இடுகைகள்

இயற்பண்பியல் எழுத்தின் நேர்மறை -அபிமானியின் மனசுக்காரன்

சமகாலத்தமிழ் இலக்கியப்பரப்பில் கடந்த அறுபதாண்டு காலமாக ஆதிக்கம் செலுத்தும் இலக்கிய வடிமம் நாவல். குறைவான நேரத்தில் ஒன்றை வெளிப்படுத்திவிட முடியும் என்ற நோக்கத்தில் கவிதை வடிவத்தைத் தேர்வு செய்பவரும், சிறுகதை வடிவத்தில் எழுதிப்பார்ப்பவரும் நாவல் எழுதிப்பார்க்க வேண்டும் என்று ஆசையுடையவர்களாக இருக்கிறார்கள். பாரதியைத் தமிழின் சமகால இலக்கியத்தின் தொடக்கம் எனக் கொண்டால், அவரே தனது கவிதை வடிவத்தோடு கட்டுரைகள், புனைகதைகள் என நகர்ந்து, சந்திரிகையின் கதையென நாவல் முயற்சியில் இறங்கியபின்னரே முடிந்திருக்கிறார்.

நிர்வாக நடைமுறைகளும் நீதிபரிலானமும் - சில குறிப்புகள்

படம்
ஒற்றை அடையாள அட்டை தரப்படவேண்டும் .  இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் ஒற்றை அடையாள அட்டையை இப்போதாவது தரவேண்டும்.   அதற்கான பணிகளைத்  தேர்தல் ஆணையம் செய்யக்கூடாது. ஒன்றிய அரசின் புள்ளியியல் துறை அதனைச் செய்யவேண்டும். இதனை முதல் ஐந்தாண்டுத் திட்டத்திலேயே செய்திருக்க வேண்டும். அதற்குப் பதிலாக 18 வயதைத் தாண்டியவர்களுக்கு வாக்குரிமை அட்டையை வழங்கும் சிறப்புச்சீர்திருத்தம் நடக்கிறது. பிரிட்டானிய ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற இந்தியாவின் குடிமக்களாக ஆகும் தகுதி இவை; இந்தத் தகுதியோடு கூடிய மக்களின் எண்ணிக்கை இவ்வளவு; இதில் ஒருவரின் குறியீட்டு எண் இது என்ற அடையாள அட்டையைத் தரவேண்டும். வளர்ச்சி அடைந்த நாடுகள் ஒவ்வொன்றும் இத்தகைய எண்ணைக் கொண்டே குடிமக்களை அடையாளப்படுத்துகின்றன. ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு அந்த நாட்டிற்குள் பணியாற்றவரும் ஒருவருக்கு தற்காலிகக் குடியுரிமை அட்டையை வழங்குகின்றார்கள். அந்த நாடுகளுக்குள் வரும் விருந்தினர்களுக்கு இத்தகைய அடையாள அட்டையை வழங்குவதில்லை.  இரண்டாண்டுகள் போலந்தில் பணியாற்றியபோது எனக்கு வழங்கப் பெற்ற அட்டையில் நான் இருக்கக்கூடிய கா...

கதைசொல்லுதலின் சாகசங்கள்

படம்
ஜெயமோகனின் பத்துலட்சம் காலடிகள்   ஜெயமோகன் சமகாலத்தமிழின் முதன்மையான கதைசொல்லி. அவரது பத்துலட்சம் காலடிகள் அண்மையில் வந்துள்ள சிறுகதைகளில் முக்கியமான கதை. சில நாட்களாக இந்தப் பொருள் தரும் சொற்றொடர்கள் இணையப் பக்கங்களில் ஆங்காங்கே தொடர்ச்சியாக வாசிக்கக் கிடைக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதிவரும் ஜெயமோகனை முதன்மையான கதைசொல்லி என்று மதிப்பீட்டுச் சொல்லால் பாராட்டிச் சொல்வதற்கு ஒருவர் காரணங்களை அடுக்கிக் காட்டத் தேவையில்லை. ஆனால் இந்த (கொரோனா) அடங்கல் காலத்தில் நாளொன்றுக்கு ஒரு கதை என்று தவறாமல் தனது இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யும் வரிசையில் முப்பதாவது கதையாக வந்துள்ள ஒரு கதையை முக்கியமான கதை -ஆகச் சிறந்த கதை -உன்னதமான கதை – என்று சொல்வதற்குப் போதுமான காரணங்களை முன்வைக்க வேண்டும். காரணங்கள் சொல்லாமல் முன்வைக்கப்படும் சொற்றொடர் விமரிசனச் சொல்லாக இருக்காது. போகிற போக்கில் வாசிக்காமலேயே கூடச் சொல்லப்படும் மதிப்பிட்டுக் குறிப்பாகவே கருதப்படும்.

காளமாடன் என்னும் பைசன் :நிகழ்ந்தனவும் புனைவாக்கமும்

படம்
மாரி செல்வராஜ் இதுவரை இயக்கிய சினிமாக்கள் ஐந்து . முதல் படமான பரியேறும் பெருமாள் (2018) தொடங்கி கர்ணன்(2021) மாமன்னன்(2023) வாழை (2024) அண்மையில் வந்த பைசன் -காளமாடன் வரை ஒவ்வொன்றையும் அப்படங்கள் வந்த முதல் வாரத்தில் திரையரங்குகளில் ஒருமுறையும், அந்தப் படங்களைக் குறித்து எழுதுவதற்காக இணையச்செயலிகளில் இன்னொரு முறையும் பார்த்துள்ளேன். அப்படிப் பார்த்துப் புரிந்து கொண்ட நிலையில் மாரி செல்வராஜ் நிறுவியிருக்கும் தனித்துவமான கூறுகள் சிலவற்றை அடையாளம் காட்டத் தோன்றுகின்றது.

கல்விச்சந்தையும் தமிழ்க்கல்வியும்

படம்
காலத்திற்கேற்ற தமிழ் இலக்கியக்கல்வி பல்கலைக்கழகப் பணி ஓய்வுக்குப்பின் தொடர்ந்த கரோனா காலம் முடக்கிப் போட்டுவிட்டது. தொடர்ந்து கலை, இலக்கியச்செயல்பாடுகளில் ஈடுபடத் திட்டமிட்டதை எல்லாம் மாற்றிப் போட்டு விட்டது. இந்த நிலையில் தான் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் கொடுத்த  அழைப்பை ஏற்றுக் கொண்டு படைப்பாக்கக் கல்வியை மையப்படுத்தித் தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தேன். காலத்திற்கேற்பவும் மாணாக்கர்களின் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தும் நோக்கத்துடனும் அதனை உருவாக்கினேன். அதன் தொடர்ச்சியில் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் இப்போதிருக்கும் இளங்கலை, முதுகலைப் பட்டங்களின்   தமிழ் இலக்கியக் கல்வியை மாற்றும் நோக்கமும் இருந்தது. அதற்கேற்ப ஒரு  பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டது. கோவை குமரகுரு வளாகத்தில் உள்ளபன்முகக்கலை அறிவியல் கல்லூரி (Liberal Arts and Science) என்ற பெயருக்கேற்ப அதன் பட்டப்படிப்புகளை வேலைவாய்ப்புள்ள பட்டப்படிப்புகளாக  ஆக்க நினைத்த நான் ஒன்றரை ஆண்டுகளில் அங்கிருந்து வெளியேறினேன். அதற்கு அங்குத் தமிழ்த்துறையில் பணியாற்றிய  ஆசிரியர்களிடமிருந்த...