இடுகைகள்

கல்வியுலகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தப்பும் குறிகள்

  மருத்துவராகிச் சமூகத்திற்குப் பணியாற்றியே தீர்வது என்ற விடாப்பிடியான கொள்கையைப் பதின்வயதுப் பிள்ளைகளிடம் பாலோடும் பால்ச்சோறோடும் சேர்த்து ஊட்டி வளர்க்கும் தமிழ்ப் பெற்றோர்களின் கனவுகள் சென்ற ஆண்டே தேசிய தரமதிப்பீட்டுத் தேர்வு (NEET) என்னும் குயுக்தியான ஆயுதத்தால் சிதைக்கப் பட்டது சென்ற ஆண்டுக் கதை. பள்ளிப்படிப்புக்காகவும் தனிப் பயிற்சிக்காகவும் செலவழித்த மொத்தப் பணமும் வீணானது பற்றிக் கவலைப் பட்டவர்கள் அந்த நுழைவுத்தேர்வு - தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு வேண்டாம் என்று போராடினார்கள். தடுக்க முடியாத நிலையில் கடுமையான சோதனைகளையும் கட்டுப்பாடுகளையும் தாண்டி தேர்வுகளை எழுதினார்கள். 12 ஆண்டுப் படிப்பும் வீணானது. பள்ளி இறுதித் தேர்வில் 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்ற மாணாக்கர்களும்கூட தகுதி பெறாமல் தோல்வியடைந்தார்கள். அந்தத் தோல்வியைத் தாங்கிக் கொள்ளமுடியாத அனிதா தற்கொலை செய்துகொண்டார்.

கற்றல் - கற்பித்தல்: மாணவ ஆசிரிய உறவுகள்

  எனது கற்பித்தல் முறையை என் மாணவர்கள் அறிவார்கள். எந்தவொரு வகுப்பிலும் நான் தயாரித்துப் போகும் குறிப்புகளை முன்வைப்பதில் தொடங்குவதே இல்லை. அதை மனதில் வைத்துக் கொண்டு, அதை நோக்கி வகுப்பைத் திருப்பும் வகையில் அன்றைய ஒரு நேரடி நிகழ்வை - அல்லது செய்தித்தாள் குறிப்பை முன்வைத்து, ஒரு படத்தை அல்லது பொருளைக் காட்டி -கேள்விகள் கேட்டு, அவர்களைப் பேசவைத்து அந்தப் பேச்சின் வழியாகவே பாடப்பகுதிக்குள் வருவேன். சிவகாசி ஜெயலெட்சுமியின் பரபரப்புச் செய்திகள், நேர்காணல்கள், படங்கள் வழியாக பெண்ணியக் கவிதைகளைப் பாடம் சொன்ன ஞாபகங்கள் - நினைவுகள் இப்போதும் பசுமையாக நினைவில் இருக்கின்றன. இதில் அவர்களுக்கும் பலன் உண்டு; எனக்கும் பலன் உண்டு.

மழலையர் பள்ளிகளும் குறைகூலித் தொழிலாளிகளும்

புதிய கல்விக்கொள்கை விருப்பத்தேர்வாக இருந்த மழலையர் வகுப்புகளைக் கட்டாயக் கல்வியின் பகுதியாகப் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையின் பின்னால் உள்நோக்கங்கள் இல்லை என வாதிடுபவர்களுக்கு உள்நோக்கம் இருக்கிறது. குடும்பத்தின் மூத்த உறுப்பினர்களின் வழியாக மூன்று வயதிலேயே வேதங்களைப் பாராயணம் செய்யவும், சுலோகங்களை மனனம் செய்யவும் பழக்கப்படுத்தும் குடும்பச்சூழலை மட்டுமே அறிந்தவர்களின் முன்வைப்பு இது. இதே முறையைப் பின்பற்றித் தேவாரப் பதிகங்களையும் ஆழ்வார் பாசுரங்களையும் மனனம் செய்யும் குடும்பங்களும் உண்டு. இவ்விரண்டு போக்கிலிருந்து விலகித் தினம் 10 குறள் என மனனம் செய்யும் திணிப்பைத் திறன் வளர்க்கும் கல்வியாகச் செய்துகொண்டிருக்கும் வீட்டுக் கல்வி இந்தியாவில்/தமிழ்நாட்டில் ஏற்கெனவே இருக்கிறது. சிறப்பான வாழ்க்கைமுறை வாய்ப்புகளைக் கொண்ட குடும்பங்களின் நடைமுறை. இந்த நடைமுறையைப் பொதுக்கல்வியின் பரப்புக்குள் கொண்டுவருவதின் நோக்கம் என்னவாக இருக்கும்? குழந்தமைப் பருவத்திலேயே தனது இயலாமையை உணர்ந்து பின்வாங்கும் கூட்டத்தை உற்பத்தி செய்யும் தந்திரம் இது எனச் சொலவது குற்றச்சாட்டல்ல. நிகழப்போகும் நடைமுற

