இடுகைகள்

இலக்கியப்பார்வை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தமிழில் எழுதப்பெற்ற இந்தியக்கதைகள்: அம்பையின் சிவப்புக்கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை

படம்
அரசவிருதுகளும் கலைஞர்களும் கலை இலக்கியங்களுக்கு விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்தும் ஒன்றிய அரசின் அகாதெமிகளான சாகித்திய, சங்கீத, லலித் கலா அகாடெமிகள் முறையே எழுத்துக் கலைகள், நிகழ்த்துக்கலைகள், நுண்கலைகள் போன்றவற்றிற்கும் அவற்றை உருவாக்கிச் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கும் விருதுகள் வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. இம்மூன்று அமைப்புகளில் எழுத்துக் கலைக்கு விருது வழங்கும் சாகித்திய அகாதெமி மட்டுமே மொழி அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு விருதினை வழங்குகிறது.

வாழ்த்துகள் அம்பைக்கு.....

படம்
இந்த ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்துள்ளது. பெண்மையச் சொல்லாடல்களை வெளிப்படுத்தும் வடிவமாகத் தனது சிறுகதைகளைத் தொடர்ந்து தந்துகொண்டிருந்தவர். இதுவரை சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்களின் பங்களிப்புகளோடு ஒப்புநோக்க, இந்த விருது அவருக்குத் தாமதமாகவே தரப்பட்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். கட்டுரைகள், சிறுகதைகள் என்ற இரு வடிவங்களில் அவரது வெளிப்பாடுகள் இருந்தபோதிலும் சிறுகதையே அம்பையின் அடையாளம்.

காண்மதி நீவிர் ; கண்டா வரச்சொல்லுங்க...

படம்
இரண்டு வாரங்களுக்கு முன்பு எழுத்தாளர் இமையம் (2020 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் சாகித்ய அகாடெமி விருது எழுத்தாளர்) எழுதிய கதையொன்றுடன், நீலம் மாத இதழ் (வெளியீடு: இயக்குநர் பா.இரஞ்சித்தின் நீலம் அமைப்பு) கைக்கு கிடைத்தது. பொதுவாக, இமையத்தின் சிறுகதைகளைக் கிடைத்தவுடன் வாசித்து விடுவதுண்டு. அவரது முதல் நாவலான கோவேறு கழுதைகள் ஏற்படுத்திய தாக்கம் அது. கோவேறு கழுதைகளை வாசித்துவிட்டு, புதுவைக்கு வந்த இமையத்தைச் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த நாளில் தொடங்கிய நட்பு கால்நூற்றாண்டுக் காலமாகத் தொடர்கிறது.

வாசிப்புத் தூண்டலுக்கான பனுவல்( A Reader) - ஓர் உரையாடல்

ரீடர்-  A Reader- என்பதை ஓரளவு உள்வாங்கிக் கொண்டு தமிழில் எழுத்தாளர்களுக்கான படைப்புலகங்கள் என்ற பொருண்மையில் கலைஞன் பதிப்பகம் 5 நூல்களை வெளியிட்டது. 2000 இல் வெளிவந்த அவ்வந்து நூல்களும் அந்தந்த எழுத்தாளர்களின்/ எழுத்துகளின் மீது பற்றுக் கொண்ட அல்லது விமரிசனப்பார்வை கொண்டவர்களால் தொகுக்கப்பெற்றன. சுந்தரராமசாமி படைப்புலகம் -ராஜமார்த்தாண்டன் கி.ராஜநாராயணன் படைப்புலகம் - பிரேம் :  ரமேஷ் லா.ச.ராமாமிருதம் படைப்புலகம் -அபி அசோகமித்திரன் படைப்புலகம் - ஞாநி ஜெயகாந்தன் படைப்புலகம் -டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன்

