தமிழ் ஆர்வலன் அல்ல.

 இந்த விவாதம் ஒரு முகநூல் பின்னூட்ட விவாதம் தான். ஆனால் அதனைப் பலரும் விரும்பியிருந்தார்கள். இதனைச் சமூக ஆர்வலர், சினிமா ஆர்வலர், கலை ஆர்வலர் என ஒருவருக்கான அடையாளமாகச் சொல்லும்போதும் கவனிக்கவேண்டிய எச்சரிக்கை என்றே நினைக்கிறேன். இனி விவாதத்திற்குள் செல்லலாம

தமிழில் வழிபாடு (அர்ச்சனையோ, பூஜையோ அல்ல)

*****
தமிழில் அர்ச்சனை என்ற திட்டத்தை நீங்கள் வரவேற்கிறீர்களா? ஒரு தமிழ் ஆர்வலராக உங்கள் பதில் என்ன?
- தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றின் செய்தி சேகரிப்பாளர் தொலைபேசியில் கேட்டார்.
******
இந்தக் கேள்வியைத் தொடர்ச்சியாகக் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்பவர்களிடம் கேட்பதே சரியானது. நான் அதிகமும் கோவிலுக்குப் போகிறவனில்லை. போனாலும் வழிபாடுகள் நடத்துவதும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன், தமிழ்நாட்டுக் கோயில்களில் இருக்கும் கடவுளர்களின் பெயர்கள் மாரியம்மன், காளியம்மன், இசக்கி, முப்பிடாதி, பேச்சி, மீனாட்சி, கோமதி, பார்வதி, காமாட்சி, திருமகள், நாச்சியாள், அங்கையற்கண்ணி, ரங்கநாயகி வள்ளி, தெய்வானை எனத் தமிழ் இலக்கணம் சொல்லும் பெண்பால் ஈற்றில் அமைந்த பெயர்களாகவே இருக்கின்றன. ஆண் தெய்வங்களின் பெயர்களும் முருகன், மாடன், காடன், கழுவன், சிவன், நடராசன், அரங்கன், அழகன்,வேலன் என்று ஆண்பாலீறு கொண்ட பெயர்கள் தான். அந்தப் பெயர்களைச் சொல்லி வழிபாடு செய்யத் தமிழ்மொழியைப் பயன்படுத்தாமல் இன்னொரு மொழியைப் பயன்படுத்திய வரலாற்றை மாற்ற நினைப்பதைச் சரியா? என்று கேள்வி கேட்பதே தவறல்லவா? நடந்த தவறுகளைத் திருத்துவது எப்படித் தவறாகும்?.
இந்த முயற்சி எடுக்கும் தமிழ்நாட்டரசு பொதுவாகத் தமிழில் மட்டுமே வழிபாடு நடக்கும் என்பதை உறுதி செய்ய வேண்டும். பெரும்பான்மை மக்களின் மொழியிலேயே பெரும்பாலான நேரத்தில் வழிபாடு நடக்கவேண்டும்.
இன்னொரு மொழியில் சம்ஸ்க்ருதம் அல்லது ஆங்கிலம் போன்ற மொழிகளில் வழிபாடு நடத்த வேண்டும் என்றால் சிறப்புக் கட்டணம் செலுத்தி, அதற்கென இருக்கும் நபர்களை அழைத்து அர்ச்சனை அல்லது பூஜை நடத்த ஏற்பாடு செய்யலாம். அதற்கெனத் தனி நேரத்தை ஒதுக்கித் தரலாம். இது தமிழ்நாட்டின் ஏற்புப்பண்பாட்டு அடையாளமாக இருக்கவேண்டும்.
***********
நீங்கள் என்னைத் தமிழ் ஆர்வலர் எனச் சொன்னதைத் திரும்பப்பெற்றுக் கொள்ளவேண்டும். அப்படி அழைக்கப்படுவது மதிப்பிற்குரியதல்ல; மதிப்பழிப்பு.
***************
எனது கருத்து அந்தத் தொலைக்காட்சியில் சொல்லப்பட்டிருக்க வாய்ப்பில்லை