நெறியாளரும் ஆய்வாளரும்

எனது நெறியாளர்  2003-இல் நான் பாளையங்கோட்டை சவேரியார் கல்லூரியில் எம்ஃபில் படித்துக் கொண்டிருந்தபோது, ஆய்வுக்காக நாடகம் தொடர்பான குறிப்புகளைத் தேடிக்கொண்டிருந்தேன். மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இருந்த ராமசாமி சாரைப் பற்றிக் கேள்விப்பட்டு, கே.டி.சி. நகரிலுள்ள அவர் வீட்டிற்குச் சென்றேன். நாடகம் தொடர்பான பரந்த அறிவைப் பெற வேண்டுமென்று ‘வெளி’ பிரதிகளைத் தந்தார். நாடகத்திற்காக வந்த இதழ் ‘வெளி’. 

ஆசிரியரும் மாணவர்களும்

என் குருவும் நானும்- நீண்ட நாள் மாணவி சாராள் தக்கர் கல்லூரியில் இளங்கலைத் தமிழ் படித்த நான், 2001 ஜூன் மாதம் நான் முதுநிலை தமிழ் சேருவதற்காக என் தந்தையுடன் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சென்றேன்.. சான்றிதழ்களை நகல் எடுக்க அந்த செராக்ஸ் கடைக்கு முன்னால் காத்திருந்தேன். அதன் பக்கத்தில் தான் தமிழ்த்துறை அலுவலகம்.

ஒற்றை இலக்குகளின் சிக்கல்

படம்
குதிரைக்குக் கடிவாளம் போட்ட மாதிரி என்றொரு மரபுத்தொடர் உண்டு. கடிவாளம் குதிரைக்கு முக்கியமல்ல. கடிவாளம் போட்ட குதிரை மனிதர்களுக்கு முக்கியம். கடிவாளம் போட்டால்தான் ஓட்டப் பந்தயக்குதிரையாக பயன்படுத்த முடியும். அதன் மீதேறி அமர்ந்து. காற்றினும் கடிதான வேகத்தில் செல்லமுடியும். காட்டு விலங்கான குதிரையை வயக்கித்தான் நாட்டுவிலங்காக்கியிருப்பார்கள்.

உயர் கல்வி நிறுவனங்கள்

படம்
தரம் உயர்த்திக்கொள்ளல் ----------------------------------------- நான் பணியாற்றும் திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் தேசிய தர உறுதி மற்றும் மதிப்பீட்டுக் குழுவின் (NAAC) மதிப்பீட்டின்படி நான்கிற்கு 3.13 புள்ளிகள் பெற்று A - தரநிலையை அடைந்துள்ளது. இதற்கு முன்பு அதன் தரம் 'B'. இந்தத் தர உயர்வு ஒற்றைப்புள்ளி உயர்வு அல்ல. ஒரு தாவல். B என்ற தரநிலைக்கு அடுத்து B+, B++ என்று இரண்டு நிலைகள் உண்டு. இந்த இரண்டையும் தாண்டி A -என்ற தரநிலைக்குத் தாவியுள்ளது.

