இடுகைகள்

நவம்பர், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பிக்பாஸ் -8. ஐம்பது நாட்களுக்குப் பின் ஒரு குறிப்பு

படம்
50 நாட்கள் வரை எட்டாவது பருவம் குறித்து ஒரு குறிப்பும் எழுதவில்லை. ஆனால் ஏழு பருவங்களின்போது அப்படி இருக்கவில்லை. முதல் இரண்டு பருவங்களில் அன்றாடம் பார்த்துப் பல குறிப்புகள் எழுதியதுண்டு. பின்னர் அதில் ஆர்வம் குறைந்து விட்டது. அன்றன்றே பார்க்கும் வழக்கமும் இல்லாமல் போனது. ஆனால் இணையச்செயலி ஹாட்ஸ்டாரில் பார்த்துவிடுவேன். இப்போதும் பார்க்கிறேன்.

கதைசொல்லி என்னும் கதாபாத்திரம்

படம்
அகழ் இணைய இதழில் (நவம்பர்,8/2024) பதிவேற்றம் பெற்றுள்ள சுரேஷ்குமார இந்திரஜித்தின் பூக்கள் கதையை வாசித்தவுடன், அவரது சொல்முறை குறித்தும் புனைவாக்கம் குறித்தும் எனக்குள் உருவாகியிருந்த கருத்து மேலும் உறுதியானது. இந்தக் கதையும் ஆண் – பெண் உறவில் ஏற்படும் பிறழ்வுகளை மையப்படுத்திய இன்னொரு கதையாகவே இருக்கிறது. இவ்வகைச் சிக்கல்களை விவாதிக்கும் கதைகளை அதிகமாக எழுதுவதே அவரது புனைவுலகமாக இருக்கிறது.

விடுப்புக்கொள்கை (VACATION POLICY ) மறுபரிசீலனைகள்

படம்
அவ்வப்போது அறிவிப்புகள் மழைக்காக  அவசர அறிவிப்பைச் செய்யும் உரிமையைக் கல்வி நிறுவனங்களின் - பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அறிவிப்புச் செய்கிறார்கள் மாவட்ட ஆட்சித்தலைவர்கள். இந்த முடிவு வரவேற்கத்தக்க முடிவு. அவசரகாலத்திற்கென அளிக்கப்பட்ட விடுப்புகள் திரும்பவும் மாற்றுப்பணிகள் மூலம் நிரப்பப்பட வேண்டியன என்பதால் அந்தந்த நிறுவனத்தலைவர்களே விடுப்பு அறிவிப்பது தேவையான ஒன்று.

கிஷ்கிந்தா காண்டம்- குற்றவியலும் உளவியலும்

படம்
மறதிகளும் நினைவுகளும் தன்னியல்பானவையாக இருக்கும்வரை சிக்கல் இல்லை. அவையே மறைத்தல்களும் அழித்தல்களுமாக ஆகும்போது குற்ற நடவடிக்கைகளாக மாறிவிடுகின்றன. முன்னது உளவியல் சிக்கல். பின்னது குற்றவியல் விவாதம்

உடல் மறுப்பு என்னும் பெரும்போக்கு

படம்
தமிழின் சித்தர் மரபுக்குள் இருக்கும் பனுவல்களை வாசித்து முடிக்கும்போது சில அடிப்படையான புரிதல்கள் நமக்குக் கிடைக்கலாம். அவர்கள் தொடர்ந்து மனித உடலின் மீதான சந்தேகங்களை எழுப்பியவர்கள். இந்த உடல் எப்படி உருவானது என்ற கேள்வியில் தொடங்கி, எப்படி இயங்குகிறது? இயங்குதலின் விருப்பங்கள் என்ன? இயங்குதலின் மூலம் அவை உருவாக்கும் விளைவுகள் என்ன? என்று தொடர்கேள்விகளை எழுப்புகின்றார்கள்.

