இடுகைகள்

கவிதைகள் பற்றி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கவிதைப் பொருள்கொள்ளல் - சில குறிப்புகள்

கூற்று அல்லது மொழிதல் கவிதை வாசகர்கள் எப்போதும் இருக்கவே செய்கிறார்கள். இரண்டாவது அலையின் தனிமையில் -கடந்த இரண்டு மாதங்களில் 50 -க்கும் அதிகமான கவிகளின் ஒரு கவிதையை முகநூலில் பதிவேற்றம் செய்கிறேன். அந்தந்தக் கவிகளின் ஆகச் சிறந்த கவிதைகளில் ஒன்று என்பதாக நான் நினைக்கும் கவிதையல்ல. அதே நேரத்தில் கவிதையின் சிறப்புகளில் ஏதாவதொன்றைக் கொண்டதாக நான் நினைக்கும் கவிதைகளில் ஒன்றாக இருக்கும். என்னிடமிருக்கும் கவிதைத்தொகுப்புகளிலிருந்து அதனைத் தெரிவு செய்கிறேன். அப்பதிவேற்றத்தில் ஒரு தொகுப்புப் போட்டவர்களின் கவிதைகளும் உண்டு ஓராயிரம் கவிதைகள் எழுதியவர்களின் கவிதைகளும் உண்டு. செய்யுளியல் என்னும் இலக்கியவியலைப் பேசும் தொல்காப்பியம் கூற்று என்னும் சொல்லைத் திரும்பத்திரும்பப்பயன்படுத்துகிறது. யார் இந்தக் கவிதையின் கூற்றாளராக இருந்து சொல்கிறார் என்பதை விளக்கிப் பேசுகிறது. அகத்திணைக் கவிதைகளில் யாரெல்லாம் கூற்றாளராக இருக்க முடியும் என்பதையும் வரையறுத்துக் கூறுகிறது. அவ்வளவு விரிவாகவும் கறாராகவும் புறக்கவிதைகளுக்குச் சொல்லவில்லை. கூற்றாளர் ஒருவர் தொடங்க, கேட்குநராக ஒருவர் இருக்கும்போது கவிதையில் செயல்பாட

தேவசீமாவின் வைன் என்பது குறியீடல்ல:

படம்
  எல்லாவகை இலக்கிய வகைமையும் தொகுப்பாக வாசித்து முடிக்கும்போது ஒரேவிதமான இலக்கிய நுட்பங்களை வாசிப்பவர்களுக்குத் தருவதில்லை. கவிதை எப்போதும் உணர்வுகளையும் கவிதை சொல்வதற்கான கூற்றாளர்/ உரைப்பவரின் த்வனியையும் முன்வைக்கும். புனைவுகளோ பாத்திரங்களின் இருப்பையும் நோக்கங்களும் வளர்சிதை மாற்றங்களையும் முன்வைக்க முனையும். அதிலும் சிறுகதைகள் உருவாக்கப்படும் புனைவுப்பாத்திரங்களின் முடிவெடுக்கும் கணத்தைத் தீட்டிக்காட்டுவதை முதன்மையாக நினைக்கும். இன்னொரு புனைவு வடிவமான நாவலோ பாத்திரங்களின் பின்னணிகளை - காலத்தையும் வெளியையும் விரிவாக்கித்தருவதில் கவனம் செலுத்தும். நாடகங்களோ எப்போதும் கருத்தியல் அல்லது மனவியல் முரண்பாடுகளைக் காட்டுவதையே செய்கின்றன

கவிதை தினத்தில்...

படம்
கவிதைகள் தினத்தையொட்டி நேற்று மனுஷ்யபுத்திரன் தனது வருத்தமான பதிவை எழுதியிருந்தார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் -2018 ,உலகக் கவிதை நாளையொட்டி 30 கவிதைகளை முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தேன் என்பதை முகநூல் நினைவூட்டியது. அதல்லாமல் வெவ்வேறு ஆண்டுகளில் கவிதை தினத்தில் கவிதைகளைப் பதிவேற்ற்றம் செய்துள்ளேன். நாற்பது கவிகள் இக்கவிதைகள் பெரும்பாலும் நேரடியாகப் பேசும் கவிதைகள்.

