இடுகைகள்

2008 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வேறுவேறு உலகங்கள்

தினசரிப் பேச்சில் பழமொழிகளின் பயன்பாடு அர்த்ததோடு இருப்பதும் உண்டு. அர்த்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ‘ கெட்டும் பட்டணம் சேர்’ என்ற பழமொழி மிகக் கூடுதலான அர்த்தத்தோடு பயன்பாட்டில் இருந்து கொண்டிருக்கும் பழமொழி என்றே இதுவரை நாம் கருதிக் கொண்டிருக்கிறோம். சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு போன்ற பெருநகரங்களில் வாழ்பவர்கள் அடிக்கடி சொல்லிக் கொள்ளும் பழமொழியாக இது இருக்கிறது.

சாதிவெறியின் சரித்திர நிழல்

படம்
உருட்டுக் கட்டை, இரும்புத் தடி, வெட்டுக் கத்தி எனச் சகல ஆயுதங்களோடும் தன்னைத் துரத்தி வந்த கும்பலிடமிருந்து இனித் தப்பிக்க முடியாது என்ற முடிவுடன் வாசல் கதவில் சாய்ந்து மொத்த அடியையும் வாங்கிச் சரிந்த சட்டக்கல்லூரி மாணவரின் முகம் நினைவில் இல்லை. அந்த மாணவரின் முகம் மட்டும் அல்ல; உடைக்கப் பட்ட காலோடு நடந்து சென்று மரக்கிளையில் தொங்கிய பின்னும் அடிக்கப்பட்டு விழுந்த இன்னொரு மாணவரின் முகமும் கூட மனதில் இல்லை. அந்த உடல்கள் நினைவில் இருக்கின்றன.

தலித் இலக்கியம் : 2000 க்கு முன்னும் பின்னும்

படம்
தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையொன்றில் பணியாற்றி விட்டு ஓய்வு பெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப் போவதாகக் கூறி யாரையெல்லாம் படிக்க வேண்டும் என்று கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான தமிழினி 2000 பெருந் தொகுப்பில் இருக்கும் எனது தமிழ் தலித் இலக்கியம் என்ற கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்து விட்டேன்.அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்பு களைத் தொகுத்து வைத்துள்ளேன்; வாசித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000-க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள் மற்றும் படைப்புகள் விவரம் வேண்டும் என்றார்.

விசித்திரமான இந்தியா

காலைத் தினசரியைக் கூட வாசிக்கத் தொடங்கியிருக்கவில்லை. தொலைக்காட்சி- தொழில் நுட்பம்- பண்பாடு பற்றித் தீவிரமான ஆய்வுகள் செய்து கட்டுரைகள் எழுதியுள்ள ரேமாண்ட் வில்லியம்ஸின் கட்டுரை கையில் இருந்தது. தொலைக்காட்சிகள் உருவாக்கும் பண்பாட்டுயைப் பற்றி எழுதிய அந்தக் கட்டுரையை மொழி பெயர்த்து விட வேண்டும் என நினைத்து இரண்டாவது முறையாகப் படித்துக் கொண்டிருந்தேன். அகராதியில் அர்த்தம் பார்க்க வேண்டிய வார்த்தைகளைக் குறித்துக் கொண்டிருந்த போது அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தவர் தொலைக்காட்சியைப் பார்க்கச் சொன்னார். பொதுவாக எங்கள் வீட்டில் காலையில் தொலைக்காட்சியை திறந்து விடுவதில்லை.

இலக்கு ஒன்று: பாதைகள் மூன்று-பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் வியூகங்கள்

படம்
1967-இல் தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்பதாகப் பதிவு செய்வதா? பெரியவர் பக்தவச்சலத்தின் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் இயக்கமின்மைக்கும் பிடிவாதத்துக்கும் கிடைத்த தோல்வி என்பதாகப் பதிவு செய்வதா? என்று கேட்டால் நடுநிலையான வரலாற்று ஆய்வாளர்கள் இரண்டாவதைத் தேர்வு செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கின்றன.

