இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சினிமா என்னும் பண்பாட்டு நடவடிக்கை

படம்
பத்து வயது முதல் திரையரங்குகளுக்குச் சென்று தமிழ்ச் சினிமாவைப் பார்ப்பவனாக இருந்த எனக்குக் கடந்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலாக மாறிவிட்டன. கடைசியாகத் திரையரங்கம் சென்று பார்த்த படம் திரௌபதி (திருநெல்வேலி ராம் தியேட்டரில் பிப்ரவரி 28, 2020). படம் பார்த்து முடித்தபோது ‘கலை இலக்கியம் குறித்துக் கற்றுத்தேர்ந்த கலைவிதிகள் அத்தனையும் தோல்வியுற்று நிற்பதாக உணர்ந்தேன். வெளியேறியபோது.எழுதுவதற்கு எதுவுமில்லை என்று மனம் உறுதி செய்து கொண்ட து.

சர்தார் உத்தம்: எதிரியின்மனச்சாட்சியைத் தட்டியெழுப்புதல்

படம்
  எழுத்தும் காட்சியும் 16-ஆம் நூற்றாண்டில் கிழக்கிந்தியக் குழுமம் என்ற பெயரில் இந்தியாவிற்குள் நுழைந்து, சிற்றரசர்களின் அனுமதியோடு இந்தியாவுக்குள் வணிக அனுமதி பெற்றவர்கள் ஐரோப்பியர்கள். இந்தியாவில் அப்போதிருந்த வணிகர்களையும் சிற்றரசர்களையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின் பிரிட்டானிய அரச நிர்வாகத்திடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுச் சுரண்டல் சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்.

ஜெய்பீம்: உண்மையை அறிதலும் எடுத்துரைத்தலும்

படம்
தகவல்கள் என்னும் உண்மை ஜெய்பீம் திரைப்படம், 1995 என ஒரு வருடத்தைக் குறிப்பிட்டுக் கதையை விரிக்கிறது. கடலூர் மாவட்டச் சிறைச்சாலை, சென்னை உச்சநீதி மன்றம், விழுப்புரம் மாவட்டக் காவல் நிலையங்கள், பாண்டிச்சேரி எல்லை ஆரம்பம் எனக் குறிப்பான இடங்களும் எழுத்தில் காட்டப்படுகின்றன. காவல் துறையினரின் சட்டமீறலை விசாரிக்க அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணைய அதிகாரியின் பெயர் பெருமாள்சாமி (பிரகாஷ்ராஜ் ஏற்றுள்ள பாத்திரம்) என்பதும் சொல்லப்படுகிறது. படத்தின் கதை சொல்லியாகவும் நிகழ்த்துபவராகவும் வரும் மையக்கதாபாத்திரத்தின் பெயர் வழக்குரைஞர் சந்துரு (சூர்யா எற்று நடித்துள்ள புனைவுப்பாத்திரம்) எனச் சொல்லப்படுகிறது. இவ்விரு பெயர்களும் கூட உண்மைப்பெயர்கள் தான்.

ஒரு வாழ்க்கை: இரண்டு புனைவுகள்

படம்
தமிழக முதல்வர்களில் திரு.எம்.ஜி.ராமச்சந்திரனின் வாழ்க்கைக்கும் அவரது பாதையைத் தொடர்ந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக்கும் பல ஒற்றுகைகள் உண்டு. இருவரின் வாழ்நாட்கள் மட்டுமல்லாமல், மரணங்களுமே சந்தேகங்களும் மூடுண்ட ரகசியங்களும் நிறைந்தவை. அவர்கள் உயிருடன் இருக்கும்போது வெளிப்படாத வாழ்க்கை நிகழ்வுகள் மரணத்திற்குப் பின்னர் எழுதப்பட்டன; சொல்லப்படுகின்றன. திரைப்படங்களாக எடுக்கப்படுகின்றன. ஜெ.ஜெயலலிதாவின் வாழ்க்கைக் கதை ஒரு மாதத்திற்கு தலைவி என்ற பெயரில் இணையதளப்பரப்பில் (அமேசான் பிரைம்) வெளியிடப்பெற்றுப் பல லட்சம் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டிருக்கிறது. அதற்கும் முன்பு 2019 இல் இன்னொரு இணையதளப்பரப்பில் (எம்எக்ஸ் பிளேயர்) குயின் என்ற பெயரில் ஒரு தொடராக அவரது கதை வந்த து. 11 பகுதிகளைக் கொண்ட அத்தொடர் ஆங்கிலத்திலும் தமிழிலும் பார்க்கக்கிடைத்துத் தலைவியைவிடப் பலமடங்குப் பார்வையாளர்களை ஈர்த்தது. வாக்கு அரசியலில் வெளிப்படைத்தன்மை எதிர்பார்க்கப்படும் ஒன்று. சிறுவயது முதலே அரசியல் இயக்கத்தோடு இணைந்த சொந்த வாழ்க்கையைக் கொண்டிருந்த தலைவர்களைத் தமிழக முதல்வர்களாகத் தெரிவு செய்த தமிழ்நாட்டு வாக்காளர

தலைவி : இரக்கங்களையும் ஏற்புகளையும் நோக்கி.....

