இடுகைகள்

ஊடகவெளி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் பேசும் ஊடகங்கள்

வரப்போகும் சட்டமன்றத்தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற அறிவிப்பைச் செய்துவிட்டுத் தேர்தல் களம்காண நினைக்கின்றன ஒவ்வொரு கட்சியும் கூட்டணிகளும். இதுதான் சரியானது என்பதுபோல ஊடக விவாதங்களும் நடக்கின்றன. கூட்டணி என்றால் யார் முதல்வர் என்பதைத் தாண்டி. அதனை அறிவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது போன்ற விவாதங்களும் நடக்கின்றன.

பிக்பாஸ்: உள்ளிருப்பின் காரணங்கள்

படம்
  விஜய்தொலைக்காட்சியின் “பெருந்தல” – பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம்  அனிதா சம்பத் வெளியேறியுள்ளார். அவரது வெளியேற்றத்தைச் சமூக ஊடகங்களில் இயங்குபவர்கள் வெளியேற்றப்பட்டார் என்றே நம்புகின்றனர். அனிதா வெளியேற்றம் மட்டுமல்ல; இதற்கு முன்பு அர்ச்சனா, சனம்ஷெட்டி, சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி   ஆகியோரின் வெளியேற்றங்களின் போதும்கூட இதுபோலவே கருத்துகள் வெளிவந்தன. ரேகா, வேல்முருகன், சுஜித்ரா, ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோரின் வெளியேற்றங்களின்போது அப்படியான கருத்துகளால் நிரம்பவில்லை.

முல்லையென அறியப்பட்ட சித்ரா

படம்
2014 முதலாகவே தொலைக்காட்சி அலை வரிசைகளில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர், விளம்பரப் படங்களின் நடிகை, தொடர்களின் நடிகை என வந்து கொண்டிருந்தார் என்றாலும், அவரது உருவமும் பேச்சும் சிரிப்புமான முகமும் பதிந்துபோன தொடராக இருந்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற விஜய் தொலைக் காட்சியின் முதன்மை நேரத்தொடர்தான். அந்தப் பெண்ணின் பெயர் சித்ரா என்பதுகூட நேற்றுத் தற்கொலை செய்துகொண்டதாகப் பரவிய செய்திக்குப் பின்புதான் தெரியும். செய்திகளில் கூட முல்லையாக நடித்த சித்ரா என்றுதான் சொன்னார்கள்.

ஊடகப்பேச்சுகளும் ஊடகத்தைப் பற்றிய பேச்சுகளும்

படம்
ஒவ்வொரு தேர்தலும் அதற்கு முந்திய தேர்தலைவிட - அதுவரை இல்லாத மாதிரி- விசித்திரமாக மாற்றப்பட்டு வருகின்றன . முறைப்படி தேர்தலை அறிவிக்கும் தேர்தல் ஆணையம் 90 நாட்களுக்கு முன்பே அறிவிக்கிறது. அப்போது முதல் பணப் பரிவர்த்தனையையும் விளம்பர முன்னிறுத்தலையும் கட்டுப்படுத்த காவல் துறையும் மாவட்ட நிர்வாகமும் களத்தில் இறங்கி விடுகின்றன. படம்பிடிக்கும் காமிராக்களோடு ஆங்காங்கே நிற்கும் காவல் துறை வாகனங்கள், தேர்தல் வந்து விட்டது என்பதைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. தேர்தலைக் காட்சிப்பொருளாக்கும் தேர்தல் ஆணையம் இன்னும் பல நிகழ்வுகளைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறது. எல்லோரையும் வாக்களிக்கச் செய்வோம்; வாக்காளர் அடையாள அட்டை வாங்குவதை எளிமையாக்கிவிட்டோம்; வாக்காளர் விழிப்புணர்வுக் கூட்டங்களை நடத்துகிறோம்; ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் விழிப்புணர்வுப் பிரச்சாரம் வரும்; ஒவ்வொரு வாக்காளரையும் தேர்தல் ஆணையம் சந்தித்துப் பேசிவிடும்; நேர்மையான தேர்தலை நடத்திக் காட்டுவோம்; நெருக்கடியில்லாமல் நீங்கள் வாக்களிக்கலாம் என உத்தரவாதங்களைத் தந்துகொண்டிருக்கிறது. சரியாகச் சொன்னால், அரசியல் கட்சிகள்  தேர்தலுக்குத்