திரும்பவும் எரியும் ஈழம்

படம்
திரும்பவும் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டு மொத்தத் தமிழர்களின் கவனத்துக்குரிய செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. 1980- களில் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் உணர்ச்சி வசப்பட்டவர் களாக மாற்றி அதன் வெளிப்பாடுகளை மக்கள் போராட்டமாக ஆக்கிய ஈழத்தமிழர் பிரச்சினை, திரும்பவும் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தப் பிரச்சினையாக ஆகும் சாத்தியங்கள் இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

உழவுக்கும் தொழிலுக்கும் ...

படம்
மேற்கு வங்கமாநிலம் சிங்கூரிலிருந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனம் வருத்தத்துடன் வெளியேறி விட்டது. வருத்தத்துடன் வெளியேறியது என்று சொல்வதை விட இறுக்கத்துடன் வெளியேறியது என்று சொல்வதே சரியாக இருக்கும். டாடா நிறுவனத்தின் தலைவர் ரத்தன் டாடா தனது முகத்தில் வெளிப்பட்ட இறுக்கமும் வருத்தமும் விலக நீண்ட நாட்கள் காத்திருக்கவில்லை.

விலகிப் பாயும் அம்புகள்

படம்
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சாதகமான அம்சங்களில் மிக முக்கியமான ஒன்று பாதிக்கப் பட்டோருக்கு ஆதரவு என்பது தான். இந்தியாவின் குடிமைச் சட்டம் ஆயினும் சரி, குற்றவியல் சட்டமாயினும் சரி, நீதியியல் முறைகளானாலும் சரி அரசும், அரசு நிறுவனங்களும் எப்போதும் அதிகம் பாதிக்கப் படுவோரின் பக்கம் நிற்க வேண்டும் என்றே வலியுறுத்துகின்றன.

இது நல்லது; நடந்தாக வேண்டும்

தமிழக அரசின் உயர்கல்வித்துறைக்குப் பொறுப்பான பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களின் மாநாடுகள் இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கிறது. உயர்கல்வித்துறையின் அமைச்சர் டாக்டர் பொன்முடியே அம்மாநாடுகளைத் தொடங்கி வைத்து முன் மொழிவுகளையும், நடக்க வேண்டிய மாற்றங்களையும் வலியுறுத்தி வருகின்றார். மாற்றங்களை அவசரச் சட்டங்களாகக் கொண்டு வராமல், செயல்படுத்த வேண்டிய துணைவேந்தர்களை அழைத்துப் பேசி மாற்றங்கள் செய்யும் இந்தப் போக்கு வரவேற்கத்தக்க போக்கு என்றே சொல்ல வேண்டும்.

கிராமங்களுக்குத் திரும்புதல் - சொந்த அனுபவங்கள் சார்ந்த பரிசீலனைகள்

படம்
சுற்றம்சூழ வருகை தர வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளும் அந்த அழைப்பிதழை மிக்க மகிழ்ச்சியோடு கொடுத்தார் அந்த நண்பர். அவரது சொந்தக் கிராமத்தில் நடக்கப் போகும் வைபவத்தில் உறவினர்களையும் நண்பர்களையும் பங்கேற்கச் செய்ய எடுத்துக் கொள்ளும் முயற்சி அலாதியானதாக இருந்தது. என்னைக் கட்டாயம் வரவேண்டும் என்று அழைத்தார்.

மதிப்பிழக்கும் உயர் ஆய்வுகள்

தமிழர்களாகிய நமது தினசரி வாழ்க்கையின் நடவடிக்கைகளைத் தீர்மானிப் பதில் முன்னிலை வகிப்பவை எவை எனப் புள்ளி விவரங்கள் எதுவும் நம்மிடம் இல்லை. அப்படிப் பட்ட புள்ளி விவரங்கள் தேவை என்ற எண்ணம் கூடப் பெரும்பாலான தனிநபர்களிடம் இருப்பதில்லை. தனிநபர்களுக்கு இருப்பதில்லை என்பது பெரிய குறையாகக் கருத வேண்டிய ஒன்றல்ல. ஆனால் அனைத்து மக்களின் வாழ்க்கைக்கும் உத்தரவாதத்தைத் தருவதாக நம்பும் அரசு நிறுவனங்களுக்கு அப்படியான புள்ளி விவரங்கள் இன்றியமை யாதவை.

