இடுகைகள்

டிசம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேடிப்படித்த நூல்கள் அல்லது பழைய புத்தகக் கடையில் கிடைத்த நூல்கள்

படம்
கல்விப்புல வாசிப்பிற்கும் கல்விப்புலத்திற்கு வெளியே இருப்பவர்களின் வாசிப்புக்குமிடையே முதன்மையான வேறுபாடுகள் உண்டு. மொழி, இலக்கியத்துறைகளில் இருக்கும் வேறுபாட்டை என்னால் விரிவாகச் சொல்லமுடியும். ஆனால் இந்த வேறுபாடு எல்லாத்துறைகளிலும் இருக்கிறது என்பதுதான் உண்மை. இங்கே எனக்குப் பழைய புத்தகக்கடைகளில் கிடைத்த நூல்களின் பட்டியல் ஒன்றைத் தருகிறேன்.மதுரையிலொரு திண்டுக்கல் ரோடு உண்டு. செண்ட்ரல் சினிமா தியேட்டர் சந்துக்குள் நுழைந்து திண்டுக்கல் ரோட்டில் வந்தால் வரிசையாகப் பழைய புத்தகக் கடைகள். மீனாட்சி அம்மன் கோயில் தெற்குக் கோபுரவாசல்வரை விரித்துப் பரப்பிவைத்திருப்பார்கள். திருப்பத்தில் இருந்த மூலைக்கடை பெரியது. அங்குதான் எனது ஆய்வுக்கான பழைய நூல்கள் பலவற்றை நூலை வாங்கினேன். சென்னையிலும் அப்படியொரு தெருவாகத் திருவல்லிக்கேணியில் கடற்கரை நோக்கிப் போகும் சாலையைச் சொல்வேன். பைகிராப்ட்ஸ் சாலை திரும்பும் இடத்திலிருந்து பழைய புத்தகங்கள் சாலையில் விரிக்கப்பட்டிருக்கும். அங்கும் பல நூல்களை வாங்கியிருக்கிறேன் 15 .வடகரை ஆதிக்கத்தின் சரித்திரம் இதனைத் தேடிப்படித்த நூல் என்று சொல்வதைவிட தேடியபோது கிடைத்த ...

இவை குறியீட்டு உத்திகள்

படம்
  நமது காலம் ஊடகங்களின் காலம். ஊடகங்களுக்குப் பெருந்திரள் போராட்டங்களைவிடக் குறியீட்டுப் போராட்டங்கள் வசதியானவையாக இருக்கின்றன. ஒத்திகைப் பார்த்த காட்சிகளோடு கூடிய குறியீட்டுப் போராட்டங்களைப் பல கோணங்களில் காட்சிப்படுத்த முடிகிறது. நேர்நிலையிலும் எதிர்நிலையிலும் விவாதங்களை உருவாக்க முடிகிறது. அதன் வழியாக உருவாகும் அரசியல் சொல்லாடல்களைப் பெருந்திரளிடம் - வாக்காளர்களிடம் நீண்டகாலத்திற்குப் பதிய வைக்க முடிகிறது. அந்த வ'கையில் அண்ணாமலையின் 'சாட்டையடிப்போராட்டம்' காலத்திற்கேற்ற வடிவம் என்றே சொல்வேன்.

இடைத்தேர்தல் என்னும் குதூகலம்

படம்
இடைத்தேர்தல்கள் தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டில் முக்கியமான நிகழ்வுகள். அப்படியான இடைத்தேர்தல்கள் இரண்டைப் பக்கத்தில் பார்த்து எழுதியதுண்டு. இடைத்தேர்தல் நடந்த (2003) சாத்தான்குளம் தொகுதியைச் செல்லக்குட்டி எனச் சொல்லிக் குதூகலப்படுத்தினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா. ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர்(2009) தனித்துவமான தேர்தல் பார்முலாவை உருவாக்கித் திருமங்கலம் இடைத்தேர்தலில் வெற்றிபெற்றது திராவிட முன்னேற்றக்கழகம். அப்போது எழுதிய கட்டுரைகள் இவை.

