இடுகைகள்

உலகத்தமிழ் இலக்கியம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனோஜனின் புனைவு உலகம்

சமநிலை பேணும் குடும்ப அமைப்பு  ==================================  ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது. 

போரும் புலப்பெயர்வும்: மூன்று கதைகள்

படம்
கதை கதையாம்.. காரணமாம்..காரணத்தால தோரணமாம்.. . தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு..?பூரணகும்பம் எடுப்பதும் எதுக்கு இப்படியொரு சிறுவர் பாடல் உண்டு. இந்தப்பாடலில் வரும் தோரணத்துக்குப் பதிலாக வெவ்வேறு சொற்களைப் போட்டு அவரவர்கள் உருவாக்கிக் கொண்ட மாற்றுப்பாடல்களும் உண்டு. எங்கள் ஊரில் தோரணத்துக்குப் பதிலாக ஊருணி என்றொரு சொல்லைப்போட்டு உருவாக்கிய ”கதைகதையாம் காரணமாம்.. காரணத்திலெ ஊருணியாம்.. ஊருணியில ஒழக்குத்தண்ணியாம்.. ஒழக்குத்தண்ணியில கெழுத்தி மீனாம்.. என்று பிள்ளைகள் பாடுவார்கள்.” நேர்கோட்டில் சொல்லிப்போகும் கதை: ஷமீலா யூசுப் அலியின் கிணறு ஷமீலா யூசுப் அலி எழுதிய ”கிணறு” கதையைப் படித்த முடித்தபோது ஊருணி நினைவுக்கு வந்துவிட்டது. இசுலாமியக் குடும்பங்கள் அதிகம் இருக்கும் இலங்கையின் சிறு நகரம் ஒன்றில் இருக்கும் கிணறு - பொதுக்கிணறு -கவர்மெண்டை கிணறை மையமாக்கி விரிகிறது கதை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எனக் காரணங்களைச் சொல்லிச் சொல்லித்தாவும் கதைசொல் முறையும் பேச்சு வழக்கின் வேகமும் சேர்ந்து தொடங்கிய வாசிப்பை எங்கும் நிறுத்தாமல் முடிவு நோக்கி இழுத்துச் சென்றுவிடுகின்றன. கிணறின் இருப்பிடம் சார்ந்

கடவுளும் காமமும்- உமையாழின் மூன்று கதைகள்

படம்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு, எழுத்திற்குள் அலையும் பாத்திரங்களையும், உடல் மற்றும் மன ரீதியான அலைவுகளையும் முன்வைத்துப் பேசுகிறது. இதனைச் சரியான இலக்கியத்திறனாய்வுக் கலைச்சொல்லால் குறிக்க வேண்டுமென்றால் ‘உள்ளடக்கச் சொல்லாடல் (Content Discoruse)’ எனக் குறிக்கலாம். உள்ளடக்கத்தை வெளிப்படுத்தும் நோக்கத்தை விவரிக்கும்போதுதான் ‘எப்படி எழுதுகிறார்கள்?’ என்பதைப் பேச நேரிடுகிறது. அந்தப் பேச்சு, எழுதுபவர்கள் பயன்படுத்தும் கருவிகளைப் பற்றிய பேச்சுகளாக மாறிவிடும். அதனைக் குறிக்கும் கலைச்சொல்லாக வடிவச் சொல்லாடல் (Structural Discourse) என்பது பயன்பாட்டில் இருக்கிறது. வடிவச்சொல்லாடல் தான் இலக்கிய நுட்பங்களைக் கண்டறிந்து விதந்த

சொல்லித்தீராத சுமைகள்

படம்
எல்லாவகையான வாசிப்பும், வாசிக்கப்படும் பனுவலைப் புரிந்து கொள்ள முதலில் தேடுவது பனுவலுக்குள் இருக்கும் ஆட்களைத்தான். நம்மிடம் சொல்லப் போகும் -காட்ட நினைக்கும் வெளி ஒன்றின் ஒரு பகுதியையும் காலத்தின் வெட்டுப்பட்ட துண்டையுமே எழுத்தாளர்கள் நம்மிடம் எழுதிக்காட்டுகிறார்கள்.