சிற்றிலக்கியங்களின் காலப்பின்னணி

படம்
இலக்கியவரலாறும் நாட்டுவரலாறும்            தமிழ் இலக்கியங்களின் வரலாறு நீண்ட மரபு கொண்டது . அதன் வரலாற்றை எழுதியவர்களும் பல்வேறு விதமாக வரலாற்றை எழுதிக் காட்டியிருக்கிறார்கள்.   கருத்தியல் வரலாறும் இலக்கியவரலாறும் நகர்ந்த விதத்தைக் கலாநிதி ஆ.வேலுப் பிள்ளையின் தமிழ் இலக்கியத்தில் காலமும் கருத்தும் முன்வைத்துள்ளது. கால அடிப்படையில் இலக்கிய வரலாற்றை எழுத வேண்டுமென நினைத்த அறிஞர் மு. அருணாசலம் நூற்றாண்டுகள் அடிப்படையில் இலக்கியவரலாற்றைத் தொகுத்துத் தந்தார். கி.பி. 9 ஆம் நூற்றாண்டு முதல் 13 ஆம் நூற்றாண்டுவரை எழுதப்பெற்ற அவரது இலக்கியவரலாற்று நூல்களில் முதன்மையான கவிகளின் காலத்தை அறுதியிட்டதோடு ஒவ்வொருவரின் பங்களிப்புகளையும், அவற்றின் சிறப்புத்தன்மைகளையும் எடுத்துக்காட்டி விளக்கியுள்ளார். 

எழுத்தாளர் கிராமங்களில் கனவு இல்லம்

படம்
கடந்த ஆண்டு நெல்லைப் புத்தகத்திருவிழா 2020, பிப்பிரவரி 1 தொடங்கிப் பத்து நாட்கள் நடந்தது. இந்தத் திருவிழாவின் சிறப்பு நிகழ்வாக ஒவ்வொருநாளும் பிரிக்கப்படாத திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சாகித்திய அகாடெமி எழுத்தாளர்கள் மரியாதை செய்யப்பட்டார்கள். இப்போது உயிருடன் இல்லை என்றாலும் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து மேடையில் அமரவைத்து, அவர்களைப் பற்றிய சுருக்கமான வரலாற்றைக் காணொளிக் காட்சியாக ஒளிபரப்பிய பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷில்பா பிரபாகர் சதீஷ் மேடைக்கு வந்து புத்தாடை அளித்து, நினைவுப்பரிசு வழங்கிக் கைகுலுக்கினார். ஒவ்வொருநாளும் இது நடந்தது. அந்த ஆட்சித் தலைவர் தான் இப்போது முதல்வரின் உங்கள் தொகுதி; உங்கள் கோரிக்கைக்கான சிறப்பு அதிகாரி

பெருக்கத்திலிருந்து குறுக்கம் நோக்கி: அகமது பைசலின் குறுங்கதைகள்

படம்
இது புதுமை சிறியது பெரியதாக வளர்வது அறிவியல். உயிர்களின் பரிணாம வளர்ச்சி பற்றிய கோட்பாட்டை முன்மொழிந்த சார்லஸ் டார்வின் ஓரறிவுயிர் முதல் ஆறறிவு உயிர் வரையிலான வளர்ச்சியைப் பேசியுள்ளார். அவரே இந்த உலகத்தில் வல்லாண்மை உள்ளதே நிற்கும்; நிலைபெறும் என்றும் சொல்லியுள்ளார். இயற்கைப் பொருட்களுக்குச் சொன்ன இக்கோட்பாடு இலக்கியவகைமைகளுக்கும் வடிவங்களுக்கும் பொருந்தும் என்கின்றன இலக்கிய உருவாக்கம் பற்றிப் பேசும் வகைமைக் கோட்பாடுகள்.

உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை

படம்
உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம் நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.

