இடுகைகள்

சினிமா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாரதியென்னும் சி. சுப்ரமணிய பாரதி

படம்
31.08.2000 இல் திரையரங்கிற்கு வந்து விட்ட பாரதியை 12.09.2000 இல் பார்த்ததற்கு ஒரு காரணம் இருந்தது. 11.09.2000 அன்று அம்ஷன்குமார் இயக்கத்தில் வந்திருந்த சி. சுப்ரமணிய பாரதியைப் பார்த்து விடும் வாய்ப்பொன்றிருந்தது. நான் பணி செய்யும் பல்கலைக்கழகம் எட்டையபுரம் பாரதி மணி மண்டபத்தைத தத்தெடுக்கவும், எட்டையபுரத்தில் “பாரதி ஆவணக்காப்பகம்“ ஒன்றை நிறுவவும் திட்டமிட்டு, பாரதி நினைவு நாளில் (11, செப்டம்பா்) விழாவொன்றை நடத்தியது. அந்த விழாவின் ஒரு பகுதியாக அம்ஷன் குமாரின் சி. சுப்ரமணிய பாரதி காட்டப்பட்டது. அன்றும் அதற்கடுத்த நாளும் எனது மாணவிகள் மாணவா்களுடன் சி. சுப்ரமணிய பாரதியையும், ஞான. ராஜசேகரன் இயக்கிய “பாரதி“ யையம் பார்த்துவிடுவதாகத் திட்டம்.

நியோகா: பழைய தர்மத்திற்குள் புதிய விடியல்

படம்
ஈழவிடுதலை , தனி நாடு போன்றவற்றிற்கான போராட்ட ம் மற்றும் போர் நிகழ்வுகளையும், அதன் விளைவான புலப்பெயர் வுகளை யும் பின்னணியா க க்கொண்ட புனைகதைகள் நிறைய வாசிக்கக் கிடைக்கின்றன. அவ்வப்போது திரைப்படங்களாகவும் வந்து கொண்டுள்ளன. கனடாவில் வாழும் சிறுகதை ஆசிரியர், அரங்கவியலாளர் கறுப்புசுமதி யின் இயக்கத்தில் உருவான நியோகா என்ற சினிமா அப்படியானதொரு படம்.   2016 இல் கனடாவில் வெளியான அந்தப் படத்தின் திறப்பு பொதுப்பார்வையாளர்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற தகவலை சுமதியின் முகநூல் வழியாகப் படித்த தால் இணையத்தில் அந்தப் படத்தைப் பார்த்தேன்.

ஆவணப்படங்கள்-நோக்கங்கள், அழகியல், திசைவிலகல்கள்

படம்
ஆவணப்படங்கள் என்பன பிரச்சினையை முன்வைத்து தீர்வை வேண்டி நிற்பன. பிரச்சினைகளின் தன்மைகளைப் போலவே தீர்வுகளும் விதம்விதமானவை. பிரச்சினைகள் ஒவ்வொருவர் முன்னாலும் நிகழ்வனதான். நீண்ட காலமாக நடந்துகொண்டே இருப்பனவற்றைப் பார்க்கும் கண்கள் இல்லாலமல் வெகுமக்கள் தங்கள் பாடுகளுக்குள் தங்களைக் கரைத்துக்கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும்போது அதன் வரலாற்றையும் இருப்பையும் ஆவணப்படுத்த வேண்டும் என்று நினைக்கும் ஒரு ஆவணப்பட இயக்குநர் அதற்கான ஆய்வுகளை மேற்கொண்டு, தரவுகளைத் திரட்டித் தரும் வேலையைச் செய்கிறார். அத்தகைய ஆவணப்படங்களில் இயக்குநரின் பார்வைக்கோணம் தொடங்கி, அழுத்தம் கொடுப்பது, விவரிப்பது எனப் பலவற்றில் தீவிரத்தைக் கொண்டுவரமுடியும். அதற்கு மாறானவை தற்காலிகப் பிரச்சினைகள். திடீரென்று தோன்றும் விபத்து, பேரிடர், போன்றவற்றை ஆவணப்படுத்தும்போது காட்சிப்படுத்துவதில் குறைகள் இருக்கலாம். விவரிப்பதில் போதாமைகள் இருக்கும். தீர்வு கோருவதில் கூட முடிவான ஒன்றைச் சொல்லமுடியாமல் போகலாம். இந்த வேறுபாட்டைப் புரிந்துகொண்ட மனநிலையோடுதான் ஆவணப்படங்களைப் பார்க்கவேண்டும். இங்கே நான் பார்த்த சில தமிழ் ஆவணப்படங்களைப் பற்றிய அ