போர்க்காலமும் புலம்பெயர் வாழ்வும் -சந்திரா, மாலினி, தீபச்செல்வன், ப.தெய்வீகன்,தமிழ்க்கவி

இலங்கையிலிருந்து புலம் பெயர்ந்த எழுத்தாளர்களின் கதைகளில் போரின் நினைவுகள் குறைந்து, புலம்பெயர்ந்த தேசங்களில் அவர்கள் சந்திக்கும் நெருக்கடிகளை எழுதும் போக்கு அவ்வப்போது வெளிப்பட்டதுண்டு. இந்நகர்வுகள் வழியாக 2009 க்கு முந்திய போர்க்காலம் பற்றிய பார்வைகளும் விமரிசனங்களும் வாசிக்கக் கிடைக்கின்றன. இப்போதும் தொடரும் விடுதலைப்புலிகள் மற்றும் போர் ஆதரவுக்கருத்துகளும், போருக்கெதிரான மனநிலைகளும் அவற்றில் பதிவாகின்றன. அந்தவகையில் இப்போது எழுதப்பெறும் கதைகள் கவனத்துக்குரியன.

தொகை நூல்கள் தரும் வாசிப்பு அனுபவம்

படம்
இலங்கைத் தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பொன்று செய்யப் போகிறேன். அதற்கு நீங்கள் ஒரு முன்னுரை எழுதித்தர வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட உடனேயே ஒத்துக்கொண்டேன். ஏனென்றால் தனியொரு எழுத்தாளரின் கதைகள் அடங்கிய தொகுப்புகளை வாசிக்கும் வேகத்தைவிடப் பலரின் கதைகள் அடங்கிய தொகைநூலில் இடம்பெற்ற கதைகளை வாசிக்கும் விருப்பம் எப்போதும் உண்டு. அப்படியான தொகைநூல்களை வேகமாகவும் வாசித்துவிடுவேன். இப்போது காப்பு எனப் பொதுத் தலைப்பிட்டு ஈழவாணி தொகுத்துள்ள இப்பெருந்தொகுப்பை வாசித்த அனுபவத்தைத் தான் இங்கே முன்னுரையாக எழுதப் போகிறேன்.

எதிர்மறை விமரிசனத்தின் பின்விளைவு

அனோஜன் பாலகிருஷ்ணன் எழுதிய விமரிசனக்குறிப்பு ப.தெய்வீகனின்”உச்சம்” கதையை உடனடியாக வாசிக்க வைத்துவிட்டது.நீண்ட காலப் போரின் -புலம்பெயர் வாழ்வின் - உளவியல் நிலைப்பாடுகளை எழுதிப்பார்க்கும் தெய்வீகனின் இன்னொரு கதை என்ற அளவில் வாசிக்கத்தக்க கதை. புலம்பெயர் தேசங்களின் வாழ்முறை தரும் சுதந்திரத்தை - வாய்ப்புகளை - மரபான தமிழ்க்குடும்ப அமைப்புகளிலிருந்து விலகியவர்கள் சோதித்துப் பார்க்கும்போது இப்படியெல்லாம் நடந்துவிட வாய்ப்புகளுண்டு. இக்கதையின் எண்ணவோட்டங்களும் நிகழ்வுகளும் இந்தியச் சூழலில் - இலங்கையின் சூழலிலும்கூட அரியன. வெளியில் சொல்லப்படக்கூடாதன. 

