இடுகைகள்

நுண்ணரசியலும் பேரரசியலும் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தொலைநோக்கில் ஒரு நோக்கு

படம்
2003 -இல் ஜெ.ஜெயலலிதா அவர்களின் தலைமை யிலான அரசாங்கம் உயிர்பலித் தடைச்சட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. பண்பாட்டாய்வாளர்கள் மற்றும் செயல் பாட்டாளர்களின் கண்டனத்திற்கும் ஆளானது. ஆனால் வெகுமக்கள் அச்சட்டத்தை எதிர்க்கும் மாற்றுவடிவங்களைக் கண்டுபிடித்து நிறைவேற்றினார்கள். எதிர்த்தார்கள். அதனால் திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த வரலாறு தெரிந்திருந்தாலும் இப்போது பாரதீய ஜனதாவின் தொலை நோக்குப் பத்திரம் அதனைத் திரும்பக் கொண்டுவருவோம் என்கிறது. அப்போது ஞாநியின் தீம்தரிகிடவில் எழுதிய கட்டுரை இது: அதன் தலைப்பு: அந்தமுறை நானும்....

மாற்றப்படும் சொல்லாடல்கள்

தமிழ்நாட்டு அரசியல் சொல்லாடல்களில் திரும்பத் திரும்ப உருவாகி உருண்டுகொண்டே இருக்கும் முதன்மையான எதிர்வு பிராமணர் x பிராமணர் அல்லாதோர் என்பது. இதனை உருவாக்கியவர்கள் பிராமணர் அல்லாதோரிலிருந்து உருவான பெரியாரும் அவரது வழித்தோன்றல்களும். அதனை மாற்றித் தமிழின் முதன்மைச் சொல்லாடலாக ஆக்கப்பட்ட சில எதிர்வுகள் உண்டு. அவற்றுள்,ஏழைகள் x பணக்காரர்கள் எனப்பேசிய வர்க்க அரசியல் முற்பட்டது. அதனைத் தொடர்ந்து உருவான தலித்துகள் x தலித்தல்லாதோர் எனப்பேசிய விளிம்பு நிலை அரசியல் காலத்தில் பிற்பட்டது. வர்க்க அரசியலும் விளிம்புநிலை அரசியலும் தலா பத்தாண்டுகள் செல்வாக்கோடு இருந்தன. 

சாரதியிடம் மண்டியிடும் பார்த்தன்கள்

படம்
திருமதி. சசிகலா நடராசன் தமிழ்நாடு வருகிறார் என்பது செய்தியாக மட்டுமல்ல; அறிவிப்பாகவும் விளம்பரங்களாகவும் மாறிக்கொண்டிருக்கிறது. அவரது வருகை வரப்போகும் சட்டமன்றத்தேர்தலையொட்டி அரசியல் நிகழ்வாக மாறும் வாய்ப்பு உண்டு. இப்போது ஆளுங்கட்சியாக இருக்கும் அ இ அதிமுகவின் முக்கியமான முடிவுகளை எடுப்பதில் பங்காற்றியவர் என்று ஊடகவியலாளர்களும் உதிரிக்கட்சித் தலைவர்களும் சொல்கிறார்கள். அவர்கள் சொல்லாமல் தவிர்ப்பது திரு ம.நடராசன் செய்த புலப்படா அரசியல் நகர்வுகளை. அவர் இருந்தால் எடுக்கும் முடிவுகள் திராவிட இயக்கப்பார்வை கொண்டதாகவே இருக்கும் என்பது வரலாறு. அந்த வரலாற்றைக் கைவிட்டுவிட்டுத் திசைமாறுவாரா திருமதி சசிகலா என்பதை இரண்டொரு வாரங்களில் அறிய முடியும்

வேளாண்சட்டங்கள் : வாக்காளர் எவ்வழி அரசும் அவ்வழி

படம்
  உலகமயத்தை இந்தியா ஏற்றுக்கொண்டு 30 ஆண்டுகள் முடிந்துவிட்டன. ஏற்றுக் கொண்டது தொடங்கி, காங்கிரஸ் தலைமையில் - முனைவர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த ஆட்சிக் காலத்தில் தொழில் மண்டலங்களே வளர்த்தெடுக்கப்பட்டன.

