குடியும் குடி அடிமைத்தனமும்
மதுப்பழக்கம் தமிழ் வாழ்வின் பகுதியாக மாறிப் பல ஆண்டுகள் ஓடி விட்டன. பல குடும்பங்களின் அன்றாட வாழ்க்கையைக் குலைத்துப் போட்டிருக்கிறது. என்னுடைய உறவினர்கள் மரணங்களின் பகுதியாகவே குடிப்பழக்கமும் குடி அடிமைத்தனமும் இருந்துள்ளன. ஆனாலும் மரணத்தை முன்வைத்துக் குடியெதிர்ப்புப் பரப்புரை செய்வதை நான் விரும்புவவில்லை.
அந்தரங்க வெளி எது? பொதுவெளி எது? என்ற குழப்பம் பொதுப்புத்தியில் இருப்பது தவிர்க்கமுடியாதது. இவ்விரண்டும் உருவாகும் புள்ளிகளும் கோடுகளும் பற்றிய புரிதல் இருக்குமென நம்பும் எழுத்தாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும்கூட இந்தச் சிக்கல் இருக்கிறது. இந்திய/ தமிழ்ச் சூழலில் மதுப்பழக்கம் எப்போதும் தனிமனித அந்தரங்கத்தின் பகுதியே. அந்தரங்கத்தை நட்போடு பகிர்ந்துகொள்வார்கள்; இணைந்துகொள்வார்கள்; பிரிவார்கள்; நிறுத்தவும் செய்வார்கள். ஆகவே பொதுவெளியில் விவாதிப்பதை விரும்ப மாட்டார்கள்.
தனிமனித அறம், சமூக அறம், பொது அறம் என அறங்களைப் பிரித்துப் பேசும் திருக்குறள் கள்ளுண்ணாமையைத் தனிமனித அறத்தின் பகுதியாகவே வைத்திருக்கிறது. கள்ளுண்ணாமை அதிகாரம் நட்பியல் என்னும் பெரும்பிரிவுக்குள் இருக்கிறது. கள்ளுண்பதால் உடலின் ஒளி குறைந்துவிடும்; சான்றோர்கள் உன்னை நினைக்கமாட்டார்கள்; நாணம் கெட்டுவிடும்; உடலின் மென்னுணர்வு போய்விடும்; அது ஒருவிதத்தில் நஞ்சு போன்றது; தெரியாமல் அருந்திவிட்டுக் குடிப்பதே இல்லையெனப் பொய்பேசவைக்கும்; உடல் சோர்வு உண்டாகுமென நண்பனுக்குச் சொல்லும் அறிவுரையாகவே சொல்கிறது. ஆனால் திருவள்ளுவருக்கு முந்திய காலம், நட்பின் நெருக்கத்தைக் காட்டும் அடையாளமாகக் கள்ளுண்ணுதல் இருந்திருக்கிறது. புலவு மணம் வீசும் தன் தலையைத் தன் நறவுமணம் கொண்ட கையால் தடவிக்கொடுக்கும் அதியமான் கொஞ்சமாகக் கிடைத்தால் எனக்குக் கொடுப்பான்; நிறையக் கிடைத்தால் இருவரும் சேர்ந்து குடிப்போம்; நான் பாடுவேன்; அவன் கேட்டு மகிழ்வான் எனச் சொல்கிறாள் கவியும் பாடினியுமான ஔவை. அவளது புறப்பாடல் (235) வரிகள் இவை: இவ்வரிகளில் வெளிப்படும் உணர்வு குற்ற வுணர்வல்ல; இப்போது அவன் இல்லை என்ற சோகம் இதில் இழையோடுகிறது என்றாலும் குடியால் செத்துவிட்டானே என்று அவள் மனம் அழவில்லை.
சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே
பெரியகட் பெறினே
யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே
சிறுசோற் றானு நனிபல கலத்தன்மன்னே
பெருஞ்சோற் றானு நனிபல கலத்தன்மன்னே
என்பொடு தடிபடு வழியெல்லா மெமக்கீயு மன்னே
அம்பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே
நரந்த நாறுந் தன்கையாற்
புலவு நாறு மென்றலை தைவரு மன்னே
அருந்தலை யிரும்பாண ரகன்மண்டைத் துளையுரீஇ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர
அஞ்சொனுண் டேர்ச்சிப் புலவர் நாவிற்
சென்றுவீழ்ந் தன்றவன்
அருநிறத் தியங்கிய வேலே
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ
இனிப் பாடுநருமில்லைப் பாடுநர்க்கொன் றீகுநருமில்லைப்
பனித்துறைப் பகன்றை நறைக்கொண் மாமலர்
சூடாது வைகியாங்குப் பிறர்க்கொன்
றீயாது வீயு முயிர்தவப் பலவே.
