இடுகைகள்

பெண்ணை மொழிதல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கலப்புத் திருமணங்களின் பரிமாணங்கள் : அழகுநிலாவின் பெயர்த்தி

மொழியை விரும்பும் ஒவ்வொருவரும் அம்மொழியில் இருக்கும் எல்லாச் சொற்களையும் எல்லா நேரத்திலும் விரும்பிவிடுவதில்லை என்பது ஒரு நகைமுரண்நிலை. சொற்கள் – எதிர்ச்சொற்கள் அறிவது ஐரோப்பிய மொழிக்கல்வியில் -குறிப்பாக ஆங்கிலக் கல்வியில் தொடக்கநிலை. வேற்றுமொழிச் சொற்கள் என்றில்லாமல் தாய்மொழியில் இருக்கும் சொற்களைக்கூட விரும்பப்படும் சொற்கள், வெறுக்கப்படும் சொற்கள் எனப் பட்டியலிட்டே பயன்படுத்தி வருகிறார்கள் மனிதர்கள். சொற்களில் விரும்பும் சொற்களை உடன்பாட்டுச் சொற்கள் என்றும் நேர்மறைப்பார்வையைத் தரும் சொற்கள் என்றும் சொல்லி அதிகம் பயன்படுத்துகின்றோம். எதிர்மறைப்பார்வையைத் தரும் சொற்களை விருப்பத்திற்குரியன அல்ல என்று கருதிப் பயன்பாட்டையே தவிர்க்க நினைப்பதும் மனித இயல்புதான்.

தனித்திருக்க விரும்பும் மனம்: சுஜா செல்லப்பனின் ஒளிவிலகல்

படம்
குடும்ப அமைப்பின் பெருமைகளையும் சிறப்புகளையும் ஆராதிப்பவர்கள், அதற்குள் ஒவ்வொருவரும் இன்னொருவரைச் சார்ந்து வாழ வேண்டியவர்களாக இருக்கிறார்கள் என்பதாகப் பேசாமல் ஒவ்வொருவருக்கும் அது பாதுகாப்பைத் தருகிறது என்பதாகவே பேசுகின்றனர். அதிலும் பலவீனமானவர்களாக இருக்கும் பெண்களுக்கு ஆண்களின் பாதுகாப்பும் அரவணைப்பும் குடும்பத்திற்குள் தான் கிடைக்கும் என வலியுறுத்துகின்றனர். அதன் காரணமாகப் பெண்கள் தங்களின் தனித்த அடையாளங்களைப் பேணுவதையும் அதற்கான முயற்சிகளையும் செய்யக் கூடாது என்றும் வலியுறுத்துகின்றனர்.

பிள்ளை சுமத்தல் என்னும் பேரனுபவம்: ச.விசயலட்சுமியின் உயிர்ப்பு

படம்
  இலக்கியம் என்றால் இலக்கியம்தான்; அதற்குள் எதற்கு தலித் இலக்கியம்? பெண் இலக்கியம்? என்ற குரல்களை எழுப்புவதின் நோக்கம் திரும்பத் திரும்பக் கேள்விக்குட்படுத்த வேண்டிய ஒன்று.

நம்பிக்கை ஊற்று தேவைப்படும் பெண்கள்: லக்ஷ்மியின் ஏன் இந்த வேகம்

படம்
தமிழ்ப் புனைகதையின் தொடக்கக் கவனம் பெண்களை எழுதுவதிலேயே குவிந்திருந்தது. பாரதியின் சந்திரிகையும் வேதநாயகம் பிள்ளையின் ஞானாம்பாளும் ராஜம் அய்யரின் கமலாம்பாளும் மாதவைய்யாவின் பத்மாவதியும் சரித்திரங்களாக்கப்பட்டனர். விரிவான நாவல் வடிவம் மட்டுமல்ல. சிறுகதையின் தொடக்கநிலைகூட மங்கையர்க் கரசியின் காதலையும் குளத்தங்கரையில் சந்தித்துக்கொண்ட பெண்ணின் கதையையும்தான் சொல்லமுயன்றன. ஆனால் இந்தப் பெண்கள் எல்லாம் லட்சியவாதமும் நல்லொழுக்கமும் தியாகத்தின் வடிவமும் கொண்டவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்கான காரணங்களை அறியாதவர்கள். அறிய விரும்பாதவர்கள். அவர்கள் அவ்வாறு இருப்பதற்காகப் படைக்கப்பட்டவர்கள் அல்லது அனுப்பப்பட்டவர்கள் என்பதாகக் கதையெழுதிய ஆண்கள் எழுதிக் காட்டினார்கள். ஆண்கள் எழுதியதைப் போலவே தொடக்ககாலப் பெண்களும் எழுதிக்காட்டினார்கள். 

