இடுகைகள்

கற்றது தமிழ் : ஒரு விவாதம்

படம்
அபிலாஷ்: ========= அ.ராமசாமி “கற்றது தமிழ்” பற்றி ஒரு மீள்பதிவு போட்டிருக்கிறார். அதில் தமிழ் படித்ததினால் ஒருவன் கொலைகாரனாய் மாறுவதாய் வருவதாய் கூறி குழப்புகிறார். உதாரணமாய் //அப்படிச் சொல்வதன் மூலம் அவன் செய்த தான்தோன்றித் தனமான வாழ்க்கைப் பயணங்களுக்கும் பொறுப்புணர்வற்ற முடிவுகளுக்கும் தமிழ்க் கல்வி தான் காரணமோ என நினைக்கும்படி படத்தின் கதை அமைப்பும் கட்டமைப்பும் உருவாக்கப் பட்டுள்ளது. // ஆனால் இது தவறான புரிதல். நகரமும் அந்நியமாதலும் தான் அவனை கொலைகாரனாக்குகிறது. இதை அவர் கவனிக்கவில்லை. காம்யுவின் தாக்கம் இப்படத்தில் உண்டு. படத்தை இன்னும் சரியாக கவனித்து - குறிப்பாய் ஐரோப்பிய தத்துவ பின்னணியில் - அவர் எழுத வேண்டும். இது தமிழ் கற்பது பற்றின சினிமா அல்ல. அது படத்தின் புரொமோஷனுக்கான ஒரு தந்திரம். படத்தில் தமிழ் தேசியவாதமும் ஆழமாய் இல்லை. இது அந்நியமாதலுக்கும் நகர்மய வன்மத்துக்கான உறவை பேசுகிற படம்.

மூன்று அசல் கதைகளும் ஆறு மொழி பெயர்ப்புக் கதைகளும்

அளவில் பெரியதாக மாறி வரத் தொடங்கிய தலித் இதழின் அடுத்தடுத்த இதழில் இமையத்தின் இரண்டு கதைகள் வந்துள்ளன. பசிக்குப்பின்.. மாடுகள்.. இரண்டு கதைகளும் வெவ்வேறு வெளிகளில், வெவ்வேறு வயது மனிதர்களை உலவ விட்டுள்ள கதைகள். பசிக்குப்பின் கதையின் உலகம் ஒரு சிறுவனின் ஒரு நேரத்து உணவு சார்ந்த உலகம்.. தானியத்தைக் குத்தி அதிலிருந்து கிடைக்கும் தவிட்டைத் தின்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு சிறுவனின் மனசைத் திசை திருப்பி விடும் ‘ஐஸ் வண்டி’ ஏற்படுத்தும் சலனத்தை விரிவாகப் பதிவு செய்கிறார். ஒரு சிறுகதைக்கு அதுவே கூடப் போதுமானதுதான்.

தொலைந்து கொண்டிருப்பவர்களைப் பற்றிய கதைகள்

படம்
            சுஜாதாவை நினைவுகூரும் விதமாக உயிர்மை பதிப்பகம் சுஜாதா அறக்கட்டளையுடன் இணைந்து ஒவ்வொரு வருடமும் நவீன இலக்கியப் போக்குகளை அடையாளப்படுத்தும் படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிக் கொண்டிருக்கிறது. 2014 இல் அதன் ஆறாவது ஆண்டு நிகழ்வில் சிறுகதைக்கான விருதைப் பெற்றுள்ளது என் ஸ்ரீராமின் மீதமிருக்கும் வாழ்வு என்ற சிறுகதைத் தொகுப்பு. கதைகள் எழுதப் பெற்ற முறையிலும் சரி, அளவிலும் சரி ஒரு சிறுகதைத் தொகுப்பின் வரையறைகளைத் தவிர்த்துள்ள தொகுப்பு இது.

திரள் மக்கள் பண்பாடு: வெகுமக்கள் சினிமா

படம்
திரைப்படங்களைத் திறனாய்வு செய்தலின் பிரச்சினைகள் தமிழக அரசுக்கு அதிகமாக வரி கட்டுகிற துறை திரைப்படத் துறையே.எனவே , அரசு அதற்கான சலுகைகளை வழங்கிட வேண்டும் என ப் பெருங்குரலில் கோருகின்றனர். திரைப்படத் தயாரிப்புக்கு ஆகும் செலவைக் கட்டுப்படுத்தாவிட்டால் அந்தக் கலையை யாராலும் காப்பாற்றமுடியாது. இது இன்னொரு கூட்டத்தின் குரல். திருட்டு விசிடி-க்களின் அச்சுறுத்தல்களினால் காணாமல் போய்க் கொண்டிருக்கிறது திரைப்பட உலகம். இது மற்றொரு கூட்டத்தின் குரல் இந்தக் குரல்களோடு சேர்ந்து சினிமாவைப்பார்க்கலாமா ? ரசிக்கலாமா.. ?

