இடுகைகள்

2009 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வாக்கப்படும் மனிதர்கள்: வண்ணதாசனின் கலைக்க முடியாத ஒப்பனைகள்

அரசு அலுவலகங்கள் மீதும், பொதுத்துறை அலுவலகங்களின் மீதும் அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் மீதும் தொடர்ந்து வைக்கப்படும் விமரிசனங்கள் சில உண்டு. முதன்மையான விமரிசனம் அவர்கள் செய்ய வேண்டிய பணிகளில் ஈடுபாட்டுடன் செயல்படுவது இல்லை என்பது.

குற்றவுணர்வின் மகத்துவம்: பாவண்ணனின் துரோகம்

படம்
இந்திய அரசு தனியார் மயக் கொள்கையைக் கடைப் பிடிக்கத் தொடங்கி இருபது ஆண்டுகள் ஆன போதும் அரசாங்க வேலைகளுக்கு உள்ள மவுசு இன்னும் குறைந்தபாடில்லை. அதிலும் கடந்த வருடம் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஏற்பட்ட சரிவு காரணமாகத் தகவல் தொழில் நுட்பத் துறையில் ஏற்பட்ட நெருக்கடி அரசு உத்தியோகத்தின் வலிமையை இன்னும் கூடுதலாக்கி விட்டது. ‘கால் காசா இருந்தாலும் கவர்மெண்ட் காசு வாங்குபவர்’ என்ற பேச்சு தூக்கலாகவே ஒலிக்கின்றன.

இன்னும் சில நாசகாரக்கும்பல்கள் :இந்திரா பார்த்தசாரதியின் கதை

படம்
தினசரிச் செய்தித்தாள்களை வாசிக்கிறவர்களுக்கு நாசம் என்ற சொல்லை விளக்கிச் சொல்ல வேண்டி யதில்லை. ‘பயங்கரவாதிகளின் நாசவேலை’ என்ற சொற்றொடர் தினசரிகளின் அன்றாடப் பயன்பாட்டுச் சொற்றொடர்களில் ஒன்றாக மாறிப் பல ஆண்டுகள் ஆகி விட்டன. இந்த வாரம் பயங்கரவாதிகளின் இடத்தைப் புயல் மழை பிடித்துக் கொண்டு விட்டது. ‘புயல் மழையால் பயிர்கள் நாசம்; வீடுகள் சேதம்’ எனச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

அந்த முறை நானும்

படம்
அந்த அழைப்பிதழில் எனது பெயரும் இருந்தது. ‘தாய் மாமன்மார்கள் என்ற பட்டியலில். அந்த உறவின் நேரடி அா்த்தம் எனக்குப் பொருந்தாது என்றாலும். எனது மனைவிக்கு அவா்கள் ரத்த உறவினா்கள் அதனால் அந்தக் குழந்தைகளுக்கு நானும் தாய்மாமன் ஆகி இருந்தேன். அழைப்பிதழில் மதுரைக்கு அருகில் உள்ள பிரபலமான ‘பாண்டி முனியாண்டி கோவிலில்‘ மொட்டை அடித்து காது குத்தும் விழா நடைபெறுவதாக அழைத்தது. அதில் ‘இரட்டைக்கிடாய் வெட்டப்படும்‘ என்ற குறிப்பு எதுவும் இல்லை. இரண்டு குழந்தைகளுக்கு மொட்டை எடுக்கப்படுவதால் இரண்டு கிடாய்கள் வெட்டப்படும் என்பது உடன்குறிப்பு.

வாழ்வின் நாடகம்: திலிப்குமாரின் ‘நிகழ மறுத்த அற்புதம்’

படம்
மரபையும் இந்தியப் பாரம்பரியத்தையும் பின்பற்றுகிறவர்களின் அடையாளம் என்ன? அவற்றிலிருந்து விலகிச் சென்றவர்களின் அடையாளங்கள் எவை? எனக்கேட்டால் நம்முன்னே இருப்பவர்களைச் சரியாக இனம் பிரித்துக் காட்டி விடுதல் ஒருவருக்கும் சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது.

