இடுகைகள்

நடிப்புச் சொல்லித் தரும் நாடகப்பள்ளிகள்

படம்
  சண்முகராஜனின் முயற்சிகளை முன் வைத்து:  பல்கலைக்கழகப் பாடத்திட்டங்கள் கலைஞர்களை உருவாக்குவதில்லை என்றொரு குற்றச்சாட்டு உண்டு. இலக்கியத்தில் ஆய்வுப் பட்டத்திற்குப் பின்னும் ஒரு கவிதை, கதை, நாடகம் என எழுதும் ஆற்றல் ஒருவருக்கு ஏற்படுவதில்லை என்ற வாதத்தில் உண்மை இல்லாமல் இல்லை. எழுத்துக்கலை சார்ந்து சொல்லப் படும் இந்தக் குற்றச்சாட்டு நாடகக் கலையின் இன்னொரு பரிமாணமான அரங்கவியல் துறைக்குப் பொருந்தாது என்றே தோன்றுகிறது. ஏனென்றால் இந்தியாவில் செயல்படும் பல நாடகப் பள்ளிகள் தேர்ந்த நாடகக் கலைஞர்களை உருவாக்கியிருக்கின்றன . அதிலும் குறிப்பாக புதுடெல்லியில் செயல்படும் தேசிய நாடகப் பள்ளியின் மாணவர்கள் தேர்ந்த நடிகர்களாக, இயக்குநர் களாக, ஒப்பனைக் கலைஞர்களாக, ஆடை வடிவமைப்பாளர்களாக உலக முழுக்க வலம் வருகின்றனர்.

வண்ணங்களாகும் அந்தரங்கம்

படம்
பிரசாத் என்ற பெயருக்கு முன்னால் ‘கன்னட’ என்ற சொல்லை அவரே சேர்த்து வைத்திருந்தாரா..?அல்லது தமிழ் அச்சு ஊடகங்கள்தான் சேர்த்துச் சொல்கின்றனவா..? என்பது உறுதியாகத் தெரியவில்லை. அந்தப் பெயரைச் சுற்றி எழுப்பப்படும் புனைவுகளுக்கும், எழுதப்படும் கதைகளுக்கும் வண்ணங்கள் வழங்க வேண்டும் என்று என்னிடம் கேட்டால், நான் பரிந்துரை செய்வன; பச்சையும் நீலமும் கலந்த செஞ்சுடர் இருட்டு என்பது தான்.செஞ்சுடர் இருட்டாகப் பரவி விரியும் காட்சிகளில் மிளிரும் பச்சை வண்ணமும் நீல வண்ணமும் உண்டாக்கும் உணர்வுகள் எப்படிப் பட்டவை; அவை பார்வையாளர்¢களின் மனத்தில் எழுப்பும் உணர்வுத் தூண்டல்கள் என்ன வகையானவை என்பதை விளக்குவதற்கு புள்ளியியல் விவரங்கள் தேவையில்லை. வண்ணங்கள் பற்றிய பாரம்பரிய அறிவே கூடப் போதும். ஆனால் காட்சிச் சாதனங்களுக்குச் சற்றும் குறையாமல் எழுத்தும் உணர்வுத் தூண்டலைச் செய்யும் வல்லமை உடையன என்பதைத் தர்க்க பூர்வமாக விளக்க வேண்டும் என்றால் புள்ளிவிவர ஆய்வொன்றை மேற்கொள்ளத் தான் வேண்டும். அந்த ஆய்வு வெறும் புள்ளியியல் துறையோடு நின்று விடாமல், மருத்துவ உளவியல் துறையையும் இணைத்துக் கொண்ட புள்ளியியல் ஆய்வாக இருந்தா...

அடுத்தவன் கண்ணில் இருக்கும் துரும்பு..?

