இடுகைகள்

கதைவெளி மனிதர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கதையும் முப்பத்தியோரு நுண்கதைகளும்

  கிராமிய வாழ்வின் உள்ளடுக்குகள் ================================ தனிமனித அந்தரங்கத்திற்குள் அலையும் காதல், காமம், கடவுள், என்ற மூன்றையும் அதனதன் இருப்போடும் உளவியல் கோணங்களோடும் எழுதப்பெற்றுள்ள இந்தக் கதை நீண்ட இடைவெளிக்குப் பின் வாசித்த நல்லதொரு கதை. வாசித்து முடித்தபின் எழுந்த எண்ணங்களும் நினைவுகளும் இந்தியக் கிராமிய வாழ்விற்குள் சாமியாட்டங்களுக்கும் பூசாரிப்பொறுப்புகளுக்கும் திரள் மக்களின் நம்பிக்கைகளுக்கும் இருக்கும் பிணைப்பைத் தீவிரமாகச் சொல்லும் புனைவொன்றை வாசித்த அனுபவமாக நிறைந்தது.

உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை

படம்
உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம் நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.

சாதியும் தேர்தலும்:இமையத்தின் தாலிமேல சத்தியம்

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது.பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும். கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப்படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 70 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பெண்ணெழுத்துகள் : நகர்வின் ஏழு சிறுகதைகளை முன்வைத்து

படம்
  டிஸ்கவரி புக்பேலஸின் நிலவெளி என்ற அச்சிதழின் நீட்சியாக வரும் ‘நகர்வு’ இணைய இதழ் தனது மூன்றாவது இதழைப் பெண்கள் சிறப்பிதழாகப் பதிவேற்றம் செய்துள்ளது. கவிதை, கதை, நூல் மதிப்புரை எனப் பெண்களின் எழுத்துகள் இடம்பெற்றுள்ளன. அதில் வரிசைப்படுத்தப்பெற்றுள்ள சிறுகதைகள்:            1.     உமா மகேஸ்வரி – மோனா 2.     குதிரைச்சவாரி – நறுமுகை தேவி 3.     கொலப்பசி – நாச்சியாள் சுகந்தி 4.     பிடிமானக்கயிறு – அகிலா 5.     மறைப்பு – ப்ரியா 6.     உள்ளங்கை அல்லி - அம்பிகாவர்ஷினி 7.     வெள்ளைப்பூனை – லாவண்யா சுந்தரராஜன்

உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம்

படம்
பத்திரிகைகளின் தேவைக்கு எழுத மறுக்கும் மனநிலை கொண்ட எழுத்துக்காரர்கள் தங்கள் எழுத்தையே தொடர்ந்து தாண்ட நினைக்கும் விருப்பம் கொண்டவர்கள். தொடர்ச்சியாக ஒரு தீவிர எழுத்தாளரின் பனுவல்களை – கவிதை, புனைகதை, நாடகம் என எதுவாயினும் - வாசிக்கும்போது, ஒன்றுக்கொன்று பொதுத்தன்மைகள் இருப்பதுபோலத் தோன்றும். ஆனால் குறிப்பான வேறுபாடொன்றை வாசகர்களுக்குத் தராமல் போகாது. அப்படித்தருவதில் தான் தீவிர இலக்கியம் தன்னைப் பொதுவாசிப்பிலிருந்து வேறுபடுத்திக் காட்டிக்கொள்கிறது.  

நம் சமையலறையில்... : கட்டுப்படுத்தப்பட்ட எழுத்தும் வாசிப்பும்

படம்
கொன்றை அறக்கட்டளை, குமுதம் இதழுடன் இணைந்து நடத்திய சங்க இலக்கியச் சிறுகதைப் போட்டியில் குறிப்பான ஒற்றைக் கட்டுப்பாடு எதுவும் இல்லை. என்றாலும் சிலவகைக் கட்டுப்பாடுகளை உருவாக்கிக் கொள்ளும் நெருக்கடி கொண்டது அப்போட்டி.

