இடுகைகள்

நாடகவியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாடகப்பிரதியாக்கப்பட்டறை: நினைவுக்கு வந்த ஒரு வரலாறு

படம்
  நாடகப்பிரதியாக்கப்பட்டறையொன்று அண்மையில் (செப்.24 முதல் அக்.4 வரை) நடத்தப்பெற்றது. கரோனா காலச் செயல்பாடு என்ற வகையில் இணையவழியில் நடந்த பட்டறையில் 40 பேர்வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்தனர்.     அந்தப் பயிலரங்கு முடிந்தபோது எனது முகநூல் பக்கத்தில்  ‘நாடகங்கள் எழுதப்போகிறார்கள்’ என்றொரு குறிப்பினை எழுதினேன்.(பின் குறிப்புக்குப் பின்னர்   அந்தக்குறிப்பு உள்ளது) குறிப்பு எழுதி மறந்துவிட்ட நிலையில், கால்நூற்றாண்டுக்கு முன்னால் நடந்த பிரதியாக்கப் பயிலிரங்கு ஒன்று பற்றி எழுத நினைத்து தொடங்கி முடிக்காமல் விட்ட குறிப்புநிலைக் கட்டுரை ஒன்று கண்ணில் பட்டது. தலைப்பெல்லாம் வைத்துச் சில பக்கங்களும் எழுதி வைத்திருந்தேன். அதனை முடித்து அச்சிதழ்கள் எதற்கும் அப்போது அனுப்பவில்லை. அனுப்பியிருந்தாலும் வந்திருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால் அப்போது நான் எழுதியதைப் போடும் அளவுக்கு அறியப்பட்டவன் இல்லை.  இப்போது வரலாற்றைப் பதிவுசெய்துவைக்க வலைப்பூ இருக்கிறது. இணைப்புத்தர முகநூல் இருக்கிறது. மறந்துபோன வரலாற்றை நிறைவுசெய்து பதிவுசெய்து வைக்கலாம்:

துள்ளிவரும் மல்லல் பேரியாறு

  தொடர்ச்சியாக ஒரு புலத்தில் சோதனைகளையும் புத்தாக்கங்களையும் செய்துகொண்டே இருப்பதின் மூலம் ஒருவரது அடையாளம் உருவாகிறது. அந்தப் புலத்தில் மரபுத்தொடர்ச்சியை உருவாக்கி இற்றைப் படுத்திக்கொண்டே இருப்பதின் மூலம் அவரது இருப்பும் இயக்கமும் உறுதிப்படுத்தப்படும்.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தில் மறையும் மாமத யானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்துசெய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.

அரங்கியல்: அடையாளங்களும் ஆளுமைகளும்

படம்
நாடகக் கலை இந்தியாவிலும் இலங்கையிலும் கல்வித்துறைசார் படிப்பு. நாடகக்கலை மட்டுமல்ல; நடனம், இசை போன்ற நிகழ்த்துக்கலைகளும், ஓவியம்,சிற்பம் போன்ற நுண்கலைகளும், திரைப்படங்கள், தொலைக்காட்சிகள், காணொளித்தொகுப்புகளாகச் சமூக ஊடகங்களில் பார்வையாளர்களுக்குக் கிடைக்கும் இருநிலை ஊடகக்கலைகளும் கூடக் கல்வித்துறைப் பாடங்களாக மாற்றம் பெற்றுள்ளன.

கவனிக்கத்தக்க பொறுப்பளிப்பு

படம்
  கலைமாமணி விருதுகள் வழங்கப்படும்போது தினசரிகளில் இடம்பெறும் அமைப்பாக -   உச்சரிக்கப்படும் பெயராகத் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இருந்து வருகிறது. விருது வழங்கப்படுவதற்கான காரணங்களை முன்வைக்காமலும், குறிப்பிட்ட எண்ணிகையைப் பின்பற்றாமலும் வழங்கப்படும் ஒரு விருதுக்குப் பெரிய கவனிப்பும் மரியாதையும் பொதுச்சமூகத்தில் இருப்பதில்லை. தமிழக அரசின் இயல் இசைநாடக மன்றம் வழங்கும் கலைமாமணி விருதும் அப்படியானதொரு விருதாகவே இருந்து வருகிறது.

