இடுகைகள்

உலகப்பார்வையாளர்களுக்கான தமிழ் அரங்கநிகழ்வு: சக்திக்கூத்து:

படம்
‘எதிர்பார்ப்பு’ என்ற சொல்லையும் ‘முன்முடிவு’ என்ற சொல்லையும் ஒரே அர்த்தம் கொண்ட சொற்களாக நினைப்பதில்லை. "எந்தவித எதிர்பார்ப்புகளு மற்று ஒரு கலைப்படைப்பிற்குள் நுழையவேண்டும்; கலைநிகழ்வைக் காணவேண்டும்” என்று சொல்லப்படும்போதெல்லாம் அது சாத்தியமா? என்ற கேள்விகள் எனக்குள் எழுந்துகொண்டே இருக்கும். எழுத்துசார்ந்த படைப்பாயினும்சரி, அரங்கநிகழ்வாக இருந்தாலும்சரி வாசகர் அல்லது பார்வையாளர் என்பவர் சில எதிர்பார்ப்புகளோடுதான் நுழைகின்றார். நான் ப்ரசன்னா ராமசுவாமியின் சக்திக்கூத்தைக் காணச் சில எதிர்பார்ப்புகளோடு தான் நுழைந்தேன். என்னைப்போலவே பார்வையாளர்கள் ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்பு இருந்திருக்கக் கூடும்.

இச்சையைத் தவிர்க்கும் புனிதப் பசுக்கள் :எஸ்.செந்தில்குமாரின் புத்தன் சொல்லாத பதில்.

படம்
ஆச்சரியமாக இருக்கிறது. ஒரே மாதத்தில் மூன்று கதைகள். காலச்சுவடில் ஒரு கதை. உயிர்மையில் ஒரு கதை. பழைய ஆனந்தவிகடனின் சாயலைத் தொடரும் ஜன்னலில் ஒரு கதை என மூன்றுகதைகள் ஓர் எழுத்தாளருக்கு அச்சாவது அவருக்கும் ஆச்சரியமாகவே இருந்திருக்கும்.

நிலவோடு கோபம்

அதுதான் நாங்கள் இருவரும் அமர்ந்து கதைபேசிக் கலவி செய்து பிரியும் இடம். ஆனால் அந்த இடத்தை தன் நிழலால் நிரப்பியிருக்கிறதே அந்த மரம். தன் உயரத்தைவிட நீளமாக நிழல் பரப்பியிருக்கும் அந்த மரம் என்ன மரமாக இருக்கும்? கொன்றை?  புங்கை? புன்னை? வேங்கை?

ஒரு சொம்பின் கதை

“ ஏய்! என்னாச்சு.. ரொம்ப யோசிச்சுக்கிட்டு இருக்கிறமாதிரி தெரியுது. ஓ.. திரும்பவும் அதே நினைவு தானா? பித்தளைச் சொம்பு கண்ணில பட்டுவிடக்கூடாதே உனக்கு”.

நம்பிக்கையளித்த இரண்டு நாட்கள்:

படம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது . அண்ணாநூலகம் பக்கத்தில் இருக்கிறது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில்   இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக்காரணம்.

மந்திர நடப்பியல் உருவாக்கம் : நேசமித்திரனின் இயக்கி

எது கதை எழுதும்படி தூண்டுகிறது ? இந்தக் கேள்விக்குப் புதிதாக எழுதத்தொடங்கும் புனைகதையாசிரியர்கள்  சொல்கிற பதில் : மனிதர்கள் மற்றும் மனிதர்கள் தன்னைப்பாதித்தவர்களையும் பாதிப்பு உண்டாக்கத்தக்க வகையில் செயல்பட்ட/ சொல்லப்பட்ட மனிதர்களையும் எழுதுவதாகக் கூறுகிறார்கள். இப்படிக் கூறுவதை அப்படியே ஏற்கவும் முடியாது; தள்ளவும் முடியாது.

