இடுகைகள்

மாறும் அர்த்தங்களும் மாற்றப்படும் தகவல்கள்

படம்
  சமூக ஊடகங்களின் வரவால் ஒவ்வொரு துறையும் அவற்றின் முந்திய அடையாளத்தை இழந்துவிட்டன. அந்தந்தத் துறைகளுக்கான நுட்பங்கள், திறன்கள், வெளிப்பாட்டு உத்திகள் எல்லாம் சிதைக்கப்பட்டு விட்டன. சராசரித் தன்மையே மேன்மையானதாகக் காட்டிக்கொள்கின்றன. அவற்றைக் கொண்டாடும் மனநிலைகள் மேலோங்கி நிற்கின்றன.

ஊழல் ஒழிப்பு என்னும் சொல்லாடல்

படம்

சென்னை நாளில்...

2026, ஆகஸ்டு, 22 இந்தச் சென்னை நாளில் இந்த விடுதியைப் பற்றிச் சொல்வது தவறில்லை. அண்மைக்காலங்களில் சென்னைக்கு வரும்போது இங்குதான் தங்கிக் கொள்கின்றேன். ஊரிலிருந்து கிளம்பும்போது ஒரு தகவல் சொல்லிவிட்டால் நமக்கென ஓர் அறையை ஏற்பாடு செய்துதரும் அளவுக்குப் பழக்கமாகி விட்டது. முன்பணம் செலுத்தினால் அறை என்பதெல்லாம் இல்லை. அலைபேசியில் சொன்னால் போதும். அதன் மேலாளர் ஒத்துக்கொள்வார். குபேர் இன் . என்ற பெயருடைய அந்த விடுதி நந்தனம் பகுதியிலேயே இரண்டு இடங்களில் இருக்கின்றன . சில இடங்களில் காலை உணவு இலவசம் என்ற வசதியுடன் கிடைக்கும். மற்ற நேரங்களில் சொல்லிவைத்து சாப்பிட்டுக் கொள்ளலாம்.  புத்தகக் கண்காட்சி நந்தனம் விளையாட்டு அரங்கிற்கு மாறியபின் இந்த இடம் அறிமுகமானது. புத்தகக் கண்காட்சிக்காக வரும் நாட்களில் தங்குவதற்கென இந்த விடுதியை அறிமுகம் செய்தது தளவாய் சுந்தரம் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அவர் ஒருவிதத்தில் எனது மாணவர். திருநெல்வேலி மனோன்மணியத்தில் தொடர்பியல் துறை மாணவராக இருந்தபோது படைப்பிலக்கியம் என்ற விருப்பப்பாடத்தாளுக்காகத் தமிழியல் துறைக்கு வந்தவர்களில் அவரும் ஒருவர். அதுமுதல் நண்பர்களா...

ஷிபு எஸ். கொட்டாரம்- எனது மாணவர்; எனது ஆசிரியர்

படம்
வாழும்போது புகழ்பட வாழ்தல்: ------------------------------------------ ஷிபு எஸ். கொட்டாரம் என்னும் அரங்கியலாளன் --------------------------------- புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் தொடங்கப்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியில் நான் ஓராண்டுக்கு முன்னால் இணைந்தேன்; அவன் ஓராண்டுக்குப் பின்னால் சேர்ந்தான். ஓராண்டு இடைவெளி மட்டுமல்ல. அவன் சேர்ந்தது மாணவனாக; நான் இணைந்தது விரிவுரையாளராக. ஆனால் அவன் வந்தது தொடங்கி எங்களை ஆசிரிய -மாணவ உறவில் வைத்துக்கொள்ளவில்லை. இருவரும் கற்பிப்பவர்களாகவும் கற்பவர்களாகவுமே சேர்ந்து பயணித்தோம். அண்மையில் (07-080-2026) இந்த உலகத்தில் அவனது காலம் முடிந்துவிட்டது. திருச்சூர் நாடகப்பள்ளியின் துறைத்தலைவராக இருந்தபோது அந்த மரணம் நிகழ்ந்துவிட்டது. தோன்றிற்புகழொடு தோன்றுக என்பதைவிடவும் வாழும்போது புகழ்பட வாழவேண்டும் என்பதற்கு அவன் உதாரணம். அவனது நாடகவியல் பங்களிப்பைக் கொண்டாடும் விதமாகக் கேரள அரசாங்கம் மரியாதை செய்து அனுப்பியிருக்கின்றது. புதுச்சேரி நாடகப்பள்ளியும் தனது முன்னோடி மாணவனுக்கு நல்லதொரு அஞ்சலியைச் செலுத்தியிருக்கின்றது. அத்துறையில் கற்றுத் தொடர்ந்து அரங்க...