நான் என்னும் தன்னிலை: சங்க அகக் கவிதைகளிலும் பக்தி கவிதைகளிலும்

முன்னுரை எடுத்துரைப்பு (Narrative) என்பது நவீனத் திறனாய்வாளர்கள் அடிக்கடி உச்சரிக்கும் ஒரு கலைச் சொல். அக்கலைச்சொல் மூலம் மேற்கத்தியத் திறனாய்வு கலை இலக்கிய வடிவங்கள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய எடுத்துரைப்பியல் கோட்பாட்டை (Narratogy) உருவாக்கித் தந்துள்ளது. உருவவியல் தொடங்கி அமைப்பியல் வழியாக வளர்ந்துள்ள எடுத்துரைப்பியல் கோட்பாடு தொல்காப்பியர் சொல்லும் கூற்று என்பதோடு நெருங்கிய உறவுடைய ஒன்று என்று கருதுகிறது இக்கட்டுரை.கட்டுரை சங்க அகக் கவிதைகளிலும் பக்திக் கவிதைகளிலும் செயல்படும் கூற்று முறையை நவீன எடுத்துரைப்பியல் பின்னணியில் விளக்க முயற்சி செய்கிறது. அம்முயற்சிக்காக அகக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதேபோல் பக்திக்கவிதைகள் அனைத்தையும் தரவுகளாக எடுத்துக் கொள்ளவில்லை. அதனால் கிடைக்கும் முடிவும் முடிந்த முடிவும் இல்லை. முதல் கட்ட நிலையில் இவ்வாறு வாசிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று காட்டுகிறது. இந்த முன்னாய்வைத் தொடர்ந்து ஒருவர் முழுமையையும் தரவுகளாக்கி இந்நோக்கில் ஆய்வு செய்யலாம். அப்போது இந்த முடிவு உறுதி செய்யப்படலாம். அல்லாமல் மாறுபட்ட முடிவும் கூடக் கிடை...

கிறிஸ்துமஸ் நினைவுகள்

படம்
2023,டிசம்பர். 25 / ஒலியும் வழியுமாக இருக்கும்  ஆலயமணி ஏஜி சர்ச் என்பதைச் சொல்லியே என் வீட்டின் அடையாளத்தைத் தொடங்குகிறேன். அதன் விரிவு அசெம்பிளிஸ் ஆப் காட்ஸ் ( ASSEMBLIES OF GODS) என ஆங்கிலத்தில் உச்சரிக்கப்படும் பெத்தேல் ஏசு சபை. சிலுவையின் உச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் மணிக்கூண்டில் ஆலயமணியெல்லாம் இல்லை. மின்கலத்தில் நகரும் பெரியதொரு கடிகாரம் இருக்கிறது. ஒவ்வொரு மணிக்கும் அதன் எண்ணிக்கையில் மணி அடித்து ஓய்ந்தபின் பைபிள் வாசகம் ஒன்றைச் சொல்லி முடிக்கும். இரவு 11 மணிக்குப் பிறகு இந்த நடைமுறையை நிறுத்திக் கொண்டு, அடுத்த நாள் காலையில் ஐந்து தடவை அடித்துத் துயில் எழுப்பி ஒரு வாசகத்தைச் சொல்லும் ஆரம்பத்தையும் முடிவையும் காதுகொடுத்துக் கேட்டுக்கொள்கிறேன். இடையில் அடித்துமுடிக்கும் மணியோசைகளை நான் செவிமடுப்பதில்லை. வசனங்களைக் கேட்டுக்கொள்வதுமில்லை. திருமங்கலத்தில் நானிருக்கும் இடத்தின் நகர்ப்பகுதிக்கு முகமதுஷாபுரம் என்று பெயர். அதன் மேற்குப் பகுதியில் ஒரு மசூதி இருக்கிறது. கிழக்குப்பகுதியில் தேவாலயம் இருக்கிறது. தெற்கிலும் வடக்கிலும் சின்னச்சின்னதாகக் கோயில்கள் இருக்கின்றன. என் வீட்ட...

திறன்மிக்க இரண்டு நடிகைகள்

படம்
இந்த ஆண்டின் புத்தகக்கண்காட்சியை ஒட்டி வழங்கப்படும் கலைஞர் பொற்கிழி விருதுகள் வழக்கம்போல ஆறுபேருக்கு வழங்கப்பட உள்ளன. அவர்கள் வருமாறு:உரைநடை/அருணன், நாவல்/சுரேஷ்குமார் இந்திரஜித், சிறுகதை/என்.ஶ்ரீராம், மொழிபெயர்ப்பு/நிர்மால்யா. கவிதை/ஜெயந்தா, நாடகம்/ கலைராணி. இவர்களில் நெல்லை ஜெயந்தாவின் கவிதைகளை வாசித்ததில்லை; அறிமுகமும் இல்லை. அதனால் அவருக்கு வாழ்த்தும் சொல்ல வேண்டியதில்லை. ஆறுபேரில் சுரேஷ்குமார் இந்திரஜித் குறித்தும் என்.ஶ்ரீராம் குறித்தும் எழுதியுள்ளேன். ( விருப்பமானவர்கள் இணைப்புகளில் சென்று வாசிக்கலாம்). மலையாளத்திலிருந்து நிர்மால்யா மொழிபெயர்த்த கவிதைகளையும் உரைநடைகளையும் வாசித்துள்ளேன். அவர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

#bnwtamil சாகித்ய விருது சர்ச்சை? வேங்கடாசலபதிக்கு தகுதி இல்லையா? பேராசி...