காமம் : உடைமையாக்குதலின் அலைக்கழிப்பு

படம்
குடும்பம், சமூக அமைப்பின் மிகச்சிறிய நுண் அலகு. எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பை உருவாக்கவும் தக்கவைக்கவும் விரும்புகின்றன. மதம், இனம், மொழி, பண்பாடு என்பதான காரணிகளால் வேறுபாடுகள் கொண்ட எல்லாச் சமூகங்களும் குடும்ப அமைப்பின் மீது கொண்ட நம்பிக்கையைத் தொலைக்கவில்லை. அந்த நம்பிக்கையின் அவை ஏற்படுத்திக் கொண்ட நடைமுறையின் பெயர் திருமணம். திருமணத்தின் வழியாக நிகழும் ஆண் பெண் உறவின் முதன்மை நோக்கம் மனித உற்பத்தி ; வாரிசுகளை உருவாக்குதல். வாரிசுகளின் செயல்பாடுகள் பண்பாட்டின் அடையாளங்கள்.

காட்சி இன்பத்தின் பொருளாதாரம் : ராஜமௌலியின் பாகுபலி

படம்
முதலில் அதற்குப் பெயர் டாக்கி (Talkie) ; மாறிய பெயர் சினிமா (Cinema). பேச்சை முதன்மையாகக் கொண்ட கலை, காட்சியை முதன்மையாகக் கொண்ட கலைவடிவமாக மாறியதன் விளைவு இந்தப் பெயர் மாற்றம்.   காட்சிக்கலையாகச் சினிமா மாறிவிட்டதாக நம்பினாலும் பேச்சை அது கைவிட்டுவிடவில்லை. இன்றளவும் பேச்சின்வழியாகவே சினிமா தனது காட்சியடுக்குகளைப் பெருந்திரளுக்குப் புரியவைக்கிறது; நம்பவைக்கிறது. அதிலும் இந்திய சினிமா பேச்சின் இன்னொரு வடிவமான பாடலையும் விட்டுவிடாமல் தக்கவைத்துக்கொண்டே மாறிக்கொண்டிருக்கிறது.

ஆக்கம் - தழுவலாக்கம்

·          ஆக்கம் - தழுவலாக்கம் என்றால் என்ன சார். ·          நாடகத்தில் தழுவலாக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டிய விடயம் என்னென்ன? ஆக்கம் என்பது புதிதாக உருவாக்குவது. புதிதாக உருவாக்குவதற்கு அதன் உட்கிடைப்பொருட்கள் தேவை.   அதைக் கண்டுபிடித்து இணைத்து உருவாக்க வேண்டும். உருவாக்கிய ஆக்கம் பயன்பட வேண்டும்.

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்

எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு  கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

நம்பிக்கைகள் சிதையத் தொடங்கும் கணங்கள்

படம்

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்

படம்
நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

ஏற்கத்தக்க தொனியல்ல

படம்
இந்தியாவில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கணமும் உணரும் கருத்தாகவும் நிகழ்வாகவும் இருக்கும் சொல் சாதி. பேசத்தக்க பொருளாக இருக்கும் சாதியின் குரூரவடிவமான ’தீண்டாமை’ பேச வேண்டிய பொருள் மட்டுமல்ல; பேசித் தீர்க்கவேண்டிய ஒன்றும்கூட. அனைத்துத் தளத்திலும் விசாரணைகளையும் விவாதங்களையும் கோரும் இச்சொற்களைப் பேசாமல் அறிவுத் துறையினர் தப்பித்துவிட முடியாது. தீர்த்துக் கட்டுவதற்காகப் பேசப்படவேண்டிய தீண்டாமையையும் சாதியையும் பற்றிப்பேசும் சிறுநூலொன்றை மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இமையத்தின் வற்றாத ஊற்று: கதையாக மாறாத உரைவீச்சு