சந்திக்கும் கணங்களின் அதிர்ச்சிகள் : புலப்பெயர்வு எழுத்துகளின் ஒரு நகர்வு

இரண்டு மாத இடைவெளிக்குள் இந்த ஆறு சிறுகதைகளும் வாசிக்கக் கிடைத்தன.புலம்பெயர்ந்த எழுத்து அல்லது அலைவுறு மனங்களின் வெளிப்பாடு என்னும் அடையாளத்துக்குள் நிறுத்தத்தக்க இந்த ஆறுகதைகளில் ஆகச்சிறந்த கதை எது எனத் தேர்வு செய்யும் நோக்கம் கொண்டதல்ல இந்தக் கட்டுரை. அதேநேரத்தில் அப்படியொரு தொனி வெளிப்படுவதைத் தவிர்க்கமுடியாது என்பதையும் முதலிலேயே சொல்லி விடலாம். ஆறுகதைகளில் மூன்று கதைகள், காலம் இதழின் 51 -வது இதழில் வாசிக்கக் கிடைத்த கதைகள். அடுத்த மூன்று. அம்ருதா இதழில் வாசிக்கக்கிடைத்த கதைகள். அவை:

27 யாழ்தேவி- குறிப்புகள் வழி அலைவுநிலை பேசும் கதைகள்

முன்  –  பின் என்ற எதிரும் புதிருமான சொற்கள் கலை இலக்கியச் சொல்லாடலில் விளக்கங்களைச் சொல்வதற்கும் ,  விளங்கிக்கொள்வதற்கும் பயன்படும் சொற்கள் .   தமிழ் இலக்கியப்பரப்பில் பாரதிக்குமுன்  –  பாரதிக்குப் பின் எனப்பேசுவதை நாம் கேட்டிருக்கிறோம் .  உலக இலக்கியத்தில்  காலனியம் அப்படியொரு எல்லையாக இருக்கிறது .  காலனித்துவத்தின் பிடியிலிருந்த நாடுகளும் காலனியாதிக்க நாடுகளும் தங்கள் தேசத்துப் பொருளாதார ,  அரசியல் ,  கருத்தியல் சிந்தனைகளை அந்தச் சொல்லை மையமாக்கி விளங்கிக் கொள்கின்றன .

வீடற்றவர்களின் கதைகள்

படம்
மனிதர்களின் அகவுலகம் என்பது எப்போதும் புனைவுகளால் கட்டமைக்கப்பட்ட உலகமாகவே இருக்கிறது . ஒருவரின் நேரடி அனுபவம் என்பதுகூட ஒருவிதத்தில் புனைவுதான் . நேரடி அனுபவம்போல எழுதப்பெற்ற புனைவுகள் நம்பத்தகுந்த புனைவுகளாக இருக்கின்றன என்று சொல்லலாமேயொழிய , அவையெல்லாம் உண்மை என்ற சொல் தரும் பொருளைத் தந்துவிடுவதில்லை . எல்லாவகை எழுத்துகளுமே , நம்மைத் தவிர்த்து இன்னொருவரைப் பார்க்கும்போதும் , அவர்களைப் பற்றிக் கேள்விப்படும்போதும் , நம்மிடத்தில் நிறுத்திப்பார்த்து அவராக நம்மை நினைத்துக்கொள்வதில் விரிகிறது புனைவு .

நிவேதா உதயன்: நினைவுகளில் அலைதல்

படம்
  புதியவர்களாக இருக்கும் நிலையில்  ஒரு நூலுக்கான   முன்னுரை   அவர்கள் இயங்க நினைக்கும் இலக்கியப்பரப்புக்குள் அறிமுகப்படுத்த நினைக்கவேண்டும் . ஏற்கெனவே இயங்குபவர்களாயின் அவர்களின் தனித்துவம் எதுவென அறிந்து வாசகர்களிடத்தில் விவாதிக்கத் தூண்டலாம் . நிவேதா உதயன் புதியவர் கவிதைக்கு. இது அவரது முதல் தொகுதி