க.கலாமோகனின் விலகல் மனம் :

படம்
நீண்ட இடைவெளிக்குப் பின் கலாமோகனின் சிறுகதை ஒன்றை வாசிக்கும் வாய்ப்பைக் கனலி இணைய இதழ் தந்துள்ளது. 1999 இல் எக்ஸில் வெளியீடாக வந்த நிஷ்டை தொகுதிக்குப் பிறகு சிவகாமியின் ஆசிரியத்துவத்தில் வரும் புதிய கோடாங்கியில் சில அபுனைவுகளையும் புனைவுகளையும் எழுதினார். அதன் பிறகு நீண்ட இடைவெளி. இப்போது மிருகம் என்ற தலைப்பில் இந்தக் கதையை எழுதியுள்ளார். இருபதாண்டுகளுக்கு முன்பு வந்த நிஷ்டை தொகுப்பில் இருந்த கதைகளை வாசித்த பின்பு அதன் ஆசிரியரான க.கலாமோகனைப் பற்றிய அப்போதைய மனப்பதிவாக இருந்தது இதுதான்:

உணர்வுகளை எழுதும் நுட்பம்: உமா மகேஸ்வரியின் வெனில்லா

படம்
ஒரு சிறுகதைக்கு ஒற்றை நிகழ்வும் அதன் வழியாகத் தாவிச் செல்லும் மனவுணர்வுகளும் போதும் என்பதைத் தொடர்ச்சியாகத் தனது கதைகள் வழியாக நிரூபித்துக்கொண்டே இருக்கும் எழுத்தாளர் உமாமகேஸ்வரி . ஒற்றை நிகழ்வும் மிகக்குறைவான பாத்திரங்களின் தேர்வும் என்பதால், அவரது கதைகள் வாசிப்பதற்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வதில்லை. அதேநேரம் வாசித்தபின் அக்கதையைப் பற்றிய நினைவுகளைத் தொடர்ச்சியாக கிளப்பிக் கொண்டே இருக்கிறது. அதன் மூலம் வாசித்தவரின் மனதிற்குள்  நீண்ட நேரம் தங்கியிருப்பதாகவும், அக்கதைகளில் இடம்பெற்ற பாத்திரங்களை ஒத்த மனிதர்களின் சந்திப்பை நினைவூட்டுக் கொண்டே இருப்பதாகவும் ஆகிக் கொள்கிறது.  

சல்காவின் கதையைச் சொல்லும் ரைனா

படம்
  பெயரையே தலைப்பாக வைத்து எழுதப்படும் இலக்கியப்பனுவல்கள், அந்தப் பெயருக்குரியவரின் பெருமைகளை அல்லது துயரங்களை விவரித்து நிலைப்படுத்தும் நோக்கம் கொண்டனவாக விரியும். தமிழின் இராமவதாரம் என்னும் இராமாயணம் நல்ல உதாரணம். உலகப்புகழ்பெற்ற நாடகாசிரியர் சேக்ஸ்பியரின் லியர் அரசன், மேக்பத்,ஹாம்லட் போன்றனவும் பெயர்களைத் தலைப்பாக்கிய நாடகங்களே . அவையும் அந்தப் பெயர்களுக்குரியவரைக் குறித்த சொல்லாடல்களையே முதன்மைப்படுத்துவன . இதற்கு மாறானவைப் பெயரைத் தலைப்பாக்காது பெயருக்குரியவர்களின் குணத்தையோ இருப்பையோ தலைப்பாக்குபவை. இப்சனின் பொம்மைவீடு, மக்கள் பகைவன் போன்ற நாடகத்தலைப்புகள் இதற்கு உதாரணங்கள். தமிழின் ஆகக்கூடிய சிறப்புகளைக் கொண்ட சிலப்பதிகாரமும் அதற்கான உதாரணம்தான். இவை தனிமனிதர்களின் பாடுகளைப் பொதுநிலையில் விவாதிக்க விரும்புவன.

மிதுனாவின் நுரைப்பூக்கள்: கரோனாக் காலத்துப் பொன்னகரம்

கனலியில் பதிவேற்றம் கண்டுள்ள ‘நுரைப்பூக்க ள் ’ கதையை எழுதியிருக்கும்  ‘ மிதுனா ’ உண்மையான பெயரா? புனைபெயரா? என்பது தெரியவில்லை. பெண்ணின் பெயர்போலத் தோன்றினாலும் ஆணாக இருக்கவும் வாய்ப்புண்டு என்ற சந்தேகமும் தோன்றுகிறது. அதே நேரத்தில் அவர் புதுமைப்பித்தனின் பொன்னகர ம் கதையை வாசித்தவர் என் பது உறுதியாகத் தெரிகிறது.  மிதுனாவின் நுரைப்பூக்களும் புதுமைப்பித்தனும் பொன்னகரமும் எல்லா விதத்திலும் ஒன்றுபோல -நகலாக - இருக்கின்றன என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் கதை அமைப்பும் பின்னணியும் எழுப்பும் கேள்வியும் அதன் வழியாக எழுப்பப்படும் விசாரணையும் ஒன்று என்ற வகையில் பொன்னகரத்தை வாசித்த மனத்தின் ஒரு வெளிப்பாடே நுரைப்பூக்கள் என்று உறுதியாகச் சொல்லமுடிகிறது.