சிட்டுக்குருவியின் அழகும் வல்லூறின் வலிமையும்: தேசியவாதமும் தேசிய இனங்களின் தன்னுரிமையும்

படம்
தேசியவாதம் என்பதையும் தேசிய இனவாதம் என்பதைக் கருத்தியல் அடிப்படையில் சொல்லாடல்களாகப் பேசிக்கொண்டிருக்கின்றோம். அதனையே அனைவருக்கும் எளிதாகப் புரியும் விதமாகப் பேசுவதென்றால் ‘ நாம் வாழும் நாடு பரப்பளவில் பெரியதொரு நாடாக இருக்க வேண்டுமா? அல்லது சின்னதான நாடாக இருக்க வேண்டுமா? எனக் கேட்டு விடை காணுவதாகச் சொல்லலாம். இவ்விரு எதிர்நிலையில் எது நல்லது?

பூமணியின் நினைவாக...

படம்
பூமணி! நீண்ட நாள் வாசகனின் இந்த வாழ்த்தை ஏற்றுக்கொள்ளுங்கள்!! பூமணியின் அஞ்ஞாடி நாவல் 2014 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடெமி விருதைப் பெறுகின்றது என்ற அறிவிப்பு வந்தது. அறிவிப்பைக் கேட்டதும் அனுப்பப்பட்ட வாழ்த்துக்கடிதத்தின் தலைப்பு இது. கட்டுரை வடிவிலான அந்தக் கடிதத்தைப் புலனத்தின் வழியே அனுப்பியதும் அவரே அழைத்துப் பேசினார். இருவரும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டோம்.

நினைவுகளை எழுதுதலும் அழித்தலும் - தலித் இதழின் மூன்று சிறுகதைகள்

 ஆகஸ்டு,2026 தலித் இதழில் மூன்று சிறுகதைகள் அச்சாகியுள்ளன.               1. கரடிகுளம் ஜெயப்பாரதிப்ரியாவின் 'பால்ய சோகம்',         2. பிரதிபா ஜெயச்சந்திரனின் 'தாத்தா குறிப்புச்சிட்டைகளின் குழல் டப்பா', 3. க.மூர்த்தியின் 'பாறையில் முளைத்துவரும் அப்பாவின் தெத்துப்பல்' . நினைவுகளை எழுதுதல் கடந்த காலத்தின் நினைவுகளுக்குள் பயணிப்பது பெரும்பாலான புனைகதைகளின் பொதுக்கூறு என்றாலும் தொடக்கக்காலத் தலித் புனை கதைகள் கடந்த காலத்தை எழுதுவதையே தலித் இலக்கியத்தின் அழகியலாக முன்வைத்தன. தமிழில் மட்டுமல்லாமல் இந்திய மொழிகள் பலவற்றில் எழுதப்பெற்ற தலித் தன்வரலாறுகளின் பெருக்கத்தை நினைவுபடுத்திக் கொண்டால் இந்தக் கூற்றின் உண்மை புரியவரலாம்.   இம்மாதத் தலித் இதழில் வந்துள்ள மூன்று கதைகளும் கடந்த காலத்திற்குள் பயணிக்கும் சொல்முறைமையையே கொண்டுள்ளன. மூன்று கதைகளில் பால்யசோகம் கதை தலித் இதழில் அச்சாகத்தக்க சிறுகதையாக இல்லை. " விருப்பமான முறையில் தனது தலைமுடியை வெட்டிக்கொள்ள நினைக்கும் சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றாத தந்தையின்...

ரவிக்குமார் கவிதைகள்

படம்
மரணம் என்பதும் தற்கொலை என்பதும் கொலை என்பதும் கருத்து ரீதியானவை அல்ல; செயல் ரீதியானவை. புறவயமான நடப்பைக் குறித்துப் பயன்படும் இச்சொற்கள் ஒருமையாக ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளும், ஒருமையிலிருந்து பன்மைக்கு மாறும்போது உருவாக்கும் உணர்வுகளும் ஒன்றுபோலானவை அல்ல. அதேபோல தன்மை, முன்னிலை என்ற இடங்களுக்குரியனவாக நின்று ஒலிக்கும்போது உண்டாக்கும் உணர்வுகளுக்கும் படர்க்கையாக நின்று ஒலிக்கும்போது உருவாக்கும் உணர்வுகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் இருக்கின்றன.