#####################
என்ன செய்வது? எப்படித்தடுப்பது?
=======================================
நாள்வட்டி, வாரவட்டி, மீட்டர் வட்டி என்பதான வட்டிகளோடு கந்துவட்டி என்ற சொல்லும் நீண்ட காலமாக இருக்கிறது. வட்டிக்குப் பணம் தருகிறவர்களையும், பெறுகிறவர்களையும் கண்முன்னே பார்த்துக் கொண்டேதான் இருக்கிறேன். நெல்லையின் பாளையங்கோட்டைக் காய்கறிச் சந்தையிலும் மீன் சந்தையிலும் அவற்றை வாங்குவதற்காக வராமல், ஒரு மஞ்சள் பையோடு வந்து பணத்தை வாங்கிப் போட்டுக்கொண்டு போகும் தண்டட்டிக்காரிகள் என்னும் தாட்டியக்காரிகள் கண்முன்னே நடமாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களுக்குப் பின்னே இருக்கும் முதலீட்டாளர்கள் பலவிதமானவர்கள்.
மாதச்சம்பளம் வாங்கும் கடைநிலை ஊழியர்களைக் காப்பாற்றுவதற்காக அரசு நிறுவனங்கள் அவர்களின் சம்பளத்தை வங்கிக்கே அனுப்பும் முறையைக் கொண்டுவந்தன. அப்படிக் கொண்டுவரவேண்டுமென வலியுறுத்திச் சம்மதிக்கச் செய்த சங்கங்களின் சாதனைகள் ஒன்றும் ஏழைகளின் வாழ்க்கையைச் சீரமைத்து விடவில்லை. அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் சக ஊழியர்களிடம் வட்டிக்கு வாங்கிவிட்டு, சம்பளத்திற்கு முந்திய நாள் வங்கியிலிருந்து பணம் எடுக்கவேண்டிய ஏடிஎம் அட்டையை ஒப்படைக்கிறார்கள். அவருக்குச் சேரவேண்டிய பணத்தை எடுத்துக்கொண்டு அட்டையத்தருவாரெனக் காத்திருப்பவர்களை நான் ஒவ்வொருமாதமும் பார்க்கிறேன். வட்டிக்கு வாங்கியவர்களின் முகவரி,தொலைபேசி எண்களைக் குறித்துவைத்திருப்பதைப் போல ஏடிஎம் - ரகசிய எண்ணையும் அவர்கள் குறித்துவைத்திருக்கிறார்கள்.
இன்று மண்ணெண்ணெய் ஊற்றித் தற்கொலை செய்துகொண்டவர்கள் அரசின் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட குடும்பங்களின் கதைகள் இதே நெல்லை நகரத்தில் காற்றில் கலந்து ரத்தவாடையைக் கக்கின. மனைவியும் கணவனும் வேலைபார்க்கும் துப்புரவுப் பணியாளர் குடும்பத்தின் ஒற்றைச் சம்பளம் வட்டிக்குப்போய்விட, இன்னொருவர் சம்பளத்தால் அசலை அடைக்க முடியாமல் திணறியதை நானறிவேன்.