தலைமுறைகளின் யுத்தம் சா.கந்தசாமியின் தக்கையின் மீது நான்கு கண்கள்

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மேலாய்வு செய்வதற்கான நிதியினை வழங்குவது மத்திய அரசின் பல்கலைக்கழக மானியக்குழு. அதன் நிதியைப் பெறுவதற்கு முயற்சி செய்யும் பேராசிரியர்களின் திட்டவரைவுகளின் பட்டியலைச் சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. அப்பட்டியலில் இடம் பெற்றிருந்த பல தலைப்புகள் எனக்கு மன வேதனை அளித்ததை இங்கே பதிவு செய்ய வேண்டும்.

பாசமுள்ள இயந்திரங்கள்: ஆர்.சூடாமணியின் விலை

படம்
கடந்த இருபது ஆண்டுகளில் ஊடகங்களின் கவனத்திற்கு  வந்ததால் அதிகம் விவாதிக்கப்பட்ட சில சமூகப் பிரச்சினைகள் உண்டு. பெண் சிசுக்கொலைகள் என்பதும் அவற்றுள் ஒன்று. எனது  கிராமம் பெண் சிசுக்கொலைகள் அதிகம் நிகழும் பகுதியாகச் சொல்லப் பட்ட உசிலம்பட்டி பகுதியில் தான் உள்ளது.

தாம்பத்தியத்தின் முழுமை க.நா.சுப்பிரமணியத்தின் மனமாற்றம்

புதிதாக வந்துள்ள அரசு அறிவிக்கையின்படி ஓய்வூதியம் மற்றும் பணிக் கொடைகளைப் பெறுவதற்குத் தங்கள் புகைப் படங்களோடு வாரிசுகளின் புகைப்படத்தையும் அலுவலகத்தில் தர வேண்டும் என்பதை வலியுறுத்திய அந்தச் சுற்றறிக்கையைப் பார்த்தவுடன் அவர்கள் கொஞ்சம் கலங்கித் தான் போனார்கள். இருவரும் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் தம்பதிகள்.

அதுவுமொரு பசிதான் ! - ஜி.நாகராஜனின் கல்லூரி முதல்வர் நிர்மலா

மனிதர்களின் அடிப்படைத் தேவைகள் எவை எனக் கேட்டால் உணவு, உடை, இருப்பிடம் எனப் பாடத்திட்ட அறிவைக் கொண்டு பதில் சொல்கிறோம். ஆனால் வளர்ந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் வயிற்றுப் பசியைத் தாண்டி இன்னொரு பசி உடம்புக்குள் ஆறாத பெரு நெருப்பாகக் கனன்று கொண்டிருக்கிறது எனக் கல்வியின் உயர்நிலையான உளவியல் கூறுகிறது. காமம் என்னும் அப்பெருநெருப்பு பற்றிக் கொள்ளும் நேரம், இடம், எதிர்கொள்ள வேண்டிய பின் விளைவுகள் பற்றியெல்லாம் எல்லா நேரமும் சிந்திந்துக் கொண்டிருப்பதில்லை என்பது உடல் இச்சைகளை விளக்கும் உளவியலின் பகுதிகள்.

சாத்தியங்களுக்கு அப்பாற்பட்ட சாகசங்கள் :சுசி கணேசனின் கந்தசாமியை முன் வைத்து

படம்
இது கந்தசாமி படத்திற்கான விமரிசனம் அல்ல;விமரிசனம் எழுதும் அளவிற்குப் பொருட்படுத்த வேண்டிய படமும் அல்ல கந்தசாமி. திரைப் படத்தின் மொழியையும் ஆக்கத்தையும் அறிந்தவர்களாகவும், அதன் வழியே வெகுமக்களுக்குத் தீங்கிழைக்காத பொழுது போக்குப் படங்களைத் தருவார்கள் என்று நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்களின் தோல்வியும், திசைதவறிய பாதைகளும் கூடப் பொருட்படுத்திப் பேச வேண்டிய ஒன்று என்ற அளவில் கந்தசாமி படம் பற்றிப் பேச வேண்டியுள்ளது.

