இடுகைகள்

மார்ச், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காட்சிகள் நகர்கின்றன

படம்
ஒரு சினிமா வெளிவந்து முதல் காட்சி முடிவதற்கு முன்பே சில நூறு விமரிசனக் குறிப்புகள் வந்துவிழும் காலத்தில் இருக்கிறோம். சமூக ஊடகங்களின் வரவால் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தில் தமிழ்ச் சினிமா உலகம் -சினிமாவைத் தொழிலாக நம்பியிருக்கும் தொழிலாளர்களும் வணிகர்களும் பெரிதாகப் பாதிக்கப்படுகிறார்கள் எனப் பலரும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். என்னைக் கேட்டால் சமூக ஊடகங்களின் வரவால் அதிகம் பாதிக்கப்பட்டது சினிமா உலகம் அல்ல; பத்திரிகை உலகம் என்றே சொல்வேன். குறிப்பாகத் தினசரிகளிலும் வார இதழ்களிலும் சினிமா விமரிசனங்களை எழுதிவந்த பத்திரிகையாளர்கள் தான் முதன்மையான நெருக்கடியைச் சந்தித்திருக்கிறார்கள். பல இதழ்கள் அவை வெளியிடும் சினிமா விமரிசனங்களுக்கு எந்தப் பொருத்தமும் பலனும் இல்லையென்று தெரிந்து அவற்றை வெளியிடுவதை நிறுத்திவிட்டன. அப்படி நிறுத்தாத பத்திரிகைகளின் விமரிசனங்களை வாசித்துவிட்டுத் திரையரங்கிற்குப் போவதா? அல்லது போகாமல் தவிர்ப்பதா? என்று முடிவெடுத்த காலமெல்லாம் இப்போது இல்லையென்று தெரிந்தபோதிலும் பழக்கத்தை நிறுத்த முடியாத மனநிலையில் சினிமா விமரிசனங்களை வெளியிடுகின்றன.

நாடக ஆசிரியரைத் தேடும் பாத்திரங்கள்

படம்
தமிழில் கவிதைகளும் கதைகளும் எழுதப்படும் அளவுக்கு நாடகங்கள் எழுதப்படவில்லையே? எழுதப்பட்ட நாடகங்களும் நிகழ்கால மனிதர்களைப் பாத்திரங்களாக்காமல் கடந்த காலத்திற்குள் நுழைகின்றனவே? தொன்மங்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் நினைவூட்டும் நாடகப்பனுவல்களே எழுதப்பட்டு மேடையேற்றப்படுகின்றனவே? இதன் பின்னணிகள் என்னவாக இருக்கும் என்ற கேள்வியைப் பல இடங்களில் சந்தித்ததுண்டு. புதுவைப் பல்கலைக்கழக நாடகத்துறையில் பணியாற்றி விட்டு வெளியேறிய பின்னும் நாடகங்கள் குறித்தும் அரங்க நிகழ்வுகளையும் அதன் தொடர்ச்சியாகத் திரைப்படங்களையும் ஊடகங்களையும் கவனித்து எழுதுபவன் என்பதால் இந்தக் கேள்விகளுக்கு என்னிடம் பதிலை எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், நான் இதற்கான பதில்களை உடனடியாகச் சொன்னதில்லை. ஆனால் சொல்ல வேண்டிய கேள்விகள் இவை என்பதையும் மறுக்கவில்லை; மறக்கவில்லை.

கலாப்ரியாவின் நகர்வு

படம்
கலாப்ரியா, தனது கவி அடையாளத்தை மாற்றிப் ’புனைகதையாளர்’ அடையாளத்தை உருவாக்கத்தைத் தொடர்ச்சியாக முயன்று வருகிறார். அந்த முயற்சியில் ஓர் எல்லையைத் தொட்ட சிறுகதையாக இந்த மாத உயிர்மையில் வந்துள்ள ”கொடிமரம்” கதையைக் குறிப்பிடத் தோன்றுகிறது. இந்தக் கதையை வாசித்ததற்குச் சில நாட்கள் முன்பு தான் பிப்ரவரி மாத அந்திமழையில் வந்த ‘ பிள்ளைப்பூச்சி’ கதையை வாசித்தேன். அதற்கு ஒரு வாரம் முன்பு பிப்ரவரி மாத உயிர்மையில் வந்த ‘ஆர்மோனியம்’ கதையையும் வாசித்திருந்தேன்.