படம்
இலக்கியத்திற்கான இந்திய அரசின் உயர் அமைப்பு சாகித்ய அகாடெமி. ஆண்டுதோறும் அவ்வமைப்பு வழங்கும் விருதுகள் மீது பல்வேறு எதிர்வினைகள் எழுவது வாடிக்கை. இந்த ஆண்டும் அத்தகைய விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அத்தகைய விவாதமாகக் கறுப்பு -வெள்ளை ( BLACK & WHITE ) அலைவரிசைக்கு பெருமாள் மணி என்னோடு ஓர் உரையாடல் நடத்தினார். அதன் முதல் பகுதி இப்போது வந்துள்ளது. இரண்டாவது பகுதி பின்னர் வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது . இலக்கியத்துறைப் பேராசிரியராகவும் திறனாய்வாளராகவும் எனது கருத்துகளைச் சொல்லியிருக்கிறேன். கேட்டுப்பாருங்கள்.

பெரியார்- எப்போதும் பேசுபொருள்

படம்
வரலாறு என்னை விடுதலை செய்யும் என்றார் தோழர் காஸ்ட்ரோ. திரள் மக்களின் விடுதலைக்கும் வரலாற்றுக்கும் உள்ள உறவை யாராவது ஒருவர் எளிமையாக விளக்கிவிட முடியும் என்று முன்வந்தால் அவரை ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. அதற்கு மாறாக விடுதலைக்கும் வரலாற்றுக்கும் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை எனக் கூறி வரலாற்றை விலக்கிவைக்க முன் வந்தால் அவரையும் ஆச்சரியத்தோடு தான் பார்க்கத் தோன்றுகிறது. வரலாறு விளக்கவும் முடியாத - விலக்கவும் முடியாத -ஒன்றாக இருப்பது பேசுவதற்கான ஒன்றுதான்.

சிலப்பதிகாரம் என்னும் நாடகப்பனுவல்

படம்
தமிழில் எழுதப்பட்டுள்ள பனுவல்களில் உலகப்பரப்பிற்கு எடுத்துச் செல்ல வேண்டிய பனுவல் சிலப்பதிகாரம். சிலப்பதிகாரத்தை அப்படியே மொழிபெயர்த்துத் தருவதோடு அதன் மீதான விமரிசனங்களும் உலகத்திற்குச் சொல்லப்படவேண்டும். இங்கே சிலப்பதிகாரத்தை நாடகப்பனுவலாக எப்படி வாசிக்கவேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொல்காப்பியக் கவிதைக்கோட்பாடு- ஏற்பு நிலையும் விலகல் நிலையும் புறநானூற்றை முன் வைத்து

முன்னுரை இலக்கியம் என்று இன்று அழைக்கப்படும் சொல் எல்லாவிதமான இலக்கிய வகைகளையும் உள்ளடக்கிய எழுத்துப் பிரதிகளையும் குறிக்கும் ஒரு சொல். ஆனால் தொல்காப்பியர் காலத்தில் இலக்கியம் என்பதே செய்யுள் என்பதாகவே அர்த்தம் தந்திருக்கிறது. அவரது பொருளதிகாரத்தில் நாடகம், உரை, போன்ற இலக்கிய வெளிப்பாட்டு வடிவங்கள் பற்றிய சொற்கள் இருந்தாலும், அவை பற்றிய சொல்லாடல்கள் இல்லை. அல்லது அக்காலகட்டத்தில் உரைக்கும் நாடகத்திற்கும் வேறு யாராவது சொல்லாடல்களை உருவாக்கியிருக்கத் தான் செய்யுள் என்ற இலக்கிய வெளிப்பாட்டு வடிவம் பற்றிய சொல்லாடலை உருவாக்க நினைத்து அதைச் செய்தவராகத் தொல்காப்பியரை அறிந்து கொள்ளலாம்.