ஓரங்க நாடகமும் ஓராள் நாடகமும்
ஓரங்க நாடகம் (One - Act Play) என்பதையும் ஓராள் நாடகம் (Mono -Acting) என்பதையும் பல நேரங்களில் குழப்பிக்கொள்வதைப் பார்த்திருக்கிறேன். குறிப்பாகக் கல்வி நிறுவனங்கள் நடத்தும் போட்டிகளில் இக்குழப்பம் உச்சநிலையை எட்டியிருக்கிறது. இவ்விரு சொற்களும் நாடகவியல் (Dramatics), அரங்கவியல் (Theatre) என்ற இரண்டின் வேறுபாட்டோடு தொடர்புடைய சொற்கள். உரையாடல்களே நாடக இலக்கியத்தின் அடிப்படைக்கூறு. அவ்வடிப்படைக்கூறு ஒரு குறிப்பிட்ட வெளியில் நடக்கும்போது காட்சி என்னும் சிற்றலகு உருவாகிறது. காட்சிகளில் இருக்கும் தொடர்புகளால் அங்கம் என்னும் பேரலகு வடிவம் கொள்கிறது. அங்கங்கள் நாடக இலக்கியத்திற்குத் தேவையான முரண்களால் வளர்ந்து உச்சநிலையை அடைந்து முடிவை நோக்கிச் சென்று நாடகமாக மாறுகிறது. இவ்வளர்ச்சியையும் முடிவையும் ஒரே அங்கத்தில் தருவதாக எழுதப்படும் நாடகம் ஓரங்க நாடகம். இதற்கு மாறாக ஓரங்க நாடகத்தையோ, பல அங்கங்கள் கொண்ட நாடகத்தையோ, அதற்குள் இடம்பெற்றிருக்கக் கூடிய பல்வேறு கதாபாத்திரங்களையும் ஒரே நடிகர் தனது குரல், உடல் அசைவுகள், ஒப்பனைகள் வழியாக வேறுபடுத்திக் காட்டி நடிக்கும் நிகழ்வு ஓராள் நாடகம். இவ்வேறுபாட்டை