இந்தமாத (ஜூலை, 2015) உயிர்மையில் இமையம் எழுதியுள்ள சிறுகதை வற்றாத ஊற்று வெளியாகியுள்ளது. கதையில் இடம்பெறும் பாத்திரங்கள் ஆறு. இந்த ஆறுபேரில் இரண்டு பேருக்கு மட்டுமே பெயருண்டு. கதிரவன், பூங்குழலி . புதிதாகத் தொடங்கப்பெற்ற செய்தி அலைவரிசைக்கு வட்டாரச் செய்தியாளனாகத் தேர்வு செய்யப்பெற்று முதலாளியைச் சந்திக்க இருப்பவன். அவனது இடதுபக்கம் அமர்ந்திருந்த பெண்ணின் பெயர் பூங்குழலி. வலது பக்கம் அதே போல் உட்கார்ந்திருந்தவனுக்குப் பெயரில்லை. கதிரவனின் பக்கத்தில் இல்லாமல் 20 பேருக்கு மேல் செய்தியாளர்கள், டெக்னீஷியன்கள், காமிராக்காரர்கள் என நிரம்பிய ஒரு விசாலமான குளிரூட்டப்பட்ட அறையே (கான்பரன்ஸ் ஹால் ) கதைவெளி. கதையை நகர்த்துவதற்காக இமையம்மூன்று பேரை உள்ளே அனுமதிக்கிறார். ஒருவர் அலைவரிசையின் முதலாளி. இன்னொருவர் மானேஜர், மற்றொருவர் செய்திப்பிரிவு ஆசிரியர். இவர்களுக்கும் பெயரில்லை. அலைவரிசைக்கு மட்டும் பெயருண்டு அதன் பெயர் விடிவெள்ளி.

நம்பிக்கையிழப்பின் வெளிப்பாடு; அழகிய பெரியவனின் மிஞ்சின கதை

படம்
நாம் மாறிக்கொண்டிருக்கிறோம்; நமது சூழல் மாறிக்கொண்டிருக்கிறது; நம்மை இந்த உலகம் ஏற்றுக் கொள்ளத் தொடங்கிவிட்டது எனத் தனிமனிதன் நினைக்கும்போது பிறப்பது நம்பிக்கை. இதற்கு நேரெதிராகத் தோன்றுவது நம்பிக்கையின்மை அல்லது அவநம்பிக்கை. அதன் காரணிகளாக இருப்பவை நிராகரிப்புகள்; ஒதுக்கிவைத்தல். நீண்ட நெடுங்காலமாக விலக்குவதையும் விலகுவதையும் கருத்தியலாக ஏற்றுக்கொண்டு நகர்ந்து வந்துள்ள கெட்டிதட்டிய இறுக்கமான சமூக அமைப்பு இந்திய சமூக அமைப்பு. அதற்கு இன்னொரு பெயர் சாதியம். பிறப்பை அடிப்படையாகக் கொண்டு வகைமைகளை உருவாக்கி வேறுபாடுகளை நிலைநிறுத்தும் சாதியத்தின் மீது கடும் நெருக்கடியை உருவாக்கியது இந்திய அரசியல் சட்டம். வெளித்தள்ளும் (Exclusive) சமூகக் கோட்பாட்டிற்கு மாறாக உள்வாங்கும் (Inclusive) சமூகக் கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு அனைத்துத் தளங்களிலும் இந்த நாட்டின் அனைத்துப்பிரிவினரும் உள்வாங்கப்பட வேண்டும் என்ற நினைப்பின் வெளிப்பாடே இட ஒதுக்கீடு. அதன் தொடர்ச்சியான தீண்டாமை ஒழிப்பு; அடிமை வேலை அழிப்பு என்பனவெல்லாம். ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாகத்திற்கு உதவுவதற்கான பணியாளர்களை உருவாக்கும்பொருட்டு இங

பாரதீய ஜனதாவின் நமதே நமது :பின் காலனியத்தின் நான்காவது இயல்

படம்
இந்தியத் தாயே! மக்களின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற நீயே எல்லாருடைய மனத்திலும் ஆட்சி செய்கிறாய். நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும் மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும். வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது. நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத்தொடர்களில் எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின் இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால் வணங்கப்படுகிறது. அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரவுகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே. உனக்கு வெற்றி! வெற்றி! வெற்றி!