வேலியிடப்பட்ட குடும்பங்கள்:பாமாவின் முள்வேலி

படம்
வேலி என்னும் சொல்லுக்குச் சொத்து, எல்லை, வரையறை, பாதுகாப்பு எனப் பருண்மையான பொருள்கள் உண்டு. நாலுவேலி நிலம், பயிரை மேயும் வேலிகள், வேலிதாண்டிய வெள்ளாடு எனச் சொற்கோவைகளை அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்திக்கொண்டே இருக்கிறோம். அப்படிப் பயன்படுத்தும் சொற்கோவைகள் பால் வேறுபாடின்றி இருபாலாருக்கும் பொதுவாகவே இருக்கின்றன. ஆனால் தாலியே வேலி எனச் சொல்லும்போது பாலடையாளம் பெற்று பெண்ணுக்குரியதாகச் சொற்கோவை மாறி நிற்கிறது. வேலியாக மாறும் தாலிதான் பெண்ணுக்குப் பெரிய பாதுகாப்பு என்பதை உறுதிப்படுத்தும் கருத்தியல் தோற்றத்தின் – பரப்பின் – இருப்பின் கருவியாக மாறிப் பெண்களைச் சுற்றி வலம் வருகிறது.

தனித்தலையும் பெண்கள் : கலைச்செல்வியின் இரவு

படம்
பெண்ணின் எதிர்நிலை ஆண்.பெண்ணும் ஆணும் இரண்டும் பால்சுட்டும் பொதுப் பெயர்கள். பால் சுட்டும் பொதுப்பெயர்கள் பாத்திரத்தின் பெயராக மாறும்போது எதிர்ப்பாலுக்கான பாத்திரம் ஒன்றை மொழி உருவாக்கிக் கொள்கிறது. சில பாத்திரங்களுக்குப் பொதுச்சொற்களே போதும் என்றும் மொழி கருதுகிறது. குழந்தை என்ற சொல் பாலடையாளம் இல்லாத பொதுச்சொல். ஆனால் சிறுமியும் சிறுவனும் பாலடையாளங்கள் கொண்ட சொற்கள். தமிழ் மொழியில் பெண்பால் விகுதிகள் எனவும் ஆண்பால் விகுதிகள் எனவும் சொல்லின் இறுதி நிலைகள் இருக்கின்றன. அவ்விறுதிநிலைகளைக் கொண்டு தமிழின் பெயர்ச்சொற்கள் உருவாக்கப்படுகின்றன.

குடும்பப் பெண்கள் பாடசாலைகள் : கு.ப. சேது அம்மாளின் குலவதி

படம்
பெண்ணெழுத்து பல தளங்களில் விரிந்துள்ளது. தமிழ்ப் புனைகதையில் பலகட்டங்களைக் கடந்துள்ளது. பெண்களை எழுத வேண்டும் என்பதற்காகவே பெண்கள் எழுதத் தொடங்கினார்கள் எனச் சொல்ல முடியாது. ஆண்கள் செய்யும் வினைகளைப் போலவே பெண்களும் ஆற்றமுடியும் என்று காட்டுவதற்காகப் பெண்களும் எழுதத் தொடங்கினார்கள். இருபாலாரின் எழுத்திலும் வரும் ஆண்களும் பெண்களும் ஒன்றுபோல் எழுதப்படவில்லை என்ற உணர்வு தலைதூக்கிய நிலையில் பெண்ணெழுத்து – பெண்கள் எழுதிய பெண்ணெழுத்து உருவாகியிருக்கிறது.

தடயம்:தமிழ் மாற்றுச் சினிமாவில் ஒரு மைல்கல்.

படம்
நிறைவேறாத காதல் - தமயந்தியின் தடயம் சினிமாவின் விவாதப் பொருள் என்பதைப் படம் பார்ப்பதற்கு முன்பே அறிவேன். தடயத்தை எழுத்தில் வாசித்திருக்கிறேன். அப்போது இப்படி எழுதியிருக்கிறேன்

பெண்மொழியின் மீறல்கள்: தமிழ்க்கவியின் பாடுபட்ட சிலுவையள்

படம்
  உலகில் மொழியின் தோற்றம் பற்றிய ஆய்வு, நீண்டகாலமாக நடக்கும் ஒன்று. மனிதத் தோற்றம் பற்றிய தேடலோடு மொழியின் தோற்றம் பற்றிய தேடலும் இரட்டை மாட்டு வண்டியின் சக்கரப்பதிவுகள். உலகப்பரப்பில் மனிதர்களின் தோற்றம் எங்கு நிகழ்ந்ததோ அங்குதான் மொழியின் தோற்றமும் நிகழ்ந்திருக்கும் என்பது மொழியியலாளரின் கருத்து. 