தி.சு.நடராசன் என்னும் எங்கள் ஆசிரியர்

படம்
நான் அவரது மாணவன். தமிழ்த் திறனாய்வு வரலாற்றில் மார்க்சியத் திறனாய்வுப் பள்ளியாக அறியப்பட்ட நா.வா.வின் ஆராய்ச்சி ஆய்வுப் பள்ளியின் முதன்மை அணியிலிருந்த தி.சு.நடராசனின் மாணவன் நான். அவர் கற்றுத்தந்த மார்க்சிய முறையியலைக் கைக்கொண்டு தமிழகத்தின் பின்னிடைக்காலமான நாயக்கர்காலத் தமிழ் இலக்கியத்தை ஆய்வு செய்தவன் நான். அந்த அடிப்படையை வைத்துக்கொண்டு தமிழ்ச் சிறுபத்திரிகைப்பரப்பில் தொடர்ந்து பண்பாட்டுப் போக்குகள், அதனைத் தீர்மானிக்கும் சினிமா, தொலைக்காட்சி வெகுமக்கள் ஊடகங்கள், அரங்கவியல் நிகழ்வுகள் ஆகியவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதும் ஆய்வாளனாக அறியப்படுபவன். அவரைப் போலவே இக்காலத் தமிழ் இலக்கியப் பரப்பான புனைகதைகள், கவிதைகள், நாடகங்கள் முதலான பிரதிகளின் உள்கட்டமைப்பையும் எழுதப்படும் சூழல்களையும் பேசும் விமரிசனச் சொல்லாடல்களை உருவாக்குபவன். 

துறையும் பல்கலைக்கழகமும் - சில நினைவுகள்

படம்
  தமிழியல் துறை, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்:  பல்கலைக்கழகங்களின் தகுதிமதிப்பீட்டைப் பரிசீலனை செய்து தரமதிப்பீட்டை உருவாக்கும்- NAAC- நோக்கத்தோடு தேசியத் தரமதிப்பீட்டுக்குழு பல்கலைக்கழகத்திற்கு வருகைதர உள்ளது. ஒவ்வொரு துறைக்கும் வருவார்கள். அவர்கள் வரும்போது ஒவ்வொரு துறையும் தங்களின் சிறப்புக்கூறுகளையும் செயல்பாடுகளையும் ஆதாரங்களோடு முன்வைக்க வேண்டும்.

உதைவாங்கிக் கிளம்பிய வண்டி:

படம்
தமிழ்நாட்டு மாணாக்கர்களுக்குத் தரப்பட வேண்டிய கல்வி குறித்த பெருநிகழ்வு (ஜூலை 20-22) நடந்து முடிந்திருக்கிறது. அந்நிகழ்வில் பங்கேற்ற கல்வியாளர்களும் வல்லுநர்களும் பங்கேற்பாளர்களும் பலவிதமாக இருந்தார்கள். பலவிதமாகப் பேசினார்கள். பலவிதமான முன்மொழிவுகள் நிகழ்ந்தன. பெரும்பாலும் தமிழ்ப் பாடத்திட்டங்களை மாற்றம் செய்வதற்காக ஏற்பாடுசெய்யப்பட்ட அமர்வுகளில் இரண்டு நாட்களிலும் அமர்ந்திருந்தேன்; கேட்டுக்கொண்டிருந்தேன்; பலருடன் உரையாடினேன். அந்த அமர்வுகள் அண்ணா நினைவுநூற்றாண்டு நூலக அரங்குகளில் நடந்தன.

நம் அக்கறைகள் வேறு மாதிரியானவை-கவிதைப்பட்டறை

நேற்று நடந்த கவிதைப்பட்டறையைப் பற்றிய போகன் சங்கர் குறிப்பு மீது அபிலாஷ் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். கவிதை எழுதுவது குறித்த சிந்தனைகளைத் தூண்டியதில் இந்தப் பயிலரங்கம் சில அடிகளை முன்வைத்துள்ளது என்ற வகையில் மகிழ்ச்சி.. அவருடைய கட்டுரையைப் படிக்கும் முன்பு இந்தக் குறிப்பையும் வாசித்துக்கொள்ளுங்கள்.

