கலைஞரின் அரசியல் வெளிப்பாடு
இந்திய அரசியல் என்பது எப்போதும் பொருளியல் விடுதலைக்கான போராட்டமாக இருந்ததில்லை. அப்படி இருந்த பொருளியல் போராட்ட சக்திகள் இந்தியாவில் வெற்றியும் பெற்றதில்லை. குறிப்பிட்ட சூழலில் வெற்றிபெற்ற பொருளியல் சக்திகள் கூட அந்த வெற்றியைப் பண்பாட்டுப் போராளிகளிடம் கையளித்துவிட்டுப் பிசைந்து நின்றதையே அண்மைக்கால இந்திய/ தமிழக வரலாறு காட்டுகின்றது. காலனிய ஆட்சியாளர்களுக்கெதிரான விடுதலைப்போராட்டத்திலும் பின் காலனிய காலகட்டத்து நவீன இந்தியாவை உருவாக்கும் போராட்டத்திலும் முதன்மையான முரண்பாடுகள் பொருளியல் அரசியலுக்கும் பண்பாட்டு அரசியலுக்கும் இடையேயானதாகவே இருந்துள்ளது. பண்பாட்டு அரசியலே வெற்றிக்கான கருவி. அதன் வழியே அடைந்த வெற்றியைப் பொருளியல் சக்திகளிடம் கையளித்துவிட்டுப் பண்பாட்டுப் போராளிகள் பின் தங்கிவிடுவார்கள். இதுவும் இந்திய வரலாற்றில் நிகழும் சிக்கலான விநோத முரண்களில் ஒன்று. சுதேசியம் பேசிய இந்திய தேசியக்காங்கிரஸின் வெற்றி பண்பாட்டு அலகுகளால் ஆனது. இந்தியப் பண்பாட்டுக் கூறுகளால் தனது தன்னிலையை உருவாக்கிய மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியின் போராட்ட வடிவங்களால் தான் விடுதலை சாத்தியப்பட்டது. அவர் அடைந்த வெற்றியை அரசியல் வடிவமாக்கும் வழிவகை அறியாமல் பொருளியல் நவீனத்துவம் பேசிய பண்டித நேருவிடம் கையளித்துவிட்டு ஒதுங்கினார் காந்தியார்.
தமிழ்நாட்டில் வடவர்களின் பொருளியல் சுரண்டலுக்கெதிராக அரசியல் செய்ய நினைத்த பெரியாரின் போராட்டங்கள் பார்ப்பண எதிர்ப்பு, இந்துசமயக் கடவுளர்களை முன்வைத்து ஏமாற்றும் சமய நம்பிக்கை எதிர்ப்பு என்ற பண்பாட்டு வடிவங்களாகவே இருந்தன. அவரது போராட்டங்களின் திரட்சிக்குப் பின்னர் அதனைப் பயன்படுத்தித் தமிழகத்தில் அரசியல் வெற்றியை அடைந்தது திராவிட முன்னேற்றக் கழகம். அதுவும்கூட இந்தி எதிர்ப்பு போன்ற பருண்மையான பண்பாட்டுச் சொல்லாடல்களையே முன்வைக்க வேண்டியிருந்தது. ஆனால் அதிகாரம் கைவரப்பெற்ற பின் அதன் நடவடிக்கைகள் பொருளியல் நடவடிக்கை சார்ந்தனவாக இருந்தன.
பொருளியல் நடவடிக்கைகள் சார்ந்த பருண்மையான மாற்றங்களைச் செய்யும் வாய்ப்பு தி.மு.க.வின் முதல் முதலமைச்சரான சி.என். அண்ணாதுரைக்கு வாய்க்கவில்லை. மிகக் குறைந்த கால அளவே முதல்வராக இருந்த அவர் தேர்தல் வாக்குறுதிகள் சொன்ன திரள் மக்களின் ஆசையை நிறைவேற்றும் படியரிசித்திட்டம் தமிழ்நாடு பெயர்மாற்றுத் திட்டம், இருமொழிக்கொள்கை போன்றவற்றையே நடைமுறைப்படுத்த முடிந்தது. ஆனால் அவர் நினைத்ததையும் அவரால் முன்மொழியப்படாததையும் தனது ஆட்சி நிர்வாக அறிவால் செய்து முடித்தவர் கலைஞர் கருணாநிதி.
தமிழர்களின் அறிவை உற்பத்தி சார்ந்த அறிவாகவும் பயன்பாட்டு அறிவாகவும் வளர்த்தெடுக்கும் விதமாகக் ஆரம்பக்கல்விக்கும் உயர்கல்விக்கும் தேவையான அடிப்படைக்கட்டுமானங்களை- பல்கலைக் கழகங்களாகவும், சிறப்புநிலைக் கல்லூரிகளாகவும், தொழில் அறிவைத் தரும் கல்வி வளாகங்களாகவும், உயர்நிலைப்பள்ளிகளாகவும், ஆரம்பப் பள்ளிகளாகவும் உருவாக்கிய திட்டங்களைத் தந்த அரசு நிர்வாகம் கலைஞரின் அரசு நிர்வாகமே. இன்று தமிழகம் அறிவு ஏற்றுமதி மூலம் ஈட்டும் அந்நிய செலாவணிக்குப் பின்னணியில் அவரது தொலைநோக்குப் பார்வையும் இருமொழிக் கொள்கையும் இருப்பதை எவரும் மறுத்துவிட முடியாது.
காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பெற்ற பெரிய அணைகளுக்கு இனையாகப் பல்வேறு மாவட்டங்களில் சிறு, குறு அணைகளைக் கட்டி நீர்மேலாண்மையில் முக்கியமான இடத்தைத் தமிழகம் அடையக்காரணமாக இருந்தும் அவரது ஆட்சி நிர்வாகமே. நீர்ப்பாசனத்திற்கு உதவும் வகையில் மின்சாரப் பங்கீடும், இலவச மின்சாரமும், உரமானியங்களும் வழங்கிய பின்னணியில் தான் தமிழக வேளாண்மை இன்றளவும் உற்பத்தியில் தன்னைத் தக்கவைத்துக்கொண்டுள்ளது. தொழில் வாய்ப்புள்ள நகரங்களின் கட்டமைப்பை விரிவாக்கியதோடு நவீனத் தொழில்களான பின்னலாடை, மோட்டார் வாகனத் தயாரிப்பு மற்றும் உதிரிப்பாகங்கள் உற்பத்தி, அலைபேசிகள், தொலைக்காட்சிகள், கணினி மென்பொருட்கள் எனத் தகவல் தொழில்நுட்பத்தில் தமிழக வளர்ச்சி முக்கியமானது. ஏற்றுமதிக்கான துணிகள் தொடங்கி இந்திய மக்களுக்குத் தேவையான துணிகள் வரை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளைக் கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற நகரங்களில் வளர்த்தெடுத்ததும் அவரது நிர்வாகமே. வன்கருவிகளையும் வீட்டுபயோகப் பொருட்களையும் உற்பத்திசெய்யும் தொழிற்பேட்டைகளைப் பெருநகரங்கள் தோறும் தொடங்கி வளர்த்தெடுத்ததில் அவரது தொழிற்கொள்கைக்கு முக்கியப் பங்குண்டு.
உற்பத்திசார்ந்த தொழிற்சாலைகளுக்காக மட்டுமல்லாமல் சேவைப்பிரிவுத் திட்டங்களுக்காகவும் கலைஞர் எப்போதும் நினைக்கப்படுவார். கண்ணொளித் திட்டம், கைரிக்சா ஒழிப்புத்திட்டம், மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இடுபயிர்கள் காப்பீட்டுத்திட்டம் எனச் சமூக நலத்திட்டங்கள் பலவற்றைக் கொண்டுவந்தவர் அவர். குடிமைப்பொருள்களின் சீரான விநியோகம் மூலம் ஏழ்மை ஒழிப்பு முயற்சிகளை மேற்கொண்டவர். பெண்களின் கல்வி, திருமணம் போன்றவற்றிற்கு உதவும் சமூக நலத்திட்டங்களோடு சொத்தில் பெண்களுக்கும் சமபங்கு உண்டு என்பதைச் சட்டமாக்கியவர். இந்திய சமூகத்தில் காணப்படும் சாதி ஏற்றத்தாழ்வுகளைத் தனது எழுத்துகளில் கடுமையாக விமரிசனம் செய்த கலைஞர் அவற்றைக் களைவதற்காக திட்டங்களை – இட ஒதுக்கீடு தொடங்கி மானியங்கள் வழங்குதல், வேலை வாய்ப்பு அளித்தல், அதிகாரத்தில் பங்கு பெறும் விதமான நிர்வாகச் சீரமைப்பு எனப் பலவற்றைச் செய்தவர்.
காலத்தை வெல்லும் போராட்ட த்தைத் தொடர்ச்சியாக நடத்திவிட்டுப் போயிருக்கும் அவரைத் தமிழ்ச் சமூகம் நினைத்துக் கொள்ளும்படியாகச் சொல்லிக்கொண்டே இருக்கலாம். அதன் மறுதலையாக அவரது திட்டங்களின் பலனை உரியவர்கள் அடைய முடியாமல் போன நிலையைப் பற்றிய விமரிசனங்களையும் முன்வைக்க முடியும். தன்னை முன்னிறுத்தி – தனது சொந்த அரசியல் வெற்றியை முன்னிறுத்தி – தனது குடும்பத்தை முன்னிறுத்தித் தமிழக நலனை விட்டுக்கொடுத்தார் என்ற பார்வைகளில் பொருள் இல்லாமல் இல்லை. அதன் விளைவாக அவரையும் அவரது கட்சியையும் ஆட்சிக்கட்டிலிலிருந்து மக்கள் இறக்கவும் செய்தார்கள் என்பது அதன் விளைவுகளே.

தேர்தல் அரசியலில் தனியொருவராகத் தோல்வியை அடைந்தவர் அல்ல. போட்டியிட்ட அனைத்துத் தேர்தல்களிலும் வென்றவர். ஆனால் அவரது கட்சி பலநேரங்களில் தோல்வியைக் கண்டது. ஆனால் அதன் தோல்விகளுக்கான காரணங்களைக் கண்டறிந்து மறு உயிர்ப்புச் செய்தவரும் அவரே. அவரது இன்மையைத் தொடர்ச்சியாகத் தமிழ்ச்சமூகம் நினைவில் கொள்ளும்.
கருத்துகள்