வேறுபாடுகளுடன் கூடிய நட்பின் இழப்பு – பாலாவுக்கு அஞ்சலி

பாலச்சந்திரன் என்னும் நீண்ட பெயரைச் சுருக்கி நண்பர்கள் பாலா என அழைத்த போது அதைத் தனது கவிப்பெயராக ஆக்கி விடும் ஆசை அவருக்கு இருந்திருக்குமா எனத் தெரியவில்லை. இதை அவரிடமே கேட்டு உறுதி செய்து கொள்ளலாம் என நினைத்தாலும் இனி இயலாது. அந்தப் பெயருக்கும், அந்தப் பெயர் விட்டுவிட்டுப் போயிருக்கும் பதிவுகளுக்கும் சொந்தக்காரரான பாலச்சந்திரன் இப்போது நம்மோடு இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னால் நான் பணியாற்றும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலத்துறையிலிருந்து பணி ஓய்வு பெற்ற போது இனி அவர் செய்ய வேண்டிய பணிகளை நினைவுபடுத்தி அனுப்பி வைத்தோம். அதில் ஒன்றிரண்டைக் கூட முடிக்க விடாமல் காலம் தனது கணக்கை முடித்துக் கொண்டு விட்டது.

தேடும் பறவைகள்: மீரானின் இரைகள்

  இந்த வசதிகள் எல்லாம் இருபது ஆண்டுகளுக்கு முன் இந்திய மக்களுக்குக் கிடைக்காதவை. வளைவுகளற்ற நான்குவழி, ஆறுவழிச் சாலைகளில் வழுக்கிக் கொண்டு போகும் ஆம்னி பஸ்கள், விரைவுப் பேருந்துகள் உட்பட்ட போக்கு வரத்து வசதிகள், விதவிதமாய்க் கல்வியைக் கற்றுத் தரும் கல்விச் சாலைகள், தனித்தனி உறுப்புகளுக்கும் சிறப்பு மருத்துவம் தரும் பாலி கிளினிக்குகள், டிக்கெட் கிடைக்கவில்லையென்று தியேட்டருக்குப் போன பின்பு திரும்பி வரத் தேவையில்லாத அளவுக்கு ஒரே இடத்தில் பல தரப்பட்ட சினிமாக்களைச் சேர்த்து வைத்திருக்கும் மல்டிபிளக்ஸ் திரை அரங்குகள், சாப்பிடும் போதே பிள்ளைகள் விளையாடத் தனி அறைகள், குடும்பமாகச் சாப்பிடும் போது மற்றவர்களுக்குக் கேட்காதவாறு தடுக்கும் இசைக் கோலங்களை உமிழும் ரம்மியமான சூழல் கொண்ட உணவு விடுதிகள், அந்நிய நாடுகளில் மட்டுமே கிடைத்த வண்ண ஆடைகளைக் கட்டித் தொங்க விட்டு அசத்தும் துணிக்கடல்கள், காலனிக் காட்சிக் கூடங்கள், வீட்டுபயோகப் பொருட்காட்சி அரங்குகள் என வசதிகளைக் கொண்டு வந்து சேர்த்து விட்டது உலகமயப் பொருளாதாரம்.

