இடுகைகள்

சென்னைப்பயணத்தில் இரண்டு நிகழ்வுகள்

படம்
சென்னை எனக்கு விருப்பமான நகரமல்ல. அங்கேயே தங்கி வாழும் வாய்ப்புகள் இருந்தபோதிலும் அதனைத் தவிர்த்தே வந்துள்ளேன். அதே நேரம் அந்த நகரத்தை வெறுத்து ஒதுக்கியும் விடமுடியாது. தமிழ்நாட்டின் தலைநகராக இருப்பதால் எனது விருப்பப்புலம் சார்ந்த நிறுவனங்களும் நிகழ்வுகளும் அங்கேதான் இருக்கின்றன; நிகழ்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு எனது பிள்ளைகள் இருவரும் அங்கே இருந்தார்கள். அதனால் அதிகம் போய் நாட்கள் கணக்கில் தங்கியதுண்டு. அதிகமாக இரண்டு வாரங்கள் அளவு தங்கியுள்ளேன். அப்போது சென்னையில் இலக்கிய நிகழ்வுகளில் பார்வையாளனாகப் பங்கேற்றுவிட்டுத் திரும்புவேன். இப்போது ஓய்வுக்காலம் என்றாலும் அங்கே தங்கி நிகழ்வுகளில் பங்கெடுக்க முடியவில்லை. 

தடைகளின் காலம் நமது காலம்

படம்
நீயா? நானா? நிகழ்ச்சிக்கான படப்பிடிப்பு நிகழ்ந்து, தொகுத்துச் சுருக்கி ஒளிபரப்பத் தயாரான நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது என்பதைத் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கின்றன வலைத்தளப்பேச்சுகள். முகநூல் குறிப்புகளில் எழுதுகிறார்கள். தமிழ்நாட்டுப் பாஜகவின் மீதும், அதன் பொறுப்பாளர்கள், ஆதரவாளர்கள் மீதும் குற்றம்சாட்டுவதில் தொடங்கி, அரசில் அமைச்சுப் பொறுப்பில் இருப்பவர் வரை பெயர்சொல்லிக் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அதற்குப் பொறுப்பேற்றுப் பதில் சொல்ல ஒருவரும், எந்த அமைப்பும், அரசின் சார்பாளர்களும் முன்வரவில்லை.

நாறும்பூநாதனை நினைத்துக்கொள்கிறேன்

படம்
நாறும்பூநாதன் தனது செயல்பாடுகள் மூலம் பாளையங்கோட்டை -நெல்லை என்ற இரட்டை நகரத்திற்குப் பலவிதமாகத் தனது இருப்பை உணர்த்திக் கொண்டே இருந்தார். இப்போது அவரது மரணச்செய்தி வந்துள்ளது. அவரது இன்மையைச் சில ஆண்டுகளாவது அந்த நகரங்கள் உணரவும் கூடும்.

நள்ளிரவுக் கொடுங்கனவுகள்: கரோனாவின் அலைகளைக் கடந்து...

படம்
2020/ மார்ச் 15/ ================ நெருங்குகிறது கொரானா ========================= சென்னையில் அது நடுத்தரமான தங்கும் விடுதி. நான்கு நாட்களாக இங்கேதான் இருக்கிறேன். பகலில் அதிகம் கூட்டம் இருக்காது. இரவிலும் கூடத் தாமதமாகவே ஆட்கள் நடமாட்டம் தெரியும். ஆனால் காலையில் எல்லா அறைகளின் முன்னாலும் ஆட்கள் நிற்பார்கள். விடுதியில் தங்குபவர்களுக்குக் காலை உணவு வழங்கும் இடத்தில் 10 மணி வரை ஆட்களின் பேச்சொலி கேட்கும். பெரும்பாலும் சினிமாவோடு தொடர்புடையவர்களும், தொலைக்காட்சி தொடர்பானவர்களும் அதிகம் தங்குவார்கள்.

சேலத்தில் நான்கு நாட்கள்

படம்
தேசியத் தகுதித்தேர்வுக்குத் தயார்படுத்தல் பல்கலைக்கழக மானியக்குழு நடத்தும் இந்தத்தேர்வோடு அதன் ஆரம்பத்திலிருந்து தொடர்பில் இருப்பவன்.  அதன் தொடக்கம் 1984. நான் 1983 இல் முனைவர் பட்டத்திற்காகப் பதிவு செய்து உதவித்தொகை எதுவும் இல்லாத ஆய்வாளராக இருந்தேன். அதனால் அதன் அறிமுக ஆண்டிலேயே தேர்வாகிவிட வேண்டிய கட்டாயமும் நெருக்கடியும் இருந்தது. விண்ணப்பித்து, தயாரிப்பில் இறங்கினேன். தமிழுக்கெனத் தேர்வான 10 பேரில் ஒருவன் நான். அதற்கெனக் கிடைத்த சான்றிதழ் பின்னர் எனது பணிக்கான நேர்காணலில் கவனம் பெற்ற ஒன்றாக இருந்தது.   அப்போது கிடைத்த உதவித்தொகை   மாதம் 1000/- ரூபாய். 1985 இல் அது பெரிய தொகை. கல்லூரி ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளம் ரூ.1400/- தான். இப்போது தேர்வெழுதும் பலரும் தமிழுக்கான பாடத்திட்டம் அளவில் பெரியது எனவும் விரிவானது எனவும் சொல்கின்றனர். நாங்கள் எழுதிய பாடத்திட்டம் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மாறாமல் இருந்தது. அதனை மாற்றும்பொருட்டு உருவாக்கப்பட்ட வல்லுநர் குழுவில் நானிருந்தேன். இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழ்கங்களின் பாடத்திட்டக்குழுவில் நேரடியாகவும் ஆலோசனை நிலையிலும்...