கடந்த காலத்தின் பெண்கள்:எம்.ஏ.சுசிலாவின் ஊர்மிளை

படம்
மனித வாழ்க்கை என்பது ஒற்றை நிலை கொண்டதல்ல. அதற்குள் முதன்மையாக இரட்டைநிலை உருவாக்கப்படுகிறது. இரட்டைநிலை உருவாக்கம் என்பது மனித உயிரியின் பெருக்கமும் விரிவாக்கமும் மட்டுமல்ல. அனைத்துவகை உயிரினங்களும் பெண் -ஆண் என்னும் பாலியல் இரட்டை வழியாகவே நிகழ்கின்றன. உயிரியல் அறிவாக நாம் விளங்கியிருக்கும் இவ்விரட்டையின் ஒவ்வொரு பக்கமும் இன்னும் இன்னுமாய் இரட்டைகளை உருவாக்கிப் பலநிலைகளை உருவாக்குவதன் மூலம் எண்ணிக்கையில் விரிகிறது.  

மட்டுப்படுத்தப்படும் மென்னுணர்வுகள்: தமிழ்நதியின் நித்திலாவின் புத்தகங்கள்

படம்
நாடகக் கலையைக் கற்பிக்கும் நாடகப்பள்ளிகள் இப்போதெல்லாம் நடிகர்களின் பேச்சுமொழியையும் மனதின் நினைப்பையும் இயைந்து போகும் விதமாக உடல்மொழியை வயப்படுத்துவதற்கு வட்டாரக் கலைகளையும், நாட்டார் ஆட்டங்களையும் கூத்துகளையும் கற்றுத்தரும் பயிற்சிகளை அளிக்கின்றன. நான் பணியாற்றிய புதுவை நாடகப் பள்ளியில் முதன்முதலாகத் தெருக்கூத்துப் பயிற்சியொன்றை வழங்கும் நோக்கத்தோடு பயிற்சிமுகாம் ஒன்றை நடத்தினோம். முகாமின் வெளிப்பாட்டை மேடையேற்றிப் பார்க்கவேண்டும் என்ற கட்டாயத்தின் பேரில், திரௌபதி வஸ்திராபஹரணம் என்னும் கூத்தை நிகழ்த்தப் பயிற்சிகளை வழங்கினார்கள் புரிசை கண்ணப்பத் தம்பிரானும் அவரது மகன் சம்பந்தனும் . அந்தப் பயிற்சி முகாமில் நாடகப்பள்ளியின் மாணவிகளும் பங்கேற்றார்கள். அவர்களுக்கு ஆட்டப்பயிற்சியையோ நிகழ்த்துதல் பயிற்சியையோ வழங்காமல் குரல்பயிற்சியாக – பின்பாட்டுப் பயிற்சியில் மட்டும் சேர்த்துக்கொண்டார்கள் கூத்துக்கலைஞர்கள். ஆனால் மாணவிகளில் ஒருத்தி தானும் கதாபாத்திரமேற்று தெருக்கூத்து ஆடவேண்டும் என்று விரும்பினார்.

வேற்றுமைகள் -வேறுபாடுகள்: உணர்தலும் அறிதலும்

படம்
இலக்கியம் என்றால் இலக்கியம் தான். அதில் ஆண் இலக்கியம்; பெண் இலக்கியம் என்று வகைப்பாடு செய்வதில் எனக்கு உடன்பாடு இல்லை என்று சொல்லும் பெண்களின் குரல்களைக் கேட்டிருக்கக் கூடும். இப்படிப் பேசும் ஆண்களையும் பார்த்திருக்கக் கூடும். விருதுபெற்ற இந்தக் கதைகள் போன்ற கதைகளை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே ஆண்கள் எழுதிவிட்டார்கள். அவர் பெண் என்பதால் இந்த விருதைப் பெற்றிருக்கிறார். பொதுவாகவே பெண்கள் தாங்கள் எழுதும் எழுத்துக்களால் மட்டுமே கவனிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையல்ல. பெண்கள் என்பதால் தான் வாய்ப்புகளை அடைகிறார்கள். விருதுகளைப் பெறுகிறார்கள். வெளிநாடுகளுக்குப் போய் வருகிறார்கள் என்பன போன்ற குரல்களைக் குற்றச்சாட்டுகளாகவே ஆண்களில் சிலர் முன்வைக்கிறார்கள்.