சாபமாகிவிடும் வரம்

நாடகப் பிரதியின் பகுதிகளை அல்லது கூறுகளைப் பற்றிப் பேசும் விமரிசகர்கள் இருவேறு தொகுதிகளைக் கூறி விளக்குகின்றனர்.

கிராமங்களூடாகச் சில பயணங்கள்

படம்
போலந்தில் நானி ரு ந்த   இரண்டாண்டுக் காலத்தில் ஐரோப்பிய நகரங்களைப் பார்க்க வேண்டும் என நினைத்ததை விடக் கிராமங்களைப் பார்க்கவே அதிகம் விரும்பினேன்; நினைத்தேன். நகரங்கள் பலவற்றிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தைச் செயல்படுத்துவதில் அக்கறை கொண்டதைவிடக் கிராமங்கள் சிலவற்றைப் பார்க்க வேண்டும்; அங்கே சில நாட்கள் தங்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தது. போலந்தின் குறுக்கும் நெடுக்குமாக நான் மேற்கொண்ட கார்ப்பயணங்கள் அந்த ஆசையை மேலும் மேலும் அதிகமாக்கின

மனிதநேயமும் நடப்பியல் வாதமும் :

மனிதநேயம் (Humanism) என்பது அடிப்படையில் தனிமனிதனின் கௌரவம் மற்றும் பெருமதியைக் குறித்த ஒரு தத்துவப் பார்வை. அதன் அடிப்படைக்கூறு , மனிதர்களுக்குள் செயல்படும் அறிவார்ந்த தன்மையையும் நல்லனவற்றிற்கும் உண்மைக்கும் பொறுப்பாக இருக்கும் குணங்களையும் கண்டறிந்து சொல்லுவது. இதன் தொடக்கம் 15 ஆம் நூற்றாண்டு .

கற்பித்தல் என்னும் அலைக்கழிப்பு

படம்
மொழி எழுத்தில் வாழ்கிறதா? பேச்சில் வாழ்கிறதா? எனக் கேட்டால் மொழியியலாளர்கள் பேச்சு மொழிதான் ஒரு மொழியை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. பேச்சு மொழி இல்லாமல் எழுத்து மொழியாக மட்டும் ஒரு மொழி நீண்டகாலம் உயிருடன் இருக்க முடியாது என்கிறார்கள். ஆனால் நமது அரசுகளும் அதற்கு ஆலோசனை சொல்லும் அறிஞர்களும் பேச்சு மொழியைப் பற்றிக் கவலைப்படாமல் எழுத்து மொழியில் சிதைவு ஏற்படக் கூடாது எனக் கவனத்தோடு உத்தரவுகளைப் பிறப்பிக்கிறார்கள். 

பெரிய கள்ளும் சிறிய கள்ளும்

படம்
வார்சா பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகச் சேர்ந்த முதல் வாரத்தில் மாணவிகள் அளித்த விருந்தைச் சிறுவிருந்து எனக் குறித்து வைத்த நான், டேனுடா ஸ்டாசிக்கின் வீட்டில் நடந்த விருந்தைப் பெருவிருந்து என நாட்குறிப்பில் குறித்து வைத்துள்ளேன். காலத்தைக் காரணமாக்கிப் பெயர் சூட்டாத தமிழர்கள் இப்படித் தான் சொல்வோம். ஆனால் ஐரோப்பியர்களின் பெயரிடல் காலத்தைக் கவனத்தில் கொள்வது. அதனால் பெருவிருந்தை நீண்ட விருந்து ( Long Feast) எனச் சொல்வார்கள். ஔவையின் ”சிறிய கள்ளையும் பெரிய கள்ளையும்” ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்க முடியாமல் தவிப்பது ஏனென்று புரிந்து கொள்ளலாம். எழுதியிருந்தால், போலந்தில் இருந்த காலத்தில் பல்வேறு வகையான விருந்துகளில் பங்கேற்றேன் என்றாலும் இவ்விரண்டும் அடையாள விருந்துகளாக நினைவில் நிற்கின்றன.  