திராவிடக் கலையியல்: சில குறிப்புகள்

”தமிழர்களை வளர்ச்சி அடையச் செய்து தமிழ் வளர்ப்போம்” - இந்த வழிமுறையை தி.மு.க. நீண்ட காலமாகப் பின்பற்றி வருகிறது. அதன் ஆட்சியில் திராவிட/ தமிழ் முதலாளிகள் உருவாக்கப்பட்டார்கள். கல்வித்தந்தைகளாகக்கூட ஆகியிருக்கிறார்கள். சேவைப்பிரிவு, தகவல் தொடர்பு, பொழுதுபோக்கு போன்ற உற்பத்தி சாரா தொழில் முனைவோர்களாக வளர்ச்சி அடைந்திருக்கிறார்கள். பன்னாட்டு மூலதனக்குழுமங்களோடு போட்டிப் போடவும் தயாராக உள்ளனர். இந்த நகர்வு ஒவ்வொன்றிலும் தமிழ் மொழியாகவும், கலையாகவும் பயன்பட்டுக்கொண்டே இருக்கிறது. ஆனால் இந்த வளர்ச்சியின் போக்கில் தமிழ் மொழிக்கும் இலக்கியத்திற்கும் பண்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதற்கும் செய்துள்ள பங்களிப்பு மிகக் குறைவு. தமிழ்த்தேசிய தனியார் நிறுவனங்களின் பண்பாட்டுப் பங்களிப்பு எனக் குறிப்பிட்டுச் சொல்லும்படி எதுவும் இல்லை.

மேலைக்காற்றுக்குப் பதில் கீழைக்காற்று

  பிறமொழி எழுத்துகளைத் தமிழில் அறிமுகம் செய்யும் நோக்கம் வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறுவிதமாக நடந்துள்ளன. தழுவல்கள், சுருக்க அறிமுகங்கள், மொழிபெயர்ப்புகள் என வரவு வைக்கப்பட்டதுபோலவே குறிப்பிட்ட மொழி இலக்கியங்களைத் தமிழில் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நோக்கமும் இருந்துள்ளன.

இலக்கியவரலாற்றை எழுதும் முயற்சிகள்

பதிற்றாண்டுத்தடங்கள் (2010 -2020) என்றொரு சிறப்புப்பகுதிக்காக நான்கு கட்டுரைகளை வெளியிட்டுள்ளது காலச்சுவடு. அதன் 250 வது இதழ் என்பதும் சிறப்புப்பகுதிக்கு ஒரு காரணம்.

உள்ளூர் விருதும் உலகவிருதும்

படம்
நோபல் விருதுக்குப் பரிந்துரைகளும் எதிர்பார்ப்புகளும் முடிவுக்கு வந்துவிட்டன. அமெரிக்கப்பெண்கவியும் பேராசிரியருமான லூயி க்ளுக்கிற்கு வழங்கப்பட்டதை ஏற்க மனமின்றி நேற்றிரவு பலர் தூக்கம் தொலைத்திருக்கிறார்கள் என்பதை முகநூல் காட்டுகிறது. ஏற்பவர்களுக்கும் நிராகரிப்பவர்களுக்கும் அவரவர்க்கான காரணங்கள் இருக்கலாம். ஆனால் நோபல் விருதுக்குழுவினர் விருதுக்குரியவரைத் தேர்வு செய்ததற்கான காரணத்தைச் சொல்லி விடுகின்றார்கள். அந்தக் காரணம் இலக்கிய ஆக்கத்தின் - ஒரு போக்கின் அடையாளமாக இருக்கிறது என்ற வகையில் தெரிவுசெய்யப்பட்டவர் பொருத்தப்பாடு கொண்டவராக மாறுகிறார். கலை, இலக்கியத்தில் பல்வேறு போக்குகள் இருக்கின்றன; அதில் ஒரு போக்கு இந்த ஆண்டு கவனம் பெற்றிருக்கிறது என்ற அளவில் ஏற்பு நிகழ்கிறது. அந்தக் காரணத்தோடு ஒத்துப் போகின்றவர்கள் விருதாளரைக் கொண்டாடுவார்கள். மறுப்பவர்கள் தங்களின் இலக்கியப்பார்வையை முன்வைத்துக் கட்டுரைகள் எழுதலாம்.