ஈழம் : போரும் போருக்குப் பின்னும் - அண்மைப் புனைகதைகளை முன்வைத்து

படம்
இலக்கிய உருவாக்கத்தில் உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமான உறவுபற்றிய சொல்லாடல்கள் முடிவிலியாகத் தொடர்பவை. எழுதப்படும் நிகழ்வு ஒன்றே ஆயினும், வெளிப்பாட்டுத்தன்மையையும் எழுப்பும் விவாதங்கள் அல்லது விசாரணைகளையும் இலக்கியத்தின் வடிவமே தீர்மானிக்கிறது. அடிப்படை இலக்கிய வடிவங்களான கவிதை, நாடகம், கதைகள் என்ற மூன்றிலும் எல்லாவற்றையும் எழுதிக் காட்டமுடியும் என்றாலும், வெளிப்படும்போது வேறுபாடுகள் தவிர்க்க முடியாதவைகளாக இருக்கின்றன. என்றாலும் ஒவ்வொரு வடிவத்திற்கும் பொருத்தமான சம்பவங்களும் சொல்முறையும் இருக்கவே செய்கின்றன. இலக்கியப் பிரதிகள் அடிப்படையில் மனிதர்களின் உணர்வுகளையும், உறவுகளையும் பதிவுசெய்யும் வெளிப்பாட்டு வடிவங்கள். உணர்வுகளும்சரி, உறவுகளும்சரி மனிதர்களுக்கிடையேயானதாகவும், மனிதர்களுக்கும் இயற்கைக்கு மிடையேயானதாகதாகவும் இருக்கின்றன. 

தமிழினி:ஈழப்போரின் சாட்சியாகவும் மனச்சாட்சியாகவும்

படம்
இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களின் எந்த எழுத்தையும் உடனடியாக வாசிக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை நான் உருவாக்கிக் கொண்டதில்லை . ஆவலுடன் காத்திருந்து வந்தவுடன் வாசித்த இளம்பிராயத்து ஆவலைக் கடந்தாகிவிட்டது.  இப்போது அச்சில் வரும் எழுத்துகளை வரிசைகட்டி நிறுத்தி வாசிக்கும் நிதானம். ஆனால் தமிழினியின் ஒருகூர்வாளின் நிழலில் அந்த வரிசையைத் தள்ளிவிட்டு முன்வந்து வாசிக்கும் நெருக்கடியைக் கொடுத்த பிரதியென்பதைச் சொல்லியாகவேண்டும்.எனக்கும் தமிழினிக்குமான உறவுதான் இந்த வரிசையுடைப்பிற்குக் காரணம்.

தொடரும் இலங்கைத் தமிழர் போராட்டம் : இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள்

படம்
செல்வா கனகநாயகம் தொகுத்துள்ள இத்தொகுப்பிற்கு அவர் வைத்துள்ள பெயர்   வேரோடு பிடிங்கப்பெற்ற பூசணிக்கொடி( Uprooting the Pumpkin -Selections from Tamil Literature in Sri Lanka edited Chelva Kanaganayakam Oxford University Press). இத்தொகுப்பில் அரைநூற்றாண்டுக்கால இலங்கைத்தமிழ் இலக்கியத்தின் கவனிக்கத்தக்க பதிவுகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆக்ஸ்போர்டு யுனிவர்சிற்றி பிரஸின் வெளியீடான இத்தொகுப்பு உலகமனச்சாட்சியை நோக்கிப்பேசும் தன்மைகொண்ட தொகுப்பு. தொகுப்பாசிரியர் வைத்த ஆங்கிலச் சொற்களை நேர்பொருளில் அப்படியே மொழிபெயர்த்து ஏற்றுக்கொள்ள என் மனம் விரும்பவில்லை. ஏனென்றால் சூழல் தந்துள்ள அர்த்தம் வேறொன்றாக இருக்கிறது.

மரத்தில் மறையும் யானை:அ.முத்துலிங்கத்தின் சிப்பாயும் போராளியும்

படம்
ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான்.

தமிழினி: போராட்டக்களத்திலிருந்து எழுத்துக்களத்திற்கு நகர்ந்த பயணம்.