கலையும் ஒப்பனைகள்

[இந்நாடகத்தை மேடையேற்றவிரும்புபவர்கள் தகவல் தெரிவித்து விட்டு மேடையேற்றிக் கொள்ளலாம் ] காட்சி:1 [அவன் ஒரு புதுவகை ஈஸிசேரில் படுத்துக் கிடக்கிறான்.உடம்பின் எல்லாப் பாகங்களுக்கும் ஓய்வு கொடுப்பது நோக்கம்.வெளிச்சம் நேரடியாக முகத்தில் இல்லை. முகம் கர்சீப்பால் மூடப் பட்டிருக்கிறது. நிழல் திசைமாறும் பொழுதெல்லாம் குரல் தொனி மாற்றி வந்து கொண்டிருக்கிறது]. 'நோ..ந்நோ..இல்லை .. இது பொய். இது பொய்.. காதலாவது கத்தரிக்காயாவது; முடியாது ; ஒத்துக்க முடியாது நான் ஒத்துக்க முடியாது. எனக்கு என் அடையாளம் முக்கியம்; என் அந்தஸ்து முக்கியம் எனது கடவுள் முக்கியம்; எனது சாதி முக்கியம் எனது சமயம் ; எனது மக்கள்... அவ்வளவு சுலபமா விட்டுவிட முடியாது. உன்னோட ஆசை நிறைவேறும் சாத்தியங்களே இல்லை எல்லாவற்றையும் மறந்துவிடு; மறந்துவிடுவதைத் தவிர வேறு வழி எதுவும் இல்லை' [வசனப் பயிற்சிக்காகச் சொல்லப்படுவது போல் தூரத்திலிருந்தும் பக்கத்திலிருந்துமாக வருகிறது. ஆண்குரலிலும் பெண்குரலிலுமாக மாறிமாறி ஒலிப்பதற்கேற்ப அந்த உருவத்தின்மீது மாறி மாறி விழும் வண்ணம் விளக்கு வெளிச்சம் மெதுவாகவும் சடசடவென...

மேடு நோக்கிப் பாயும் ஆறு: கிராஜநாராயணின் தாவைப்பார்த்து

படம்
எனக்கு நேர்கிற அனுபவம் மட்டும் அல்ல; என்னைப் போல நகரவாசியாக மாறிய பிறகு அவ்வப்போது சொந்தக் கிராமத்திற்குப் போய்வரக் கூடிய ஒவ்வொருவருக்கும் நேர்கிற அனுபவம் தான் இது. இந்த முறை ஊருக்குப் போன போது எல்லோரும் ஒரே குரலில் சொன்னார்கள். அந்தக் குரலில் மகிழ்ச்சி வெளிப்பட்டது.எந்தப் பாகுபாடும் இல்லாமல் வீட்டிற்கு ஒரு டி.வி.பெட்டி- கிடைத்ததில் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி கிடைத்ததில் இருந்த மகிழ்ச்சி அது.

தொடரும் துன்பக்கேணி : வண்ணநிலவனின் துன்பக்கேணி

படம்
திரும்பவும் கள்ளுக்கடைகள் திறக்கப்பட வேண்டும்; பனை மரங்களையும் தென்னை மரங்களையும் தங்கள் காடுகளிலும் தோட்டங்களிலும் வளர்த்திருக்கும் விவசாயி களுக்குப் பனை மரத்திலிருந்தும் தென்னை மரத் திலிருந்தும் கள் இறக்க அனுமதி தர வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுத்துக் கொண்டிருக்கின்றன. பனங்கள்ளும் தென்னங்கள்ளும் அடிப்படை யில் போதை ஊட்டும் மதுபானங்கள் அல்ல; அவை உடல் நலத்திற்கு உதவக் கூடிய மருந்துகள் என்ற வாதம் கள் ஆதரவாளர்களிடமிருந்து வருகின்றது.

நண்டு தின்னும் ஊரில் : பூமணியின் குடை

“ வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளின் வீட்டில் லஞ்சப் பணம். லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி” “லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கையின் எதிரொலி. பத்திரவுப் பதிவுகள் முடக்கம்” “பல்கலைக்கழகத்துணைவேந்தர் நீக்கம். லஞ்ச ஒழிப்புத்துறையின் நடவடிக்கைகளால் அரசு முடிவு” இப்படிப் பட்ட செய்திகள் சமீபத்தில் அடிக்கடி செய்தித் தாள்களில் வருகின்றன.