மத்தேயு என்னும் தன்மை, முன்னிலை, படர்க்கை

படம்
தன்மை , முன்னிலை , படர்க்கை   இந்தச் சொற்களை இலக்கண ப் புலமையின் அடிப்படைச் சொற்களாக அறிமுகம் செய்துள்ளது நமது கல்வியுலகம். தான், யான், நான் என்பன தன்மைகள்- தன்மை ஒருமைகள். அவற்றின் பன்மைகளாக தாம், யாம், நாம், நாங்கள். முன்னிலையில் நீ என்பது ஒருமை; நீங்கள் என்பது பன்மை. அவன், அவள், அவர்,அது என்பன படர்க்கை யொருமைகள்; அவர்கள், அவை பன்மைகள். இ ச்சொற்களை உச்சரிக்கும்போது நான் என்னும் தன்னிலையும் நீ என்னும் மாற்றுநிலையும் அவள்/அவன் /அவர்-கள் , அவை என்னும் விலகல் அல்லது சுட்டுநிலையும் உருவாவ தைப் பற்றி இலக்கணப்புலம் விரிவாகப் பேசுகின்றது. இந்த உருவாக்கமே மொழியின் அடிப்படை வினையாற்றுக்கூறு. இவற்றி லிருந்தே அறிவுத்தோற்றம் நிகழ்கிறது.

ஆகச்சிறந்த நல்லாணும் நல்லாளும் - BOY BESTIE AND GIRL BESTIE

படம்
  உருளும் நிகழ்வுகளால் அல்லது சுழலும் சொற்களால் அலைகிறது நமது காலம். சுழலும் சொற்களை அல்லது உருளும் நிகழ்வுகளை உற்பத்தி செய்வதில் அனைத்து வகையான ஊடகங்களும் போட்டியில் இருக்கின்றன. எப்போதும் பெரும் நிகழ்வுகளைத் திறப்புச் செய்திகளாக (Breaking News) உருட்டிவிடும் தொலைக்காட்சி ஊடகங்களுக்குப் போட்டியாக சிறு நிகழ்வுகளை உண்டாக்கி உருட்டி விடும் வேலையைச் சமூக ஊடகங்கள் செய்கின்றன. ஒருவிதத்தில் பெரும்போக்குக் கதையாடல்(Grand Narration)களுக்குப் போட்டியாகச் சிறுபோக்குக் கதையாடல்(Little Narration)களை உற்பத்தி செய்யும் இப்பாவனைகள் பின் நவீனத்துவ விளையாட்டுகளில் ஒன்று. இவ்வகை விளையாட்டுகள் இருவேறு இணைகோடுகளில் பயணிப்பவை அல்ல. இரண்டும் கொண்டும் கொடுத்தும் அழிந்தும் அழித்தும் நகர்பவை. 

கனிமொழி:தனிமையின் இருமுனைகள்

படம்
தனிமை ஒருவிதத்தில் சுதந்திரத்தின் குறியீடு. இன்னொரு விதத்தில் ஏக்கத்தின் வெளிப்பாடு. தனித்திருத்தலும் சேர்ந்திருந்தலும் ஒருவிதக் கண்ணாமூச்சி ஆட்டம். தனித்திருப்பவர்கள் சேர்ந்து வாழ ஆசை கொள்வதும், சேர்ந்திருப்பவர்கள் தனித்துப் போய்விட ஏக்கம் கொள்வதும் தொடர் இயங்கியல். மனித வாழ்க்கையின் தொடக்கம் கூட்டத்தின் பகுதியாகவே தொடங்குகிறது. கூட்டம் ஏற்படுத்தும் சுமை தாங்காது தனித்துப் போவதை அவாவும் செய்கிறது. துறவை நாடிச் சென்ற முனிவர்களும், ஞானத்தைத் தேடிய ஞானிகளும் தனித்திருத்தலின் காதலர்கள். 

அடம்பிடித்து அழும் காந்தியும் புத்தனும்

படம்
ஒரு நாள் இடைவெளியில் இணையப் பக்கங்களில் பதிவேற்றம் பெற்ற இந்த இரண்டு கவிதைகளையும் வாசித்தபோது இரண்டுக்கும் இடையே கவிதையின் சொல்முறையிலும் அமைப்பாக்கத்திலும் முன்வைப்பிலும் உருவாக்கும் உணர்வலைகளிலும் பெருத்த ஒற்றுமைகள் இருப்பதை உணரமுடிந்தது. இப்படியான ஒற்றுமைகளை உருவாக்குவது அவர்கள் இருவரும் கவிதையாக்க நினைத்த நேர்நிலை நிகழ்வுகள் என்றே சொல்லத்தோன்றுகிறது. முகநூலில் யவனிகாஸ்ரீராமின் கவிதையை வாசித்தது முதல் நாள் (டிசம்பர்.17) அடுத்தநாள் ரியாஸ் குரானாவின் கவிதை நடு இதழில் வாசிக்கக் கிடைத்தது.