  • Kamalakannan Srinivasan
    தெளிவான , தெளிவுபடுத்தும் கருத்து.ஆணால் தமிழ்ஆர்வலர் என்பது மதிப்பிழப்பு? புரியவில்லை.
    1
    • Like
    • Reply
    • 1d
    • அ. ராமசாமி
      Kamalakannan Srinivasan பிறந்ததிலிருந்து தமிழ்பேசி, தமிழில் படித்து, தமிழைப் பணியிட மொழியாகக் கொண்டிருப்பவரைத் தமிழார்வலர் எனச் சொல்லக்கூடாது என்றே நினைக்கிறேன். இன்னொரு மொழிச்சூழலில் தமிழைப் பயன்படுத்தும் - தமிழுக்காகப் பேசும் ஒருவர் என்றால் தமிழ் ஆர்வலர் என்று சொல்லலாம்.
      27
      •  
  • Kamalakannan Srinivasan
    அ. ராமசாமி உண்மை.மதிப்பிழப்பு என்ற சொல் சற்று குழப்பம் தந்தது.நன்றி.
    • Like
    • Reply
    • 1d
  • Gnanavel Vel
    அ. ராமசாமி அருமை அய்யா.. தெளிந்தேன்
    1
    • Like
    • Reply
    • 1d
  • Davis Raj
    அ. ராமசாமி சரியான கருத்து அய்யா.
    2
    • Like
    • Reply
    • 1d
  • Muthuramalingam Lakshmanan
    அ. ராமசாமி மிகச்சரியான விளக்கம். தாயின் மீது அன்பானவர்னு சொல்லலாமா...அது தானே இயற்கை.
    3
    • Like
    • Reply
    • 1d
    • Edited
  • Shanmuga Sundaram
    அ. ராமசாமி மிகச் சரியான..
    பதமான பதில்.
    பாராட்டுக்கள்.
    • Muthuramalingam Lakshmanan
      வாழ்த்துகள்
      . உண்மைலயே எனக்கு உங்க இந்தப்பதிவு ஒரு தெளிவு தந்தது. நன்றியும் வாழ்த்தும்.
      2
      • Like
      • Reply
      • 1d
  • Haja Mohideen
    சரியாத்தானே சொல்லி இருக்கீங்க...
    •   
    • Like
    • Reply
    • 1d
  • Kulashekar T
    நேர்த்தி..
    தவறுகள் திருத்தப்படுதலும்
    தோண்டிய பள்ளங்கள்
    சமன் படுதலும்
    இயற்கையின் நியதி
    1
    •  
  • போகாத ஆளாம்..போனாலும் வழிபடாத ஆ ளாம்...ஆனால் பெரும்பான்மை மக்கள் மொழியில் மட்டுமே அர்ச்சனை செய்ய கட்டுப்பாடு விதிப்பாராம்..கட்டணம் கட்டி சிவனுக்கு ஆங்கிலத்தில் கூட வழிபாடு செய்து கொள்ள லாமாம்..
    இப்போதும் சீட்டு எடுத்தும் உண்டியலில் போட்டும் தட்டிலிட்டும் சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்ய சொல்கிறார்கள்..
    • Like
    • Reply
    • 1d
    • அ. ராமசாமி
      Sundaramoorthy Olaganathan கடவுள் நம்பிக்கை இல்லாத அரசாங்கம், அறநிலையத் துறையைக் கவனிக்கக் கூடாது என்ற வாதம் தானே இது.
      • அப்படி சொன்னாலும் தவறு ஒன்றும் இல்லை...கோயிலின் நம்பிக்கை சார்ந்த உள்துறை மரபு விவகாரங்களில் மூக்கை நுழைப்பது
        சொத்து பாதுகாப்பு கோயில் நிர்வாகம் போன்றவற்றை சட்டம் சொன்னபடி அறங்காவலர் குழு மூலம்
        நிர்வாகம் செய்யாமல் ஒரு செகுலார் அரசின் அலுவலர்கள் மூலம் நேரடியாக தான்தோன்றி தனமாக செயல்படுத்துவது..அந்தந்த பாரம்பரிய மதபீட தலைவர்கள் மரபு வழி குரு சிஷ்ய வழிமுறையில் தேர்ந்தெடுக் காமல் விண்ணப்பம் கோரி அவர்கள் தகுதியை சாஸ்திர அறிவோ மரபு நடத்தையோ இல்லாத துறை அலுவலர்கள் கொண்டு தீர்மானிப்பது இன்னும் பிறவற்றை காணும் போது இந்த வாதம் சரிதான்...
        •  
  • அ. ராமசாமி
