சாதிமத பேதமின்றி- ஏழை பணக்காரர் என்ற வேறுபாடின்றி, ஆண் -பெண் பாகுபாடின்றி அவரது இசையை அள்ளிக்கொள்ளும் மனங்கள் நிரம்பியது தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்கள் மட்டுமின்றி உலகெங்கும் உள்ள தமிழர்கள் கொண்டாடும் ஒரு பிம்பம் இளையராஜா. அவரது திரையிசைக்காகவும் பக்திப்பாடல்களுக்காகவும் தனி ஆல்பங்களுக்காகவும் எனக் கொண்டாடும் மனிதர்கள் அவரது மேடைப்பேச்சு, பொதுவெளிக் கருத்துகள், கருத்தியல் சார்புகள் எனப் பலவற்றிற்காக எதிர்நிலையாகவும் நினைக்கின்றார்கள்.