கரோனா என்னும் உரிப்பொருள்

படம்
நம் காலத்தின் பெரும்பரப்பியல் ஊடகங்களான தொலைக்காட்சிகளும் வானொலிகளும் கரோனாவில் பாதிக்கப்படவில்லை. ஆனால் பாதிப்பைச் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. செய்திகளாக மட்டுமல்லாமல் விளம்பரங்களாக, காட்சித்துணுக்குகளாக, தொடர் கதைகளின் உரையாடல்களாக, அறிவிப்புகளாக என அதன் ஒவ்வொரு சலனங்களிலும் அலைத் துணுக்குகளிலும் கரரோனாவே முன் நிற்கின்றது. ஊடகங்கள் நிகழ்வாழ்க்கையின் பிரதிபலிப்புகள். நின்றுபோன நிகழ்வாழ்க்கையின் காரணியாக இருக்கும் கரோனா அல்லது கோவிட் 19 என்னும் சொல் இந்தக் காலத்தின் உரிப்பொருள் என்பதை உலகம் மறுக்கப்போவதில்லை; மறக்கப்போவதில்லை.

ஸ்ரீஎன்ஸ்ரீவத்ஸா என்னும் மொழிபெயர்ப்பாளரும் கருணாகரனின் மத்தியூ கவிதைகளும்

அவரது மொழிபெயர்ப்பில் தினசரி ஒன்றிரண்டு கவிதைகள் ஆங்கிலத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. எழுதிய கவிகளின் அனுமதியுடனும் மொழிபெயர்ப்புக்கான ஒப்புதலுடனும் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்கிறார். அவரது மொழிபெயர்ப்பு வழியாகவே பல கவிகளை முதன்முதலாக வாசித்துள்ளேன். நானும் எப்போதாவது கவிதை வடிவத்தில் எனது நினைவுகளையும் நிலைப்பாடுகளையும் எழுதுவதுண்டு. அவற்றில் இரண்டு கவிதைகளை மொழிபெயர்த்துக் கவி அடையாளம் தந்து கூச்சப்பட வைத்துள்ளார்.

தன்னை முன்வைத்தலின் ஒரு வகைமாதிரி

படம்
  “ பெண் முதலில் தன்னைக் கவனிக்கிறாள்; பிறகு மற்றவரைக் கவனிக்கிறாள்” . இதன் நீட்சியாகப் பெண்ணெழுத்து என்னும் அடையாளத்தோடு வரும் கவிதைகளில் முதலில் பெண் தன்னிலையை எழுதிக்காட்ட நினைக்கிறார்கள்; அதன் தொடர்ச்சியாகவே மற்றவர்களை முன்வைக்கிறார்கள். இந்தக் கருத்து பெண்ணெழுத்துகளைத் தொடர்ச்சியாக வாசிக்கும் ஒருவருக்கு     உருவாக வாய்ப்பிருக்கிறது.

சேரன்: கவியின் பகுப்பாய்வு மனம்

படம்
இருப்பையும் சூழலையும் நிகழ்காலத்தில் மட்டும் விரித்துக்காட்டி விடுவது தன்னெழுச்சிக் கவிதைகளின் வெளிப்பாட்டுவடிவமாக இருக்கிறது. அவ்வடிவம் முன்னேயும் போவதில்லை; பின்னேயும் நகர்வதில்லை. ஒருவிதத்தில் காலத்தை உறையச்செய்துகொண்டு அங்கேயே முன்வைக்கும் காட்சிகளைப் படிமங்களாக்கி, பாத்திரங்களாக்கி, குறியீடுகளாக்கி வாசிப்பவர்களைத் தன்வசப்படுத்த நினைக்கின்றன. சமகாலத்தமிழில் -குறிப்பாகத் தமிழ்நாட்டில் கவிதை எழுதும் பலரும் இவ ்வகையான தன்னெழுச்சியில் - காலத்தை உறையச்செய்தே கவிதைகளைத் தருகின்றனர்.