படம்
நம்முன்னே நடக்கும் நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்து விளங்கிக் கொள்ளவேண்டும். அதனதன் சூழலில் வைத்துப் புரிந்துகொள்ள வேண்டும். அந்த அடிப்படையிலேயே நிகழ்வில் இடம்பெறும் பாத்திரங்களுக்கு / மனிதர்களுக்கு ஆதரவு அல்லது எதிர்ப்பு நிலையை வழங்க வேண்டும் என்று சொல்வது நிதானமான பார்வை. வளர்ந்த சமூகத்து மனிதர்கள் அப்படியே நடந்துகொள்கிறார்கள். ஆனால் தமிழர்கள் அப்படி நடந்துகொள்வதில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது. இப்படிக் குற்றம் சாட்டுபவர்கள் அப்படி இருக்கிறார்களா? என்பதைத் தனியாகக் கேட்டுக்கொள்ளலாம்.

பா.ரஞ்சித்தின் சார்பட்டா பரம்பரை: தலித் சினிமாவிலிருந்து விளிம்புநிலை நோக்கி…

படம்
இயக்குநர் பா. இரஞ்சித்தின் ஐந்தாவது படமாக வந்துள்ள சார்பட்டா பரம்பரை உலகத்தமிழ் பார்வையாளர்களையும் தாண்டிப் பலராலும் கவனிக்கப்பட்ட சினிமாவாக மாறியிருக்கிறது. அப்படி மாற்றியதின் பின்னணியில் இயக்குநரின் முதன்மையான நகர்வொன்றிருக்கிறது. உலக அளவில் சினிமாப் பார்வையாளர்களுக்கு நன்கு அறிமுகமான குத்துச்சண்டை சினிமா என்ற வகைப்பாட்டை, உள்ளூர் வரலாற்றோடு இணைத்துப் பேசியதே அந்த நகர்வு. அதன் மூலம் தனது சினிமாவை, விளையாட்டு சினிமா என்ற வகைப்பாட்டிலிருந்து அரசியல் சினிமாவாகவும், விளிம்புநிலைச் சினிமாவாகவும் மாற்றியிருக்கிறார். அந்த மாற்றம், அவரைத் தலித் சினிமா இயக்குநர் என்ற முத்திரையிலிருந்து, பொதுத்தள சினிமா இயக்குநர் என்ற அடையாளத்திற்குள் நகர்த்தியிருக்கிறது.

தமிழ்க்குடிதாங்கி: ஆய்வுக்கட்டுரையான ஆவணப்படம்

படம்
  2011 - இல் மருத்துவர் ச .ராமதாஸ் அவர்களுக்கு , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கும் ஆண்டுவிருதுகளில் ஒன்றான அம்பேத்கர் சுடர் விருதை வழங்கியது. அதற்கும் முன்பு பல ஆண்டுகளுக்கு முன்பு விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் தொல். திருமாவளவன் அவரைத் தமிழ்க்குடிதாங்கி என்று பட்டம் வழங்கிப்பாராட்டினார்.

விரும்பித் தொலையும் இயக்குநர்கள்

படம்
  நாயக நடிகர் உருவாக்கம் சிவாஜி X எம்ஜிஆர் என்ற எதிரிணையின் காலம் முடிந்து அரையாண்டுக்கும் மேலாகிவிட்ட து. அந்தப் போட்டியில் எம்.ஜி.ஆரே வென்றவராக – நட்சத்திர நடிகராக வலம் வந்தார். அடுத்து உருவான ரஜினி X கமல் போட்டியில் வென்றவர் நடிகர் ரஜினிகாந்த்.    நீண்ட காலமாக ரஜினி, உச்ச நடிகராக (Super Star) வலம்வர அவருக்கு உதவியவர்களின் வரிசையில் பல இயக்குநர்கள் இருந்தார்கள்.