மையத்திற்கு வெளியே இருந்தவர் தோனி

படம்
இரவுமுழுவதும் நடக்கும் தெருக் கூத்திலும் ஸ்பெஷல் நாடகத்திலும் முக்கியமான கட்டங்களில் தூங்கிய பார்வையாளர்கள் எழுந்து உட்கார்ந்து விடுவார்கள். குறிப்பாக வாதம்- எதிர் வாதம் என்ற பகுதிகளில் நடிகர்களின் குரலும் வாதத்திறமையும் அந்த நேரத்தில் உருவாக்கிப் பேசும் வசனங்களும் இட்டுக்கட்டும் பாடல்களும் கையொலியை எழுப்பும். அது அந்தப் பாத்திரத்தை ஏற்று நடிக்கும் நடிக ஆளுமைக்குக் கிடைக்கும் பாராட்டு. அப்படித்தான் தோனியின் மட்டையடியை இந்தியத் திரள் காத்திருந்து ரசித்தது. நான் அப்படி ரசித்திருக்கிறேன். அப்படிக் காத்திருந்து ரசிக்க இன்னொரு வீரரைத் தேர்வு செய்ய வேண்டும்.

ஊடகங்களைக் கண்காணித்தல்

படம்
ஊடகங்களைக் கண்காணித்தல் என்பது அண்மைக் காலத்தில் வெளிப்படையாகி இருக்கிறது. மக்களாட்சியில் எதிர்த்தரப்புக் குரல்களுக்கு இடமுண்டு என நம்பும் அரசியல் கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் கண்காணிப்பு நடக்கவே செய்யும். கண்காணிப்பவர்களுக்கு இரண்டு நோக்கங்கள் உண்டு. கண்காணிப்பின் வழியாக எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் மாற்றுக் கருத்தை உருவாக்கிக் கொள்ளும் விதமான கண்காணிப்பு முதல் வகை. இரண்டாம் வகைக் கண்காணிப்பு மாற்றுக்கருத்தே வரக்கூடாது; அப்படி எழுப்புபவர்களை மிரட்டித் தன்வசப்படுத்துவது அல்லது வாயடைக்கச் செய்து காணாமல் ஆக்குவது என்பது இரண்டாவது வகை.

நிலவெளிப்பயணம்

சென்னை-78,கே.கே.நகர், முனிசாமி சாலை, மஹாவீர் காம்பளக்ஸ், எண்.6, டிஸ்கவரி புக் பேலஸ் முகவரியிலிருந்து அதன் புதிய வெளியீடான நிலவெளி -மாத இதழ், ஆளஞ்சல் மூலம் வந்து சேர்ந்த நேரம் நேற்று(16-05-2019) மாலை 6 மணி. 24 மணி நேரத்தில் படித்து முடித்துவிட நினைக்கவில்லை. என்றாலும் முதல் இதழ் என்பதால் 68 பக்கங்களையும் வாசித்து விடுவது என்று கங்கணம் கட்டி வாசிக்கத் தொடங்கினேன். மொத்தமாக நான்கு அமர்வுகள்.