சிதைவுகளின் முழுமை - பின் நவீனத்துவச் சொல்லாடல்கள்

படம்
நடிக அரசியல் தேசிய இன அடையாளம், வட்டாரவாதம், பெண்கள், ஒடுக்கப்பட்டோர், பழங்குடியினர் உரிமைகள், நாடோடிகள், மூன்றாம் பாலினர், மதங்களின் உட்பிரிவு நம்பிக்கைகள், சடங்குகள், வெளிப்பாடுகள், சாதியின் இருப்பைத் தக்கவைக்கும் முயற்சிகள் போன்றனவற்றை அடையாள அரசியல் சொல்லாடல்கள் என்ற அளவில் விவாதிக்கலாம்; விவாதிக்க வேண்டும்; அவையெல்லாம் சரிசெய்யப்படவேண்டும். அதை வலியுறுத்தும் அரசியல் விவாதங்கள், இவையெல்லாம் ஒரு தேசத்தைக் கட்டமைப்பதற்கு முதன்மையான தடைக்கற்கள் என்பதையும் மறுப்பதில்லை.

வட்டாரத்திலிருந்து தேசியத்திற்கு

கடந்த பத்தாண்டுகளில் தமிழக அரசியல், மாநிலம் தழுவிய அரசியலிலிருந்து வட்டார அரசியலுக்கு நகர்ந்துவிட்டது. வட்டார அரசியல் என்பது முன்பு மண்டலங்களின் அரசியலாக இருந்தது. அதன் வெளிப்படையான அடையாளம் திராவிட முன்னேற்றக் கழகம் தென்மண்டல ஒருங்கிணைப்பாளராக திரு மு.க. அழகிரியை நியமித்ததைச் சொல்லலாம். மண்டல அளவு அரசியல், மாவட்ட அளவு அரசியலாக மாறி, தாலுகா அளவு அரசியலாக நகர்ந்துகொண்டிருக்கிறது. இதன் வெளிப்பாடுகளே கட்சி அமைப்புகளுக்காக ஒரே மாவட்டம் இரண்டு மூன்று பிரிவுகளாக ஆக்கப்பட்டுத் தனித்தனி மாவட்டச் செயலாளர்கள் நியமனங்கள் நடப்பது. இந்த நகர்வைத் தொடங்கி வைத்தது திராவிட முன்னேற்றக்கழகம்.

சம்ஸ்க்ருதம் என்னும் ஆதிக்கமொழி

இரண்டு ஆண்டுகள் போலந்து மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழி கற்பிக்கச் சென்ற போலந்து நாட்டில் கஷுபியன் மொழி என்றொரு மொழி வட்டார மொழியாக அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது. அம்மொழி பேசும் மக்கள் எண்ணிக்கை ஒரு லட்சம் அளவில் இருக்கிறார்கள். குறிப்பிட்ட வட்டாரத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்காகத் தனியாகத் தொலைக்காட்சி, வானொலி போன்ற ஊடகவாய்ப்புகள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன.

உள்நோக்கிய சுழற்சிகள்

பீகார் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அசத்துதீன் ஒவைசியும் ராம்விலாஸ் பஸ்வானின் மகனும் லோக்ஜனசக்தி கட்சியும் தலைவருமான சிராக் பஸ்வானும் விமரிசிக்கப்படுகிறார்கள்.