ராஜுமுருகனின் ஜிப்ஸி: கருத்துரைகள் தொகுதி

படம்
பெரும்பாலான மனிதர்கள், அளிக்கப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்து விடும்போது மிகக் குறைவானவர்கள் அளிக்கப்பட்ட வாழ்க்கையை நிராகரித்துவிட்டு, தனக்கான வாழ்க்கையைத் தேர்வுசெய்கிறார்கள். அவர்கள் தேர்வுசெய்த வாழ்க்கைக்குள் இருக்கும்போது ஏற்படும் நெருக்கடிகளுக்கு முகம்கொடுத்து, எதிர்த்துநின்று வெல்கிறார்கள். உதாரணமனிதர்களாக - வரலாற்று ஆளுமைகளாக அறியப்படுகிறார்கள்.

இயல்பானதும் இயைபற்றதுமான இரண்டு திரைப்படங்கள்:

படம்
வகைப்படுத்திப் புரிந்துகொள்ளுதல், விளக்குதல், விமரிசனம் செய்தல், மதிப்பீட்டுக் கருத்தை முன்வைத்தல் என்பன கலை இலக்கிய விவாதத்தை முன்னெடுப்பவர்கள், கடைப்பிடிக்கும் எளிய உத்தி. முன்னெடுப்பு அல்லது சோதனை முயற்சிப் படங்களில் வளர்நிலைப் பாத்திரங்களுக்குப் (Round Characters) பதிலாகத் தட்டையான பாத்திரங்களின் (Flat Characters) அகநிலை விவாதங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.

தமிழியல் ஆய்வு:தமிழக வெகுசன இசையின் அரசியலும் அரசியலற்ற இசையும்

தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் நடந்துள்ள ஆய்வுகளில் - குறிப்பாகச் சமூக அறிவியல் மற்றும் மொழிப்புல ஆய்வுகளின் வளர்ச்சியில் தமிழ்த் துறைகளின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க ஒன்று. ஒப்பீட்டளவில் இந்த வளர்ச்சி, சமூகவியல் துறைகள் சாதிக்காத சாதனைகள் கொண்ட வளர்ச்சி. இந்தியப் பல்கலைக்கழகங்களின் சமூக அறிவியல் துறைகள், காலனிய காலத்துச் சட்டகங்களை விட்டு விலகாமல் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நிலையில் தமிழியல் துறைகள் அவற்றிற்கு மாறாகப் பலதளங்களில் விரிவடைந்திருக்கின்றன.

குற்றமே தண்டனை : நம்பிக்கை தரும் சினிமா

படம்
  வெகுமக்கள் ரசனைக்கான ஒரு சினிமாவில் இருக்கவேண்டியன · பலவிதத்தொனியில் பேச வாய்ப்பளிக்கும் உச்சநிலை (Climax) · பாடல்களும் ஆட்டங்களும் (Songs and dances) · சண்டைக்காட்சிகள் (Fights) · நகைச்சுவைக் கோர்வைகள் (Comedy Sequences) · அறிமுகமான நடிக முகங்கள் (Popular Artists)

மணிரத்னத்தின் அரசியல்: விமரிசனமும் மாற்று அரசியலும்

படம்
(இருவா், ஆய்த எழுத்து படங்களை முன்வைத்து)  தமிழ் சினிமா முற்றமுழுதுமாக வியாபார சினிமாவாக மாறிவிட்டது மட்டுமல்ல, சினிமா பார்ப்பவா்களையும் வியாபார சினிமாவின் இன்பதுன்பங்களில் – லாப நஷ்டங்களில்ள பங்கேற்க வேண்டியவா்களாகவும் மாற்ற முயல்கின்றன. சினிமா செய்திகளைத் தரும் பத்திரிகைகளின் பங்கும் அவற்றில் உண்டு. பெரும் முதலீட்டில் எடுக்கப்படும் சினிமா வியாபார ரீதியாக வெற்றியடைந்தே தீர வேண்டும் என்ற மனோபாவம் உண்டாக்கப்படுகிறது. மணிரத்தினத்தின் “இருவர்“ வியாபார ரீதியாகத் தோல்வியடைந்தபோது வெளிப்படுத்தப்பட்ட வருத்தக்குரல்களின் உளவியல், சமூகவியல், பொருளியல் காரணிகள் ஆராயப்பட வேண்டியவை. 