பார்வையாளர்களாகிய நாமும் நமது பாவனை எதிர்ப்புகளும்

படம்
தகவல்கள்……. மேலும் மேலும் தகவல்கள்….. அா்த்தங்கள் ……. காணாமல் போகும் அா்த்தங்கள்……. நமது காலம் ஊடகங்களின் காலம்; நிலமானிய சமூகம், முதலாளிய சமூகம் எனப் பொருளாதார அடித்தளத்தின் பேரால் சமூகக் கட்டமைப்பை வரையறை செய்பவா்கள் கூட இன்றைய சமூகக் கட்டமைப்பைத் தகவல் சமூகம் (Information Society) என்றே வரையறை செய்கின்றனா். நகரம் மற்றும் பெருநகரவாசிகள் ஊடக வலைப்பின்னலுக்குள் வந்து சோ்ந்தாகிவிட்டனா். கிராமம் மற்றும் சிறுநகரவாசிகள் அதன் பரப்பை நோக்கி இழுக்கப்பட்டு வருகின்றனா். ஊடகங்கள் தரும் அனுகூலங்கள் அனைத்தையும் மனித உயிர்கள் பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இந்த வலைப்பின்னல் விரிக்கப்பட்டுள்ளதா….? ஆட்சியதிகார நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காக நடந்ததா…..? மனிதச் செயல்பாடுகள் அனைத்தையும் நுகா்வியச் செயல்பாட்டின் பகுதிகளாக மாற்றிவிடத் தயாராகி விட்ட உலக ஓழுங்கின் இலக்குகள் ஈடேற வசதி செய்யப்படுகிறதா….? என்று கேள்விகளை அடுக்கிக் கொண்டே போனால் ஒற்றைப் பதில் கிடைப்பதற்கு மாறாகப் பலவிதப் பதில்களே கிடைக்கும்.

உலகக் கோப்பைக் கிரிக்கெட்

பார்வையாள நினைவுகள்  ஆஸ்திரேலியாவும் நியூசிலாந்தும் சேர்ந்து நடத்திய 1992 உலகக் கோப்பைத் தொடக்கவிழாக் காட்சிகளைச் சொந்த தொலைக் காட்சியின் முன்னால் உட்கார்ந்து பார்த்துவிடும் ஆர்வத்தோடு காலையிலிருந்தே தயாராக இருந்தோம்.புதுச்சேரி, அங்காளம்மன் நகர், பிள்ளையார்கோவில் தெரு 52 ஆம் எண், முதல் மாடி வீட்டின் முன்னறையில் வண்ணத்தொலைக்காட்சிப் பெட்டி படங்காட்டத் தொடங்கியபோது தொடக்க நிகழ்ச்சிகள் முடிந்துவிட்டன. நான் மட்டுமே கிரிக்கெட் பார்ப்பேன் என்பதால் வாங்கவில்லை. மனைவியும் பார்ப்பார். மகளும் மகனும் பார்ப்பார்கள். நாங்கள் குடியிருந்த வீட்டின் சொந்தக்காரரின் பிள்ளைகளும் கிரிக்கெட் பிரியர்கள் என்பதால் அவ்வப்போது அங்கே போய்ப் பார்ப்போம்.உலகக் கோப்பைப் போட்டிகள் தொடர்ச்சியாக நடக்கும் என்பதால் தினசரி அங்கே போய் உட்காருவதில் இருக்கும் சிரமம் உணர்த்தப்பெற்றது. 

விளையாட்டும் சினிமாவும்

அமீர்கானின் “ தங்கல்/ யுத்தம்” பார்த்தவுடன் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த “எம்.எஸ்.தோனி”யும் அதற்குச் சில மாதங்களுக்கு முன்பு பார்த்த ”இறுதிச்சுற்று”ம் நினைவுக்கு வந்தன.

விளையாட்டுகள்: கொண்டாட்டமாகவும் களியாட்டமாகவும் .

என்னைத் தீவிரமான விளையாட்டுக்காரன் என நினைத்துக்கொள்ளவில்லை என்றாலும் விளையாட்டு விரும்பி என்றே நம்புகிறவன்.சொந்த ஊரில் கபடி அணி உருவாக்கி உசிலம்பட்டி வட்டத்திலிருந்து அடுத்த வட்டமான தேனிக்குச் சென்று திரும்பியதுண்டு. பள்ளியில் விளையாண்ட விளையாட்டுகள் கால்பந்தும் கிரிக்கெட்டும்.

தொலைக்காட்சித் தொடர்களில் திணறும் நவீனம்

படம்
ஊடகங்கள் உருவாக்கும் வெகுமக்கள் கருத்தியல் மற்றும் ரசனை குறித்த அக்கறை கொண்டவன் என்ற வகையில் திரைப்படங்களைப் பார்க்கும் அதே அக்கறையுடன் தொலைக்காட்சித் தொடர்களையும் கவனிப்பேன். ஆனால் எனது வேலை காரணமாக எல்லாத் தொலைக்காட்சி அலைவரிசைகளின் எல்லாத் தொடர்களையும் பார்க்கமுடிவதில்லை.

