நவம்பர் கதை : நடப்பியல் நடிப்பின் வலிமை
”தமன்னாவின் வீட்டில் ரெய்டு” என இணையப்பக்க விளம்பரமாக வரும் இணையத்தளத் திரைத் தொடர் கதைப்பின்னல், விடுவிப்பு என்ற அடிப்படையில் துப்பறியும் கதை. எல்லாத் துப்பறியும்/குற்றவிடுவிப்புக் கதைகளின் தன்மையில் இருப்பதில் கூடுதல் கவனத்துடன் இருக்கிறது. இதனைத்தாண்டி இத்தொடரைப் பார்த்து முடிக்கும்போது அத்தொடரில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்துள்ள நடிகர்களும் நடிகைகளும் நடப்பியல் - Realsitic - நடிப்பில் தேர்ந்தவர்களாகத் தங்களை முன்வைத்துள்ளனர்.