பிகில்: குறையொன்றும் இல்லை

படம்
தனது பார்வையாளர்கள் கூட்டம் எது எனத் தீர்மானித்துக் கொண்டபின் அதற்கான படம் எடுப்பதும், அந்தப் பார்வையாளர் களுக்குக் குறையில்லாமல் கொடுத்து மகிழ்ச்சிப்படுத்துவதும் நேர்மையான செயல் என்பதை நாம் ஒத்துக் கொள்வோம் என்றால் பிகில் நேர்மையான படம். அதனைக் குறைசொல்லும் விதமாக- புறமொதுக்கும் விதமாக - ஒரு காட்சியும் இல்லை.திகட்டத் திகட்டக் காட்சிகளை அமைத்துள்ளார். நயன்தாரா,கதிர், ஜாக்கி ஷெராப், யோகிசேது, ஆனந்தராஜ், திவ்யதர்சினி, விவேக், கு.ஞானசம்பந்தன் எனப் பார்த்த முகங்களும் விளையாட்டு வீராங்கணைகளாகப் பத்துப்பன்னிரண்டு பெண்களும், அடியாட்களாகப் பல ஆண்களும் நடித்துள்ளார்கள். இரண்டு பெண் விளையாட்டு வீராங்கணைகளுக்காகத் தனித்தனிக் கதைகள், தந்தை - மகன் என இரண்டு விஜயுக்குமே பின்னோக்கு உத்தியில் முன் கதைகள், குத்துப்பாட்டு, உத்வேகமூட்டும் சிங்கப்பெண்ணே என்னும் பாட்டோடு, இரண்டு ஜோடிப்பாடல்கள் எனக் கச்சிதமாகப் படம் உருவாக்கப்பட்டுப் பார்வையாளர்கள் இருக்கையிலிருந்து கவனம் திரும்பாமல் படம் பார்க்கிறார்கள் மொத்தத்தில் குறையொன்றும் இல்லை.

கலையியல் நோக்கம் கொண்ட சினிமா: ஜல்லிக்கட்டு என்னும் இந்திய அபத்தம்

படம்
ஜல்லிக்கட்டு: இந்திய அபத்தம் ஒரு சினிமாவைத் திரை யரங்கில் வெளியிட்ட பின் குறிப்பிட்ட காலம் காத்திருந்தால் இணையம் வழியாகப் பார்க்கும் வாய்ப்புகளையும் வசதிகளையும் தொழில் நுட்பம் உருவாக்கி விட்டது. தொலைக்காட்சிப் பெட்டியின் குறுந்திரையில் புதிய படம் ஒன்றைப் பார்ப்பதை விரும்பாத என்னைப் போன்றவர்களுக்குச் சென்னை போன்ற பெருநகரம் ஒருவிதத்தில் வரம். உடனடியாக இல்லையென்றாலும் ஒருவார இடைவெளிக்குள்ளாவது ஜல்லிக்கட்டு போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடுகிறது. ஜல்லிக்கட்டு படத்தை இயக்கியுள்ள லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் முந்திய படம் அங்கமாலி டைரீஸ். படமாக்கப்பட்ட விதம், விவாதிக்கும் பொருண்மை காரணமாகக் கவனித்துப் பேசப்பட்ட படம். அந்தப் படத்தை விடவும் கூடுதல் கவனத்துடன் விவாதிக்கப்படக்கூடிய படமாக வந்துள்ளது. ஜல்லிக்கட்டு. ஒருவிதத்தில் இந்திய சினிமாவை உலக சினிமாவிற்குள் நகர்த்தும் முயற்சி என்றுகூடச் சொல்லலாம்.