மறக்கடித்தல் அதனினும் கொடிது.

படம்
நபர்களின் நடவடிக்கைகளை முன்வைத்து அரசியல் சொல்லாடல்களை உருவாக்குவது வெகுமக்கள் ஊடகங்களின் தந்திரம். ஊடகத் தந்திரங்களுக்குக் கேள்விகளற்றுப் பலியாகும் முதன்மை வர்க்கம் நடுத்தரவர்க்கம். எதையும் அறிவுபூர்வமாக விவாதிப்பதாக நம்பும் நடுத்தரவர்க்கம்.

ஊடக யுத்தம்: வென்றிலென் என்றபோதும் ?

வென்றி என்பது வெற்றி என்னும் சொல்லின் பழைய வடிவம் என்பதை ஊகிக்கமுடிகிறது. வென்றி என்பது பழைய சொல்லா? வெற்றி என்பது பழைய சொல்லா? என்பதை உறுதியாகச் சொல்ல முடியவில்லை. இன்று வெற்றியையெடுக்க அல்லது வெற்றியைக் கைப்பற்றக் களமாட வேண்டும். தனிமனிதர்களும் கூட்டமும் போராட வேண்டும். களம் நிகழ்காலத்தில் போராட்டக் களம். போராட்டங்களில் மௌனமாக இருத்தல் தொடங்கி, ஒத்துழையாமை, உண்ணாநிலை குரல் எழுப்புதல், மறியல், சட்டம் ஒழுங்கைக் குலைத்தல் எனப் பலவடிவங்கள் உள்ளன. ஆனால் முன்பிருந்த வடிவம் போர்க்களம்.ரதகஜதுரகபதாதிகளோடு மோதிவீழ்ந்த போர்க்களம்.

நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்

படம்

சமஸ்: அமைப்புகளை நோக்கி அதிகம் பேசும் குரல்

படம்
காலைத் தினசரிகளில் நான் காலையில் வாசிப்பன செய்திகள். நீண்ட செய்திகள் - பலரும் பங்கேற்ற நிகழ்வுகள் பற்றிய செய்திகள் இருந்தால் அன்றைய காலை வாசிப்பில் செய்திக் கட்டுரைகள் ஒதுக்கி வைக்கப்பட்டு மாலைக்குரியதாக மாறிவிடும். அலுவலகம் போய்விட்டு வந்து மாலையில் படிப்பேன். மாலையில் படிக்கலாம் என வைத்துவிட்டுப் போன பல செய்திக் கட்டுரைகள் படிக்கப்படாமலே நின்றுபோய்விடுவதுமுண்டு.

பாலச்சந்திரனின் படத்தொகுப்புக்குப் பின் : மிதக்கும் குமிழிகள்

படம்
காலத் தாழ்ச்சி தான் என்றாலும் நிகழ்ந்து கொண்டிருப்பனவற்றைக் கவனிக்காமல் யாரும் தப்பி விட முடியாது என்ற வகையில் தமிழக மாணவர்களின் போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஊடகப் பெருக்கத்த்தின் பங்கும் குறிப்பிடத் தக்கனவாக இருக்கின்றன. உண்மையான அக்கறை என்பதையும் தாண்டி தங்களை நிலை நிறுத்திக் கொள்ளும் நோக்கத்தோடு ஊடக நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் விவாதக் களங்களும், நேரலைச் செய்தித் தொகுப்புகளும் மேலும் மேலும் வலுவூட்டிக் கொண்டிருக்கின்றன. வெகுமக்கள் உளவியலைக் கட்டமைப்பதில் ஊடகங்களின் பங்கு பற்றிப் பேசினாலும் எல்லாவற்றையும் தாண்டி முக்கியமான திசை திருப்பலாக அமைந்தவை   அந்தப் புகைப்படங்களின் வரிசைகள் மட்டுமே என நினைக்கிறேன்.