புலப்படா அரசியலும் அரங்கியலும்

படம்
வரப்போகும் தமிழகச் சட்டமன்றத்தேர்தலில் முன்னாள் முதல்வர்களான மு.கருணாநிதி, ஜெ.ஜெயலலிதா ஆகியோரின் இன்மையைப் பெரிய வெற்றிடமாக ஊடகங்களும், ஊடகங்களில் விவாதிப்பவர்களும் சொல்கின்றனர். இன்னொருவரின் இன்மையைப் பற்றிப் பேசுவதில்லை. அவரது இன்மையும் இந்தத் தேர்தலில் பெரும் வெற்றிடம் என நான் நினைப்பதுண்டு. அவர் தமிழகத்தின் புலப்படா அரசியலின் மையமாக இருந்த திரு ம.நடராசன் . புலப்படா அரசியலை விளக்குவதற்கு முன்னால் புலப்படா அரங்கியலை விளக்க நினைக்கிறேன் 

கமல்ஹாசன்: நடிகரிலிருந்து அரசியல்வாதியாக

படம்
ராஜபார்வை- கமலின் சினிமாவாக அறியப்பெற்ற முதல் படம். அவர் தன்னை நடிக்கத் தெரிந்த நடிகராக உணர்ந்து வெளிப்படுத்திக் கொண்ட படம். அந்தப் படம் பற்றி நினைத்துக் கொள்ளவும் சொல்லவும் பல சங்கதிகள் உண்டு. அது அவரது 100- வது படம். 100- வது படம் தனது பேர்சொல்லும் படமாக -கலைத்துவம் கூடிய வித்தியாசமான படமாகவும் வெற்றிப் படமாகவும் அமைய வேண்டும் என்பதற்காகக் கவனமாக எடுத்த படம்.

அரசியல் தெரிவுகளின் அவலங்கள்

நல்லன நடக்கவேண்டும் என நினைக்கும் நினைப்புக்குள்ளேயே தீயனவற்றுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன.

புதிய உரையாசிரியர்கள்

படம்
  அரசியல் விமரிசகர் துரைசாமி ரவீந்திரனின் முந்தையை விவாதங்களுக்கும் இப்போதைய விவாதங்களுக்கும் நேர்காணல்களுக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. முன்பெல்லாம் பூடகமாகச் சொன்ன கருத்துகளை இப்போது வெளிப்படையாகப் பேசுகிறார். மாநில அரசியலில் நடக்கும் நகர்வுகளைக் குறிப்பாகத் தமிழக பா.ஜ;க.வின் அரசியல் நகர்வுகள் பலவற்றை வெளிப்படையாகப் பேசுகிறது அண்மைய பேச்சுகள்.

மனுஷ்யபுத்திரனின் புதிய அடையாளம்

படம்
  நீ ண்டகாலமாகவே தேர்தல் அரசியலில் வாக்காளர்களை நேரடியாகச் சந்திக்கும் தொண்டர்களின்- முன்களப்பணியாளர்களின் - செயல்பாடுகளே வெற்றி -தோல்வியைத் தீர்மானிக்கும் வாக்குகளைப் பெற்றுத்தரும் நகர்வுகளாக இருக்கின்றன. அதே நேரத்தில் நிகழ்காலத் தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்களும் நடந்து கொண்டிருக்கின்றன. பலவற்றை ரகசியமாகச் செய்துவந்த அரசியல் கட்சிகள் இப்போது வெளிப்படைத்தன்மையைக் கடைப்பிடிக்கின்றன. ரகசியம் பேணுவதும் உரிய நேரத்தில் ரகசியத்தை வெளிப்படச் செய்வதும் நவீனத்துவ நோக்கின் அடையாளம். ஆனால் பின் நவீனத்துவச் சூழல் ரகசியங்களைத் துறக்கத் தூண்டும் விளைவுகளைக் கொண்டது.