கோவையோடு ஞானியும்

படம்
கோவை புத்தகக் கண்காட்சி(2023)க்குப் போயிருந்தேன். காட்சி அரங்குகளில் சந்தித்தவர்களில் - மேடையில் இருந்தவர்களில் என எங்கும் அவரின் பெயர் திரும்பத்திரும்ப உச்சரிக்கப்பட்டது. கண்காட்சியில் மட்டும் என்றுகூடச் சொல்லமுடியாது. கோவையில் இருந்த அந்த இரண்டு ஆண்டுகளில் நான் சந்திந்த பலரும் அவரது பெயரைச் சொல்வதும் அவரது தாக்கம் அவர்களுக்குள் எப்படி இருந்தது என விவரிப்பதுமாகவே இருந்தார்கள். ஞானி கோவையின் இலக்கியமுகமாக இருந்தார் என்பதைத் திரும்பத்திரும்ப உணரமுடிந்தது.

ஒற்றைத்தன்மையும் கல்வித்துறையும்

படம்
துணைவேந்தர்கள் நியமனம் எப்போதும் அரசியல் சார்புடன் தான் நடக்கின்றது. அரசியல் என்பதில் இரண்டு நிலைகள் உண்டு. முதலாவது கருத்தியல் அரசியல்; இரண்டாவது நடைமுறை அரசியல்.  ஆசிரியனாகப் பல பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் 40 ஆண்டுகள் கல்விப்புலங்களில் உலாவிய எனக்கு இந்த இரண்டு நிலைப்பட்ட அரசியல் மீதும் ஏற்புடைய கருத்துகளும் உள்ளன; மறுக்கும் கருத்துகளும் உள்ளன. மாநிலப்பட்டியலில் இருந்த கல்வி, பொதுப்பட்டியலுக்கு நகர்த்தப்பட்டதைக்கூட இரண்டுவிதமாகவே புரிந்துகொண்டுள்ளேன்.

லிங்கம்: அதிகாரத்தின் பாதைகள்

படம்
"தளபதி, அரசனாக நினைத்துவிட்டால்... ?" - இது சேக்ஸ்பியரின் மேக்பத் நாடகத்தின் அனுமானம் (Premise ). அந்த அனுமானத்தின் மேல் பின்னப்பட்ட காட்சிகளையும் அங்கங்களையும் சரியாகச் செதுக்கி உருவாக்கிய மேக்பெத் நாடகம் தொடர்ந்து மேடையேற்றப்படும் நாடகம். சேக்ஸ்பியர் எழுதிய ஆங்கிலத்தில் மட்டுமல்லாமல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழியாக்கம் செய்யப்பட்டும் தழுவலாக்கம் செய்யப்பட்டும் நிகழ்த்தப்படுகின்றன.

புலம்பெயர் இலக்கியமும் ஐக்கிய அமெரிக்கத் தமிழர்களும்

படம்
புலப்பெயர் இலக்கியம் -புரிதலுக்காக குறிப்பிட்ட ஒருமொழியைப் பேச்சுமொழியாகக் கொண்ட மனிதர்கள் புலம்பெயர்ந்து, வெவ்வேறு நிலவியல் பின்னணியில் வாழ நேர்வதில் மகிழ்ச்சிகளும் உண்டு; துயரங்களும் உண்டு. 'இது என்நாடு' என்ற எண்ணம் உண்டாக்கும் மகிழ்ச்சிக்குள்ளேயேகூட, எனது ஊரில் சுற்றமும் பந்துக்களும் சூழ வாழ முடியவில்லையே என்ற எண்ணங்களும் உருவாவதைத் தவிர்க்க முடியாது. இவ்வகை எண்ணங்களும் மனவுணர்களும் உலக இலக்கியத்தில் தொடர்ந்து எழுதப்படும் உரிப்பொருட்களாக உள்ளன. தமிழின் செவ்வியல் கவிதையியலில் ‘பிரிவும் பிரிவின் நிமித்த்மும்’ காரணமாக எழுதப்பெற்றவை பாலைத் திணைப்பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. வெவ்வேறு இடங்களுக்குப் பிரிய நேர்ந்த மனிதர்களுக்கு வெவ்வேறு காரணங்கள் இருந்தன.

பேராசிரியர் அ. ராமசாமியின் பெண்ணிய வாசிப்புகள்

படம்
"அறிவு ஒவ்வொருவருக்கும் வேறுவேறாய் இருக்கிறது. வேறுவேறு அளவுகள் தானே வந்ததில்லை. இருப்பாலும் சூழலாலும் உருவாவது. இருப்பு என்பதும் உருவாக்கம் என்பதும் நிகழ்கால இருப்பு மட்டுமல்ல. கடந்த கால வாய்ப்புகளும் பயன்படுத்திக்கொண்டு வளர்ந்ததும் பற்றியதுதான்."