படம்
ஒன்றிரண்டு தடவையே அவர் குரலைக் கேட்டதுண்டு. அவரது முகம் நிழற் படங்களாகப் பார்க்கக் கிடைத்தது இந்த ஜனவரி முதல் தான். முகத்தைக் காட்டியபோதுதான் தனது பெயர் தமிழினி ஜெயக்குமரன் என்றும் தானொரு ஈழப் போராளி என்றும் சொன்னார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் முகநூல்-வழியாகப் பல தடவை உரையாடியிருக்கிறோம். உரையாடல் ஆரம்பித்தால் ஒருமணிநேரத்துக்குமேல் போகாது.  

போரும் போரின் நிமித்தமும் : அனுபவங்களைச் சொல்லுதல்

எதுவரை இணைய இதழில் (http://eathuvarai.net/?p=4796) வந்துள்ள வைகறைக் கனவு  கதையை எழுதிய தமிழினி ஜெயக்குமாரன் என்ற பெயரை இணையத்தில் தான் பார்த்திருக்கிறேன். தமிழின் அச்சிதழ்களிலோ, தொகுப்புகளிலோ அவர் எழுதிய கதைகள் எதையும் வாசித்ததில்லை. கதையை வாசித்து முடித்தபின் கதை எனக்குள் எழுப்பிய வினாக்கள் பலவிதமானவை.

வாழ்தலின்விருப்பந்தேங்கிய சாவின் நெருக்கம்: ராகவனின் இரண்டு கதைகள்

படம்
நடந்ததை எழுதுவது நடப்பியல் வாதமா? இயற்பண்பியல்வாதமா? என்ற விவாதங்கள் இன்னும் தொடர்கின்றன. தமிழில் நடப்பியல்வாதத்திற்குப் பலரை எடுத்துக்காட்ட முடியும். ஆனால் இயற்பண்பியல்வாதத்திற்கு ஒன்றிரண்டு பேரைத் தான் சொல்லமுடியும். நகரம் சார்ந்த எழுத்தில் அசோகமித்திரனின் கதைகளைச் சொல்லலாமென்றால், கிராமம்சார்ந்து பூமணியின் தொடக்ககாலச் சிறுகதைகளை எடுத்துக்காட்டலாம். அவர்களிருவரும் விவரிக்கும் விவரிப்புமுறையில் பிசகின்றி ஒவ்வொன்றையும் அடுக்கிக் கொண்டே போவார்கள்.

குற்றவியலின் தர்க்கங்கள்-ஆப்பே கடையில் நடந்த 236 ஆவது மேசை உரையாடல்

படம்
ஒரு கவிதையை வாசிப்பதற்கும் நாடகத்தை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடுகள் இருப்பதுபோலப் புனைகதையை வாசிப்பதற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கவே செய்கிறது. புனைகதைகளுக்குள்ளும்  சிறுகதை வாசிப்பும் நாவல் வாசிப்பும் வேறுபட்டது.

புலம் பெயர்ந்தோர் இலக்கியம்

இலங்கைத் தமிழர்களின் இருபத்தைந்தாண்டுக் காலப் போராட்டத்தை, வரலாற்றின் பக்கங்களில் எவ்வாறு எழுதுவீர்கள்? என ஒரு வரலாற்று ஆசிரியரிடம் கேட்டுப் பாருங்கள். உடனடியாக எந்தப் பதிலையும் அவர் சொல்லி விட மாட்டார். காரணம் ஈழத்தமிழர்களின் கனவான ஈழத்தனிநாடு கிடைக்குமா அல்லது கிடைக்காதா என்ற முடிவு தெரியாமல் வரலாற்றை எப்படி எழுதுவது என்ற குழப்பம் தான். எந்த ஒரு நிகழ்வையும் வெற்றி- தோல்வியைக் கொண்டே முடிவு செய்யும் அடிப்படைப் பார்வை கொண்டது வரலாறு. அதனால் அது நிகழ்காலத்தைப் பற்றிய கருத்துரைப்பை எப்போதும் தள்ளிப் போடவே செய்கிறது.