சாதியின் இருப்பு: சந்திக்கும் நெருக்கடிகள்

படம்
  சாதி: வெளிப்பாடுகள் 1] திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் உருவாகியுள்ள கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக்கட்சியின் அறிவிக்கப்பட்ட வேட்பாளர் சூரியமூர்த்தி மாற்றப்பட்டுள்ளார். அவர் மாற்றப்பட்டதற்குக் காரணம் சமூக ஊடகங்களும் கூட்டணிக்கட்சிகளும் தந்த நெருக்கடிகளே. உடனடியாகக் கூட்டணித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருவர் சாதி ஆதிக்கப்பேச்சுகளோடும் செயல்பாடுகளுடனும்.சாதி ஆதிக்க மனநிலைக் கருத்துகளுடனும் பொதுத்தளத்தில் - தேர்தல் அரசியலில் இயங்கமுடியாது என்பதை இந்த மாற்றம் காட்டுகிறது.

அருண் மாதேஸ்வரனின் இரண்டு சினிமாக்கள்

படம்
ஒரு இயக்குநர் முந்தைய படங்களைப் போலவே தான் அடுத்தடுத்துப் படங்கள் செய்வார் என்று நினைக்கவேண்டியதில்லை. சினிமாவில் இயங்கும் ஒருவர் வெவ்வேறு வகைப்பாட்டில் வெளிப்படுவார் என்பதைச் சில படங்கள் வந்தபின் கணித்துச் சொல்லலாம். இப்போது இளையராஜாவின் வாழ்க்கைப் படத்தை இயக்கவுள்ள அருண் மாதேஸ்வரனின் மூன்று படங்களில் முதல் படமான ராக்கியைப் பார்த்ததில்லை. ஆனால் சாணிக்காயிதம், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டையும் பார்த்துள்ளேன். அவ்விரண்டு படங்களின் நடப்பியல் தன்மை, குரூரத்தின் வெளிப்பாடு. வன்முறையைக் கொண்டுள்ள சமூகத்தின் மீது திரும்பத்தாக்கும் தனிநபர் வன்முறையைப் பேசிய படங்கள். ஆனால் இவ்விரண்டு படங்களுமே இயக்குநரின் கலை நோக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தாத படங்களே. ஒருவேளை வாழ்க்கைப் படம் என்ற வகைப்பாட்டில் அவர் தனது வெளிப்பாட்டைச் சரியாகத் தரக்கூடும். அந்தப்படம் வரும்போது விவாதிக்கலாம். இப்போது முந்தைய படங்களைப் பார்த்து எழுதிய குறிப்புகளை வாசித்துப் பாருங்கள்

இசைக்கலைஞர் இளையராஜா

படம்
வாழ்ந்துகொண்டிருக்கும் ஓர் ஆளுமையைக் குறித்த சினிமா என்பது தமிழுக்குப் புதிய ஒன்று. இளையராஜாவின் வாழ்க்கைக்கதை சினிமாவாக வந்தால் அது ஒரு தொடக்கமாகக் கூட இருக்கலாம். தாங்கள் வாழுங்காலத்தில் அவர்களே எழுதிய நூல்களாகவும் பத்திரிகையாளர்களின் உதவியோடு எழுதப்பெற்ற தொடர்கட்டுரைகள் வழியாகவும் வெவ்வேறு நகரங்களில் நிற்கும் சிலைகளாகவும் தங்கள் ஆளுமைப்பிம்பங்களை உருவாக்கிய அரசியல் ஆளுமைகள் கூட ஒரு சினிமாவாகத் தங்கள் வரலாற்றை எடுத்துப் பார்க்கும் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளவில்லை. இசைக்கலைஞர் இளையராஜா இப்போது முன்வந்துள்ளார்.