தீர்க்கமான முடிவு: ஜெயகாந்தனின் யுகசந்தி

சன் தொலைக்காட்சியில் இரவு ஒளிபரப்பில் முக்கிய நேரத்தில் ஒளி பரப்பப் படும் கோலங்கள் தொடர் எப்போது முடியும்? இந்தக் கேள்வியைப் பத்திரிகைச் செய்தியாக, நடைபாதைப் பேச்சாக, ஒத்த கருத்துடையவர்களின் கலந்துரையாடலில் மையப் பொருளாகப் பல இடங்களில் நான் கேட்டிருக் கிறேன். நீங்களும் கேட்டிருக்கலாம். பெரும்பான்மை மக்களால் விரும்பியோ விரும்பாமலோ பார்க்கப்படும்-படிக்கப்படும் கலை இலக்கியங்களைப் பொருட் படுத்திப் பேச வேண்டியது பண்பாட்டியல் துறை சார்ந்தவனின் ஒருவனின் கடமை என்ற நிலைபாட்டோடு தொலைக்காட்சித் தொடர்களை அவ்வப்போது கவனித்து வைப்பதும், விரும்பிப் பார்க்கும் பல தரப்பட்ட மக்களிடம் உரையாடிப் பார்ப்பதும் எனது விருப்பம்.

முழுமையைத் தவற விட்ட முன் முயற்சி

தேர்தல் அரசியலை ஏற்றுத் தமிழ் நாட்டில் இயங்கும் இரண்டு இடதுசாரிக் கட்சிகளும் தங்கள் கருத்துகளை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க அதிகம் நம்புவது பேச்சு மேடைகளையும் அச்சு ஊடகங்களையும் தான். அச்சு ஊடகமான பத்திரிகை மற்றும் நூல்களை வெளியிட அதிகாரபூர்வமான கட்சி அமைப்புகளை நீண்டகாலமாகக் கொண்டுள்ளன அக்கட்சிகள். அவ்வதிகாரபூர்வமான அமைப்புகள் வழியாகச் செய்ய முடியாத சில வேலைகளைச் செய்யச் சில துணை அமைப்புகளை உருவாக்குவதும் உண்டு. அத்துணை அமைப்புகளைப் பொறுப்பேற்று நடத்தும் தனிநபரின் விருப்பம் மற்றும் தொடர்புகளின் அடிப்படையில் அத்துணை அமைப்புகளின் எல்லைகளும் செயல்பாடுகளும் விரிவடையும்.

பண்பாட்டு வரலாற்றுக்கொரு புது வரவு

படம்
ஒவ்வொரு சமூகத்தின் இருப்பையும் இயக்கத்தையும் அச்சமூகத்தில் நிலவும் கருத்தியல்களே தீர்மானிக்கின்றன. கருத்தியல்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அச்சமூகத்தில் நிலவும் பகை முரண்களின் வெளிப்பாடுகள். பகை முரண்களைத் தீர்மானிப்பவை அக்காலகட்டத்தின் பொருளாதார அடித்தளம் என்பது மார்க்சியம் சொல்லும் ஒரு சூத்திரம்.

சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்..?:சுஜாதாவின் ஒரு லட்சம் புத்தகங்கள்