சாதி அடையாளம் நோக்கி

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ‘ ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்ற அடையாள அரசியலை முன்வைத்துப் புதிய நகர்வைச் செய்யவேண்டும் என்று அதன் பொதுச்செயலாளர் திரு. ரவிக்குமார் (விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர்) பேசியதை மேற்கோளாகக் காட்டிச் சில நாட்களுக்கு முன்பு இந்து தமிழ் திசை ஒரு செய்திக்கட்டுரை வெளியிட்டிருந்தது. அதனை விரித்து ஆங்கில இந்துவும் செய்திக்கட்டுரையை இன்று வெளியிட்டுள்ளது. ‘ஆதிதிராவிடர்களாக ஒன்றிணைவோம்’ என்பது காலத்தின் தேவையாக இருக்கலாம். உள்சாதி அடையாளங்களை முன்னெடுக்காமல் பெருஞ்சாதிகளாகக் காட்டுவதின் மூலம் தேர்தல் அரசியலில் கூடுதல் பங்கைப் பெறமுடியும் என்பது நடைமுறையில் ஏற்கத்தக்கதும்கூட.

அடையாள அரசியலும் பெரும்பான்மை வாதமும்

படம்
தேர்தல் அரசியல் என்பது எண்களின் அரசியல். ஆனால் அதற்குள் செயல்படுவது கருத்தியல். கருத்தியல்கள் சார்புநிலைகொண்டவை. உலகம் முழுவதும் அதுதான். எந்தவொரு நாடும் விலக்கானவை அல்ல. இந்தியா உள்பட. பால், பாலினம், அதுசார்ந்து உருவாகும் உரிமை, சமத்துவம், விடுதலை என்ற சொல்லாடல்களும் பாலியல் அரசியலின் கருத்தியல்கள். அதைப்போலவே சமய நம்பிக்கைகள், சடங்குகள், சமயஞானம் என்பது தனிமனிதத்தன்னிலைகளை உருவாக்கும் அடையாளங்கள். சமயவியல் அரசியலின் கருத்தியல்கள். அடையாள அரசியல் உலக அளவில் - பின் நவத்துவம் சிந்தனையாகவும் வாழ்முறையாகவும் மாறியபின் கிளர்ந்தெழுந்த அரசியல் சொல்லாடல்கள். இவ்விரண்டையும் இந்தியச் சூழலில் பெரும்பான்மை அரசியல் முற்றாக நிராகரிக்கப் பார்க்கிறது. குறிப்பான இரண்டு எடுத்துக்காட்டுகளின் வழி விவாதிக்கலாம்.

இன்று களப்பலி நாள்:தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு

மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் 2017 இல் சிதைக்கப்பட்டது. சிதைத்தது தேசிய தரமதிப்பீட்டு நுழைவுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதம்.

தொலையும் நம்பிக்கைகள்

படம்
நீண்ட காலமாக ஆட்சியிலிருந்த காங்கிரஸின் ஆட்சி முடிந்து திரு நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாகட்சி ஆட்சிப் பொறுப்பேற்ற 2014 இல் பலருக்குப் பலவிதமான நம்பிக்கைகள் இருந்தன. மேற்குலகின் பிடியிலிருந்து நகர்ந்து இந்தியத்தன்மை கொண்ட தற்சார்புப் பொருளாதாரம், பல்சமய, பல்மொழிச் சமூகங்களின் வளர்ச்சி, நவீன வாழ்க்கை கற்றுத்தந்துள்ள உள்வாங்கும் அரசியல் போன்றவற்றை நோக்கி நாடு நகரும் என்று நம்பினார்கள். தொழில் தொடங்கவும், நிறுவனங்களைக் கட்டியெழுப்பவும் அரசின் கட்டுப்பாடுகள் குறையும் என்று எதிர்பார்த்தார்கள். அதேபோல இந்திய மொழிகள் எல்லாவற்றிற்கும் சமத்துவமான பங்களிப்பைக் கொண்ட தேசியப்பார்வை உருவாகும்; அவை வளரும்; இலக்கியங்கள் உருவாகும் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இவையெல்லாவற்றையும் ஒரு ஐந்தாண்டுக்குள் நிறைவேற்ற இயலாது என்பதாலேயே திரும்பவும் அந்த ஆட்சி கொண்டுவரப்பட்டது. அதிக எண்ணிக்கையுடன் அதிக சக்தியுடன். ஆனால் இப்போது நடக்கின்ற ஒவ்வொன்றும் எதிர்த்திசையில் பயணிக்கின்றன. 