சாருவுக்கு ஒரு வாசிப்பு

படம்
நண்பர் சாருநிவேதிதா கோவிட் 19 கால எழுத்துகளாகத் தொடர்ந்து எழுதிவரும் -பூச்சி - குறிப்புகளில் இன்று ஹெலன் சிஸு- ரீடரின் விலைபற்றி எழுதியிருக்கிறார்: ஹெலன் சிஸூ ரீடர் கிடைத்து விட்டது. இனி நாடகத் தொகுப்பு மட்டும்தான் தேவை.

எழுத்துகள் - எழுத்தாளர்கள்

படம்
அபிலாஷின் பத்தி எழுத்துகள் உயிர்மை.காம் இணைய இதழில் அபிலாஷ் இன்னொரு பத்தித் தொடரை எழுதப் போகிறார் என்றொரு விளம்பரத்தை மனுஷ்யபுத்திரன் பகிர்ந்துள்ளார். உயிர்மை கண்டுபிடித்து வளர்த்தெடுத்த எழுத்தாளர் அபிலாஷ் சந்திரன். அவரது புனைவுகளில் -சிறுகதைகளிலும் நாவலிலும் - அதிகப்படியான விவரணைப் பகுதிகளும், தர்க்கம் சார்ந்த விவரிப்புகளும் இடம்பெற்று புனைவெழுத்தின் அடையாளங்களைக் குறைத்துவிடும் விபத்துகளைச் சந்தித்திருப்பதாகக் கருதியிருக்கிறேன்; ஆனால் அவரது கட்டுரைகள் - அவை தனிக்கட்டுரைகள் ஆனாலும் சரி, பத்தித்தொடர்களாக எழுதப்படும் கட்டுரைகளும் முன்மாதிரி இல்லாத வகைமை கொண்டவை.

நவீனத் தமிழ் எழுத்து என்னும் வரையறை

படம்
எல்லாவகையான ஆய்வுகளிலும் கருதுகோள் ஒன்று வேண்டும் என வலியுறுத்தப்படும். ஒற்றைக் கருதுகோளோடு தொடங்கும் ஆய்வுகள் துணைக் கருதுகோள்களையும் உருவாக்கிக் கொண்டு ஒன்றுக்கு மேற்பட்ட முடிவுகளையும் முன் வைக்கலாம். ஆய்வேடுகளில் குறிப்பான கருதுகோள் இல்லாமல் பரந்துபட்ட நோக்கம் ஒன்றை முன்வைத்துக் கொண்டு தொகுத்தும் பகுத்தும் வைக்கப்படும் ஆய்வுகளும்கூட அதற்கான பயன்மதிப்பைப் பெறக் கூடியனதான்.

திறனாய்வுக்கலையையும் வளர்க்கலாம்

படம்
ஆத்மநாம் அறக்கட்டளை தனது ஐந்தாம் ஆண்டுக் கவிதை விருதுக்கான முக்கியமான கட்டத்தை முடித்திருக்கிறது. முதல் கட்டம் விருதுத் தேர்வுக்குழுவை அறிவித்துப் போட்டியில் பங்கேற்கக் கவிதைத் தொகுப்புகளைப் பெற்றதாக இருந்திருக்கும். அப்படி வந்த 31 கவிதைத் தொகுப்புகளிலிருந்து ஒன்பது பேரைக் குறும்பட்டியலாக அறிவித்திருக்கிறது. கவிதைத் தொகுப்புகளுக்குப் பதிலாகக் கவிகளின் பெயர்கள் தரப்பட்டுள்ளன.