தினங்களைக் கொண்டாடுதல்

படம்
எல்லா தினங்களையும் கொண்டாடித் தீர்ப்பதென்று முடிவெடுத்துக் கொண்டாடி மகிழ்கின்றோம். ஜூலை 6, உலக முத்த தினம். முகநூலில்  வாசித்த முத்தக்கவிதைகளைத் தொகுத்தால் சத்தமிடும் முத்தம் என்றொரு தொகுதி நிச்சயம் கிடைக்கும். முத்தமிட்டுக்கொள்ள வாய்ப்பற்றவர்கள் சத்தமாய்ச் சொல்லிக் கவிதையெழுதி யிருக்கிறார்கள். சொல்லாமல் முத்தமிட்ட ஜோடிகள் சில கோடிகள் இருக்கலாம்.

காக்கா முட்டையும் தமிழ்த்திரளும்.

படம்
வெகுஜன சினிமா விரும்பிகளைத் தன்னிலை மறக்கச் செய்து,  தரமான சினிமாவின் பக்கம் நெருங்கிவரச் செய்துள்ளது காக்கா முட்டை. கலை, வணிகம், விருதுகள். விமரிசகர்களின் பாராட்டு என எல்லாவகையிலும் தமிழ்ச் சினிமாவின் நீண்ட நெடிய வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற படம் இதுவரை இதுபோல் இல்லை என எழுதப்படப்போகிறது. இயக்கமும் கலைநோக்கமும் தனித்துவமாக வெளிப்பட்டதை ஏற்றுக் கொண்ட தமிழகப் பார்வையாளர்களின் ஏற்புநிலை ஆச்சரியமூட்டுவதாக இருக்கிறது.

ஒற்றைக் கவிதையை எழுதுவதற்கு முன்...

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை ஈழத்தமிழர் பிரச்சினை அயலக உறவுத் துறையின் வழிகாட்டுதலில் கவனமாகும் ஒரு பிரச்சினை மட்டுமே. எப்போதும் அதுமட்டுமே. ஆனால் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தமிழர்களுக்கும் சமமற்ற இரண்டு இனங்களின் உரிமை மற்றும் தன்னாட்சி சார்ந்த முரண்பாடுகளின் சிக்கல். இவ்விரண்டும் 50 ஆண்டுகளாகச் சந்தித்துக் கொண்டதேயில்லை. சந்தித்துக்கொள்ளும் ஒன்றாக ஆகிவிடக்கூடாது என்பதில் இந்திய அரசு/அதிகாரவர்க்கம் கவனத்தோடு இருந்தது; இருக்கிறது.

விடுதலை ( ஓரங்க நாடகம்)

மலையாள மூலம்; ஜி.சங்கரப்பிள்ளை தமிழில்; அ.ராமசாமி இளைஞன் :   கேட்டாயா நீ. நான் சொன்னேனே.. அதேதான் கேட்டாயா..? மணி ஏழு.. முதியவன்      : (அமைதியாக) கேட்டேன். இளைஞன் :   அப்புறம்.. இப்படி இருப்பதன் அர்த்தம்? அவன் தன் உயிரையும் பணியையும் பணயம் வைத்து இதைச் செய்துள்ளான். நேரம்வரும். ஒரு கயிறு இதுவழியே வரும். அதன் நுனியில் கம்பியை அறுக்கும் அரம். நம்மையும் வானத்தையும் பிரித்து நிற்கும் இந்தக் கம்பிகளை அறுத்து முறிப்பேன். என்னுடைய திட்டங்களை முன்பே சொல்லியிருக்கிறேனே..

பேச்சென்னும் லாவகம்

படம்
பல நேரங்களில் இதை நான் அனுபவத்திருக்கிறேன். கல்லூரிகள் நாடகப்பட்டறை அல்லது நடிப்புப் பட்டறைகள் நடத்துவதற்காக மாணவிகளை அல்லது மாணவர்களைத் தேர்வு செய்வதற்காகச் சந்திக்கும்போது பெரும்பாலும் இதுதான் நடக்கும். இதைத் தான் தங்களின் நடிப்புத் திறமை என்று நம்பும் இளைஞர்களே பெரும்பாலும் இருக்கிறார்கள். பெரும்பாலும் ஆண்களிடம் எங்கே கொஞ்சம் நடித்துக் காட்டுங்கள் என்று சொன்னவுடன் அவர்கள் செய்யும் முதல் காரியும் கைகளை எங்காவது இருக்கிப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கிவிடுவார்கள். பேசுவதற்காக அவர்கள் மனப்பாடம் செய்து வைத்திருக்கும் வசனம்: 