எனது வாசிப்பு- நினைவுகள்-1

படம்
பாண்டிச்சேரியிலிருந்து திருநெல்வேலிக்குக் கிளம்பியபோது எனது வயது 38. அங்கே எனது வேலை வாசிப்பாளர்(Reader ) . பாண்டிச்சேரியில் எனது பணியின் பெயர் விரிவுரையாளர் (Lecturer) வாசிப்புக்கு வயது 25 க்கும் மேல். வாசிக்கிறேன் என்ற உணர்வோடு வாசித்தபோது வயது 14. 1960 களின் பிற்பாதியில் வயசான கிழவனுக்காக ஒரு பேரன் திண்ணையில் உட்கார்ந்து விராட பர்வம் படித்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறுவன் வாசிப்பு என்னவென்று தெரியாதபோது அதனை ஒரு கடமையாக -நிகழ்வாகச் செய்துகொண்டிருந்தான். அவனைப்போல அல்லாமல் அவனது தாய்மாமா பாரதக் கதை வாசிப்பாளராக எங்கள் ஊரான தச்சபட்டியிலும் வெளியூர்களிலும் அறியப்பட்டவர். பக்கத்து ஊரான உத்தப்புரம் சாவடியில் உட்கார்ந்து பாரதம் படிப்பதைப் பலரும் சுற்றி உட்கார்ந்து கேட்டுக்கொண்டிருப்பார்கள்.

போலச்செய்த காமரூபங்களும் நினைக்கப்படும் காதல்களும்- செந்தியின் கவிதையுலகம்

படம்
இப்போது வெளியீடு காணும், செந்தியின்  சில்க்கின் கண்களை அணிந்துகொண்ட ஒருத்தி  கவிதைத் தொகுதியிலிருந்து ஒரு கவிதையை வாசித்துக் கொள்ளலாம்.   

தொப்புள்கொடி உறவு என்னும் சொல்லாடல்

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத்துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் கடந்த ஐம்பது ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக் கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்தியஅரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.

இரங்கலை எழுதும் கலை

படம்
கருணா:நிகழக்கூடாத மரணம் டிசம்பர் 22, 2020 நேரடித் தொடர்புகள் இல்லாத நிலையிலும் நண்பர்கள் என்ற அடையாளத்தோடு வாசிக்கவும் முரண்படவும் உரையாடவும் உதவி கேட்கவுமான வாய்ப்புகள் கொண்ட சமூக ஊடகத்தின் காலத்தில் வாழும் நமக்கு சில மரணங்கள் நிகழக்கூடிய மரணங்களாகத் தோன்றிக் கடந்துபோகின்றன. சில மரணங்கள் நிகழ்ந்திருக்கக் கூடாது என்று தோன்றுகின்றன.

உயிர்மை: இலக்கிய இதழாக நீடித்தல்

படம்
2024, பிப்ரவரி இதழில் அழகிய பெரியவனின் தொடர்கதை - ஊறல் - தொடங்கப்பட்டிருப்பதைக் கண்டவுடன் கவி.மனுஷ்யபுத்திரனை அழைத்துப் பேசவேண்டும் என்று நினைத்தேன். அவர் பலவிதமான வேளைகளில் இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கிறார் என்பதை முகநூல் பதிவுகள் காட்டியதால் அழைத்துப் பேசுவதைத் தவிர்த்துவிட்டு நேரடிச் சந்திப்பில் சொல்லிக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன். அண்மையில் சென்னைப் பயணத்தில் நூலக ஆணைக்குழுவின் அலுவலகத்தில் சந்தித்தபோது பேசிய பலவற்றில் உயிர்மையை இலக்கிய இதழாக நீட்டிப்பதின் தேவையையும் சொன்னேன்.

திசை திருப்பும் நாயகர்கள்

படம்
தமிழ் ஊடக வெளிகள் சினிமாப் பிம்பங்களால் நிரப்பப்படுவது நீண்ட காலச் செயல்பாடுகள். திருவிழாக்களும் பண்டிகைகளும் நட்சத்திர நடிகர்களின் புதியபுதிய சினிமாக்களால் நிரப்பப்படுவது போலவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக அவர்களின் நேர்காணல்களால் நிரப்பப்படுகின்றன. அந்த வாய்ப்புகளைப் பயன்படுத்தித் தமிழர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டும் நபர்களாக - அரசியல் தலைவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள். வாக்கு அரசியலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் நோக்கம் இருப்பதாகக் காட்டுவது ஒரு பாவனை தான்.

