இடுகைகள்

சிறை: காவல்துறை சினிமாவின் வகைமாதிரி.

படம்
இந்திய சினிமாக்களைத் தொகுத்துத் தரும் இணையச் செயலி ஒன்றின் வழியாகச் சிறை படத்தைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பார்ப்பதற்கு முன்பே அந்தப் படத்தைக் குறித்த தகவல்கள் பரவியிருந்த நிலையில் எதிர்பார்ப்புகள் எதுவும் இருக்கவில்லை. அதேநேரம் டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இந்தப் படத்திலும் தனது பங்களிப்பைச் செய்துள்ளார் என்ற தகவல் ஒன்றை உறுதி செய்தது என்பதும் உண்மை.

குடும்பச் சுமைகள்

படம்
பாரிஸ் சார்லஸ் டெ கௌல்லெ விமான நிலையத்தின் 42 ஆவது வாசலைக் கண்டு பிடித்து நின்றேன். சுருள்முடிகள் முன்னும்பின்னும் அசைய நின்றிருந்த பெண்ணின் சிரிப்பு “ஏதாவது தகவல் தேவையா?” என்று கேட்பதுபோல இருந்தது. தயக்கமில்லாமல் அருகில் சென்று டல்லாஸ் நகருக்குச் செல்லும் விமானத்திற்கான வாசல் இதுதானே? என்று கேட்டேன்.

பறக்குங்காலை...

படம்
இரண்டாவது பயணத்தில் பாரிஸ் ஏர்வேஸில் கோவையிலிருந்து கிளம்புவதாகத் திட்டம். கோவை -பெங்களூர்; பெங்களூர் -பாரிஸ்; பாரிஸ் - டல்லஸ் என இரண்டு இடங்களில் இணைப்பு விமானம் பிடிக்கும் விதமாகப் பயணச்சீட்டு பெற்றிருந்தோம். பெங்களூரில் மூன்றரை மணி நேரம் இருக்கும் விதமாக விமானம் கிளம்புவதாக இருந்தது. அதனால் பெங்களூர் விமான நிலையத்தில் நண்பர் ஒருவரைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். ஆனால் கடைசி நேரக் குழப்பத்தைப் பாரிஸ் ஏர்வேஸ் உருவாக்கிவிட்டது.

நுழைவும் இருப்பும்- அயல் பயணத்திற்கான முன் தேவைகள், புரிதல்கள்

படம்
எந்தவொரு நாட்டுக்கும் செல்ல முதலில் தேவை அந்த நாட்டுத் தூதரகம் மூலம் பெற்றுக் கொள்ளும் குடிநுழைவு அனுமதி (Visa) தான். அதற்கு முன்தேவையாக நமது நாட்டரசு வழங்கும் கடவுச்சீட்டு (PASS-PORT)இருக்கவேண்டும். இந்திய அரசு வழங்கும் கடவுச்சீட்டு ஒருவருக்கு இந்தியக்குடி என்பதற்கான ஆதாரம். அதில் இடம்பெறும் முகவரி, பிறந்தநாள், பெற்றோர் விவரம் போன்றன சோதிக்கப்பட்ட பின்பே வழங்கப்படுகிறது. முதல் வெளிநாட்டுப் பயணம் 2011 நான் பாஸ்போர்ட் பெற்ற ஆண்டு 2005. தான் என்றாலும் மனைவிக்கு 2007 விண்ணப்பித்துப் பெற்றோம். இரண்டுமே 10 ஆண்டுகளுக்குச் செல்லுபடியாகும்.

ஒரு கலைஞனுக்காகக் காத்திருத்தல்

மகாத்மாவுக்காகக் காத்திருத்தல் ஆர்.கே. நாராயணன் எழுதிய கதையின் பெயர். ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர் என்பதாக அறியப்பட்ட ராசிபுரம் கிருஷ்ணசாமி நாராயணன் பிறப்பால் தமிழர். ஆனால் வாழ்ந்தது கர்நாடகத்தில். அவரது பெரும்பாலான கதைகளின் களனாக இருக்கும் மால்குடி என்ற புனைவு நகரம் கர்நாடகக் கிராமங்களின் சாயலையும் இந்திய நகரங்களின் பொதுத் தன்மையையும் கொண்டது. இந்திய வறுமையையும் அறியாமையையும் மட்டுமே எழுதி உலகச் சந்தையில் விற்றுக் காசாக்கிக் கொண்டார் என்று யாரும் அவரைக் குற்றம் சொல்லி விட முடியாது. எளிய வாழ்க்கையை வாழும் இந்திய மனிதர்களின் அறியாமையின் பலவீனத்தை எழுதுகிறாரா? அல்லது அந்த அறியாமையின் காரணமாக உண்டாகும் ஆன்ம பலத்தை எழுதுகிறாரா? எனக் கண்டறிய முடியாத- பிரித்துப் பார்க்க முடியாத எழுத்து அவருடையது. இதையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதி உலகத்திற்குச் சொன்னார் அவர்.