காப்பான்: வணிக சினிமாவின் இயங்குமுறைகள்

படம்
கள்ளன் பெருசா? காப்பான் பெருசா? ஒரு சினிமாவை எடுப்பதற்குப் போடப்படும் முதலீட்டின் மீது லாபம் வேண்டும் என்பதை நியாயமற்றது எனச் சொல்லமுடியாது. போடப்படும் முதலீட்டின்மீது பன்மடங்கு லாபத்தை அடைவதைக் கூட வணிகத்தின் விதிகளைக் கொண்டு ஏற்றுக்கொள்ள முடியும். ஆனால் பன்மடங்கு லாபத்திற்காகப் பார்வையாளர்களின் சிந்தனையையும் எண்ணங்களையும் சிதறடிக்கும் நோக்கத்தைக் கொண்ட சினிமாக்களை, எந்தவித விமரிசனங்களும் இல்லாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. அத்தகைய ஏற்றுக்கொள்ளல்கள் சினிமாவைக் குறித்த எதிர்வினையின்மை என்பதாக கருதக்கூடியன அல்ல. நமது காலகட்டத்தைக் குறித்த அக்கறையின்மையின் வெளிப்பாடு அது. தனது வயலைத் தாக்கி அழிக்கும் புழுக்களையும் பூச்சிகளையும் தடுக்கும் வகையறியா விவசாயிகளைப்போலவே, நம் காலத்துச் சமூகப் போக்கைத் தாக்கிவரும் கருத்தியல்களின் ஆபத்துகளைக் குறித்து முணுமுணுக்காமல் இருக்கும் செயல் அது. திரள்மக்களின் கோபதாபங்களைத் திசைதிருப்பும் நோக்கங்கள் கொண்ட பண்டமாக திரைப்படங்களைக் கருதுபவர்களைக் குறித்து எச்சரிக்கை செய்ய வேண்டியது காலத்தில் செய்யவேண்டிய கடமை.

பூமணியின் வெக்கை: வெற்றி மாறனின் அசுரன்.

படம்
புதுச்சேரி நிகழ்கலைப்பள்ளி மாணவர்களுக்காக நவீனக் கவிதைகள் மற்றும் புனைகதைகளிலிருந்து நாடகப்பிரதிகளை உருவாக்கிக் கொண்டிருந்த காலகட்டம். புதுச்சேரிக்குப் போவதற்கு முன்பே எழுதிப்பார்த்தது சுந்தர ராமசாமியின் பல்லக்குத் தூக்கிகள். போன பின்பு புதுமைப்பித்தன், பிரபஞ்சன், திலீப்குமார், கோணங்கி ஆகியோரின் சிறுகதைகளிலிருந்து ஆக்கிய நாடகப் பிரதிகள் சிலவற்றை மாணவர்கள் மேடையேற்றம் செய்தார்கள். நானும் செய்தேன்.

இரு சினிமா ஆளுமைகளின் மரணங்கள்

படம்
  அருண்மொழி இனி இல்லையா? ஆர் யூ இன் சென்னை - R U N Chennai - என்று கேள்வியாகக் குறுந்தகவல் வரும்போதெல்லாம் தொலைபேசி எடுத்துப் பேசும் நேரம் நீண்டுகொண்டே போகும். தொடக்கத்தில் என்னை நீ கலாய்ப்பதும்; உன்னை நான் கலாய்ப்பதுமாக நீளும் அந்த உரையாடல்கள் அண்மையில் பார்த்த நாடகம், சினிமா, புத்தகம் என்று நீண்டு எப்போது சென்னை வருகிறீர்கள்?

தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

படம்
நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

அழிபடும் அடையாளங்கள்

படம்
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகத் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் ஒருவித வெறியுடன் கேட்கிறது அந்தச் சத்தம். தொலைக்காட்சியின் எந்தத் தமிழ்சேனலைத் திருப்பினாலும் அரைமணி நேரத்திற்குள் அந்தச் சத்தம் செவிப்பறையைத் தாக்குகிறது. கட்சிக் கூட்டங்கள், கல்யாண மண்டபங்கள் என எங்கும் இந்தச் சத்தம்தான். சட்டசபையின் இரைச்சல்களுக்கு ஊடே இந்த சத்தமும் கேட்டது. ஏன் போடுகிறோம் என்று தெரியாமலேயே தமிழா்கள் “ஒ” போடுகிறார்கள்.

ரஜினிகாந்தின் காலாவும் பா. ரஞ்சித்தின் கரிகாலனும்

படம்
நடிகர் ரஜினிகாந்த் உச்ச நட்சத்திர நடிகர் நிலையை அடைந்து கால் நூற்றுக்கும் மேலாகி விட்டது. 1996 இல் பாட்ஷா வெளிவந்த போது தமிழ்ச் சினிமாவின் உச்ச நடிகர் அவர்தான். கேள்விக்கு அப்பாற்பட்டதாக இருந்தது அப்போது. இப்போது 22 ஆண்டுகளுக்குப் பிறகும் தானே தமிழ்ச் சினிமாவின் உச்சநடிகர் என்று நம்புகிறார். தமிழ்ச் சினிமாவின் வணிகப்பரப்பும் நம்புகிறது. அந்த நம்பிக்கையைத் தக்க வைக்க அவர் தொடர்ந்து தனது உடலைப் பணயம் வைக்க வேண்டியிருக்கிறது.