முடிவிலிகளில் அலைபவர்களின் கவி அடையாளம்

தனியன்களின் தன்னிலைகள் நவீனத்துவக் கலைகளுக்குள் அலையும் பிம்பங்களாக இருக்கிறார்கள். வாழும் சூழலோடும், அன்றாட நடப்புகளோடும் முரண்படும் இத்தனியன்களின் அடையாளங்கள் சிலவற்றைத் தொகுத்துச் சொல்லமு டியும். ஈடுபாடுகொண்ட வெளிகள், ஆர்வங்கள், வினைகள், மனிதர்கள் என எதன்மீது அக்கறையற்றவர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்வதால், மற்றவர்களைப் பற்றிய வெளிப்பாடுகளைத் தவிர்த்துவிட்டுத் தங்களையே பேசுபொருளாக்கிக் கொள்வார்கள்.

கவிதைகள் வாசிக்கும் தருணங்கள்

தொடர்ச்சியாக வேலைகள் இருக்கும்போது வாசிக்கவே முடியாமல் போய்விடும். கடந்த  10  நாட்களாகத் தினசரித்தாள்களைக் கூடப் புரட்டிவிட்டு வைத்துவிடும் அளவுக்குப் பல்கலைக்கழக வேலைகள்.தொடர்ச்சியாக நிகழ்வுகள் ஏற்பாடுசெய்து முடிக்கும்போது ஏற்படும் அலுப்பு தீரவேண்டுமென்றால் நான் காணாமல் போகவேண்டும். இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதிவிடுவதில்லை. குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளையும் அழுத்தப்படும் நிலைகளையும் சொல்லும் கவிதைகள் வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்துவிடும்.அதற்கு மாறான கவிதைகளும் அவற்றை எழுதும் கவிகளும் தமிழில் இருக்கிறார்கள்.

புறமாகவும் அகப்புறமாகவும்- கருணாகரனின் கவிதைகளுக்குள் ஒரு பயணம்

படம்
தொடர்ச்சியாகக் கவிதை வடிவத்தைத் தனது முதன்மையான வெளிப்பாட்டு வடிவமாகக் கொண்டிருக்கும் கவி. கருணாகரன். அவரது மூன்று கவிதைகளை யாவரும் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு கவிதைக்கும் தனித்தலைப்புகளின்றி- கருணாகரன் கவிதைகள் – எனப் பதிவேற்றம் பெற்றுள்ள அம்மூன்று கவிதைகள் உருவாக்கும் உணர்வுகள் அதற்குள் இருக்கும் காலப்பின்னணியால் அர்த்தம் கொள்கின்றன . 

தன்னை முன்வைக்கும் நவீனத்துவம் - கவிதா லட்சுமியின் சிகண்டி

படம்
கேட்கும் இடத்தில் இருந்து வாசிக்கும் கவிதை வாசகர்களுக்குத் தர்க்கம் சார்ந்த புரிதல்களையும் காரணகாரியங்கள் கொண்ட விளக்கங்களையும் முன் வைப்பதைத் தவிர்ப்பது கவிதையின் அழகியல் கூறுகளில் ஒன்றாக முன் வைக்கப்படுகிறது. நேரடி விளக்கங்களைத் தவிர்த்து முன்வைக்கப்படும் சொற்களின் வழி உருவாக்கப்படும் குறியீடுகள், படிமங்கள், உவமங்கள், உருவகங்கள் போன்றவற்றின் வழியாக வாசிப்புத்தளங்களைக் கவிதைகள் உருவாக்கவேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நிலையில் தான் கவிதை எழுத்துக் கலைகளில் உச்சம் எனக் கருதப்படுகிறது. இப்படிக் கருதப்படுவதின் பின்னணிகள் முழுமையும் ஏற்கத்தக்கன அல்ல. 

தேய்புரிப் பழங்கயிறென நெளியும் நவீனக் கவிதைகள்- லறீனாவின் ஷேக்ஸ்பியரின் காதலி

எழுதவிரும்பும் ஒருவர் முதலில் தொடங்குவது கவிதையாக இருக்கிறது. ஒன்றைப் பார்த்தவுடன் - ஒன்றில் பங்கேற்றவுடன் -ஒன்றால் பாதிக்கப்பட்டவுடன் அதைக் குறித்துச் சொல்வதற்கேற்ற இலக்கியவடிவம் கவிதை. அக்கவிதை வடிவத்திலேயே தொடர்ந்து செயல்படுகிறவர்கள் உணர்வை எழுதுவதிலிருந்து மெல்லமெல்ல நகர்ந்து அறிவையும் கருத்தியலையும் சிந்திப்பு முறைமைகளையும் கவிதையாக்கும் முயற்சிக்கு நகர்கிறார்கள். அப்படி நகரும்போது அந்தக் கவிஞர்கள் அந்த மொழியில் இயங்கும் காலத்தின் கவியாக அடையாளப் படுகிறார்கள். நவீனத்துவத்தை உள்வாங்கிய பாரதியின் தொடக்கக் காலக் கவிதைக்கும் பிந்தியக் காலக்  கவிதைகளுக்குமான வேறுபாட்டைக் கவனிப்பவர்களுக்கு இது புரியும் . 