மாடத்தி: மாற்று சினிமாத்திசையிலொரு பயணம்

படம்
இந்தியாவின்/தமிழ்நாட்டின் தென் மாவட்டக்கிராமம் ஒன்றின் காவல் தெய்வமாக விளங்குவது மாடத்தி. புதிரை வண்ணார் சாதியைச் சேர்ந்த யோசனா என்னும் பதின் வயதுப் பெண், மாடத்தி என்னும் தெய்வமாக – காவு வாங்கிய துடியான தெய்வமாக ஆன கதை, வாய்மொழி மரபில் சொல்கதையாக இருக்கிறது. அக்கதைக்குப் பின்னால் இருந்த சாதி ஒதுக்கலையும், ஒதுக்கப்பட்ட சாதிப் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் பாலியல் வன்முறையையும் பார்வையாளர்களுக்குக் கடத்தியிருக்கிறது லீனா மணிமேகலையின் மாடத்தி.

மேதகு: புனைவும் வரலாறும்

படம்
பார்வையாளத்திரளுக்குத் தேவையான நல்திறக்கட்டமைப்பு, அதில் இருக்க வேண்டிய திருப்பங்களைக் கொண்ட நாடகீயத் தன்மையுமான கதைப்பின்னல், உருவாக்கப்பட்ட பாத்திரங்களை ஏற்று நடித்தவர்களின் உடல் மொழியின் நம்பகத்தன்மை ஆகியன படத்தைத் தொடர்ச்சியாகப் பார்க்கத் தூண்டுன்றன. பின்னணிக்காட்சிகளை உருவாக்கித்தரும் கலை இயக்குநரும் ஒளிப்பதிவாளரும் கூட அதிகமும் விலகலைச் செய்யவில்லை. அந்தக் காலகட்டத்து யாழ்நகரம் மற்றும் கிராமப்புறக் காட்சிகளைப் பார்வையாளர்களுக்குத் தர முயன்றிருக்கிறார்கள்.

பெண் மைய விவாதங்கள் கொண்ட இரு குறும்படங்கள்

படம்
பெண்ணின் மனசைச் சொல்லாடலாக விவாதிக்கும் இரண்டு குறும்படங்கள் - யூ ட்யூப் – அலைவரிசைகளில் ஒருவார இடைவெளியில் வெளியாகியிருந்தன. அடுத்தடுத்த நாளில் அவற்றைப் பார்த்தேன். முதலில் பார்த்த படம் பொட்டு. அதன் இயக்குநர் நவயுகா குகராஜா. (வெளியீடு:10/06/2021). இரண்டாவது படம் மனசு.( வெளியீடு: 18-06-2021) இயக்குநர் மு.ராஜ்கமல்.

குழந்தைமைக்குத் திரும்ப நினைக்கும் ஒரு குறும்படம்

குழந்தமையைத் தொலைத்தல் என்பது ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாதது. ஆனால் கிராமியம் சார்ந்த வாழ்க்கைக்குள் இருந்திருக்கலாம்; அதன் மூலம் குழந்தையாக இருந்தபோது விளையாண்ட விளையாட்டுப் பொருள்களோடு உறவாடிக் கழித்திருக்கலாம். அந்த விளையாட்டுகளைத் தொடர்ந்திருக்கலாம் என நினைப்பது நிறைவேறக் கூடிய ஒன்றுதான். அதே நேரத்தில் அந்த நினைப்பு ஒருவிதக் கற்பனாவாதமும் தான்.

வரலாற்றில் ஒளிந்துகொண்டு பகடி ஆடுதல் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி

படம்
சில பொதுக்குறிப்புகள் புதிய சிந்தனைகள் அல்லது சோதனை முயற்சிகள் எதுவும் இல்லாமலேயே சில சாதாரண நிகழ்வுகள் கவனிக்கத்தக்க நிகழ்வுகளாவதும், மறுதலையாக விவாதிக்கத் தக்க சிந்தனைகளையும் புதுப்புது பரிசோதனைகளையும் தன்னகத்தே கொண்டிருக்கும் பல நிகழ்வுகள் கவனிக்கப்படாமலும் விவாதிக்கப்படாமலும் போவதும் நிகழ்கின்றன. மனித வாழ்க்கை கண்டு கொள்ளப்படுவதிலும் கவனிக்கப்படாமல் போவதிலும் வினை யாற்றும் பொது அம்சங்கள் இவைதான் எனச் சொல்வதும் விளக்குவதும்கூடத் தற்காலிகமானவைதான்.

நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை

படம்
  ”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் கடைசிக்குண்டு: கதைப் படம் அல்ல; முன்னெடுப்பு சினிமா

படம்
  படத்திற்குள் கதை இருக்கிறது. அதுவும் ஒரு காதல் கதை இருக்கிறது. ஒரு தடையை உருவாக்கிக் காட்டி,  இந்தத்தடையை மீறிக் காதல் நிறைவேறுமா ? என்ற கேள்வியை எழுப்பிச் சிக்கல்களை முன்வைத்துத் திருப்பங்களைத் தாண்டிக் காதல் நிறைவேறியது எனக்காட்டி இன்பியல் முடிவைத் தரும் காதல் கதைகள் இங்கே செய்யப்படுகின்றன. இந்தப் படத்திலும் அப்படிச் செய்யப்பட்ட காதல் கதை இருக்கிறது.

பக்தியின் புதிய முரண்நிலை : மூக்குத்தி அம்மன்

படம்
  பொருட்படுத்திப் பேச வேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன. முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின்   உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

நகைச்சுவைப்படத்தின் ஒரு சட்டகம்: நாங்க ரொம்ப பிஸி

படம்
பொருட்படுத்தப்படும் கூறுகள் பொருட்படுத்திப் பேசவேண்டிய திரைப்படங்கள் என்பதற்கான காரணங்கள் சில உள்ளன. முதலாவது காரணம், சினிமா என்னும் தொழில்நுட்பம் சார்ந்த கலையின் உள் நுட்பங்களைத் தனதாக்கிக்கொண்டு வெளிப்படும் நேர்த்தியான வடிவம்.

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக

படம்
ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

திரும்பத்திரும்ப சந்திரமுகி

படம்
    ரஜினிகாந்த் நடித்த சந்திரமுகி – ஒரு சித்திரை முதல் நாளில் அரங்கிற்கு வந்தது.அதற்கிணையான விளம்பரங் களோடும் நடிக முக்கியத்துவத்தோடும்   கமல்ஹாசன் நடித்த மும்பை எக்ஸ்பிரஸும் விஜய் நடித்த சச்சினும் அதே நாளில் திரையரங்குகளுக்கு வந்தன. நடிகர்களை மையமிட்டுத் தெரிவுசெய்யும் எனது மனம் கமல், ரஜினி, விஜய் என்றே வரிசைப்படுத்தி முதலில் மும்பை எக்ஸ்பிரஸையும் இரண்டாவதாகச் சந்திரமுகியையும் கடைசியாகச் சச்சினையும் பார்த்தேன்.   மொழி , இனம் , சமயம் என ஏதாவது ஒன்றால் தம்மையொரு தனித்த குழுவாகக் கருதும் கூட்டம் , பண்பாட்டு அடையாளங்களை விழா நாட்களிலும் அந்நாட்களின் சிறப்பு  நிகழ்வுகளிலும்தான் தேடுகிறது. தமிழா்களின் முக்கிய விழா நிகழ்வுகளாகப் பொங்கல் , தீபாவளி , புத்தாண்டு போன்றன விளங்குகின்றன என்றாலும்   பொங்கல் திருநாளை மட்டுமே தமிழா்களின் விழா நாளாகக் கருதுகின்றனர். தமிழ் சினிமாக்காரா்களுக்கு இந்த வேறுபாடுகளெல்லாம் முக்கியமல்ல. அவா்களுக்குப் புதுப்படங்கள் வெளியிட விழா நாட்கள் வேண்டும் அவ்வளவுதான். அ ந்த ஆண்டு சித்திரை முதல் நாள் இந்த மூன்று படங்கள் வெளிவந்தன.   மூன்று படங்களில் திரும்பத்திரும்பப் பார்க

ஒற்றை ரீல் இயக்கம்: மாற்று ரசனைக்கான முயற்சி

படம்
  மாற்றுகளை முன்வைத்தல் வெகுமக்கள் பண்பாடு வெறும் நுகர்வுப் பண்பாடாக மாறிவருகிறது; அதற்கு வெகுமக்களைத் தேடிச் செல்லும் ஊடகங்களும் நாடகங்களும் துணையாக இருப்பதோடு முக்கிய காரணிகளாகவும் இருக்கின்றன. அதனை மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு அறுபதுகளிலும் எழுபதுகளிலும் சில முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டன.வெகுமக்கள் இதழியலுக்கு மாற்றாகச் சிறுபத்திரிகைகள் என்ற கருத்தோட்டத்தின் தொடர்ச்சியாக, பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களுக்கு மாற்றாக தீவிர இலக்கியம் என்ற கருத்துக்களும் செயல்பாடுகள் முன் வைக்கப்பட்டன.