உத்தமவில்லன் : இன்பியலில் கரையும் துன்பியல்

படம்
எழுதியது ஒரேயொரு கவிதை. மனித வாழ்வின் சலனங்கள் அனைத்தையும் உறையச் செய்துவிடும் வல்லமைகொண்ட வரிகள் கொண்ட கவிதை. அந்தக் கவிதைக்குள் அவன் வைத்த அலங்காரச் சொற்றொடர் “நீர்வழிப்படூஉம் புனை”. உத்தம வில்லன் படத்தின் இரவுக்காட்சியைப் பார்த்துவிட்டு வந்து படுத்த நள்ளிரவில் கணியன் பூங்குன்றனின் இந்தச் சொற்றொடரோடு ஔவையின் ‘உயவுநோயறியாது துஞ்சும் ஊர்’ என்ற வரியும் சேர்ந்துகொண்டு தூக்கம் கலைத்துக்கொண்டே இருந்தன.   மரணத்தையும் காமத்தையும் இணைத்த படத்தின் தாக்கம் என நினைத்துக் கொண்டேன்.

வெகுமக்கள் எழுத்தின் இரண்டு ஆளுமைகள்: யுவகிருஷ்ணா, அதிஷா

தமிழில் எழுதப்படும் வலைப்பூக்கள்,   முகநூல், ட்விட்டர் என இணையத்தின் அச்சு ஊடகத்தில் வேலைபார்க்கும் ஒருவருக்கு இணையவெளிப் பயணம் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்ட காலம் நமது காலம். தமிழகத்தின் பிரபலமான அச்சு ஊடகங்களுக்குள் பணியாற்றும் இந்த இரண்டு  பெயர்களையும் இணையவெளியில் அலையும் ஒருவர் சந்திக்காமல் இருந்தால் ஆச்சரியம்.  ஒருவர் யுவகிருஷ்ணா, இன்னொருவர் அதிஷா..

சேகுவோரா

படம்
[மலையாள மூலம்: கோபன். தமிழில் ;  அ.ராமசாமி]       காட்சி.1 நாடகம் தொடங்கும்பொழுது மேடையில் ஒரு சவப்பெட்டி. அதனுள் விகாரமான தோற்றம் கொண்ட முதியவன் அண்ணாந்து பார்த்தபடி கிடைத்தப்பட்டுள்ளான். சவப்பெட்டியினுள் முழுமையான வெளிச்சம். சவப்பெட்டியின் முன்பாக மூன்று ராணுவ அதிகாரிகள் நடந்து வருகின்றனர். சவப்பெட்டியிலிருந்த வெளிச்சம் மங்கிக் குறைகிறது. மேடையில் உள்ள மூன்று மேஜை விளக்குகள் அடுத்தடுத்து எரிகின்றன. சேகுவோராவின் ஓவியம் பின் திரையில் தெரிகின்றது.

தொல்காப்பியம்; இலக்கணத்தைத் தாண்டி...

