நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்

ஈழவிடுதலை , தனி நாடு போன்றவற்றிற்கான போராட்ட ம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர் வுகளை யும் பின்னணியா க க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கருப்பு சுமதி யின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம். 2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.