மொழி: வல்லாண்கை ஆயுதம்

படம்
பேச்சு இயல்பான நிலையில் தகவல் பரிமாற்றமாக இருக்கிறது. தகவல் சொல்லும் மொழி, அடை, உரி, போன்ற முன்னொட்டுகளைக் குறைவாகவே பயன்படுத்தும். அடைமொழிகள் இல்லாத, உரிச்சொற்கள் பயன்படுத்தாத மொழியின் வழியாகத் தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் மனிதர்கள், அதிலிருந்து தங்களுக்குப் பயன்படுவனவற்றை மட்டும் எடுத்துக் கொள்வார்கள். மற்றவைகளை விட்டுவிட்டு விலகிப்போவார்கள்.

தி.க.சண்முகத்தின் நாடகவாழ்க்கை

படம்
வரலாற்றை எழுதிவைக்கவும், வரலாற்றை எழுதுவதற்கான தரவுகளைத் தொகுத்து வைக்கவும் தவறிய சமூகமாகத் தமிழ்ச் சமூகம் இருந்துவந்துள்ளது. வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறும் நிலப்பரப்பான தமிழ்நாட்டின் வரலாற்றை எழுதுவதற்கான போதிய அடிப்படைச் சான்றுகளைத் தேடும் பணிகளே இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாட்டு வரலாற்றைத் தாண்டி கலை இலக்கிய வரலாறுகளை உருவாக்குவதற்கான தரவுகளைத் தேடுவதோடு ஓர்மையுடன் எழுதவேண்டும் என்ற அக்கறைகளும் குறைவாகவே உள்ளன. எழுத்துக்கலைகளான கவிதை, கதை, கட்டுரை போன்றவற்றின் வரலாற்றை உருவாக்குவதற்கு அந்தந்த வடிவங்களில் எழுதப்பெற்ற பனுவல்கள் நூலகங்களில் தொகுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தேர்ந்த வரலாற்றாய்வாளர்கள் முறையான இலக்கியவரலாறுகளை எழுதிவிடமுடியும்.

ஒளி ஓவியர் செ.ரவீந்திரன்

படம்
  பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் இரண்டாவது துணை வேந்தர் பேரா. ஆ.ஞானம் சந்தன மாலை அணிவித்து மரியாதை செய்பவர் பேரா.செ.ரவீந்திரன். இடம் புதுச்சேரி கடற்கரைச் சாலைக்கு அடுத்துள்ள லே ப்ரான்சே திறந்த வெளி அரங்கம். அந்தப் படத்தில் நாடகாசிரியர் இந்திரா பார்த்தசாரதிக்கு முகம் காட்டிப் பார்வையாளர்களுக்கு முகம் தெரியாமல் நிற்பது நான். தேதி நினைவில் இல்லை. ஆண்டு 1991 ஆண்டாக இருக்கலாம்.

பாதல் சர்க்காரும் தமிழ் நவீன அரங்கியலும்

படம்
2011, மே 13 தேர்தல் முடிவுகள் வந்து கொண்டிருந்தபோது இந்தியாவின் பெருநகரங்களில் வீசிக் கொண்டிருந்த அனல் காற்று திசைமாறிக் கொண்டிருப்பதாக வானிலை அறிக்கை சொல்லவில்லை. ஆனால் தொலைக்காட்சி ஊடகங்கள் அரசியல் சூறாவளிகளைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தன.