படம்
2009 தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருந்த போது இலங்கைப் பிரச்சினை உறுதியாகத் திசை திரும்பிக் கொண்டிருக்கிறது என்பதை மனம் சொல்லத் தொடங்கியது. தீவிரமாக நடந்த ஈழ யுத்தம் தேர்தலுக்கு முந்திய நாள் ஒரு முடிவுக்கு வந்து விட்டது போலச் சர்வதேச ஊடகங்கள் செய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தன.ஒரு வேளை இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சி மாறிப் புதிய ஆட்சி வந்தால் இலங்கைப் பிரச்சினை வேறு வடிவம் எடுக்கக் கூடும் எனக் கருதிய இலங்கை அரசு தீவிரமாகப் போரை நடத்தி முடித்து விட்டுத் தேர்தல் முடிவோடு சேர்த்து சொல்ல வேண்டும் எனக் காத்திருந்தது போல முல்லைத் தீவு வெற்றியைக் காங்கிரஸின் வெற்றியோடு சேர்த்துச் சொல்லிக் கொண்டிருந்தது.எனக்குக் கால் நூற்றாண்டுக்கு முன்பு எழுதப் பட்ட அந்தக் கதையைத் திரும்பவும் எடுத்து வாசிக்க வேண்டும் என்று தோன்றியது. எடுத்து வாசித்து விட்டு அடையாளத்திற்கு ஒரு தாளில், “சொல்லும் செயலும் வேறெனக் கொண்டால்” என எழுதி மூடி வைத்திருக்கிறேன். கதையின் தலைப்பு: ஒரு லட்சம் புத்தகங்கள். எழுதியவர் சுஜாதா. எழுதப் பட்ட ஆண்டு 1982. 

ஆணெழுதும் பெண்ணெழுத்து : ஜெயந்தனின் அவள்

படம்
ஜெயந்தனுக்கு அந்தக் கதைக்கு ஒரு தலைப்பு வைக்க வேண்டும் என்று கூடத் தோன்றவில்லை. கதையின் தலைப்பே அவள் என்பது தான். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் ஒரு நிகழ்வாக மாறி விட்ட இலக்கியச் சிந்தனை, 1981 இல் வந்த சிறுகதைகளில் ஆகச் சிறந்த கதையாகத் தேர்வு செய்த கதை இது. தேர்வு செய்தவர் கிராமப் புற மனிதர்களை விதம் விதமாக எழுதிக் காட்டிய கி.ராஜநாராயணன்.

பயணத்தின் நினைவுகள் :அம்பையின் வாகனம்.

சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அடிக்கடி செல்லும் இக்கால மனிதர்கள் அம்பையின் இந்தக் கதையைக் காலப் பொருத்தமற்றது எனச் சொல்வார்கள். அல்லது பழைய கதை என்றாவது சொல்லக்கூடும். வாகனம் என்று தலைப்பிட்டு அம்பை எழுதிய அந்தக் கதை அவ்வளவு பழைய கதை அல்ல. பன்னிரண்டு வருடங்கள் தான் ஆகிறது.

குறியீட்டுக் கதைகள் தரும் சுதந்திரம்:சுந்தரராமசாமியின் பல்லக்குத்தூக்கிகளும் மேல்பார்வையும்.

படம்
குறியீட்டுத் தன்மை கொண்டதாக நவீன நாடகப் பிரதி ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவு செய்த பின், தேர்வு செய்த கதை பல்லக்குத்தூக்கிகள். தமிழில் நவீன நாடகத்தைப் பிரதி வடிவில் ஆரம்பித்து வைத்தவர் ந.முத்துசாமி. அவரது தொடக்க நாடகங்களான நாற்காலிக்காரர், காலம் காலமாக,அப்பாவும் பிள்ளையும் ஆகிய மூன்று நாடகங்களும் அடங்கிய நாற்காலிக்காரர் தொகுப்பை வாசிக்கும் ஒருவர் நவீன நாடகம் என்பது கதைத் தன்மையைக் கைவிட்ட - குறியீட்டுத் தன்மை கொண்டதே நவீன நாடகம் என்று புரிந்து கொள்வார். பல்லக்குத்தூக்கிகள் சிறுகதையை நாடகமாக ஆக்கியதற்கு முன்பு ந.முத்துசாமியின் நாற்காலிக்காரர் நாடகத்தைப் பயிற்சியாகவும், இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்களைப் பாடமாகவும் படித்திருந்தேன். ந.முத்துசாமியின் பாணியிலிருந்து மாறுபட்டது இந்திரா பார்த்தசாரதியின் நாடகங்கள். அவரது தொடக்ககால நாடகங்களான பசி, மழை, போர்வை போர்த்திய உடல்கள் போன்றவற்றில் ஒருவித கதைத் தன்மை உண்டு.