கடைநிலை ஊழியர்களின் குடிப்பழக்கமே வட்டிக்கு வாங்கும் பழக்கத்தின் தொடக்கமாக இருக்கிறது என்றொரு எம்பில் பட்ட ஆய்வறிக்கை சொல்கிறது. வாழ்க்கையைத் திட்டமிடச் சொல்லித்தரும் கல்விமுறை இல்லாதது அடிப்படையான சிக்கல் என்பதை வெளிப்படையாக ஒத்துக்
மது அருந்துதல் ஐரோப்பா போன்ற பனிப்பரவல் உள்ள நாடுகளில் உணவின் பகுதியாக இருக்கிறது. இந்தியா போன்ற வெப்பப்பிரதேச நாடுகளில் அப்படி இருக்கவேண்டியதில்லை. என்றாலும் உடல் உழைப்பில் ஈடுபடும் மனிதர்களுக்கு அஃதொரு வலி மறப்பு மருந்தாக இருந்திருக்கிறது; இருக்கிறது. உடல் உழைப்புக்குழுக்களைப் போல மூளை உழைப்புக்குழுக்கள், தங்கள் மனச்சோர்வை நீக்கும் மருந்தாக நினைத்துக் கைக்கொண்டுள்ளன. மது வகைகள் பெரும்பாலும் தங்கள் நிலப்பரப்பில் விளைந்த தாவரங்களிலிருந்து கிடைக்கும் சாறாகவே இருந்துள்ளன. அதனை இடம்பெயரச்செய்யும் விதமான அயல் பிரதேசக் குடிபானங்கள் வந்தபோது எதிர்ப்புணர்வும் கூடியிருக்கிறது. உள்ளூர்த் தேறலோடு யவனச் சரக்கு வந்ததை இலக்கியங்கள் காட்டுகின்றன. உடல் மற்றும் மனச்சோர்வின்போது அதைப் போக்கும் மருந்துகளில் ஒன்றாகக் குடியும் குடிசார் மனநிலையும் இருந்ததிலிருந்து மாறியபோது அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பரப்புரைகள் தோன்றியுள்ளன.
நிகழ்காலத்தில், தனிமனிதப் பழக்கம் சமூகத்தின் வேலைத்திட்டமாகவும், அரசின் பொருள்வருவாய்க் காரணியாகவும் ஆகியிருக்கிறது. அந்தக் காரணம் பற்றி குடியும், குடிப்பொருள் விற்பனை அமைப்பும் விமரிசிக்கப்பட வேண்டியன. நமது நிகழ்கால வாழ்க்கை முறைகளும் அதனை அனுமதிக்கும் அரசுகளும் தனிமனித அந்தரங்கங்கள் பலவற்றைப் பொதுவெளிக்குரியதாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன.
அனைத்து மக்களுக்குமான அரசுகள் குடிப்பொருளாதாரத்தில் மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுகின்றன. அத்தோடு அரசியலற்றவர்களாகத் திரள் மக்களை மாற்றிக் குற்றவாளிகளும் கெடுமதியாளர்களும் அரசதிகாரத்தைக் கைப்பற்ற மதுப்பழக்கமும், அதனால் கிடைக்கும் பொருளாதாரமும் காரணமாக இருக்கின்றன என்பது நிகழ்கால உண்மை. இதனாலேயே எதாவதொரு காரணம்பற்றி மதுவுக்கெதிரான கருத்துரைகளை வைத்து விடவேண்டுமெனப் பரப்புரையாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அப்பரப்புரைகள் மதுவொழிப்பு பற்றிப் பேசுவதைக் கைவிட்டுவிட்டு, புதிய் மதுக்கொள்கையை உருவாக்கும் நோக்கத்தோடு இருக்க வேண்டும்

சனி, ஞாயிறுகளிலும் மாலை வேலையிலும் வீடுகளுக்குச் சென்று குளியலறை, கழிப்பறை கழுவிச் சேர்த்துக் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பும் பணியாளர்கள் என்னுடன் தான் பணியாற்றுகிறார்கள். அந்தக் குடும்பத்துக்கு உதவ நினைப்பவர்கள் ஏதாவது வேலைகொடுத்துச் சம்பளம் கொடுக்க முடியுமேயொழிய, வட்டிக்குவிடுபவர்களைத் தட்டிக்கேட்க முடியாது. நிறுவனத்தலைவர்களேகூட சட்டப்படியான நடவடிக்கை எடுக்கமுடிவதில்லை. இந்தியாவின் சட்டங்கள் குற்றச் செயலில் ஈடுபடுபவர்களையும், சாதியையையும் சாதியின் பாதுகாப்பில் இருப்பவர்களையும் நெருங்குவதில்லை.
கடைநிலை ஊழியர்களின் குடிப்பழக்கமே வட்டிக்கு வாங்கும் பழக்கத்தின் தொடக்கமாக இருக்கிறது என்றொரு எம்பில் பட்ட ஆய்வறிக்கை சொல்கிறது. வாழ்க்கையைத் திட்டமிடச் சொல்லித்தரும் கல்விமுறை இல்லாதது அடிப்படையான சிக்கல் என்பதை வெளிப்படையாக ஒத்துக்
கொள்ளவேண்டும். அதுவொரு அணையாத பெருநெருப்பு
மதுவருந்தும் பண்பாடு

கருத்துகள்