கறுப்பி சுமதியின் முகில்கள் பேசட்டும்: உடலின் வேட்கை

படம்
“வாழ்வில் இனிமேல் ஒருபோதும் கிடைக்காத சந்தர்ப்பம் என்று எதுவோ இயக்கிக் கொண்டிருந்தது. ஆடி அடங்கி நித்திரையில் மூழ்கி நான் கண் விழித்துக் கொண்டபோது அதிகாலையாகியிருந்தது. பக்கத்தில் சயன் சீரான மூச்சோடு நித்திரையாயிருந்தான். நிர்வாணமாய் இரு உடல்கள். நான் எழுந்து உடுப்பை போட்டுக்கொண்டு அவன் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு எனது அறையை நோக்கி ஓடிப் போனேன். நண்பிகள் விழித்துக் கொள்ளு முன்னர் போய்விட வேண்டும் அவர்களுக்கு இரவு நான் எங்கு தங்கினேன் என்று சொல்லப் போகிறேன் ? தெரியவில்லை. ஆனால் உண்மை சொல்லப் போவதில்லை என்பது மட்டும் எனக்குத் தெளிவாகத் தெரிந்தது.”

பேய்கள் பிசாசுகள் பெண்கள்: லறீனாவின் புளியமரத்துப் பேய்கள்

படம்
  ‘உள்ளூர்க்காரங்களுக்குப் பேய நெனச்சு பயம்; வெளியூர்க்காரங்களுக்கு தண்ணியப் பாத்தா பயம்’ என்றொரு சொலவடையை நான் கேட்டிருக்கிறேன்; நீங்களும் கேட்டிருக்கக்கூடும்.  மழை பெய்து பாதைகளில் ஆங்காங்கே நீர்க்குட்டைகளாகத் தேங்கியிருந்தால், வெளியூரிலிருந்து வருபவர்கள் எவ்வளவு ஆழம் இருக்குமோ என்ற அச்சத்தில் நீருக்குள் இறங்குவதற்குப் பகல் நேரத்திலேயே பயப்படுவார்கள். ஆனால் எந்த இருட்டிலும் அச்சமில்லாமல் நடந்து போவார்கள். ஆனால் உள்ளூர்க்காரர்களுக்கு நீரின் தேக்கமும் ஆழமும் தெரியுமென்பதால் பயப்பட மாட்டார்கள்.

கணவன் – நட்பு – துணை ஹேமாவின் இரண்டாமவன் எழுப்பும் விவாதங்கள்

படம்
வளர்ச்சி – பங்களிப்பு- உரிமை – கடமை போன்ற சொற்களும் சொல்லாடல்களும் நமது காலத்தில் திரும்பத்திரும்பக் காதில் விழும் சொற்களாக இருக்கின்றன. நிலத்தை மையமாகக் கொண்ட நிலவுடைமை சமூகத்து வாழ்க்கையிலும் பேச்சு மொழியிலும் இலக்கியப் பனுவல்களிலும் இச்சொற்களுக்கிணையான சொற்கள் புழக்கத்தில் இருந்தன. ஆனால் முதலாளிய சமூகத்தில் புதிய பொருண்மைகளைத் தனதாக்கிக் கொண்டுள்ளன. காரணம் எல்லாவிதமான வளர்ச்சியிலும் எல்லோரும் பங்கெடுக்க வேண்டும்; அதற்கான உரிமைகள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதை உணர்ந்து கடமையாற்றி உரிமைகளைப் பெற்றுக் வேண்டும். இப்படிப்பட்ட எண்ணத்தின் விளைவுகளே இந்தச் சொற்கள் நம் காலத்தில் திரும்பத் திரும்ப ஒலிக்கக் காரணங்களாகும்.

காமத்தின் வலிமை: சந்திராவின் மருதாணி

படம்
காமத்தை உயவு நோய் என்கிறாள் குறுந்தொகைப் பாடலில் இடம்பெறும் பெண்ணொருத்தி. அந்தப் பெண்ணை எழுதியவள் ஔவை என்னும் பெண். முட்டுவென்கொல் தாக்குவென்கொல் எனத் தொடங்கும் அந்தப்பாடல், உயவு நோய் கண்ட ஒருவர், செய்வது இன்னதென்று அறியாது செயல்களில் ஈடுபடுவர் என்கிறது.