முன்னுரை தொல்காப்பியம் எழுத்து , சொல் , பொருள் என முப்பொருண்மையை விரிவாகப் பேசும் இலக்கணம் என்பது நமது கல்விபுலம் சொல்லும் தகவல். பின்னர் யாப்பு , அணி என இரண்டும் தனி இலக்கணங்களாக விரிவுபட்டதின் தொடர்ச்சியாகத் தொல்காப்பியத்திலேயே ஐந்திலக்கணம் குறித்த செய்திகள் உண்டு எனப் பேசத்தொடங்கியது தமிழ்க் கல்விப்புலம்.   இன்று உலக அறிவு விரிவடைந்துள்ள நிலையில் தொல்காப்பியத்தை இலக்கண நூலாகக் கற்பிப்பதைத் தாண்டி ஓர் அறிவுத் தோற்றவியல் நூலாகக் கற்பிக்க வேண்டும் என்பது எனது நிலைப்பாடு. ஐரோப்பியர்கள் அரிஸ்டாடிலின் எழுத்துகளைத் தொகுத்து வைத்துக்கொண்டு ஐரோப்பிய அறிவின் தொடக்கமாக முன்வைக்கிறார்கள். அப்படியொரு ஆளுமையாகத் தொல்காப்பியரை முன்வைக்க முடியும் . தொல்காப்பியப் பனுவலுக்குள் மனித அறிவுருவாக்கம் குறித்த விளக்கங்கள், சமூகவியல் அறிவு, உடலைப் பயன்படுத்தி உணர்வுகளைக் காட்டும் நடிப்புக்கோட்பாடு, நூலறிவியல் சிந்தனைகள், இடம்பெற்றுள்ளன. 

வலி தந்த வலிமை : ஜெயகாந்தனுக்கு அஞ்சலி

படம்
08- 04 -2015 இரவு எட்டுமணிக்குத் தொடங்கிய ஐ. பி. எல். கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் முடிந்த கையோடு செய்தி அலைவரிசைகளுக்குத் தாவியபோது எழுத்தாளர் ஜெயகாந்தன் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி   வந்துவந்து போய்க்கொண்டிருந்தது. தூங்குவதற்காகக் கண்களை மூடினால் தூக்கம் வரவில்லை.

தமிழ் அறிவுத்தோற்றவியலின் பரிமாணங்கள்

திருக்குறளின் கல்வி கேள்வி அதிகாரங்களை முன்வைத்து முன்னுரை: மனித நாகரிக வளர்ச்சி என்ற சொல்லாடலில் இலக்கியங்களுக்குப் பெரும்பங்கு இருக்கின்றன என்ற கருத்து இன்று ஏற்கப்பெற்ற கருத்து. அதிலும் தமிழ் போன்ற செவ்வியல் மொழிகளிலிருந்து உருவான இலக்கியங்கள், அம்மொழி பேசுகின்றவர்களின் வளர்ச்சியில் மட்டுமல்லாமல், உலகந்தழுவிய பொதுமைக் கூறுகளை முன் வைத்து உலக நாகரிக வளர்ச்சிக்கே காரணிகளாக ஆகியிருக்கின்றன.

குற்றவியலின் தர்க்கங்கள்-ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

படம்
ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.

தற்காலிகமா? நிரந்தரமா?

படம்
ஐரோப்பியர்களுக்குக் கல்யாணத்திற்கு முன் சேர்ந்து வாழ்தல் (Living together) தவிர்க்க முடியாத நெருக்கடியின் விளைவு. இந்தியர்களுக்கு சேர்ந்து வாழ்தல் நெருக்கடி அல்ல;தேர்வு (Choice). இரண்டில் எது ? பந்தம் தொலைத்துக் கொஞ்சும் - கொஞ்ச காலமா? பந்தமென்றறியாத பந்தம் தொடரும் நீண்ட காலமா? தற்காலிகமா? நிரந்தரமா? 

எளிமையின் பயங்கரம்

கொம்பனை முன்வைத்துத் தமிழின் வட்டார சினிமாக்களைப்  பற்றி ஓர் அலசல் ‘அதிகத் திரையரங்குகள்; குறைந்த நாட்கள்; கூடுதல் கட்டணம்; வசூல் வெற்றி’ என்ற சூத்திரம் செயல்படும் இந்தக் காலகட்டத்தில் ஏப்ரல் முதல் வாரத்தில் வந்த சகாப்தம், நண்பேன்டா, கொம்பன் மாதிரியான படங்களின்  விமர்சனத்தை மே முதல் வாரம் வாசிப்பது அபத்தமான ஒன்று. 

ஆற்றுகை

writtentext kum performance text kum vilakkam solla mudiuma si.  (ரிட்டன் டெக்ஸ்ட்க்கும்,பெர்பார்மென்ஸ் டெக்ஸ்ட்க்கும் விளக்கம் சொல்ல முடியுமா சார்)