பாதல் சர்க்காரின் ஏபங் இந்திரஜித்: இந்திய நவீனத்துவ நாடகம் -

படம்
இந்தியக் கலை என்னும் கருத்துரு ‘நவீன இந்தியா எப்படி இருக்கவேண்டும்?’ என்பதற்கு இந்தியாவின் முதல் பிரதம அமைச்சர் பண்டித நேருவுக்குத் தீர்க்கமான கனவுகள் இருந்தன. இக்கனவை நிறைவேற்றப் பொருளாதாரத்துறையில் கலப்புப் பொருளாதாரம் என்ற சொல்லாடலை முன்வைத்து வேளாண் வளர்ச்சிக்காகப் பெரும் அணைகளையும், தொழில் வளர்ச்சிக்காக க் கனரகத் தொழிற்சாலைகளையும் உருவாக்கும் திட்டங்களைத் தீட்டினார். அதுபோலவே கலை, இலக்கியத்துறையில் இந்தியத்தனம்கொண்ட கலை இலக்கியங்களை வளர்த்தெடுக்கவேண்டும் என்று நினைத்தார். அதற்காக உருவாக்கப்பட்டவையே ஒவ்வொரு துறைக்குமான அகாதெமிகள். இலக்கியத்திற்காக சாகித்யா, நாடகம் மற்றும் மேடைக்கலைகளுக்காக சங்கீத் நாடக், ஓவியம் மற்றும் நுண்கலைக்காக லலித்கலா என அவர் காலத்தில் தொடங்கப்பட்ட அமைப்புகளுக்காக எழுதப்பட்ட திட்ட முன்வரைவுகள் எண்பதுகளில் செயல்வடிவம் பெற்றன.

சமகாலத்தமிழ் நாடகங்கள்

படம்
இருபத்தியோராம் நூற்றாண்டின் 20 ஆண்டுகளைக் கடந்துவிட்ட   இந்தியர்கள் அல்லது தமிழர்களின் ‘நிகழ்காலம்‘ என்பதை 1990 - க்குப் பிந்திய முப்பதாண்டுகளாகக் கொள்ளவேண்டும். ஆனால் அவர்களது ‘சமகாலம்‘ இன்னும் கொஞ்சம் பின்னுக்குப் போய் இருபதாம் நூற்றாண்டின் இடைப்பட்ட பத்தாண்டுகளாக -1950-களாகக் கொள்ளப்பட வேண்டும். ஆனால்  அவர்களது ‘நேற்று‘ என்பது ஒரு நூற்றாண்டுப் பழைமையாகவும் இருக்கலாம். ஓராயிரம் ஆண்டுப் பழைமையாகவும் கொள்ளப்படலாம்.

சி என் அண்ணாதுரை: நவீனத் தமிழ்நாடகவியலின் முன்னோடி

படம்
இறப்புக்குப் பின்னும் எவ்வளவு காலம் நினைக்கப்படுகின்றனர் என்பதில் தான் மாமனிதர்களின் செயல்பாடுகள் அளக்கப்படுகின்றன. 1908, செப்டம்பர்,15 அன்று காஞ்சிபுரத்தில் பிறந்த அண்ணாதுரை 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி தனது 61 ஆம் வயதில் மறைந்தார். மறைந்து 50 ஆண்டுகள் ஆன பின்பும் அவரது பிறந்த நாளைத் தமிழகம் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. அவரை நினைப்பது என்பதன் மூலம் அவரது செயல்பாடுகளும் வழிகாட்டல்களும் நினைக்கப்படுகிறது என்பதுதான் முக்கியம்.

கண்ணப்பத்தம்பிரான் என்னும் கலை ஆளுமை

படம்
  இந்த ப் படத்தில் முக்கியமான மனிதர்களின் முகங்களை மறைத்து எனது முகம் பெரிதாக இருக்கிறது. கறுப்புவெள்ளைப் படங்களின் காலம்.

அரங்கியல் அறிவோம் 5 நடிப்புப்பயிற்சிகள்

நடிப்பவர்களுக்கான குறிப்புகள் -ஸ்டானிஸ்லாவ்ஸ்கி நடிகர் உண்மையான கலைஞனாக உண்மையான ஒரு கலைஞர், ஆச்சரியமான வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் ஆர்வம் கொண்டவராக விளங்கவேண்டும். அவர் தனது வாழிடத்தில் என்ன நடக்கிறது என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது. அவர் வாழிடம் பெருநகரமாக இருக்கும் நிலையில் சிறுநகரங்கள், கிராமங்கள், தொழிற்சாலைகள், வயல்கள், பண்பாட்டு மையங்கள் என அவனது எல்லைக்குள் வரும் இடங்களில் நடப்பனவற்றையும் அறிந்து கொள்ளவேண்டும். தன்னைச் சுற்றி வாழும் மனிதர்களின் உளவியல் பிரச்சினைகளை – தன் வீட்டிலும் நாட்டிலும் பிறநாடுகளிலும் எனப் படிக்கவேண்டும். நமது காலத்தின் பல்வேறு மனிதர்களையும் நடிப்பதற்கு, பரந்த நிலையிலான நோக்குநிலையும் பார்வைப் பரப்பும் அவசியம். சமகால மனிதர்களின் உளவியலையும், பொருளியல் வாழ்வையும், ஆத்மநிலைகளையும் அறிந்தவனாக இருப்பது அவசியம். தனது கலையில் நிபுணனாக.. ஒரு நடிகர் உலகு தழுவிய நம்பிக்கைகளையும் மனிதம்சார்ந்த வெளிப்பாடுகளையும் உள்வாங்கி வெளிப்படுத்துபவராக இருக்கவேண்டும். இதுவே ஒரு நடிகரின் /நடிகையின் சிறந்த சக்தியும் உத்தியும் ஆகும். அற்புதமான உணர்வுகளைத் தீவிரமான உணர்ச்சிக

