இடுகைகள்

அனோஜனின் புனைவு உலகம்

சமநிலை பேணும் குடும்ப அமைப்பு  ==================================  ஆதிக்கம் செய்தல், அடங்கிப்போதல் என்ற இரட்டை நிலைகள் எப்போதும் ஒருபடித்தானவை அல்ல. இவ்விரண்டுக்குமே மாற்று வெளிப்பாடுகள் உண்டு என்பது தனிநபர் உளவியலும் சமூக உளவியலும் பேசும் சொல்லாடல்கள். போலச் செய்யும் மந்திரச்சடங்குகளில் கூட ஆதிக்கத்திற்கெதிரான மந்திரச் சடங்குகள் உண்டு எனப் பேசும் மானிடவியல், அதிகாரத்தின் குறியீட்டைக் கேலிசெய்தும், இழிவுசெய்தும் ஏவல்கள் செய்து திருப்தி அடைவதுண்டு எனப்பேசுகிறது. 

போரும் புலப்பெயர்வும்: மூன்று கதைகள்

படம்
கதை கதையாம்.. காரணமாம்..காரணத்தால தோரணமாம்.. . தோரணம் கட்டிய பந்தலும் எதுக்கு..?பூரணகும்பம் எடுப்பதும் எதுக்கு இப்படியொரு சிறுவர் பாடல் உண்டு. இந்தப்பாடலில் வரும் தோரணத்துக்குப் பதிலாக வெவ்வேறு சொற்களைப் போட்டு அவரவர்கள் உருவாக்கிக் கொண்ட மாற்றுப்பாடல்களும் உண்டு. எங்கள் ஊரில் தோரணத்துக்குப் பதிலாக ஊருணி என்றொரு சொல்லைப்போட்டு உருவாக்கிய ”கதைகதையாம் காரணமாம்.. காரணத்திலெ ஊருணியாம்.. ஊருணியில ஒழக்குத்தண்ணியாம்.. ஒழக்குத்தண்ணியில கெழுத்தி மீனாம்.. என்று பிள்ளைகள் பாடுவார்கள்.” நேர்கோட்டில் சொல்லிப்போகும் கதை: ஷமீலா யூசுப் அலியின் கிணறு ஷமீலா யூசுப் அலி எழுதிய ”கிணறு” கதையைப் படித்த முடித்தபோது ஊருணி நினைவுக்கு வந்துவிட்டது. இசுலாமியக் குடும்பங்கள் அதிகம் இருக்கும் இலங்கையின் சிறு நகரம் ஒன்றில் இருக்கும் கிணறு - பொதுக்கிணறு -கவர்மெண்டை கிணறை மையமாக்கி விரிகிறது கதை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எனக் காரணங்களைச் சொல்லிச் சொல்லித்தாவும் கதைசொல் முறையும் பேச்சு வழக்கின் வேகமும் சேர்ந்து தொடங்கிய வாசிப்பை எங்கும் நிறுத்தாமல் முடிவு நோக்கி இழுத்துச் சென்றுவிடுகின்றன. கிணறின் இருப்பிடம் சார்ந்...

கொரோனாவோடு வாழ்ந்தது -மே மாதம்

  கொரொனா ஞாயிறு     பல்கலைக்கழகப் பணியில் இருந்த காலத்துப் பழக்க வழக்கங்கள் ஒவ்வொன்றாக மாறிக் கொண்டிருக்கின்றன என்றாலும் , இந்த வாரக்கடைசி வாழ்க்கை (weekend life) ஒன்றும் பெரிதாக மாறிவிடவில்லை . 

கவிதைகள் வாசிக்கும் தருணங்கள்

படம்
தொகுப்பாக வாசிப்பதற்கும் தனியொரு கவிதையை வாசிப்பதற்கும் வேறுபாடு உண்டு. தொகுப்பை எடுத்து வாசிக்கும்போது அந்தக் கவியின் அகத்தையும் புறத்தையும் கண்டடையும் தேடல் இருக்கும்; மதிப்பீடு செய்து முன்வைக்கும் எத்தணிப்பை அறிவு செய்யும். ஆனால் தனியொரு கவிதை வாசிப்பு அப்படிச் செய்வதில்லை. அதற்குப் பதிலாக வாசிப்பவர்களைக் கவிதைக்குள்ளிருக்கும் நானில் பொருத்தும் வேலையைச் செய்கின்றன. கவிகளின் தனியொரு கவிதையை வாசிக்கும்போது  நான் காணாமல் போக வேண்டும்.  இருக்கும் இடத்திலேயே நான் தொலைந்து போக வேண்டுமென்றால் இன்னொரு வெளியை உருவாக்கி அதற்குள் நுழைந்துகொள்ளவேண்டும். அதைச் செய்வதில் கவிதைகள் எப்போதும் உதவியாக வந்து நிற்கின்றன- வேலைகளிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும்போது வாசிப்பதற்குக் கவிதையே ஏற்ற ஒன்று. அப்படியான கவிதைகளைத் தமிழில் எல்லாரும் எழுதி விடுவதில்லை. குறிப்பான மனிதர்களை -அவர்களின் சிடுக்குகளை  அழுத்தப்படும் நிலைகளை சொல்லும் கவிதைகள் எழுதுபவர்கள் வாசிப்பவரின் 'நானை' அழிக்கிறார்கள்.  வாசிப்பவர்களை இன்னொரு மனிதர்களாக மாற்றி அவர்களின் வலியையும் நம்மீது சுமத்தித் தத்தளிக்கச் செய்த...

கடவுளும் காமமும்- உமையாழின் மூன்று கதைகள்

படம்
எழுதப்படும் இலக்கியப் பனுவல்கள் எழுதியவருக்குச் சில அடையாளங்களை உருவாக்கித் தருகின்றன. உருவாக்கப்படும் அடையாளங்களுக்குக் காரணமாக இருப்பதில் முதல் இடம் எதை எழுதுகிறார்கள்? என்பதாகத் தான் இருக்கும். அதனைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல நேர்ந்தால் யாரை எழுதுகிறார்கள் என்பதாக மாறிவிடும். இதற்குப் பின்பே எப்படி எழுதுகிறார்கள்? என்பது வருகிறது. எதை அல்லது யாரை என்ற கேள்விக்கான விடையைக் கண்டுசொல்ல நினைக்கும் திறனாய்வு,