புதிய கல்விக்கொள்கை: சில குறிப்புகள்- சில சந்தேகங்கள்- சில எதிர்பார்ப்புகள்

படம்
வாழ்க்கைமுறை என்பது ஒவ்வொரு மனிதரையும் பலரையும் சார்ந்து வாழ வேண்டிய நெருக்கடியைத் தருவதாகவே உள்ளது. சார்ந்து வாழ்தலின் முதல்படி, தன்னை வெளிக்காட்டிக் கொள்ளவேண்டும். தன்னை வெளிக்காட்ட ஒரு கருவி வேண்டும். அதற்காக மனிதன் கண்டுபிடித்த கருவி தான் மொழி. அந்தக் கருவியின் திறனுக்கேற்ப ஒரு மனிதனின் தொடர்புப்பரப்பு அமையும். மொழியென்னும் கருவியின் மூலம் பேச்சு முறையின் மூலம் தன்னையும், தன் குழுவையும் வெளிப்படுத்திய மனிதன், மேலும் கூடுதலாக வெளிப்படுத்த வேண்டிக் கண்டுபிடித்த கருவியே எழுத்து. தனது கருத்தை நிதானமாகவும் செம்மையாகவும் எடுத்துச் சொல்லப் பேச்சை விடவும் எழுத்து முறை கூடுதலாக உதவும். அனைவருக்கும் எழுதப்படிக்கத் தெரிந்திருக்க வேண்டும் என நினைப்பதில் பின்னணியில் இத்தகைய காரணங்களே இருக்கின்றன. இந்தப் பணியைச் செய்வதற்கான திறனைப் பெறுவதையே நிகழ்காலச் சமூகம் கல்வியறிவு பெறுதல் என வரையறுக்கிறது. எழுத்திலிருந்து வேறுபட்ட திறனுடைய வேகமான இன்னொரு கருவியையும் பண்டைய மனிதனே கண்டுபிடித்தான். அவை தான் எண்கள். இவ்விரண்டையும் பயன்படுத்தும் சாத்தியங்களின் விரிவே கல்வி. எண்களை அதிகமாகக் கையாள்வதோடு எழுத்தை

பண்பாட்டுக் கல்வி

படம்
  “நமது கல்வி புதியன படைக்கும் ஆற்றலை வளர்க்கவில்லை; மனப்பாடம் செய்வதையும் அதன் வழியாகத் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் வழிமுறைகளையையும் தானே வளர்க்கிறது?”                                                             - இந்தக் கேள்வியைப் பேராசிரியர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக இருந்த காலத்தில் தமிழகம் வந்த போது கோவை நகரைச் சேர்ந்த ஒரு பள்ளி மாணவர் கேட்டார்:  அதற்கு,   “ முதல் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள கல்வி முறையில் மாற்றங்கள் கொண்டு வர வேண்டும்”     என்று பதிலளித்தார் பேராசிரியர்.

கல்வியுலகம் -படைப்புலகம் -நீண்ட விவாதம்

கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு.

துணைவேந்தர்கள் என்னும் தோட்டத்து மேஸ்திரிகள்

நமது நாட்டின் உயர்கல்விக்குப் பொறுப்பு வகிப்பன பல்கலைக்கழகங்கள். ஒரு பாடத்தில் பட்டம்பெறவேண்டும் எனக் கல்லூரியில் நுழையும் மாணாக்கர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பாடத்திட்டங்களை உருவாக்குவது, கற்பிக்கின்ற முறைகளை வகுப்பது, பாடங்களை முறையாகக் கற்றுள்ளனரா? என அறியத் தேர்வுகள் நடத்துவது என மூன்று முக்கியமான பணிகளைச் செய்கின்றன. அத்துடன் பட்டமேல் படிப்பு படிக்க விரும்பும் மாணாக்கர்களுக்குத் தனது வளாகத்திலுள்ள சிறப்புத் துறைகளின் வழியே முதுநிலைப் படிப்புகளையும், அவற்றின் தொடர்ச்சியாக ஆய்வுப்படிப்பு களையும் தருகின்றன. 