நல்ல மேய்ப்பர்கள் : பிரபஞ்சனின் மரி என்னும் ஆட்டுக்குட்டி

படம்
முன்பெல்லாம் தேர்வு முடிவுகள் வெளி வந்து மூன்று அல்லது நான்கு மாதங்கள் கழித்து சிறப்புத் தேர்வுகள் நடைபெறும். பள்ளிக் கல்வியில் தேர்ச்சி பெறாமல் போன மாணவர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அந்தச் சிறப்புத் தேர்வை எழுதித் தேர்வு பெற்று அடுத்த கல்வி ஆண்டுத் தொடக்கத்தில் கல்லூரிக்குள் நுழைவார்கள். பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி அடையாத வர்களுக்கு அந்த ஓராண்டு ஒரு விதத்தில் தண்டனை தான். இந்தத் தண்டனைக் காலத்தில் பலர் திசை மாறிப் போகும் வாய்ப்புக்களே அதிகம். இப்போது நிலைமை மாறி விட்டது. ஒன்றிரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக உடனடியாகச் சிறப்புத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதன் மூலம் பள்ளிக் கல்வியை முடித்துக் கல்லூரிக் கல்வியைத் தொடர்பவர்கள் எண்ணிக்கை கூடியுள்ளது. பள்ளிக்கல்வி இயக்ககம் தொடங்கி வைத்த சிறப்புத் தேர்வு நடைமுறைகளை இப்போது எல்லாப் பல்கலைக் கழகமும் ஏற்றுக் கொண்டு உடனடிச் சிறப்புத் தேர்வுகளை நடத்துகின்றன.

ஈழம்:மாற்றுவிவாதங்களை முன் வைக்கும் கருத்துரைகள்

1.ஈழம்:தேவை- ஒரு நேர்மறையான மீளாய்வு , புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600 024 2.ஈழம்: நேர்மையான சந்தர்ப்பவாதமும் நேர்மையற்ற சந்தர்ப்பவாதமும் புதிய ஜனநாயகம் வெளியீடு, இரண்டாம் பதிப்பு, ஜுன்,2009 110.இரண்டாம் தளம், 63,என்.எஸ்.கே.சாலை,கோடம்பாக்கம், சென்னை-600024 3.இந்திய அரசே நியாயந்தானா? முதல்பதிப்பு: ஏப்ரல், 2009,சி.மகேந்திரன், பாவை பப்ளிகேஷன்ஸ், 142,ஜானி ஜான் கான் சாலை, இராயப்பேட்டை, சென்னை-600 014 ஐரோப்பிய நாடுகளின் காலனிகளாக இருந்து அரசியல் விடுதலை அடைந்துள்ள பின்காலனிய நாடுகளில் இன்றளவும் தொடரும் உள்நாட்டுப் பிரச்சினைகளின் மூலத்தைத் தேடிப் போனால் அவற்றின் தொடக்கப் புள்ளியாக, காலனிய ஆதிக்கவாதிகளின் தேச உருவாக்கமே காரணமாக இருப்பதை அறியலாம். காலனிய ஆதிக்கவாதிகள் தங்கள் நிர்வாக வசதிக்காக ஒன்றிணைத்து ஏற்படுத்திய தேசம் என்னும் ஒற்றைக் கட்டுமானம் தொடர்ந்து தன்னைத் தக்க வைக்க முடியாமல் தவிக்கும் தவிப்பின் விளைவுகள் பலவிதமானவை.

முகம் அறியா முதலாளிகளும் முகம் தெரிந்த முதலாளியும்:கு.அழகிரிசாமியின் தியாகம்

படம்
உலக அளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தத்தனம் அல்லது சரிவு இந்தியாவில் வெளிப்படை யாகத் தாக்கிய துறை தொழில் நுட்பக் கல்வித்துறை. வளாகத் தேர்வுக்கு ஒவ்வொரு கல்லூரி யையும் நாடிச் சென்று சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்த போக்கு கடந்த கல்வி யாண்டில் நடக்க வில்லை. அதன் விளைவாக இந்த ஆண்டுப் பொறியியல் கல்லூரிகளின் சேர்க்கையில் பல பரிமாணங்களை ஏற்பட்டுள்ளன.