பேச்சு உரிமையின் எல்லைகள்

படம்
  அவதூறான பேச்சுகளுக்காக அவர் மீது வழக்குகள் பதியப்பட்டன. தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் கஸ்தூரி. முன்னாள் நடிகையான கஸ்தூரி தன்னைப் பிராமண சங்கச் செயல்பாட்டாளராக அறிவித்துக் கொள்ளும் நோக்கத்தோடு பேசிய பேச்சுகள் பொதுவெளியில் பதற்றத்தை உருவாக்கக்கூடிய பேச்சுகள் என்ற அடிப்படையில் தான் வழக்குகள் பதியப்பட்டன. அந்த நேரத்தில் அவரது பேச்சுகளைக் கண்டிக்காத பலரும் இப்போது 'பேச்சுரிமை'யின் அடிப்படையில் அரசைக் கண்டிக்கிறார்கள்.

தொலையும் கடவுளும் தூரமாகும் காதலும்

படம்
புதிதாக வரும் சமூகக் கட்டமைப்பு தரும் பலன்களை அனுபவித்துக்கொண்டே அதற்கெதிராகச் செயல்படுவதில் வல்லவர்கள் இந்தியர்கள். அதிலும் குறிப்பாகச் சமூகக் கட்டமைப்பில் மேல்தளங்களில் இருக்கும் ஆதிக்கசாதிகள்/ உயர்வர்க்கத்தினர் இந்தத் தள்ளாட்டத்தில் சிக்கியவர்களாகவே இருக்கிறார்கள். பிரித்தானியர்களின் ஆங்கிலக் கல்வியைப் பயன்படுத்திக் கொண்டே - ஆங்கில மொழியைத் தனதாக்கிக் கொண்டே அதற்கெதிராகப் போராட்டங்களை நடத்திய மேல்மட்ட இந்தியர்களின் மனநிலை காலனியாதிக்கத்திற்குப் பின்னரும் மாறவில்லை.

காமத்தை மையமாக்குதலும் சொல்முறைச் சோதனைகளும்: சுஜாவின் இரண்டு சிறுகதைகள்

படம்
திறனாய்வு என்ன செய்யும்? வாசித்து முடித்த பனுவலின் நுட்பங்களை, எழுத்தாளரின் வாழ்க்கை குறித்த பார்வையை, உருவாக்கும் பாத்திரத்தின் மீதான முழுமையான இருப்பின் நிலைகளைக் கொண்டாடும் அல்லது போதாமையைச் சுட்டிக்காட்டும். அதன் மூலம் ஏற்கெனவே வாசித்தவர்களுக்கு அவர்கள் வாசித்த பனுவல் உருவாக்கும் மகிழ்ச்சியான கணங்களைக் கண்டு சொல்லும் பணியைச் செய்கிறது. அதற்கு மாறாக அந்தப் பனுவலை வாசிக்காமல் இருப்பவர்களை வாசித்துப் பார்க்கும்படி தூண்டும். இந்தக் கட்டுரை அதையே செய்கிறது. ஏற்கெனவே வாசித்தவர்களின் கதைகள் என்றாலும், அச்சிதழ்களில் பார்த்த உடனேயே வாசித்துவிட வேண்டும் என்று தோன்றுவதில்லை. இதழ்களில் அச்சிடப்படும் விதம் சில நேரங்கள் உடனடி வாசிப்பைத் தூண்டுவதுண்டு. அச்சிடப்படும் கதையின் சில வரிகளைப் பெரிதாக்கியோ, சாய்வெழுத்தில் தந்தோ அழுத்தமிட்டுக் காட்டும் இதழாசிரியர்கள் அந்தக் கதையை அல்லது கட்டுரையை வாசிக்கதூண்டும் வேலையைச் செய்ய நினைக்கிறார்கள். அதல்லாமல், கதையை எழுதியவர், கதைக்கு வைக்கும் தலைப்புகள் உடனடி வாசிப்பைத் தூண்டுவதும் உண்டு.