கவிமனம் உருவாக்குதல்

தனது மனத்திற்குள் உருவாகும் சொற்களும், சொற்களின் வழி உருவாகும் உருவகங்களும் படிமங்களும் எல்லோரும் பேசுவதுபோல இல்லை. வித்தியாசங்கள் இருக்கின்றன என உணரும்போது ஒரு மனித உயிரி இலக்கிய உருவாக்க மனநிலைக்குள் நுழைகிறது. வெளிப்படும் வித்தியாசநிலை நிலையானதாகவும் நீண்டகாலத்திற்கு அந்த மனித உயிரியைத் தக்க வைக்கும் வாய்ப்பிருப்பதாக உணரும் நிலையில் கதைகளையோ, நாடகங்களையோ எழுதும் முயற்சியில் இறங்குகிறது. ஆனால் சொல்லி முடித்தவுடன் உருவாகும் உணர்ச்சிநிலையை ரசிக்கும் மனித உயிரி கவிதையில் செயல்படும் வாய்ப்பையே விரும்புகிறது.

இரங்கல் பாக்களில் ஒரு மாயநடப்பியல் கதை-வெய்யிலின் அக்காளின் எலும்புகள் தொகுப்பை முன்வைத்து

படம்
அக்காவைக்  காக்கா தூக்கிச் சென்றுவிட்டது அவ்வளவுதான் *****  கையிலிருக்கும் மண்ணாலான செப்பு கண்ணாடிக்குடுவை பீங்கான் பொம்மை எலக்ட்ரானிக் சாதனம் எனக் கையாள்வதில் கவனமாக இருக்கும் பொருளைக் கேட்டு அடம்பிடிக்கும் குழந்தையை எப்படிச் சமாளிப்பது. போனால் போகட்டும் என்று நினைத்தால் குழந்தையின் கையில் கொடுக்கலாம். கொடுத்த அடுத்த கணம் அந்தப் பொருளைப் போட்டு உடைத்துவிடக்கூடும். அதனால் கொடுக்கக் கூடாது.

திறனாய்வுக்கலையையும் வளர்க்கலாம்

படம்
ஆத்மநாம் அறக்கட்டளை தனது ஐந்தாம் ஆண்டுக் கவிதை விருதுக்கான முக்கியமான கட்டத்தை முடித்திருக்கிறது. முதல் கட்டம் விருதுத் தேர்வுக்குழுவை அறிவித்துப் போட்டியில் பங்கேற்கக் கவிதைத் தொகுப்புகளைப் பெற்றதாக இருந்திருக்கும். அப்படி வந்த 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒன்பது பேரைக் குறும்பட்டியலாக அறிவித்திருக்கிறது. கவிதைத் தொகுப்புகளுக்குப் பதிலாகக் கவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

கவிதைக்குள் கதைகள்

கதைசொல்லும் கவிதைகள் கதைத் தன்மைகொண்ட கவிதைகளுக்குத் தமிழில் தொடர்ச்சி எதுவும் இல்லை, ஒவ்வொரு காலத்திலும் வெவ்வேறு காரணங்களுக்காகக் கவிதை, தமிழில் எட்டுத்தொகையாகத் தொகுக்கப்பட்ட கவிதைகளைத் தாண்டி பத்துப்பாட்டாகத் தொகுக்கப்பட்டவைகளில் ஒருவிதக் கதைத் தன்மை இருப்பதாக உணரலாம். ஆனால் அவை கதைகள் அல்ல. அந்த மரபு நீட்சியைச் சிற்றிலக்கியங்களின் சில வடிவங்களில் பார்க்க முடியும். ஏங்கும் பெண்களின் கதையை, காத்திருக்கும் தலைவிகளின் கதைகள் அவற்றில் இருக்கின்றன. நவீனத்துவத்தின் வரவிற்குப் பிந்திய கவிதைவடிவம், கதைசொல்வதில் பல காரணங்களைப் பின்பற்றியுள்ளது.