கட்டுரைகள் பத்திகள் நேர்காணல்கள் தன்னம்பிக்கை எழுத்துகள்

இலக்கியப்பனுவல்களின் அடிப்படையான வடிவங்கள் மூன்று எனக் கருதியே இலக்கியவியல் அடிப்படைகளைப் பேசும் நூல்களை எழுதியவர்கள் நினைத்திருக்கிறார்கள். அரிஸ்டாடில், தொல்காப்பியர், பரதர் போன்றவர்கள் அவர்களின் விருப்பமான இலக்கிய வடிவத்தை மையப்படுத்திக்கொண்டு மற்ற வடிவங்களின் அடிப்படைகளையும் பேசுகின்றனர். அரிஸ்டாடிலுக்கும் பரதருக்கும் முதன்மை வடிவங்கள் நாடகம். அதன் உட்பிரிவாகவோ, துணைவிளைவுகளாகவோ கருதித்தான் கவிதை, கதை போன்றவற்றைச் சொல்கின்றனர். செய்யுளை இலக்கியம் என்ற சொல்லின் இடத்தில் வைத்து அடிப்படைகளைப் பேசும் தொல்காப்பியருக்கோ முதன்மை வடிவம் கவிதைதான். பாட்டு, பா, பாடல் எனச் சிறிய வேறுபாடுகளையும் பேசுபவர் மற்ற வடிவங்களாக மற்றவற்றைப் பேசுகிறார்.

மொழிபெயர்ப்பும் புதுச்சந்தையும்

சரவணன் சந்திரன் நாவலொன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது தொடர்பாகப் போகன் சங்கர் ஒரு பதிவு எழுதியிருக்கிறார். ஹரன் பிரசன்னாவும் கலந்துகொண்டு விவாதம் செய்கிறார்கள். அதில் எதிர்வினை செய்யாமல் இங்கே தனிப்பதிவாகப் போடுகிறேன்.

எழுதப்படுவது நிகழ்காலம் அல்ல; கடந்த காலம்

படம்
கடந்த காலத்தை எழுதிக்காட்டுதல் என்பதைக் கடந்த காலத்திற்குள் மறுபயணம் செய்வது என அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். நிகழ்த்தும் காலத்தில் வாழும் பார்வையாளர்களை மனதில் கொண்டு அவர்களை நோக்கிப் பேசும் நாடகக்கலைக்கு மட்டுமே உரியதாக நான் நினைக்கவில்லை. உலக மொழிகள் எல்லாவற்றிலும் பொது வடிவங்களாகத் திகழும் கதை, நாடகம், கவிதை, என்ற மூன்றோடும் தொடர்புடையதாகவே நினைக்கிறேன். இந்தப் பேச்சை அரங்கக் கலையை முன்வைத்து இலக்கியக்கலையைப் பற்றிய பேச்சாகவே நினைக்கிறேன். நிகழ்த்துகிறேன்

கி.ரா.வின் புதிய வரவு: பெருங்கதை

படம்
முன்பெல்லாம் நண்பர்களின் எழுத்துகள் கையெழுத்தில் வாசிக்கக்கிடைக்கும் . நீலவண்ண எழுத்துகள் , கறுப்பு வண்ண எழுத்துகள் அதிகம் என்றாலும் பச்சை , சிவப்பு , ஊதா வண்ணங்களிலெல்லாம் எழுதும் பேனாக்கள் வந்தபோது அவற்றில் எழுதிப் பார்க்கும் எழுத்தாளர்கள் உண்டு . எழுத்தாளர்களின் கையெழுத்திலேயே வாசிக்கக் கிடைக்கும் பிரதிகள் இப்போது குறைந்துவிட்டன . அப்படிக்கிடைத்தாலும் டைப் செய்யப்பட்டு கணினி வழியாகவே வந்துசேர்கின்றன . அப்படிப் படித்த எழுத்துகளையும் பிறகு அச்சில் வாசிக்கும் ஆசை விலகுவதில்லை .