படம்
  இந்திய ஊடக வெளிகள் கடும் போட்டியின் களன்களாக உள்ளன. சேரி, ஊர், கிராமம், நகரம், மாநகரம் என எல்லா வெளிகளையும் கடந்த காட்சிகளை விரித்துக் காட்டும் தொலைக்காட்சி ஊடகங்கள் இந்திய யதார்த்தத்தைக் கண்டு கொண்டனவாக இல்லை. பல நேரங்களில் இந்தியச் சமூகத்தில் நிலவும் எல்லாவகை வேறுபாடுகளையும் புறந்தள்ளி விடும் சித்திரங்களையே அவை தீட்டிக் காட்டுகின்றன. பெரும்பான்மை மக்களின் யதார்த்த வாழ்க்கைக்குப் புறம்பான விவாதங்களை முன்னெடுக்கும் ஆங்கிலச் செய்தி அலைவரிசைகளின்¢ உள்நோக்கத்தைப் புரிந்து கொள்ளாத நிலைதான் வட்டார மொழி அலைவரிசை களிடம் காணப்படுகின்றன. 2007, ஜனவரியில் அதிகம் தோன்றிய பிம்பங்கள் யார் ? என்று கேள்வியைக் கேட்டு ஒரு குறுஞ்செய்திப் போட்டி நடத்தினால் முதலிடத்தைப் பிடிப்பதில் காதல் ஜோடி ஒன்றிற்¢கும், ஒரு அபலைப் பெண்ணுக்கும் (?) நிச்சயம் கடும் போட்டி இருக்கும். 

பாடத்திட்ட அரசியல்

படம்
‘விழிப்பென்பது  இரு விழிகளையும் சேரத் திறந்து வைத்திருத்தல் அல்ல‘ (சு. வில்வரத்தினம், உயிர்த்தெழும் காலத்திற்காக) என்ற வரிகளைப் படித்துவிட்டு, அடையாளத்திற்கு வைக்கப்படும் பட்டுக் கயிறு அந்தப்பக்கத்தில் - 391 இருக்கும்படி வைத்துவிட்டு, கண்களை ஒருசேர மூடி விழித்திருந்தேன். அப்பொழுது அந்த நண்பா், முனைவா் நா. கண்ணன் அங்கு வந்தார். என்னுடன் எம் பல்கலைக்கழகத்தில் சமூகவியல் துறையில் பணியாற்றுபவா். பாலியல் தொழிலாளிகள் - ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பற்றிய ஆய்வுகளை அக்கறையோடு செய்ய விரும்புபவா். குற்றங்களின் அளவு, விகிதாச்சாரம்,தரப்படும் தண்டனைகளில் உள்ள நுண் அரசியல் பற்றியெல்லாம் அவரோடு உரையாடித் தெரிந்து கொள்ளலாம். அத்துடன் தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் பல்கலைக்கழக ஆசிரியா்கள் வெகு சிலரில் ஒருவா். ‘இப்பொழுதெல்லாம் தமிழில் நூல்கள் அச்சிடும் தரம் வெகுவாக உயா்ந்து விட்டது; ஆங்கில நூல்களோடு போட்டி போட்டு வருகின்றன‘ என மகிழ்ந்தவா் உதாரணங்களாகக் காலச்சுவடு பதிப்பகத்தின் புதுமைப்பித்தனின் படைப்புக்களையும், ஜி. நாகராஜன் படைப்புக்களையும்...

பொருட்படுத்தப்படாத படங்களுக்குள் கவனிக்கப்பட்ட பாடல்கள் : வெகுமக்கள் ரசனையின் ஒரு பரிமாணம்

படம்
2 006 ஆம் ஆண்டிற்கான வசூல் வெற்றி – சூபர் ஹிட் படம் – எது? என்ற போட்டியில் இறங்கும் படம் இன்னும் வரவில்லை. இந்த ஆண்டு முடிய இன்னும் பல மாதங்கள் இருக்கின்றன. ஆனால் இந்த ஆண்டின் சூப்பா் ஹிட் பாடல் எது? என்பது முடிவாகிவிட்டது. வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும் கல்யாணம் அந்த தென்னாக்குன்னி கூட்டமெல்லாம் ஊர்வோலம்…… என்று தொடங்கும் சித்திரம் பேசுதடி படத்தின்   பாடலோடு போட்டியிட்டு முதலிடத்தைப் பிடிக்கும் பாடல் இந்த வருடத்திற்குள் இன்னொன்று வரும் என்று தோன்றவில்லை. எப்.எம். தொடங்கிப் பாடல்களை ஒளிபரப்பும் இசை அலைவரிசைகள் எல்லாவற்றிலும் இந்தப் பாடல் வரிகள் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.