இடுகைகள்

தந்தையும் மகனும் தாமரைத்திருக்கள்

படம்
ஒன்றிய அரசு வழங்கும் துறைசார் சிறப்பு விருதுகளின் பொதுப்பெயராக இருப்பது பத்மவிருதுகள். பத்மம் என்றால் தாமரை. அவ்விருதுகளில் மூன்று நிலைகள் உண்டு. பத்ம விருதுகளில் மிக உயர்ந்தது பத்மவிபூஷன். அடுத்தது பத்மபூஷன், கடைசிநிலை பத்மஶ்ரீ.

முகநூல் உருவாக்கிய இரண்டு எழுத்தாளர்கள்

படம்
நமது காலச் சமூக ஊடகங்கள் பலருக்கும் பலவிதமான திறப்புகளைச் செய்கின்றன. ஒற்றைத்தள வாசிப்புக்குப்பதிலாகப் பலதள வாசிப்புகளைத் தரும் இயல்பு தானாகவே அவை உருவாக்கித்தருகின்றன. வாசிப்பைப் போலவே தனக்குள் இருக்கும் எழுத்தார்வத்திற்கும் திறப்புகளை வழங்குகின்றன. ஆசிரியத்துவத்தணிக்கை இல்லாமல் தாங்கள் எழுதியதைத் தங்கள் விருப்பம்போல வெளியிடலாம். அப்படியான வெளிப்பாட்டில் தொடர்ச்சியாகக் கண்டடையும் ஓர்மையால் ஒருவர் தனது எழுத்துப் பாணியைக் கண்டடைய முடியும். அப்படிக் கண்டடைந்த இருவரின் எழுத்துகளுக்குச் சிறிய அளவில் தூண்டுகோலாக இருந்துள்ளேன்.

நவீனத்துவத்துவ நுழைவுகள் -இரண்டு சிறுகதை வாசிப்புகள்

படம்
தனது முடிவுகளுக்கு உறுதியான தீர்வுகளை முன் வைத்துவிட முடியாமல் தவிக்கும் சிக்கல் என்பது அடிப்படையில் ஒரு நவீனத்துவ மனக்குழப்பம். வாசிக்கப்படும் ஒரு பனுவலில் அவ்வகையான குழப்பமொன்றை உருவாக்கும் எழுத்தாளர்களை நவீனத்துவ எழுத்தாளர்கள் என்று வகைப்படுத்தத் தயங்குவதில்லை.

நாத்திகம் என்னும் ஆன்மீகம்

படம்
ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார். எதிர்த்தரப்பை மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார். அவர் அடிப்படையில் அரசியல்வாதி. இந்த நாட்டில் அல்லது மாநிலைத்தில் உருவாக்கவேண்டிய நிலைமை இதுதான் என இலக்கு வைத்துக்க்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்த அரசியல்வாதி அல்ல. இந்த மாநிலத்தில் இவ்வளவு மோசமான நம்பிக்கைகளும் செயல்களும் இருக்கின்றன; இவை களையப்பட வேண்டும். அவை களையப்பட்டால், அதன் பின் உருவாகும் அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மக்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். ஒருவிதத்தில் ஆன்மீகவாதிகளின் செயல்பாட்டை ஒத்தது பெரியாரின் செயல்பாடுகள்.

சி. அண்ணாமலையின் வெங்காயம் : மதத்தால் மறையாத மாமதயானை

படம்
நாடகக்காரரும் நாடகம் பற்றிய பதிவுகளைப் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து செய்து வருபவருமான சி.அண்ணாமலை எழுதி காவ்யா வெளியிட்டுள்ள நாடகம் வெங்காயம்.வெங்காயம் -பெரியார் பற்றிய நாடகம் என்ற குறிப்புடன் வந்துள்ள இந்த நாடகப்பிரதியைப் பற்றிப் பேசத் தொடங்கும் போது மிகுந்த எச்சரிக்கையோடு பேச வேண்டியுள்ளது. ஏனென்றால் தமிழ் நாட்டில் நவீன நாடகத்தளத்தில் செயல்படுகிறவர்களாகக் கருதிக் கொள்ளும் பலரும் நாடகத்தைப் பற்றிய விமரிசனங்களையும், நாடகப் பிரதிகளைப் பற்றிய விமரிசனங்களையும், விமரிசனங்களாகக் கருதி விவாதிப்பதில்லை என்பது எனது சொந்த அனுபவம்.