அரங்கியல் அறிவோம். 4

படம்
நாடகப்பனுவல் .  முன் குறிப்பு: நான் புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையை விட்டு வந்து 23 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஆனாலும் விட்டகுறை, தொட்டகுறையா மாணவர்களின் விசாரிப்புகளும் வினாக்களும் தொடர்கின்றன. அதைவிடவும் இலங்கையில் அரங்கியல் பயிலும் பலரும் சந்தேகங்கள் கேட்டுக் கொண்டே இருக்கிறார்கள். அவ்வப்போது தனித்தனியாகக் கேட்கப்படும் கேள்விகளுக்காகச் சிலவற்றை எழுதுகிறேன். அரங்கியலில் விருப்பம் உள்ளவர்களுக்கும் பயன்படலாம் என்ற நம்பிக்கையும் பின்னணியில் இருக்கிறது. மற்றவர்கள் விலகிச் செல்லலாம். நாடகப்பனுவல் அல்லது நாடகப் பிரதி என்றால் என்ன?

அரங்கியல் அறிவோம் -2 / ஆற்றுகை (Direction)

படம்
written text kum performance text kum vilakkam solla mudiuma si. (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்) சொல்லலாமே..... written text, performance text - தமிழில் இதனை நாடகப்பிரதி, நிகழ்த்துப்பிரதி என நேரடியாக மொழி பெயர்க்கலாம். ஆனால் அப்படிச் செய்ய வேண்டியதில்லை. ஆங்கிலச் சொல்லுக்குரிய பயன்பாட்டுச் சொல் இல்லையென்றால் அப்படிமொழிபெயர்த்துப் பயன்படுத்தத் தொடங்கலாம். தமிழில் பயன்பாட்டுச் சொற்கள் இருக்கின்றன.

அரங்கியல் அறிவோம் :1

படம்
அரங்குகள் மேடைத்தளங்கள் நடிப்பு பாத்திரம்

நிகழ்த்துதலின் வண்ணங்கள் - மௌனகுருவும் சேரனும்

படம்
கலப்புகளிலிருந்து உருவாகும் புதுமை நாடகப்பேராசான் தான் செதுக்கிச் செய்த சில காட்சி அசைவுத்துணுக்குகளைத் தனது பிறந்த நாள் பரிசாக அனுப்பி வைத்தார். அவற்றைத்திரும்பத்தி ரும்பப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.நீங்களும் பார்க்கலாம்.

நாடகவியல் பேராசான் மௌனகுரு

படம்
ஆறேழு ஆண்டுகளுக்கு முன்னால் அவரது வாழ்க்கைக்குறிப்பு விவரங்களையும் அரங்கவியலில் அவரது செயல்பாடுகளையும் கொண்ட விவரப்பட்டியல் ஒன்றை அனுப்பித்தரமுடியுமா? என்று கேட்டு இணையவழிக்கடிதம் ஒன்றை அனுப்பினேன்.

அரங்கியல் அறிவோம் :மார்ச் 27. உலக அரங்காற்று தினம்

படம்
சர்வதேச அரங்காற்று நிறுவனம்(International Theatre Institute) ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 27 - ஆம் தேதியை உலக அரங்காற்று தினமாக (world Theatre day ) கொண்டாடி வருகிறது.