இடுகைகள்

உளவியல்களை எழுதுதல்

படம்
  தமிழில் உளவியல் எழுத்து எனப் பேசத்தொடங்கிய உடனேயே காமம், அதன் தொடர்ச்சியான பிறழ்வான உறவுகள், வரம்புகளை மீறுவதும் குற்றவுணர்வில் தவிப்பதும் எனவே விரிகின்றன.  உளவியலைத் தனிமனிதச் சிக்கலாக மட்டுமே பார்ப்பதின் விளைவுகள் அது. உளவியல் சார்ந்த சொல்லாடல்களைத் திரளின் விளைவுகளாகப் பார்க்கும் பார்வையும் அதன் பின்னணிக்காரணங்களையும் பார்க்கத்தொடங்கினால் இளையோர் உளவியல், சடங்குகளின் உளவியல், சமய உளவியல், சாதிய உளவியல் என அதனை நீட்டிக்க முடியும். அப்படியான சிந்தனையோடு தமிழ் எழுத்தாளர்கள் எழுதுவதைத் தேடித்தான் படிக்கவேண்டியுள்ளது. இவ்விரண்டு கதைகளும் தனிமனித உளவியலைப் பொதுமன உளவியலாக - அதன் காரணங்களோடு எழுதியுள்ளன. கட்டுரையை வாசித்துவிட்டுக் கதைகளையும் தேடி வாசிக்கலாம். 

உணவும் பண்பாட்டு அடையாளங்களும்.

படம்
அதிகாலை நாலு மணிக்கு ரயிலேறி தமிழ் நாட்டின் தென்கோடியிலிருந்து வடகோடி ஊரான ஜோலார்ப் பேட்டை போய்ச் சேர்ந்த போது இரவு ஏழு மணி. மறுநாள் நடக்க இருக்கும் விழா/கருத்தரங்கம் திருப்பத்தூரில் இந்தியப் பழங்குடிப் பண்பாடும் திராவிடப் பண்பாடும்   [ தூய நெஞ்சக் கல்லூரியில் 2007, டிசம்பர் 18,19] என்றொரு கருத்தரங்கம்.   

ஆப்த வாக்கியங்கள்-

”கறுத்த இருட்டான ஆர்வமொன்று அவனது சிந்தனைக்குள் அப்போது நுழைந்து அமர்ந்தே விட்டது”  கவித்துவம் கூடிய இந்த வரி ‘அதிசய நீரூற்று’ என்ற கதையின் இடையில் வாசிக்கக் கிடைக்கிறது.

திலீபன்: தொன்மமாக்கும் புனைவுகள்

படம்
சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும்: தொன்ம மீட்டுருவாக்கமோ (De-mythification), மறுவிளக்கமோ (Re-interpretation) அல்ல. இது தொன்ம ஆக்கம் (Mythification).

எந்த உலகத்தில் வாழ்கின்றோம்

படம்
தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக்கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம்.சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.