ஆடிய காலும் பாடிய வாயும்

லீணா மணிமேகலையை நோக்கிச் சுட்டு விரலை நீட்டிய கண்ணனைக் காணாமல் போகச் செய்யும் விதமாக ஜெயமோகன் வீசிய அம்புகள் நாலாபக்கமும் பாய்ந்து கொண்டிருந்த போது கை பரபரப்புடன் அரித்தது. ஆனால் இங்கு வார்சா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் நடக்கும் காலம். நம்மூர் போலத் தாளை மாணவர்கள் பக்கம் வைத்து விட்டுக் கண்காணிப்பு வேலை செய்ய முடியாது. பாதி எழுத்துத் தேர்வு; பாதி செய்முறைத் தேர்வு என்பதால் மாணவிகளைத் தமிழ் பேசச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். ஆகவே பின் வாங்கி விட்டேன். பின் வாங்க இது மட்டுமே காரணமல்ல. ஜெயமோகன் சொல்வது போல அந்நிய நிதிகள் நம் நாட்டு ஆய்வுகளைக் கட்டமைக்கின்றன எனச் சொன்னவுடனேயே அவர் ஆதரிக்கிற எல்லாவற்றையும் நானும் ஆதரிக்கிறேன் என்பதாகப் பாவனை செய்து கொண்டு கிடைக்கப் போகும் அர்ச்சனைகளும் பட்டங்களும் கூடப் பின்வாங்கலின் காரணங்களாக இருந்தன. போலீஸ் நடத்தும் என்கவுண்டர் கொலைகள் ஒருவிதத்தில் தவிர்க்க முடியாதவை எனவும், இலங்கைக்குச் சென்ற இந்திய ராணுவம் அமைதிப்படையாகத் தான் இருந்தது; வன்முறையில் – குறிப்பாகப் பாலியல் வல்லுறவுகளில் ஈடுபடவில்லை என்றெல்லாம் எழுதும் ஜெயமோகனின் அணியின் த

தொலைக்காட்சியைப் படித்தல்: பங்கேற்பும் விலகலும்

படம்
நிகழ்த்துக்கலைகள் கண்வழிப்பட்டவை; செவி வழிப்பட்டவை. நிகழ்த்துக்கலைகளுள் ஒன்றான நாடகக் கலை, பாத்திரங்களின் வார்த்தை மொழியின் உதவியால் பிற நிகழ்த்துக் கலைகளிலிருந்து தன்னை வேறு படுத்திக் கொள்கிறது. மேடை நிகழ்வில் உற்பத்தியாகும் வார்த்தைமொழி (Verbal language) காட்சி ரூபம் (Visual) ஒலிரூபம் (Sound) என மூன்று நிலைகளில் தன்னை வந்தடையும் குறிகளின் மூலம் பார்வையாளர்கள் மேடை நிகழ்வோடு பரிவர்த்தனை கொள்கிறார்கள். சரியான பரிவர்த்தனை நடக்கும் நிலையில் பார்வையாளன் திருப்தியாக உணர்கிறான். சரியான பரிவர்த்தனைக்கு நாடகக்கலை எப்போதும் நடிகனையே நம்பியுள்ளது. காமிராவின் வழி பார்க்கப்பட்டு, அடுக்கப்பட்ட பிம்பங்களாக உருமாறி, தொழில்நுட்பத்தின் உதவியால் திரையில் உயிர்பெறும் திரைப்பட ஊடகம் கூடப் பார்வையாளர்களோடு பரிவர்த்தனை ஏற்படுத்த, நடிக பிம்பங்களையே அதிகம் நம்புகிறது.

நூறில் ஒன்று: அரசியல் பேசத் தொடங்கிய ஊடகங்கள்

உயிர்மையின் 100 வது இதழுக்காக என்னிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நான் அனுப்பிய பதில். அச்சில் எப்படி வந்திருக்கிறது என்பதை நான் பார்க்கவில்லை. என்னிடம் கேட்கப்பட்ட கேள்வி: தமிழ்   ஊடகங்கள்   அரசியல் மயமானதன்   விளைவுகள்   என்ன?