ஆளப்படும் நாடு, ராஜாவால் ஆளப்படும் நாடு போன்றவற்றில் நல்ல குறுநாடகங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கமுடியும். ஆனால் அங்கும் ஆண் X பெண் மோதல்களாகவே முடிந்துபோனது.
பெண்கள் – ஆண்கள் எனப்பிரித்ததால் குழுக்கள் உருவாகி, திட்டங்கள் தீட்டி, ஆர்வமூட்டும் சின்னச் சின்ன நிகழ்வுகளை உருவாக்கும் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. ஒவ்வொருவரும் தங்களுக்கான எதிரியை அல்லது போட்டியாளரை அடையாளம் கண்டு, அவர்களை வெளியேற்றும் உத்திகளைக்கூட நினைக்காமல், நல்லவர்களாக – நண்பர்களாக இருந்துகொண்டே இருந்தார்கள்.

எப்போதாவது தங்களின் செயல்பாடுகளால் அந்த வாரத்தில் மட்டும் வெளிப்பாட்டைக் காட்டிவிட்டு, அடுத்தவாரம் தொலைந்து போனார்கள். தனது பேச்சால் முதலில் வெளிப்பட்டவர் முத்துக்குமரன். பிறகு ரொம்பப் பேசுறோமோ என்று நினைத்துக் காணாமல் போய்விட்டார். தனது உடல் வனப்பு, நிற்றல், நடத்தல், திரும்புதல் என உடலை மாற்றிக் காட்டிய உடல் மொழியாலும், மென்மையற்றதான தனது குரலின் வருடுதலையே தனி அடையாளமாக்கி ஒருவார நட்சத்திரமாக சௌந்தர்யா வெளிப்பட்டார். இன்னொரு வாரம் தனது அன்பும் பாசமுமான நடத்தைகளால் சுனிதா கோகாய் ஜவலித்தார். அதன் பிறகு போட்டிமுழுவதும் கூனிய முதுகோடு பவித்ரா ஜனனி கவர்ந்திழுத்தார். தன்னைச் சிறுமியாகக் கருதி ஒதுக்கிவிடக்கூடாது என்ற அச்சத்தோடு கீச்சுக்குரல் எழுப்பியே தனது இருப்பைக் காட்டுகிறார் சக்சனா. எல்லாவற்றையும் எழுதில் கடந்துவிடும் நபராக வலம் வந்தார் விசால், ஒடிசலான உடலால் தனது இருப்பை நீட்டிக்கிறார் ஜெப்ரி.
50 நாட்களுக்குள் வெளியேற்றப்பட்டவர்களில் சுனிதா கோகாயின் வெளியேற்றம் நிகழ்ந்தது நம்பும்படியாக இருக்கவில்லை. மற்ற வெளியேற்றங்கள் பெரிய கேள்விகள் இருக்க வாய்ப்பில்லை. அலுப்பும் சலிப்பும் தரும் பேச்சுகளாகவும் உரையாடல்களுமாக இருந்ததை மாற்றும் விதமாக ஒருங்கிணைப்பாளர் விஜய்சேதுபதி வினாக்களையும் விவாதங்களையும் உருவாக்க முயற்சி செய்திருக்கலாம். பேசுங்கள்; சுவாரசியமாகப் பேசுங்கள் என்று வலியுறுத்துவதைத் தாண்டி அதற்கான உள்ளீடுகளைத் தரும் விதமாக நிகழ்வுகளையோ, கேள்விகளையோ, தூண்டுதல்களையோ செய்யவில்லை.100 நாட்கள் இருப்பதைப் பயன்படுத்தி ஊடகங்களுக்குத் தேவையான படைப்பாக்கம் கொண்ட நடிப்புக் கலைஞர்களை, பேச்சுக்கலைஞர்களை, பாடகர்களை, கதையாக்கத்திறனாளர்களைத் தமிழர்களுக்குக் காட்டுவதாக நிகழ்ச்சியைத் திட்டமிடலாம்.
50 நாட்கள் முடிந்தபின் இரண்டு அணிகளும் ஒன்றாகி இருக்கிறது.விஜய் தொலைக்காட்சி ஆள் என நினைத்துக்கொண்ட செயல்படும் தீபக்குக்கும் ஜாக்குலினுக்கும் மறைமுகப் போட்டி இருக்கிறது. தனது உடல் வனப்பின் மீதும் நளினமான அசைவுகளின் மீதும் நம்பிக்கைகொண்ட அன்ஷிதாவுக்கும் சௌந்தர்யாவுக்கும் தன்னம்பிக்கையும் இருக்கிறது; வீழ்ந்துவிடுவோமோ என்ற பயமும் இருக்கிறது. முத்துக்குமரனின் மடை திறந்து பேச்சு வன்மைக்கெதிராகத் தர்க்கவாதங்களை அடுக்கி வெல்லவேண்டும் என்று அருண் நினைக்கிறார். மஞ்சரியை இவ்விருவரும் போட்டியாளராகக் கருதித் தள்ளிவிடப்பார்க்கிறார்கள். காதலும் ஈர்ப்பும் கூடிய இணைகளை உருவாக்குவது ஒவ்வொரு பிக்பாஸ் பருவத்திலும் பார்வையாளர்களுக்குப் பேசுபொருளாக இருக்கும் என்பதால் தர்ஷிகா – விசால் ஜோடி சேர்ந்து காட்சிகளை உருவாக்குகிறார்கள். இவற்றின் கூட்டுப்பலன்கள் என்னவிதமான கொண்டாட்டமாக மாறும்; ஏதாவது ஆச்சர்யமோ சுவாரசியமோ நடக்குமா என்று பார்வையாளத்திரள் காட்சித்திரை முன் அமர்ந்து நகரும்.

கருத்துகள்