    துறை அலுவலராகும்போது அந்நடைமுறை அறிவை உருவாக்கிக் கொள்ளலாம். பல்கலைக்கழகத்துறை ஆசிரியருக்கான அறிவை உருவாக்குவதுபோலக் கோயில் நடைமுறை அறிவு உருவாக்க முடியாத வித்தை ஒன்றும் இல்லையே.
  • எதுவும் சாத்தியமே..விந்தை ஒன்றும் இல்லாதான்...ஆனால் ஆன்மீக விஷயங்களில் அரசியலும் அரசும் தலையிடலாம் எனில், அரசிலும் அரசியலிலும் மதம் தலையிடலையும் ஏற்றுதான் ஆகவேண்டும்...எல்லாவற்றிலும் பெரும்பான்மை பேசுவதுபோல் மதமுக்கியத்துவத்திலும் பெரும்பான… 
    See More
    •  
  • அ. ராமசாமி
    Sundaramoorthy Olaganathan மதங்கள் தலையிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. அரசுகளும் தலையிட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. தலையிடவில்லை எனச் சொல்வது பொய். தலையிட்டுக்கொண்டே தலையிடவில்லை எனச் சொன்னால் அது ஏமாற்று.
    • Like
    • Reply
    • 5h
  • Sundaramoorthy Olaganathan
    அப்படியா..எனில் அதை உரத்து கூறியே இனி அவரவர் அடையாள பூச்சூடி அவரவர் அணிகளில் போராடுவோம்... கவர்ந்த நிரைகளை மீட்போம்...
    •  
  • Christella Rose
    தமிழில் அர்ச்சனை செய்வது தவறில்லை. இருந்தும் வழிபடுபவர்கள் இதனை ஒரு பிரச்சனையாக முன்வைக்கிறார்களா? முஸ்லிம்கள் அவர்களது வழிபாட்டுத்தலங்களில் உறுது மொழியில் வழிபாடு நடத்துகிறார்கள். பெந்தகோஸ்து சபையினர் உச்சபட்ச வழிபாட்டில் வேற்று மொழியிலேயே வழிபடுகின்ற… 
    See More
    2
    • Like
    • Reply
    • 1d
  • அ. ராமசாமி
    Christella Rose கடவுள்கள் அந்த மொழிப்பெயரைக் கொண்டவர்கள்: மறைநூல்கள் அந்த மொழியில் இருக்கின்றன: அங்கிருந்து வந்தவர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. நான் சொல்லும் கடவுள்கள் தமிழ்மொழியில் உருவான கடவுள்கள். அவர்களை வணங்குவதற்கு எழுதப்பட்ட பாக்கள் தமிழில் இருக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல், தேவைக்கேற்பப் புதிதாக எழுதிக்கொள்ளாமல் இன்னொரு மொழியைப் பயன்படுத்துவேன் என்பதற்கு ஒரு காரணம் சொல்லுங்களேன்
    2
  • Venkatraman Raghupathi
    எல்லா சிவா வைஷ்ணவா கோயில்களிலும் உள்ள பெருந் தெய்வங்களும் தமிழ் ப் பெயரோடு தான் அமைந்துள்ளன. சன்னதி க்கு வெளியே அப்பெயர்கள் உள்ள அறிவிப்பு காணலாம்
    •  
    • அ. ராமசாமி
      Venkatraman Raghupathi சிவா, வைஷ்ணவா கோயில்கள் அல்ல. சிவன், அரங்கன் கோயில்கள். தமிழ் ஆண் பெயர்கள் - ஆ என்ற ஒலிக்குறிப்புடன் முடியாது. அப்படிச் சொல்ல நினைத்தால் நீங்கள் சம்ஸ்க்ருத மரபைப் பேணுகிறீர்கள் என்பது பொருள்
      •  
  • பத்ம. சிவ அசோகன்
    ஐயா நாடு+ அரசு=நாட்டரசு, நாடரசு எது சரி என்ற விவாதம் அறிஞர் அண்ணா காலத்தில் எழுந்ததாகவும் பன்மொழிப் புலவர் அப்பாதுரை நாடரசு என்று வழங்கலாம் என்று சொல்லி விவாதத்தை முடித்து வைத்தார் என்று படித்திருக்கிறேன். தாங்கள் நாட்டரசு என்று பயன்படுத்துவதற்குக் காரணம் என்ன?
    • Like
    • Reply
    • 22h
  • Lalitha A
    அருமை
    1
    •  
  • கருத்துகள்

    இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

    ராகுல் காந்தி என்னும் நிகழ்த்துக்கலைஞர்

    நவீனத்துவமும் பாரதியும்

    தணிக்கைத்துறை அரசியல்