தொலையும் நம்பிக்கைகள்
மொழியும் சமயமும் பொருளாதார அடித்தளத்தின் மேல் பல்வேறு மேல்கட்டுமானங்கள் இருக்கின்றன. அடித்தளமான பொருளாதார உற்பத்தியும் பங்கீட்டு முறைகளும் மாறும்போது மேல்கட்டுமானங்களும் மாற்றம் அடையும் என்பது மார்க்சிய இயங்கியலின் அடிப்படைப்பாடம். மேல்கட்டுமானங்களில் பேரடையாளமாக இருப்பன சமயம், மொழி, இனம், குடும்ப அமைப்பு போன்றன. சிற்றடையாளமாக இருப்பன பேரடையாளங்களின் சினைக்கூறுகள்.