இன்னுமொரு போரை நினைத்தல் : ஆசி கந்தராஜாவின் நரசிம்மம்

படம்
ஈழத்தமிழ்ப் புனைகதைகள் இன்னும் போர்க்கால நினைவுகளிலிருந்து மீளவில்லை. 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவுகளையும் அதற்கு முந்திய கால் நூற்றாண்டுப் போர்க் காலத்தையும் மறந்து விட்டு ஈழநிலப்பின்னணியில் புனைவுகள்  எழுதவேண்டும் என்றால் அதன் கோரத்தை - வடுக்களை- பாதிப்பை உணராத தலைமுறை ஒன்று உருவாகி வரவேண்டும். அதுவரை போர்க் காலம் என்பது நேரடியாகவும் நினைவுகளாகவும் பதிவு செய்யப்படுவது தவிர்க்க முடியாதது. உள்ளே இருப்பவர்களும் வெளியே புலம்பெயர்ந்தவர்களும் திருப்பத்திரும்ப அதையே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்.

அக உலகத்துப் பெண் பிரதிமைகள் : பிரமிளா பிரதீபனின் இரண்டு கதைகளை முன்வைத்து

படம்
இலங்கையின் மலையகப் பின்னணியில் தனது முதல் நாவல் – கட்டுபொல்– மூலம் பரவலான அறிமுகம் பெற்ற பிரமிளா பிரதீபன் கவனமான இடைவெளியுடன் சிறுகதைகளை எழுதிவருகிறார். அவர் எழுதிய கதைகளைப் பெரும்பாலும் வாசித்திருக்கிறேன். ஒரு கதைக்கும் இன்னொரு கதைக்கும் இடையே கால இடைவெளியை உண்டாக்கிக் கொள்வதோடு பேசுபொருள், பேசும் முறை, எழுப்பும் உணர்வுகள் என எல்லா நிலையிலும் புதியனவற்றுக்குள் நுழைகிறார். தனது வாசகர்களுக்கான வாசிப்புத் திளைப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார். இப்படியான கதைகளை மட்டுமே எழுதுபவர் என்ற அடையாளத்தை உருவாக்காமல் வேறுபட்ட கதைகளைத் தரக்கூடியவர் என்பதைக் காட்டுகின்றன அவரது சிறுகதைகள்.

தெய்வீகனின் மூன்று கதைகள்

புலம்பெயர் எழுத்தாளர்களில் கவனிக்கத்தக்க கதைகளை எழுதிவரும் ப.தெய்வீகன் ஆஸ்திரேலியாவில் வசிப்பவர். அவரது கதைகள் குறித்த பதிவுகள் இங்கே

கனலியில் மூன்று சிறுகதைகள்

அண்மையில் பதிவேற்றம் பெற்றுள்ள கனலி -இணைய இதழில் மூன்று சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. பெரும்பாலும் கனலியில் புதிதாக எழுதப்பெற்ற கதைகளோடு புதையல் என ஏற்கெனவே வேறுவடிவில் வந்த ஒரு கதையைப் பெட்டகம் எனத் தலைப்பிட்டு வெளியிடுகிறார்கள். இந்த இதழ்ப் பெட்டகமாக வந்துள்ள கதை சு.வேணுகோபாலின் பூமாரியின் இன்றைய பொழுது.இந்தக் கனலிக்காகப் பெறப்பட்டுப் பதிவேற்றவை  பெருமாள் முருகனின் முத்தம்  இரா.கோபாலகிருஷ்ணனின் யோகம்  இரா முருகனின் ஒற்றைப்பயணி வரும் ரயில் நிலையம். 

அனோஜனின் புனைவு உலகம்

சமநிலை பேணும் குடும்ப அமைப்பு  ==================================  ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது. 

