இடுகைகள்

புதிய உயர்கல்வித் துறை அமைச்சர்

படம்
உதயநிதி ஸ்டாலின் இன்று துணை முதல்வராகி இருக்கிறார். அவரோடு புதிய அமைச்சர்களாக 4 பேர் பதவி ஏற்றுள்ளனர். இந்த அமைச்சரவை மாற்றத்தில் உயர்கல்வித்துறைக்குப் புதிய அமைச்சர் ஒருவர் பொறுப்பேற்றுள்ளார். புதிய அமைச்சர்கள் நால்வரில் கோவி.செழியனும் இரா.இராஜேந்திரனும் மட்டுமே புதிய அமைச்சர் என்ற நிலைக்குரியவர்கள். செந்தில் பாலாஜியும் ஆவடி நாசரும் ஏற்கெனவே அமைச்சர்களாக இருந்தவர்கள். இடையில் நீக்கப்பட்டு திரும்பவும் அமைச்சர்களாகி இருக்கிறார்கள்.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மூன்று குறிப்புகள்.

படம்
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-  பத்து நாட்களுக்கு முன்(12/09/24)  தேர்தல் தேதி /21/09/724 ஈழப்போராட்டத்தின் வழியாகவே இலங்கையைக் கவனித்த பலருக்கும் இதுதான் நிலைமை என்று நினைக்கிறேன். நானும் இலங்கைத் தமிழ்ப் புனைவு எழுத்துகளை வாசித்த அளவுக்கு இலங்கை அரசியலின் உள்ளோட்டங்களை அறிந்துகொள்ளுதலில் ஆர்வம் காட்டியதில்லை. காட்டிய ஆர்வம் கூடப் பூகோள அரசியலில் சின்னஞ்சிறிய நாடொன்றை வல்லாதிக்கம் செய்ய விரும்பும் நாடுகள் எப்படிப் பார்க்கின்றன என்ற கோணத்தில் தான் புரிந்துகொண்டிருக்கிறேன். அந்தப் புரிதலில், பக்கத்தில் இருக்கும் பெரிய நாடான இந்தியாவும், தூரத்திலிருந்தே இலங்கையின் அதிகார சக்திகளை இயக்கும் அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளும் செய்யும் குழப்பங்களையும் உதவிகளையும் கவனித்திருக்கிறேன். இவை எல்லாவற்றையும் எனது இலங்கைப் பயணங்களின்போது நேரடியாகவும் பார்த்து அங்குள்ள நண்பர்களோடு விவாதித்து அறிந்து கொண்டுள்ளேன். இதன் பின்னணியில் இப்போது இலங்கையில் நடக்கப்போகும் தேர்தல் குறித்து எழுதப்படும் பதிவுகளையும் சில பத்திரிகைகளின் கட்டுரைகளையும் வாசித்துக் கொண்டிருக்கிறேன். பெரும்பான்மை இனவாதம், பௌத்த அடிப்படைவாதம் என

குடியும் குடி அடிமைத்தனமும்

மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடி விட்டன. பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது. என்னுடைய உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடி அடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும் மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை.

நவீனத்துவமும் பாரதியும்

படம்
ஆங்கிலத்தில் மாடர்ன் (Modern), மாடர்னிட்டி (Modernity), மார்டனிசம்(Modernism) என மூன்று கலைச்சொற்கள் பயன்பாட்டில் உள்ளன. இம்மூன்று சொற்களின் வேர்ச்சொல் மார்டன் (Modern) என்பதே என்றாலும் பயன்பாட்டு நிலையில் வேறுபாடுகள் உள்ளன. இம்மூன்று சொற்களையும் தமிழில் நவீனம், நவீனத்துவநிலை, நவீனத்துவம் என மொழிபெயர்ப்புச் செய்து பயன்படுத்தலாம். தமிழில் ஒவ்வொன்றும் தனித்தனியாகச் சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா? என்பது விவாதிக்கப்பட வேண்டியது.

மனுஷ்யபுத்திரனின் கவிதைச் சம்பவங்கள்

படம்
  நாடகங்களைக் கவிதை வடிவில் எழுதிய சேக்ஸ்பியர், கவிதை வடிவமே உணர்ச்சிகளுக்கான வடிவம் என்பதை உடன்பாட்டுடன் சொல்கிறார். Poetry is the spontaneous overflow of powerful feelings/கவிதை வடிவம் தன்னுணர்வற்ற நிலையில் தோன்றிப் பெருகும் வலுவான உணர்ச்சிகளின் வெளிப்பாடு என்பது வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் சொன்ன வரையறை.

பெண்ணிய வாசிப்புகள் - ஒரு மதிப்புரை

படம்
தமிழ் சிறுகதை இலக்கியத்திற்கு பங்களித்துள்ள 26 பெண் எழுத்தாளர்களின் கதைகளை இந்நூலில் ஆய்வுக்குட்படுத்தி விவாதிக்கிறார். தமிழ்நாடு மட்டுமல்லாது இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் வசிக்கும் பெண் எழுத்தாளர்களின் கதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டதை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

போர்க்களத்தை விசாரித்தல்: விஜயராவணனின் இரண்டு கதைகள்

படம்
சால்ட் பதிப்பக வெளியீடாக வந்த விஜயராவணனின் நிழற்காடு தொகுப்பிற்குப்பின் மூன்று கதைகளை வாசித்துள்ளேன். மூன்றும் இணைய இதழ்களில் தான் பதிவேற்றம் செய்யப்பட்டவை.   கதைக்கான பொருண்மையைத் தேர்வுசெய்வதிலும், அதனைச் சொல்வதற்குத் தெரிவுசெய்யும் சொல் முறைமையிலும் தலைப்பிடுதலிலும் புதியனவாக இருக்கவேண்டும் என்று மெனக்கிட்டு எழுதுகிறார் என்பதைக் காண முடிகிறது. இப்போது பதிவேற்றம் பெற்றுள்ள ‘தங்கமீன்’ கதை எழுப்பும் விசாரணைக்காகவும், அவ்விசாரணையின் உள்ளார்ந்த கவனத்தை வாசிப்பவர்களுக்குக் கடத்துவதற்காக அவர் தேர்வு செய்துள்ள சொல்முறைமைக்காகவும் பாராட்டப்பட வேண்டியவர்.