வெளிகளில் விளையும் மரபுகள்: காவேரியின் இந்தியா கேட்

படம்
எழுத்திலக்கியங்கள் தோன்றாத காலகட்டத்தில் பெண் தலைமை தாங்கிய சமூக அமைப்பு இருந்ததாக மானுடவியல் ஆய்வுகள் சொல்கின்றன. வேட்டைப் பொருட்களை உண்டு வாழ்ந்த சமூகத்தின் தொடர்ச்சியாக ஓரித்தில் தங்கி வேளாண்மை செய்வதையும் மீன் பிடித்தலையும் கற்றுக்கொண்போது இனவிருத்தியின் பொருட்டுப் பிள்ளை சுமத்தல் வினைக்காகப் பெண்கள் ஓரித்தில் தங்கவேண்டியவர்களாக ஆக்கப்பெற்ற நிலையில் பெண் தலைமை தாங்கிய சமூகம் முடிவுக்கு வந்த காலகட்டத்தில்தான் ஆண்மையச் சமூகம் உருவானது என்றும் மானிடவியல் கருத்துகள் சொல்கின்றன. ஆனால் தமிழின் இலக்கியப்பிரதிகள் பெரும்பாலும் பெண் தலைமைக்காலத்தைத் தாண்டி ஆண் தலைமைக் காலமான அரசுருவாக்கக் காலகட்டத்தையே நமக்குக் காட்டுகின்றன. 

கொள்கைகளும் விலகல்களும்: புதியமாதவியின் வட்டமும் சதுரங்களும்

படம்
பெண்ணியம் இன்று இரண்டு நிலைப பட்டது. பரவலாக அறியப்படுவது அதன் செயல்நிலை(Activism). சமூகத்தின் இருப்பை உணரும் நிறுவனங்களான குடும்பம், கல்வி நிறுவனங்கள், பணியிடங்கள், கேளிக்கை மற்றும் சடங்கு நிகழ்வுகள் என ஒவ்வொன்றிலும் பெண்களின் இடத்திற்காகவும் இருப்புக்காகவும் குரல்கொடுப்பதும், போராடுவதும், சட்டரீதியான உரிமைகளைப் பெறுவதுமான செயல்பாடுகளே செயல்நிலை வெளிப்பாடுகளாக இருக்கின்றன. இச்செயல்நிலைகளுக்கான கருத்தியல் வலுவை உருவாக்குவது கோட்பாட்டுநிலை(Theory). பெண்ணியத்திற்கான கோட்பாட்டு நிலையை உருவாக்கிட உதவிய இன்னொரு கோட்பாட்டைச் சுட்டிக்காட்ட வேண்டுமென்றால் அது மார்க்சியமாகவே இருக்கும்.

பெண் உடலை உணர்தல் : உமாமகேஸ்வரியின் இரண்டு கதைகள்

படம்
  ஆர்வமூட்டும் தொடக்கமொன்றைக் கதை கொண்டிருக்க வேண்டும்' என்ற இலக்கணப்படியான மரபான தொடக்கம்தான். 'கதவு தட்டப்படுவதான உணர்வு. ஆனால் யார் தட்டியது என்று தெரியவில்லை'  என்பது போன்ற திகில் தன்மையை ஆரம்பமாகக் கொண்ட கதை உமா மகேஸ்வரியின் குளவி.(காலச்சுவடு, 200/ஆகஸ்டு, 2016) ஒற்றை நிகழ்வைக் கொண்டதாக - கதைக்குள் இருக்கும் நடுத்தர வயதுப் பெண்ணின் செயல்பாடுகளை மட்டுமே விவரிப்பதாக இருந்த கதைக்குள் வேலைக்காரப் பெண்ணொருத்தியோடு நடத்தும் அந்த ஒரேயொரு கூற்று அவளைப்பற்றிய இன்னொரு பரிமாணத்தை உருவாக்குகிறது.

தாயை எழுதிய மகள்:கவிதா சொர்ணவல்லியின் அம்மாவின் பெயர்

படம்
அம்மாவின் பெயர் என்ன என்பதே வெகுகாலத்துக்குத் தெரியாது. எனக்கு அம்மாவுக்கு என்ன பெயர் இருக்க முடியும்? அம்மா என்பதைத் தவிர. ‘வாட் இஸ் யுவர் ஃபாதர் நேம்? என்ற கேள்விகளினால் அப்பாவுக்குப் பெயர் உண்டு என்பது நன்றாகவே தெரிந்து இருந்தது. அம்மாவைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். ஆனால் அடிக்கடி கேட்டு நினைவில் பதியவைத்து இருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.