நீயா ? நானா? ஆண்டனி என்னும் ஆளுமை

படம்
ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்திவிட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்துவிட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

உரையும் உரையாடல்களும்

படம்
அண்மைக்காலமாகத் தினசரி உரைகளைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன். சுருதி இலக்கிய அலைவரிசை தொலைக்காட்சியின் வருகைக்குப் பின்பு சென்னை போன்ற பெருநகரங்களின் நடக்கும் இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாத நிலையை அதன் மூலம் நிறைவேற்றிக் கொள்ளமுடிகிறது. குறிப்பிட்ட ஆளுமைகளின் உரைகள் என்று தேர்வு செய்து கேட்ட நிலையைக் கைவிட்டுவிட்டு ஒரு நிகழ்வில் பங்கேற்ற அனைத்துத் தரப்பினரின் உரைகளைக் கேட்கும் ஆர்வம் தோன்றியிருக்கிறது. இப்போது அதற்காக நேரம் ஒதுக்கவும் முடிகிறது.

ப்ளு ஸ்டார் : கிரிக்கெட்டும் அரசியலும்

படம்
நாயகப்பாத்திரம், அதனோடு முரண்படப்போகும் எதிர்நிலைப்பாத்திரம் என அறிமுகப்படுத்தி, சின்னச் சின்ன முரண்பாடுகளால் வளர்வது நல்திறக் கட்டமைப்பு நாடக வடிவம். அதனை உள்வாங்கி உருவாக்கப்படும் திரைக்கதை அமைப்பும் பார்வையாளர்களைத் தக்கவைக்கும் திறன் கொண்டது. 

பின் நவீனத்துவம் -சில குறிப்புகள்

படம்
பின் நவீனத்துவம் என்பதை இலக்கியத்தின் ஒருபகுதியாகவோ, இலக்கிய இயக்கமாகவோ நினைக்கும் மனநிலை  இங்கு நிலவுகிறது. அதனைச் சொல்லாடல்களாக உச்சரித்தவர்கள் பெரும்பாலும் புனைவு எழுத்தாளர்களாகவும் அதன் எல்லைக்குள் நின்று பேசுபவர்களாகவும் இருந்தது காரணமாக இருக்கலாம். 

அஷ்வகோஷ்: தொடரும் நினைவுகள்

படம்
  காலையில் அஷ்வகோஷின் மரணச்செய்திக்குப் பின் அவர் குறித்த நினைவுகள் ஓடிக்கொண்டே இருந்தன. கடைசியாக அவரைச் சந்தித்தது அவருக்கு ’விளக்கு விருது’ வழங்கும் விழாவின்போது. பார்த்துக் கையைப்பிடித்து மகிழ்ச்சியைச் சொல்லிவிட்டு வந்துவிட்டேன். முழுவதும் இருக்கவில்லை.

அ.ராமசாமி/2024

படம்
  தன்விவரங்கள்  பேரா. அ ராமசாமி ·        51/3-1. முகம்மதுஷாபுரம், அசோக்நகர், திருமங்கலம், மதுரை, 625706 ·        அலைபேசி -919442328168 /             ramasamytamil@gmail.com கல்விப்புலப் பணிகள் : ·       புலமுதன்மையர்(இணை ),  மே,2021 முதல் நவம்பர்,2023 வரை, தமிழ்த்துறை, குமரகுரு பன்முக க்கலை அறிவியல் கல்லூரி, கோவை ·       அரசுப்பணி  ஓய்வு -ஜூன், 2019,           முதுநிலைப் பேராசிரியர்/   தமிழியல்   துறை  ,  மனோன்மணியம்   சுந்தரனார்             பல்கலைக்கழகம் . திருநெல்வேலி   -2016-2019         பேராசிரியர் -     தமிழியல் துறை , மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் . திருநெல்வேலி  /2006-2015 ·       இருக்கைப் பேராசிரியர் ,  தமிழ் இருக்கை ,...