புதிய பல்கலைக்கழகங்களின் தேவை

பல்கலைக்கழகங்கள் அவற்றின் பணிகளை போதுமான அளவில் செவ்வனே செய்யும் போது நாட்டிற்கும் மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது. மக்கள் நலன் கருதி பல்கலைக்கழகங்கள் சுதந்திரமாகச் செயல்படுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய பண்பட்ட அரசியல் உதவும். உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள சிறந்த ஆசிரியர்களை ஈர்க்கும் பணியைப் பல்கலைக்கழகங்கள் மேற்கொள்ள வேண்டும் இந்தியாவில் ஆசிரியர்கள் தினமாகக் கொண்டாடப் படும் செப்டம்பர்,5 அன்று இந்தியாவின் புகழ் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் திகழும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் 150 ஆவது பட்டமளிப்பு விழாவில் நமது நாட்டின் அரசுத் தலைவர் டாக்டர் மன்மோகன்சிங் ஆற்றிய உரையில் இடம் பெற்ற வாசகங்கள் இவை.

கலைக்கப்படும் மௌனங்கள்

ஞாயிற்றுக்கிழமைகளில் வெளியூர் எதற்கும் போகாமல் வீட்டில் இருந்தால் அந்த நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறுவதில்லை. செய்து கொண்டிருக்கும் வேலை முக்கியமானது என்ற போதும் அதை நிறுத்தி விட்டுப் பார்க்கத் தூண்டும் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா? நானா? வெளியூர் போனதால் பார்க்கத் தவறியிருந்தால் மறு ஒளிபரப்பின் போதாவது பார்த்து விட வேண்டும் என்றே விரும்புகிறேன்.

பழைய புத்தகக்கடையில் கிடைத்தவை: தேடிப்படித்த புத்தகங்கள்

படம்
 சில நேரங்களில் குறிப்பான நூலொன்றைத் தேடிப் பழைய புத்தகக்கடைக்குப் போவதுண்டு. சில இலக்கின்றித் தேடும் இடமாகவும்  பழைய புத்தகக்கடைகள் இருக்கும். ஒன்றைத்தேடி இன்னொன்று கிடைக்கும்போது அடையும் மகிழ்ச்சி வாசிப்பின் போக்கை மாற்றிவிடும். அப்படித் திசைமாற்றிய இரண்டு நூல்கள் இவை. 

புத்திசாலித்தனம் + கோமாளித்தனம் = பட்டிமன்ற நடுவர்கள்

படம்
தொலைக்காட்சிகளில் பண்டிகை நாட்களுக்குச் சிறப்பு ஒளிபரப்பைத் தொடங்கிய பிறகு, சடங்குகளுள் ஒன்றாகப் பட்டிமன்றம் ஆகிவிட்டது. தனியார் தொலைக் காட்சி அலைவரிசைகளுக்குச் சுலபமாகத் தயாரிக்கப்படும் நிகழ்ச்சிகளுள் பட்டிமன்றமும் ஒன்று. விடுமுறையாகவும் இருந்து, விழா நாளாகவும் ஆகிவிட்டால் ‘பட்டிமன்றம்‘ ஒன்று நம் வீட்டிற்குள் வந்து விடுகின்றது. விழா நாட்களில் தொலைக் காட்சியைத் தொடுவதில்லையென விரதம் பூண்டிருப்பவா்களுக்கு மட்டுமே பட்டிமன்றம் என்றால் என்ன? பட்டிமன்ற நடுவர்களென பிரசித்தி பெற்றுள்ள சாலமன் பாப்பையா, திண்டுக்கல் லியோனி என்பவா்கள் யார்? எனறு சொல்ல வேண்டும். ‘பட்டிமன்றம் பாப்பையா‘ எனப் பெயா் வாங்கிய பேரா. சாலமன் பாப்பையாவை விடவும் லியோனியின் குரல் தமிழகக் கிராமங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. 

