இடுகைகள்

கனா: சிதறும் இலக்குகள்

2.0 சினிமாவை நெல்லையில் ஒரு தடவை பார்த்தேன். அது ஒற்றை அரங்கு. பார்வையாளர்களாக வந்தவர்களில் பெரும்பாலோர் இளைஞர்கள், நடுத்தரவயதினர். குழந்தைகள் குறைவு. இரண்டாவது தடவை சென்னையில். அது பல அரங்குகள் கொண்ட சினிமா வளாகம். அங்கே குழந்தை, குட்டிகளோடு குடும்பம் குடும்பமாக அந்தப் படத்திற்கு வரிசை கட்டுகிறார்கள். வேறு படங்களுக்குப் போகும்போதும் கவனிக்கிறேன்.

பிரபஞ்சகவி என்னும் மனிதாபிமானி

படம்
உடனடி நினைவு எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக்காரர்களாகக் காட்டியிருக்கிறார். புதுச்சேரிப் பல்கலைக்கழக சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப்பள்ளியின் கௌரவ விரிவுரையாளராக இரண்டு பருவங்கள் பணியாற்றினார்.

நினைவுகள்: பேரா.க.ப.அறவாணன்

படம்
மரணங்களை நிறுத்துவது மனிதர்கள் கையில் இல்லை. முதுமைக்குப் பின்னான மரணங்களுக்கு வருந்தவேண்டியதும் இல்லை. மரணத்திற்குப் பின்னானதொரு வாழ்க்கை இருப்பதாக நம்புபவர்கள் பிரார்த்தனை செய்து அவ்வாழ்க்கைகுள் அனுப்பி வைக்க முயல்கின்றனர். தெரிந்தவர்களின் மரணங்களை- அக வாழ்க்கையிலும் புறநிலைப் பணிகளிலும் தொடர்புடையவர்களின் மரணச்செய்திகளை அடுத்து அவர்களை நினைத்துக் கொள்வது அனைவரும் செய்வது. இரங்கி நிற்கும் மனம் நினைவுகளில் வழியாக அவர்களது சந்திப்புகளையும் பேசிய பேச்சுகளையும் நினைத்துப் பின்னோக்கிப் பயணம் செய்கிறது. அவர்களது வாழ்க்கைப் பயணத்திலிருந்து உடன்பாட்டு நிலையிலோ எதிர்மறை நிலையிலோ ஏதாவது கற்றுக்கொள்ளவும் கடைப்பிடிக்கவும் அந்த நாளைப் பயன்படுத்திக் கொள்கிறது

பிரபஞ்சன் :நினைவலைகள்

படம்
பிரபஞ்சன் என்னும் மனிதாபிமானி எட்டாண்டுக் காலம் பாண்டிச்சேரி என அழைக்கப்பட்ட புதுச்சேரியில் வாழ்ந்த நான் பிரபஞ்சனின் கதை வெளிகளை நேரில் பார்த்திருக்கிறேன். அங்குலம் மாறாமல் தெருக்களையும், வண்ணங்கள் மாறாமல் கட்டடங்களையும், வாசம் மாறாமல் சூழலையும் எழுதுவதன் மூலம் தனது கதைகளின் பாத்திரங்களை புதுச்சேரிக் காரர்களாகக் காட்டியிருக்கிறார்.

கொள்கைகளும் விலகல்களும்: புதியமாதவியின் வட்டமும் சதுரங்களும்

படம்
பெண்ணியம் இன்று இரண்டு நிலைப பட்டது. பரவலாக அறியப்படுவது அதன் செயல்நிலை(Activism). சமூகத்தின் இருப்பை உணரும் நிறுவனங்களான குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், கேளிக்கை மற்றும் சடங்கு நிகழ்வுகள் என ஒவ்வொன்றிலும் பெண்களின் இடத்திற்காகவும் இருப்புக்காகவும் குரல்கொடுப்பதும், போராடுவதும், சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதுமான செயல்பாடுகளே செயல்நிலை வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இச்செயல்நிலைகளுக்கான கருத்தியல் வலுவை உருவாக்குவது கோட்பாட்டுநிலை(Theory). பெண்ணியத்திற்கான கோட்பாட்டு நிலையை உருவாக்கிட உதவிய இன்னொரு கோட்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அது மார்க்சியமாகவே இருக்கும்.