உயிர்மைச் சிறுகதைகள்.

இணைய இதழாயினும் அச்சிதழாயினும் முதல் வாசிப்புக்கான விருப்பம் அவற்றில் வரக்கூடிய சிறுகதைகளே. அதன் பின்னரே கவிதை, கட்டுரை என நகர்வேன். மாதந்தோறும் நான்கைந்து கதைகளை வெளியிடும் உயிர்மையில் ஒவ்வொரு மாதமும் ஒன்றிரண்டு கதைகள் முக்கியமான கதையாக – புத்தம் புதுக்கதையாக இருக்கும் என்பதால் கடந்த ஆறுமாதமாக வாசிக்காத கதைகளையும் வாசிக்கவேண்டும். ஆனால் இரண்டு நாட்களாக வாசித்த கதைகள் இந்த மாதத்தில் வந்துள்ள கதைகளை. 2026, ஜூன் இதழில் 5 சிறுகதைகளை அச்சிட்டுள்ளது.

காசி மாரியப்பன் என்னும் கருத்தியல் கடத்தி

படம்
நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள், அவரால் உருவாக்கப்பட்டவர்கள் எனப் பல தரப்பினருக்கும் ஒருவர் தந்துள்ள அன்பு, மரியாதை, உறவுநிலை, வழிகாட்டுதல் எனப் பல தளத்தைச் சொல்லும் கட்டுரைகள் அடங்கிய ‘காசி ஐயா’ தொகுப்பை வாசிக்க வாசிக்க எனக்கு முதலில் தோன்றியது ஆசிரியத் தொழிலில் மதிப்புமிக்க பக்கங்களை வாசிக்கிறோம் என்ற மனநிலை. நண்பர் காசி.மாரியப்பன் அளவுக்கு மாணாக்கர்களின் மரியாதையும் அன்பையும் பெற்ற ஆசிரியராக நான் இருந்ததில்லை என்ற எண்ணம் அடுத்துத் தோன்றியது. 

திருமங்கலம் தொகுதி வாக்களிப்பும் சேடபட்டி இரா.முத்தையாவும்.

படம்
திருமங்கலம் தொகுதி : வாக்களிப்பு 2026 சட்டமன்றத் தேர்தலின்போது இந்தியாவில் இல்லை. அதனால் எனது தொகுதியான திருமங்கலத்தில் வாக்களிக்கவில்லை. இருந்திருந்தால் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வெற்றி பெற்றுள்ள மு.மணிமாறனுக்கே வாக்களித்திருப்பேன். இதை தேர்தல் நாளன்றே பதிவாக எழுதியிருந்தேன். அதற்குக் காரணம் தி.மு.க.வை ஆதரிப்பவன் என்பதைத் தாண்டி மு.மணிமாறனை ஆதரிக்கக் கூடுதல் காரணம் உண்டு. மு.மணிமாறனின் தந்தை சேடபட்டி முத்தையாவோடு எனக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. (அவர் மரணத்தின் போது எழுதிய நினைவுக்குறிப்பு பின்னூட்டத்தில் உள்ளது) அவரோடு விரிவான அரசியல் உரையாடல்கள் செய்துள்ளேன். மாணவப்பருவத்திலிருந்து அரசியல் கற்றுத் திராவிட இயக்கத்தின் அடிப்படையான கொள்கைகளோடு நம்பிக்கை கொண்டிருந்தவர். எனது கிராமம் இருந்த சேடபட்டித் தொகுதியின் நீண்டகால உறுப்பினராக இருந்தவர். எனது வாழ்க்கையில் சில திருப்பங்களை ஏற்படுத்தியவர் அவர். அவருக்காக இரட்டை இலையில் மூன்று தடவை வாக்களித்துள்ளேன்.