வாழையைப் பற்றியும் வாழையைச் சுற்றியும்

படம்
முதல் பார்வை: மாரி. செல்வராஜ் இயக்கத்தில் உருவான ‘வாழை’ திரைப்படத்தின் முன்பார்வைக் காட்சிகளை ஒட்டிப் பலரும் அதீத உணர்வுகளைக் காட்டியதாகத் தோன்றியது. அதனால் படத்தை உடனடியாகத் திரையரங்கம் சென்று பார்க்கவேண்டியதில்லை என்றே முடிவு செய்திருந்தேன். ஆனால், சமூக ஊடகங்களில் வந்த நம்பகமான விமரிசனக் குறிப்புகளின் அடிப்படையில் எட்டாவது நாள் மதுரையின் புறநகர்ப்பகுதியான திருநகரில் உள்ள திரையரங்கில் வாழை படத்தைப் பார்த்தேன்.

இலங்கை: நடந்த தேர்தலும் நடக்கப்போகும் தேர்தலும்

படம்
2024, செப்டம்பர் 21 - இலங்கையின் ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் தேசிய மக்கள் முன்னணியில் தலைவர் அனுரகுமார திசநாயக வெற்றி பெற்று இலங்கையின் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். அது இலங்கையின் வரலாற்றில் பெரும்பாய்ச்சல். வாக்களிப்பின் வழியாக நடந்த புரட்சி என வருணிக்கப்பட்ட ஒன்று.

ஒரு சினிமா இரண்டு சிறுகதைகள் ஒரு விருது

படம்
  வாசிப்பதும் பார்ப்பதும் எழுதுவதுமான வேலைகளை முகநூலில் மட்டும் நம்பி வைக்க முடியவில்லை, அதனால் அவ்வப்போது தொகுத்து இங்கே தரவேண்டியுள்ளது. அப்படி  எழுதியன இவை: 

இந்தியாவும் கனடாவும் உரசிக்கொள்வது ஏன்?

படம்
காலிஸ்தான் போராளிகளை முன்வைத்துக் கனடாவோடு இந்திய உறவு சிக்கலாகி வருகிறது. இந்திய உளவுத்துறை ரா( RAW)வின் செயல்பாடுகள் மீது கனடாவுக்குச் சந்தேகங்கள் ஏற்பட்டதின் தொடர்ச்சியில் ஏற்பட்ட உரசல், ஒன்றிய அரசின் மீது நம்பிக்கை இன்மையாக மாறியிருக்கிறது. தூதர்களின் வெளியேற்றம் வரை நடந்துவிட்டன.

ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரன்: சாய்வற்ற நடப்பியல்

படம்
நீண்ட இடைவெளிக்குப் பின் ஃபீர்தௌவ்ஸ் ராஜகுமாரனின் இரண்டு புனைகதைகள்அடுத்தடுத்து வாசிக்கக் கிடைத்தன. தமிழ்வெளியில் வந்துள்ள "இரைகள்" வாசித்து முடித்த நிலையில், நடுகல் இணைய இதழில் வந்துள்ள "தலைமுறைகள்" கிடைத்தது. இடையில் வேறு வாசிப்பு இல்லை.

இரண்டு எச்சரிக்கைகள்

படம்
நல்லனவற்றுக்காகவும் அல்லனவற்றுக்காகவும் சில நாட்களை நினைவில் நிறுத்திவைக்கிறோம். பெரும்பாலும் நினைவுநாட்கள்  மரணங்களோடு தொடர்புடையனவாக இருக்கின்றன. கொண்டாட்டங்களோடு தொடர்புடை நினைவுநாட்களும் இருக்கவே செய்கின்றன. துயரமோ, கொண்டாட்டமோ அந்த நாட்கள் மனிதர்களின் உணர்ச்சிகளைத் திரட்டி வெளிப்படுத்தும் ஒன்றாக இருப்பதைப் பார்க்கிறோம்.