வீடு

படம்
[சிறுகதை மூலம்:ம.மதிவண்ணன் எழுதிய திருவாளர் எம்.மின் வீடு என்னும் கதையும் மேற்படி வீட்டுடனான உரையாடலும்] இந்நாடகத்தில் பயன்பட்டுள்ள கவிதைவரிகளை எழுதிய கவிகள் சி.சுப்பிரமணிய பாரதி ஞானக்கூத்தன் சு.வில்வரத்தினம் பழமலய் பசுவய்யா சேரன் மனுஷ்யபுத்திரன் கண்ணதாசன் இன்னும் சில விளம்பரங்களின் வரிகள்

வளர்ச்சியின் அடையாளங்கள்: இமையத்தின் உயிர்நாடி

சொந்தக் கிராமத்திற்குப் போய்விட்டுத் திரும்பிய எனக்குத் திரும்பத் திரும்ப இமையத்தின் அந்தக் கதை ஞாபகத்திற்கு வந்து கொண்டே இருந்தது. கதையின் தலைப்பு உயிர்நாடி.வாசந்தி பொறுப்பில் இந்தியா டுடே வெளியிட்ட இலக்கியச் சிறப்பு மலர்கள் போல டைம்ஸ் ஆப் இந்தியா வுக்காக டைம்ஸ் இன்று என்ற தலைப்பில் ஒரு சிறப்பு மலரை 2008 ஆம் ஆண்டில் - பொங்கல் சமயத்தில் சுஜாதா தொகுத்தார் என்பதாக ஞாபகம். அந்தத் தொகுப்பில் தான் இமையத்தின் உயிர்நாடி கதை அச்சாகி இருந்தது.

நிகழ மறுத்த அற்புதம்

சிறுகதை மூலம்: திலிப்குமார் நாடகவடிவம்: அ.ராமசாமி முன்மேடை ஒரு நடுத்தரவர்க்கத்தின் வீட்டு ஹால். பின் இடது புறம் சமையலறையின் ஒரு பகுதி தெரிகிறது. பின் நடுமேடையில் ஒரு படுக்கையறையின் கதவு பாதி திறந்து கிடக்கிறது. பின் வலது மேடையில் இருக்கும் அறையில் புத்தக அலமாரி, கணினி போன்றன தெரிகின்றன. ஹாலின் மையத்தில் படுக்கையறைக்கு முன்னால் மூவர் அமரக் கூடிய ஒரு சோபா அதன் இருபுறமும் ஒருவர் அமரும் சோபாக்கள். வேலைப்பாடுகள் கொண்ட டீபாய். நடு வலது மேடையில் ஒரு மேசைமீது விளக்குடன் ஒரு ஸ்டேண்ட் நிற்கிறது. அதிலிருந்து வரும் வெளிச்சத்தில் அதன் முன்னால் கிடக்கும் சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து பேப்பர் அல்லது புத்தகம் படிக்கலாம். இடது புறம் நிற்கும் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்க்கலாம். தொலைக்காட்சிப் பெட்டி ஒரு மரத்தாலான வேலைப்பாடுகள் நிரம்பிய ஸ்டேண்டில் வைக்கப் பட்டிருக்கிறது. சமையலறையிலிருந்து வந்த திருமதி ஜேம்ஸ் ஒரு முறை நின்று திரு ஜேம்ஸைப் பார்க் கிறாள். அவர் தினசரித்தாளை அகலவிரித்துப் படித்துக் கொண்டிருக்கிறார். வந்தவள் படுக்கையறைக்குள்போய்விட்டு உடனடியாகத்திர...