சுஜாதாவின் அரங்கியல் பார்வை: எழுத்துப் பிரதிகளின் ஊடாக

படம்
   வெகுமக்கள் ரசனையை நாடிபிடித்துப் பார்த்து, அவர்களுக்குத் தர வேண்டியதைத் தரும் எழுத்தாளர் என்று பத்திரிகைகள் பட்டியல் இட்டுக் கொண்ட வரிசையில் சுஜாதாவின் பெயர் எழுபதுகளில் தொடங்கி அவரது மரணம் நிகழ்ந்த பிப்ரவரி, 2008 வரை ஏறுமுகத்தில் தான் இருந்தது. அவரது பெயரோடு சேர்த்து எதையாவது அச்சிட்டுக் கொண்டு  இருந்தன அச்சு ஊடகங்கள். அவரது மரணத்திற்குப் பின்னும் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கின்றன என்பதும் கூட சுஜாதாவின் எழுத்துக் கவர்ச்சியின் அடையாளங்கள்தான். உரைநடையின் சாத்தியப்பாடுகளை-அதிலும் குறிப்பாகப் புனைகதையின் பரிமாணங்களைத் தமிழுக்குப் பல நிலைகளில் அறிமுகம் செய்தவர் அவர். இதை அவரது தீவிரமான வாசகர்கள் மட்டுமல்ல; விமரிசகர்களும் ஒத்துக் கொள்வார்கள். இந்தக் கட்டுரை சுஜாதாவின் நாடகப்பிரதிகளின் வழியாக அவரது அரங்கியல் பார்வையை மதிப்பிட்டுக் கூற முயல்கிறது.   நாடகப் பிரதிகளின் கூறுகள் புனைகதை, கட்டுரை,வினாவிடை, விமரிசனக் குறிப்புகள், பழந்தமிழ் இலக்கியங்களுக்கான எளிய உரை என மரணத்தை எதிர் கொள்ளும் வரை எதையாவது எழுதிக் கொண்டே இருந்த சுஜாதா நாடகப்பனுவல்களை எழுதுவதிலும் குறிப்பிடத்...

இயல்பு தொலைக்கும் தமிழர்கள்

நான் நின்றிருந்த அந்த அங்காடி வளாகத்தில் மூன்று வங்கிகள் செயல்படுகின்றன . இரண்டு வங்கிகள் தேசியமயமாக்கப் பட்ட வங்கிகள். இந்த வங்கி பன்னாட்டு வங்கி. தேசிய மயமாக்கப்பட்ட வங்கியைப் போல மாநில மொழிக்கோ அல்லது தேசியமொழி என நம்பப்படும் இந்திக்கோ இங்கு வேலை இல்லை. எல்லாமே ஆங்கிலத்தில். அங்கே வேலை பார்க்கும் இளைஞர்களும் யுவதிகளும் பரிமாறிக் கொள்ளும் மொழி கூட ஆங்கிலமாகத்தான் இருக்கிறது. பேச்சு மொழி ஆங்கிலமாக இருந்தால் கூடப் பரவாயில்லை. அவர்களின் உடல் மொழியே ஆங்கில நளினத்துக்குரியதாக ஆகி இருப்பதை நீங்கள் நேரில் பார்க்கும் போது தெரிந்து கொள்ளலாம்.

அடிப்படை வாதத்தின் முகங்கள்

படம்
2008, ஜுலை 22 இந்திய வரலாற்றின் சுவடுகளில் ஒன்றாக ஆகிவிட்டது என எழுதிய பேனா மையின் ஈரம் கூட இன்னும் காய்ந்து விடவில்லை. ஈரமான அந்த வரிகளை அடித்துச் செல்லும் வேகத்தோடு புதிய நிகழ்வுகள் நடந்து முடிந்து விட்டன.

கவனிக்கப்பட்டதின் பின்னணிகள்

தகவல்களும் நிகழ்வுகளும் சேர்ந்துதான் வரலாற்றை உருவாக்குகின்றன.சொல்லப்படும் தகவல்களும் நடக்கின்ற நிகழ்வுகளும் நேர்மறை வரலாற்றை உருவாக்கவா..? எதிர்மறை வரலாற்றை உருவாக்கவா.? என்ற கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டியது அதில் பங்கேற்பவர்களின் தன்னுணர்வு சார்ந்த ஒன்று.இன்னும் சொல்வதானால் பங்கேற்கிறவர்களின் நோக்கம் சார்ந்தவைகளும் கூட.