கதைகளாக மாறும் கவிதைக் கணங்கள்:ரவிக்குமாரின் கடல்கிணறு தொகுப்புக்கான முன்னுரை

படம்
நம்பிக்கைகள், மூட நம்பிக்கைகள், கற்பிதங்கள் என்ற சொற்களுக்கிடையிலான வேறுபாடுகளை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? திரும்பத் திரும்ப யோசித்துப் பார்த்தால் வேறுபாடுகள் எதுவும் இல்லையோ என்று தோன்றும். எனக்குத் தோன்றியுள்ளது. வேறுபாடுகள் எதுவும் இல்லை என்றால் தமிழ் மொழியில் ஏன் இந்த மூன்று சொற்களும் உருவாக்கப்பட்டன என்ற கேள்வியும் எழுந்து கொண்டே இருக்கிறது.

தடைகளும் விடைகளும்

படம்
இந்தச் செய்தியைத் தினமணி நாளிதழின் திருநெல்வேலி பதிப்பில் (20,மார்ச், 2014) நான் வாசித்தேன்; நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள். சாகித்ய அகாதெமி விருதுபெற்ற கொற்கை நாவலில், பரதவ குல சமூகத்தினரை பற்றி இழிவான கருத்துகள் இடம் பெற்றுள்ளதாகக் கூறி, அந்த நாவலுக்குத் தடை விதிக்கக் கோரி, தூத்துக்குடி நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.   இதனையொத்த இன்னொரு செய்தியை ஒரு மாதத்திற்கு முன்பு நாளிதழ் ஒன்றில் வாசித்தேன்: நீங்களும் கூட வாசித்திருப்பீர்கள்.

பெண்ணியம்: இமையம் கிளப்பிய சர்ச்சை

இந்தக் கட்டுரையை வாசித்துவிட்டுப் போயிருந்தால் இவ்வளவு சர்ச்சைகளும் பேச்சுகளும் உண்டாகியிருக்காது என்றே நினைக்கிறேன். முதலில் கட்டுரை அப்புறம் சர்ச்சைகளும் விளக்கங்களும்

பெண்ணியம்: கருத்தரங்க நிகழ்வு

படம்
“ பெண்ணியம்: எழுத்துகள் வாசிப்புகள் சொல்லாடல்கள் என்றஇரண்டு  நாள் பயிலரங்கின்    படத்தொகுப்பு. 

ஒரு கருத்தரங்கமும் பின் விளைவுகளும்

படம்
கல்வி நிறுவனங்களின் நிதியாண்டு முடிவு மார்ச் 31. அதற்குள் ஒதுக்கப்பெற்ற நிதியைக் கொண்டு கருத்தரங்கம், பயிலரங்கம், சொற்பொழிவுகள் என நடத்திக் காட்ட வேண்டும். அதன் பயன்பாடு மாணாக்கர்களுக்குப் போய்ச் சேர வேண்டும் என நினைப்பதைவிட நடத்தி முடிக்க வேண்டும்; நண்பர்களை அழைத்துவிட வேண்டும் என்ற ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்பதே பொதுப்போக்கு. அதிலிருந்து விலகிச் செல்லும் நபர்களும் உண்டு. கடந்த இரண்டு மாதமாக நான்கு பல்கலைக்கழகங்கள், ஆறு கல்லூரிகளுக்குச் சொற்பொழிவாற்றவும் கட்டுரை வாசிக்கவும் சென்றிருக்கிறேன். இன்னும் சில கல்லூரிகளுக்கும், பல்கலைக் கழகங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. அதற்கிடையில் எங்கள் பல்கலைக் கழகத்திலும் நிகழ்வுகளை ஒருங்கிணைத்துக் காட்ட வேண்டியதும் அவசியம்.

நள்ளிரவு ரயில் பயணங்கள்

படம்
கோவையிலிருந்து திருப்பத்தூருக்கு நேரடியாகப் போய்ச் சேர வேண்டும் என நினைத்து கோவை போத்தனூர் ரயில் நிலையத்தில் காத்திருந்தேன். ரயில் இரவு 09.50 -க்குத் தான். போத்தனூர் ரயில் நிலையக் கொசுக்களோடு நடத்திய யுத்தத்தில் சிந்திய ரத்தத்தை விடச் சோகமானதாக ஆகி விட்டது அந்தப் பயணம்.

ஜெயமோகனின் வெண்முரசு வாசிக்கத் தொடங்கியுள்ளேன்:

ஆன்மா தொலையாத அந்தக் காலத்தில் எனது கிராமத்தில் நள்ளிரவு வரை கதை சொல்லிகள் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். விசேசமான,விதம் விதமான கதை சொல்லிகள் எல்லாம் உண்டு. ஒரு சுவாரசியமான கதை சொல்லி இருந்தார். அவர் பெயரும் ராமசாமி தான்.