இடுகைகள்

உமாமகேஸ்வரியின் சிறுகதைக்கலை

படம்
உமாமகேஸ்வரியின் ஸீஸா:மனவோட்டத்தின் உருவகம் நீண்ட காலமாகப் புனைகதைப் பரப்பில் இயங்கிவரும் உமாமகேஸ்வரியின் தொடக்கநிலைப் பொது அடையாளமாக வெளிப்பட்டது குடும்பவெளி. நகர வாழ்க்கையில் இருக்கும் நடுத்தரவர்க்கக் குடும்பங்களை எழுதுபவர் என்றோ, கிராமப்புறங்களில் இயங்கும் கூட்டுக்குடும்பத்தை எழுதுபவர் என்றோ பொத்தாம் பொதுவாக அடையாளப்படுத்த முடியாத வகையில் அவரால் முன்வைக்கப்பட்ட குடும்பவெளிகள் இருந்தன. தொடர்ந்து வாசிக்கும்போது அவரால் முன்வைக்கப்படும் பெண்கள், தமிழ்க் குடும்பவெளிக்குள் வித்தியாசமான விருப்பங்களோடும், மனவியல் ஓட்டங்களோடும் நெரிபடும் பெண்களாக இருப்பதை அடையாளப்படுத்த முடிந்தது. அந்த வேறுபட்ட தெரிவுகளுக்காகவும், தெரிவுசெய்த பெண்களின் மனவோட்டங்களையும் சின்னச் சின்னச் செயல்பாடுகளையும் விவரிக்கும் மொழிக்காகவும் அவரது கதைகளைத் தொடர்ந்து ஒருவரால் வாசிக்க முடியும்.

வாக்களிப்பும் எண்ணிக்கையும்

இந்தியா ஒன்றுபோல் சிந்திக்கிறது; ஒன்றுபோல் வாக்களிக்கிறது எனச் சொல்லிக்கொண்டிருப்பதின் அபத்தத்தைக் கைவிடவேண்டிய காலம் நமது காலம். ஆனால் இந்திய தேசியவாதத்தின் முரட்டுப் பக்தர்கள் அந்த அபத்தத்தைத் தொடரவே செய்வார்கள் என்பது குரூர உண்மை. தமிழ்நாட்டின் சட்டமன்றத்தேர்தல் ஏப்ரல் 6 இல் முடிந்தது. எட்டுக்கட்டங்களாக நடக்கும் மேற்கு வங்கத் தேர்தல் முடிந்தபின் எண்ணிக்கை நடக்க வேண்டும்; இல்லையென்றால் தமிழ்நாட்டின் முடிவு அங்கே பிரதிபலிக்கும்; பாதிப்பை உண்டாக்கும் எனச் சொல்லப்படுகிறது; நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை அபத்தமானது. நாடாளுமன்றத்தேர்தல்களும் சட்டமன்றத் தேர்தல்களும் ஒன்றாக நடந்த கால கட்டத்திலேயே தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் போன்றன தனித்தனியாகச் சிந்தித்து வாக்களித்த மாநிலங்கள். மாநிலத்தை யார் கையில் அளிக்க வேண்டும்; மத்தியில் யார் அதிகாரத்திற்கு வரவேண்டும் எனத் தெளிவாக வாக்களித்திருக்கிறார்கள். இந்திரா காந்தியின் அவசரநிலைக்குப் பிந்திய தேர்தல்களில் தமிழ்நாடு முழுக்கவும் இந்திய மனபோக்குக்கு மாறாகவே வாக்களித்துக் கொண்டிருக்கிறது. அதன் உச்சநிலை வெளிப்பாடு 2019 நாடாளுமன்றத்தேர்தல்.   ...

சட்டமன்றத்தேர்தல் -2021: சில குறிப்புகள்

படம்
சட்டமன்றத்தேர்தல் -2021  அறிவிப்புக்குப்பின்  அவ்வப்போது எனது  முகநூலில் எழுதிய குறிப்புகள் இங்கே தொகுதியாகத் தரப்பட்டுள்ளன. வாசிப்புக்கு நேரமிருப்பவர்கள் வாசித்துப்பார்க்கலாம்

தூரத்துப் பச்சைகளும் கானல் நீரும்

படம்
தூரத்துப்பச்சை என்ற உருவகத்தை கானல் நீர் என்ற உருவகத்தொடரின் நேர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம்; எதிர்நிலையாகவும் புரிந்து கொள்ளலாம். அப்படியான புரிதல் வெளியில் இருப்பதில்லை. புரிந்து கொள்ள நினைப்பவரின் உள்ளே இருக்கிறது. எல்லோரும் விரும்பி முழுமனத்தோடு தூரத்துப் பள்ளிக்கூடத்துக்குப் போகிறார்கள் என்பதில்லை. ஒரு பள்ளிக்கூடத்தின்/ கல்வி நிலையத்தின் அடிப்படை வசதிகள் பக்கத்தில் இருந்தால் தூரத்துப்பள்ளியைத் தெரிவுசெய்பவர்கள் எண்ணிக்கை குறைவாகவே இருக்கும். பக்கத்தில் இருக்கும் கல்வி நிறுவனத்தில் சேர்ந்து படிக்க விருப்பம் இருந்தாலும் வாய்ப்பு கிடைக்காததால் தூரம் தூரமாய்ப் பயணம் செய்யும் மாணவிகளை நான் எனது பணிக் காலத்தில் சந்தித்திருக்கிறேன். குறிப்பாகத் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்திற்கு வந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் பெண்பிள்ளைகளின் அலைச்சல் கதைகளைக் கேட்டுச் சகித்துக்கொள்ள முடியாமல் கொஞ்சம் ஆறுதல் மட்டுமே சொல்வேன். ஒரேயொரு எடுத்துக்காட்டு 2000-2002 ஆம் கல்வி ஆண்டில் அந்தப் பெண்ணின் தினசரிப்பயணத்தை மட்டும் இங்கே சொல்கிறேன். அவளின் பயணத்தின் கதை எனக்குத் தெரியாதவரை திட்டு வா...

உலக அரங்கியல் நாள் வாழ்த்துகள் -2021

படம்
உலக அரங்கியல் நாள் கொண்டாட்டத்தைத் தொடங்கிய நிறுவனம் ஹெல்சிங்கி உலக அரங்கியல் நிறுவனம்(1962). அந்நிறுவனம் மட்டுமல்லாமல் அரங்கியல் பள்ளிகள், கல்லூரிகள், குழுக்கள் என ஒவ்வொன்றும் மேடைநிகழ்வு, கருத்தரங்கம், உரை, மதிப்பளித்தல் எனக் கொண்டாடித் தீர்க்கும் ஒரு கொண்டாட்ட நாள். கடந்த ஆண்டிலேயே கோவிட் 19 தாக்கத்தால் அதன் பொலிவிழந்து விட்டது. சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் இணையவழி நிகழ்வுகளே ஒருங்கிணைக்கப்படுகின்றன. உலக அரங்கியல் நாள் நிகழ்வின் உச்சம் அந்த நாளில் தரப்படும் செய்தியும் அதனை வழங்கும் அரங்க ஆளுமைத் தேர்வும் தான். இந்த ஆண்டுக்கான அரங்கியல் ஆளுமையாகத் தேர்வு பெற்றுள்ளவர் ஹெலன் மிர்ரன்