அரசியல் தலைமையும் பொருளியல் தலைமையும்

படம்
அரசியல் தலைமையைத் தாண்டி பொருளாதார வல்லுநர்களின் தலைமையே நாட்டைச் சரியாக வழிநடத்தும் என்ற கருத்து உலகமயத்தோடு உருவான கருத்து. உலகமயம் வெளியிலிருந்து அறிமுகமானது போலவே மன்மோகன் சிங் போன்ற பொருளாதார வல்லுநர்களின் அறிமுகமும் தொடர்ந்தது. அவரையொத்த இன்னொரு பொருளாதார முதன்மையை வலியுறுத்தியவரே ப.சிதம்பரம். எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் நிதி அமைச்சராக இருந்தவர். இதுவரை அவரே அதிக ஆண்டுகள் அப்பதவியிலிருந்து நிதித்திட்டங்களை முன்மொழிந்திருக்கிறார். அவரைக் கடந்த ஆண்டு இப்போதுள்ள அரசு நிதிக்காரணங்களுக்காகவே கைது செய்து சிறையில் அடைத்தது. 

சாதி -சமயம் - சட்டமன்றத்தேர்தல்

  இதுவரையிலான தமிழகத் தேர்தல்களில் பணமும் சாதியும் மட்டுமே மேலோங்கிய அலகுகளாக இருந்தன. இந்தமுறை சமயமென்னும் இன்னொரு அலகு தமிழ்நாட்டுத் தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக மாற்றப்பட இருக்கிறது.அதற்கான அறிகுறிகள் வேகமாக நடக்கின்றன. சாதிகளின் திரட்சியும் சமயப்பூசல்களும் ஒருங்கிணைக்கப்பட்ட தேர்தலாக மாறப்போகிறது தமிழகத்தேர்தல். அதன் விளைவுகள் எப்படியிருக்கும் என இப்போது உறுதியாகச் சொ ல்லமுடியாது. வரப்போகும் சட்டமன்றத்தேர்தல் சித்தாந்த எதிரிகளுக்கிடையே நடக்கப்போகும் போட்டி எனச் சொல்லப்படுவது ஒரு பாவனை மட்டுமே.

வெளியே x உள்ளே

படம்
நிகழ்காலத் தமிழகத்தில்/இந்தியாவில் சிந்தித்துச் செயல்படுகிறவர்களாகக் காட்டிக்கொள்ளும் மனிதர்களின் மூளையை அலைக்கழிக்கும் கருத்துரைகள் பலப்பல. தேசியம், தேசப் பாதுகாப்பு, தேசியப் பெருமிதம், தேசியப்பண்பாடு, சமய நல்லிணக்கம் அல்லது சமயச் சார்பின்மை, பிராமண எதிர்ப்பு, சமூக நீதி, தீண்டாமை ஒழிப்பு, பெரும்பான்மை வாதம், சிறுபான்மையினர் பாதுகாப்பு, பெண்களின் விடுதலை என்பன அவற்றுள் சில. இந்த வார்த்தைகளை முன்வைத்து, இவற்றின் எதிர்வுகளாக சிலவற்றைக் காட்டிப் பயமுறுத்தி அவற்றில் எதை ஆதரிக்கிற மனிதனாக நீ இருக்கப் போகிறாய்? எனக் கேட்பது நிகழ்கால மனத்தின் புறநிலை. இந்தப் புறநிலை உண்மையிலிருந்து ஒருவரும் தப்பிவிட முடியாது.