காண்டாமிருகமென்னும் அபத்த நாடக நிகழ்வெளி

படம்
சில பனுவல்கள் வாசிக்கும் போது புரியாமல் போய்விடும். ஆனால் அதன் அர்த்தம் விளங்கும்படியான நிகழ்வொன்றை நாம் சந்தித்து விட்டால் அந்தப் படைப்பு புரியத்தொடங்கி விடும். அரசியல் அதிகாரம் குறித்த விமரிசனத்திற்கு அபத்த நாடக வகையைத் திறமையாகப் பயன்படுத்திய அயனெஸ்கோவின் காண்டாமிருகம் (RHINOCEROS) அப்படிப் பட்ட நாடகம் என்பது எனது சொந்த அனுபவம். முதல் வாசிப்பில் கடைசி வரை காண்டாமிருகம் வரவே இல்லையே எனக் கேட்டுப் பதில் தெரியாமல் மூடி வைத்து விட்டு மறந்திருந்தேன். ஆனால் அந்தப் பிரதி வெவ்வேறு நிகழ்வுகள் நடக்கும் போது ஒவ்வொரு விதமாக அர்த்தம் தரும் பிரதியாக இருந்திருக்கிறது.  ஒரு நிகழ்வு நடந்த போது கிடைத்த அர்த்தத்தைச் சொல்வதற்கு முன்னால், முதல் தடவை அதன் அர்த்தத்தைப் புரிய வைத்த நிகழ்வைப் பார்க்கலாம். அப்போது நான் பாண்டிச்சேரியில் நாடகப்பள்ளியில் பணியாற்றினேன். முக்கியமான நாடகப் பிரதிகளைப் படிப்பதைக் கடமையாகவும் விருப்பமாகவும் செய்து கொண்டிருந்த நேரம். அயனெஸ்கோவின் காண்டாமிருகம் நாடகத்தை வாசித்து ஒரு வாரம் இருக்கும். நாங்கள் வசித்த புறநகரின் நலச்சங்கம் ஏற்பாடு செய்த ஒருநாள் சுற்றுலாவில் நானும் என...

தமிழகக்கல்வித்துறை: முன்னிற்கும் சவால்கள்

படம்
தமிழக வெற்றிக்கழகத்தின் அரசு, ஒன்றிய அரசின் நோக்கங்களோடு எந்தெந்த நிலையில் ஒத்துப்போகும், எந்தெந்த நிலையில் தனது தனித்துவத்தைப் பேணும் என்பதற்குச் சாட்சியாக இருக்கப்போவது தமிழ்நாட்டு அரசின் கல்வித்துறை. முதல்வர் ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள த.வெ.க. அரசின் பள்ளிக்கல்வித்துறையும் , உயர்கல்வித்துறையும் பெரும் சவால்களை எதிர்கொள்ள இருக்கின்றன.

மோகனரங்கனின் கவிதையாக்கமும் கருத்துலகமும்

படம்
பனுவலாக்கமும் வாசிப்பும் இலக்கியப்பனுவலாக்கம் இப்படித்தான் நடக்கிறது என உறுதியாகச் சொல்ல முடியாது. அதே நேரம் கதைப் பின்னல் கொண்ட புனைகதை, நாடகம் போன்றனவற்றை முன் திட்டமிடலின்றி எழுதிவிடுவதும் நடப்பதில்லை. எழுத்தாளர்களின் முன் திட்டமிடல்கள் இவ்விருவகை இலக்கியப் பனுவலாக்கத்திலும் ஒருவித முறைமையை உருவாக்கவே செய்கின்றன. ஆனால் பா அல்லது கவிதைக்கு முன் திட்டமிடல்கள் தேவைப்படுவதில்லை. திட்டமிடாமல் எழுதப்பட்ட கவிதைகளைப் பின்னர் ஒழுங்குபடுத்தும்போது ஒருவகைத் திட்டமிடல்களும் முறைமைகளும் உருவாவது நடக்கலாம்.

குடி நுழைவும் இருப்பும்

படம்
மே,15, 2026 இன்று மாலை அமெரிக்காவின் டல்லாஸ் நகரிலிருந்து விமானம் ஏறியிருக்க வேண்டும். சென்னையிலிருந்து தோஹா வழியாக வந்த கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் விமானம் டல்லாஸ் நகரில் இறக்கிவிட்ட தேதி நவம்பர், 17, 2025. இன்றோடு அனுமதிக்கப்பட்ட 180 நாட்கள் முடிந்துவிட்டன. நான் பெற்றுவந்த குடிநுழைவு அனுமதியின் பெயர் B -2. மகிழ்ச்சியாகத் தங்கியிருந்தல், விடுமுறையைக் கழித்தல் முதலான காரணங்களோடு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்கப்படும் இந்த அனுமதியில் ஒருவர் தொடர்ந்து 180 நாட்கள் அமெரிக்காவிற்குள் இருக்கலாம். முழுமையான நாட்களும் இருந்துவிட்டேன். ஆனாலும் இங்கிருந்து கிளம்பவில்லை.