நம்பிக்கையளித்த இரண்டு நாட்கள்:

படம்
தமிழ் இணையக் கல்விக்கழகம் சென்னை கோட்டூர்புரத்தில் செயல்படுகிறது . அண்ணாநூலகம் பக்கத்தில் இருக்கிறது. இணையத்தில் தமிழின் என்னவெல்லாம் இருக்கின்றன; என்னவெல்லாம் இருக்கவேண்டும்; இணையத் தமிழ் நெடுஞ்சாலையில் பயணம் செய்பவர்களுக்கு அவற்றை எப்படித் தருவது போன்றவற்றை விவாதிக்கலாம்; இரண்டு நாட்கள் முழுமையாக இருந்து கலந்துரையாடல் செய்யவேண்டும் என்ற அழைப்பைப் பார்த்தேன். அழைப்பில்   இரண்டு மாதங்களுக்கு முன்பு இக்கழகத்தின் இயக்குநராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள இந்திய ஆட்சிப்பணியாளர் திரு த.உதயசந்திரனின் ஒப்பம் இருந்தது. அவரது செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கையூட்டும் தகவல்களே அழைப்பை ஏற்க முதன்மைக்காரணம்.

முகநூல் பதிவுகள் - இலக்கிய சேவைகள் - தமிழ் ஆய்வுகள் - நெஞ்சு நனைக்கும் நினைவுக்குறிப்புகள்

13 - 03-2015 அன்று இரவு 9 மணி வாக்கில் முகநூலில் நண்பர் பௌத்த அய்யனார்   இப்படி ஒரு   நிலைத்தகவல் போட்டார். ·       ஆண்டுக் கணக்கு முடிவு வந்து விட்டால் பேராசிரியர்கள் இலக்கியம் வளர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். அதைப் படித்த உடன் அதற்கு உடனடியாக நான் ஒரு எதிர்வினையைத் தர வேண்டும் என நினைத்து இப்படி எழுதினேன்:

கடைசி வாய்ப்பைத் தெரிந்தே தவறவிட்டேன்.

படம்
தமிழ்மொழியைச் செம்மொழியாக்கிடும் முயற்சிக்குப் பத்தாண்டுகள் நிறைவடைந்து விட்டது. செம்மொழித் தமிழுக்கான நிறுவனம் தொடங்கப்பட்டும் 8 ஆண்டுகள் முடிந்துவிட்டன. எட்டாண்டுகளாகவே அதற்கெனத் தனியாக நியமிக்கப்பட வேண்டிய தலைமை நிர்வாகி - இயக்குநர் - பதவி நிரப்பப்படாமலேயே இருக்கிறது. இந்தப் பதவிக்கு நான் ஏற்கெனவே இரண்டுமுறை விண்ணப்பம் செய்தேன். இரண்டு முறையும் எனது பெயர் பரிசீலனை செய்யப்பட்டதா என்பதை நானறியேன். அப்படிப் பரிசீலனை செய்யப்படாமல் போவதற்கு விதிப்படியும் நடைமுறைகளின்படியும் சிலபல காரணங்கள் இருந்திருக்கலாம். அதனால் நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை.

தண்டனைகளற்ற உலகம்

ஒவ்வொரு பருவம் முடியும்போதும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் தங்கள் வகுப்பில் பாடம் கற்க வந்தவர்களின் வருகைப் பதிவைச் சோதித்து, அவர்களைத் தேர்வுக்கு அனுப்பலாமா? வேண்டாமா? என முடிவு செய்யப் பல்கலைக்கழகங்களில் விதிகள் உண்டு. நடத்தப்பெற்ற வகுப்புகளில் மாணாக்கர் 75% வந்திருந்தால் கவலையே பட வேண்டாம். ஆசிரியர் அவரைத் தேர்வுக்கு அனுப்பித் தான் ஆக வேண்டும். வகுப்புக்கு வந்து பாடம் தான் கேட்டிருக்க வேண்டும் என்பது கிடையாது. வருகை, பதிவில் இருந்தால் போதும். 60% க்கும் குறைவாக வந்தால் தேர்வில் பங்கேற்பது முடியாது. இது கடுமையான தண்டனை. ஆனால் 60-75 சதம் வந்திருந்தால் தண்டத் தொகையைக் கட்டிவிட்டுத் தேர்வுகளை எழுதிவிடலாம். இந்த நடைமுறையை நீங்கள் தண்டனையாகவும் கருதலாம்; மன்னிப்பாகவும் நினைக்கலாம்.

கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு

படம்
மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள்.