ஈ.வெ.ராமசாமி என்னும் மனிதர், பெரியாராக மறைந்தார் என்பது மட்டுமல்ல; கலகக்காரராகவும், தோழராகவும் வாழ்ந்தார். எதிர்த்தரப்பை மதித்து அவர்களோடு வாதம் செய்வதில் விருப்பம் உடையவர் பெரியார். அவர் அடிப்படையில் அரசியல்வாதி. இந்த நாட்டில் அல்லது மாநிலைத்தில் உருவாக்கவேண்டிய நிலைமை இதுதான் என இலக்கு வைத்துக்க்கொண்டு அதை நோக்கிப் பயணம் செய்த அரசியல்வாதி அல்ல. இந்த மாநிலத்தில் இவ்வளவு மோசமான நம்பிக்கைகளும் செயல்களும் இருக்கின்றன; இவை களையப்பட வேண்டும். அவை களையப்பட்டால், அதன் பின் உருவாகும் அமைப்புகளும் வாழ்க்கை முறையும் மக்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கும் என்ற நம்பிக்கையோடு செயல்பட்டவர். ஒருவிதத்தில் ஆன்மீகவாதிகளின் செயல்பாட்டை ஒத்தது பெரியாரின் செயல்பாடுகள்.