ஷங்கரின் 2.0 - நடிகர் மையமும் இயக்குநர் மையமும் கலந்த கலவை

படம்
ஒரு பேருந்தில் தன்னருகே நிற்கும் வயதானவருக்குத் தான் அமர்ந்திருக்கும் இருக்கையை அளித்துவிட்டு நின்றபடியே பயணம் செய்யும் ஒருவரின் செயல் பாராட்டத்தக்கது. மனிதாபிமானம் மிக்கவர் என்று பாராட்டு அவருக்குக் கிடைக்கக் கூடும். இயக்குநர் ஷங்கர் எப்போதும் தனது “இயக்குநர் இருக்கை”யைத் தன் விருப்பத்துடன் இன்னொருவருக்குத் தருகிறார்.

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

சர்கார்: கலைத்துவம் கலைக்கும் அலை

படம்
பத்துப்பத்து நாட்கள் இடைவெளியில் புதுவரவுச் சினிமாக்களைப் பார்க்கும் வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள நேர்ந்துள்ளது. நேர்ந்துள்ளது என்பதைவிட நெருக்கடி உருவாக்கப்பட்டுள்ளது என்றே சொல்லவேண்டும். தானாக உருவாகவில்லை; தமிழ்ச் சினிமாவின் பரப்பு வெவ்வேறு சங்கங்களின் வழியாகத் தன்னை வடிவமைத்துக் கொள்ளத் தொடங்கியிருப்பதின் பின்னணியில் இந்த நெருக்கடி உருவாகியிருக்கிறது. எந்தவொரு சினிமாவையும் ‘பார்க்க வேண்டிய சினிமா’ என்ற எண்ணத்தை உருவாக்கிக்கொள்வதன் பின்னணியில் பல காரணிகள் இருக்கின்றன. அக்காரணிகள் அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும் என்பதும் இல்லை. ஒவ்வொருவருக்கும் வெவ்வேறாக இருக்கின்றன.

ஷங்கர்: பிரமாண்ட புனைவுகள்

தமிழக முதல்வரிடம் “முதலமைச்சா் பொது நிவாரண நிதி“க்காக ரூ. 3 லட்சமும், ஒரிசா புயல் நிவாரண நிதிக்காக ரூ. 2 லட்சமும் வியாழக்கிழமை வழங்கினார். “முதல்வன் பட இயக்குநா் ஷங்கர். புகைப்படத்துடன் இச்செய்திக் குறிப்பை வெளியிட்டிருந்தது தினமணி நாளிதழ் (26. 11. 1999) இக்குறிப்பில் முதல்வன் என்பது மட்டும் ஒற்றை மேற்கோள் குறிக்குள் தரப்பட்டிருந்தது. இதன் மூலம் தினமணி தனது வாசகா்களுக்கு உணா்த்த விரும்பிய குறிப்பு ஒன்று உண்டு.ஷங்கரின் சமீபத்திய படமான முதல்வன் திரைப்படத்தை பார்க்காத வாசகா்களுக்கு அந்தக் குறிப்பு போய்ச் சோ்ந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் முதல்வன் படத்தைப் பார்த்துள்ள வாசகா்களுக்கு அதன் குறிப்புத் தரும் அா்த்தங்கள் புரிந்திருக்கலாம். அந்தக் குறிப்பு தமிழ் சினிமாவிற்கும் தமிழக அரசியலுக்கும் இடையேயுள்ள உறவையும் முரணையும் விளக்கிக் காட்டும் அா்த்தங்கள் சார்ந்தது. அந்த அா்த்தங்களை ஒற்றை மேற்கோள் குறிப்பு மூலம் விளக்கிவிட முடியும் என தினமணி நினைத்துக் கொண்டதுதான் ஆச்சரியம், முதல்வன் படத்தை ஈடுபாட்டோடு பார்த்து, ஷங்கரின் சமூகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்த வாசகனுக்கு – பார்வையாளனுக்கு – இப்போதைய