கடவுளும் காமமும்- உமையாழின் மூன்று கதைகள்

படம்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு, எழுத்திற்குள் அலையும் பாத்திரங்களையும், உடல் மற்றும் மன ரீதியான அலைவுகளையும் முன்வைத்துப் பேசுகிறது. இதனைச் சரியான இலக்கியத்திறனாய்வுக் கலைச்சொல்லால் குறிக்க வேண்டுமென்றால் ‘உள்ளடக்கச் சொல்லாடல் (Content Discoruse)’ எனக் குறிக்கலாம். உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தை விவரிக்கும்போதுதான் ‘எப்படி எழுதுகிறார்கள்?’ என்பதைப் பேச நேரிடுகிறது. அந்தப் பேச்சு, எழுதுபவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றிய பேச்சுகளாக மாறிவிடும். அதனைக் குறிக்கும் கலைச்சொல்லாக வடிவச் சொல்லாடல் (Structural Discourse) என்பது பயன்பாட்டில் இருக்கிறது. வடிவச்சொல்லாடல் தான் இலக்கிய நுட்பங்களைக் கண்டறிந்து விதந்த

வாசித்த கதைகளும் காரணங்களும்

வாசிப்பின் காரணங்கள் கண்ணில் படும் எல்லாக்கதைகளையும் வாசிப்பதுமில்லை; வாசித்த கதைகள் எல்லாவற்றையும் விவாதிப்பதும் இல்லை. சில கதைகளை வாசித்தபின் எழுதத்தோன்றும். எழுதிய குறிப்புகள் முகநூல் ஓட்டத்தில் காணாமல் போயிருக்கின்றன. சிலவற்றைத் தொகுக்கமுடிந்துள்ளது. முகநூலில் நான் எழுதிய குறிப்புகளை இந்தப் பக்கத்தில் படிக்கலாம்.சில கதைகளைச் சொல்முறைக்காகப் பேசியிருப்பேன்; சில கதைகளைப் பாத்திர முன்வைப்புக்காகப் பேசியிருக்கலாம்; சில கதைகளை அவை எழுப்பும் உணர்வுநிலைக்காகப் பேசியிருப்பேன். சில கதைகளின் விவரிப்பு நுட்பங்களுக்காகவும் பிடித்திருக்கும்.  வாசிக்கப்பட்ட கதைகள் ------------------------------------------------ ஜெயமோகனின் ஒரு கோப்பை காபி இமையத்தின் தாலிமேல சத்தியம் வண்ணதாசனின் அதற்குமேல் இரா,முருகவேளின் சர்ரியலிச இரவு வா.மு.கோமுவின் ஒரு காதல் கதை கலாப்ரியாவின் தனுக்கோடி

தலைப்புப் பொருத்தம் தேடி ஒரு வாசிப்பு

விடுமுறைதினத்தில் ஓர் அனார்க்கிஸ்ட் கதையை முன்வைத்து  சில பனுவல்களின் தலைப்பு உருவாக்கும் ஆர்வம் காரணமாக வாசிப்பு ஆரம்பமாகும். அப்படி ஆரம்பிக்கும் ஆர்வம், தலைப்புக்கான பொருத்தம் அல்லது தொடர்பு எங்கே இருக்கிறது தேடிக்கொண்டே வாசிக்கத் தொடங்கும். ஒற்றைச் சொல்லாக - பெயராகவோ, பெயர்ச்சொல்லாகவோ - இருக்கும் தலைப்புகள் அப்படியொரு ஆர்வத்தைத் தூண்டுவதில்லை. உருவகமாகவோ, குறியீடாகவோ, படிமமாகவோ அமையும் தலைப்புகள் கவிதைக்கான தலைப்புகளாக இருந்து வாசிப்பின்பத்தைக் கூட்டும். கதைகளிலும் கூட சில தலைப்புகள் ஆரம்பத்தில் நேர்ப்பொருளிலிருந்து விலகிச் சூழலில் வேறுவிதமான அர்த்தங்களுக்குள் வாசிப்பவரை நகர்த்திக் கொண்டு போவதுண்டு. 

கதைசொல்லுதலின் சாகசம் - ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள் கதையை முன்வைத்து

ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை.  சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

சொல்லித்தீராத சுமைகள்

படம்
எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும் காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள்.