இக்கால இலக்கியம் குறித்த பல்கலைக்கழக ஆய்வுகள்

இக்கால இலக்கியம், ஆய்வுக்கான பரப்பு என்பதாகப் பல்கலைக் கழகங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு மூன்று பத்தாண்டுகளைத் தாண்டி இருக்கிறது.தமிழகப் பல்கலைக் கழகங்களில், தமிழியலின் எல்லைகளை விரிவடையச் செய்ததில் முக்கியப் பங்காற்றியுள்ள மதுரைப் பல்கலைக் கழகமே -இன்றைய மதுரைக் காமராசர் பல்கலைக்கழகம்- இக்கால இலக்கியங்களைப் பாடங்களாக ஆக்கியதிலும், ஆய்வுப்பொருளாக ஆக்கியதிலும் முன்கை எடுத்தது. அதன் விளைவுகள் இன்று விரிந்துள்ளன; பரந்துள்ளன.

பயணிகள் கவனிக்கவும் . . . . . .

படம்
மனமும் கண்களும் ஒன்று படும் நேரங்கள் மிகக் குறைவு. நண்பரின் வருகைக்காக ரயில் நிலையத்தின் இருக்கையில் அமர்ந்து கைவசம் இருந்த புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தேன். மனம் படிக்க விரும்பினாலும் கண்கள் காட்சிகளில் தான் கவனம் செலுத்திக் கொண்டிருந்தது. திருநெல் வேலி தொடர்வண்டிச் சந்திப்பு மாலை ஆறுமணி தொடங்கி ஒன்பது மணி வரை மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும்.

சுதந்திரம் என்னும் பெருநெருப்பு

படம்
" எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு -நாம் எல்லோரும் சமமென்பது உறுதியாச்சுசங்கு கொண்டே வெற்றி ஊதுவோமே - இதைத் தரணிக்கெல்லாமெடுத்து ஓதுவோமே ‘’என்று கவி பாரதி பாடிய சுதந்திரப் பள்ளு தேசத்திற்கான விடுதலையை மையப்படுத்தியது என்பதில் நமக்குச் சந்தேகம் இல்லை.

தொகுப்புப்பார்வை: தேடிப்படித்த நூல்கள்

படம்
குறிப்பிட்ட வகையான இலக்கியப் போக்கை அதன் தோற்றம், வளர்ச்சி, விரிவு, சிறப்புக் கூறுகள் என விவரித்து எழுதும் எழுத்துகள் இலக்கிய வரலாற்றின் ஒரு பகுதியாக அமைந்துவிடும். அப்படி அமைந்த முக்கியமான மூன்று நூல்கள் என இவற்றைச் சொல்லலாம். இவற்றைத்தேடிப் படித்ததோடு பத்திரமாகவும் வைத்துள்ளேன். அவ்வப்போது பார்த்துக்கொள்ள வேண்டிய பார்வை நூல்கள் இவை. தமிழ்ப் பக்தி இலக்கியங்கள் சாகித்ய அகாதெமி தமிழுக்குச் செய்த பணிகளில் இந்தத் தொகுப்பைக் கொண்டு வந்ததை முதன்மைப் பணியெனச் சொல்வேன். தமிழ்ப் பக்தி இயக்கம்/இலக்கியம் இருபெரும் போக்குகள் கொண்டது. கடவுள், அதன் வடிவம்,மனிதனுக்குக் கடவுளின் தேவை,இதன் மறுதலையாகக் கடவுளுக்கு மனிதர்களின் தேவை, தேவையை நிறைவேற்றிக் கொள்ள இருமுனைகளில் இருக்கும் ஆத்மாக்களும் மேற்கொள்ளும் முயற்சிகளும் உத்திகளும் சொல்லாடலாக அலையும் தளம் பக்தியின் தளம். இத்தளத்தை வைணவமாகவும் சைவமாகவும் பிரிப்பது புரிந்து கொள்ள நினைப்பதின் எளிய வெளிப்பாடு மட்டும்தான். பொருள்தேடும் வாழ்க்கை தரும்நெருக்கடியிலிருந்து தப்பித்து விடமுடியும் ;தப்பிக்க வேண்டும் என்பதைக் கவனமாகக் கொள்ளும் மனிதர்கள் உருவாக்குவது...