இடுகைகள்

பாவைக்கூத்துகள் -விஜய் அரசியல் குறித்த குறிப்புகள்

வித்தியாசங்களற்ற பாதைகள் தனக்கென - தனது நடிப்புக்கென ஒரு பாணியை - திரைக்கதை வடிவத்தை உருவாக்கிக் கொண்டு அதே வழியில் தொடர்ந்து படங்களைத் தரும் நாயக நடிகர்களின் சினிமாக்கள் வணிக வெற்றியை உறுதி செய்துள்ளன. அதே நேரம் தங்கள் பாணியிலிருந்து விலகிய சினிமா ஒன்றில் நடிக்கும் ஆசையுடன் முயற்சி செய்யும் நடிகரின் விருப்பத்தை அவரது ரசிகர்களே ஒத்துக்கொள்வதில்லை. தோல்விப்படமாக ஆக்கிவிடுவார்கள். அத்தகைய சூத்திரம் ஒன்றை அரசியலுக்காகக் கண்டுபிடித்து கட்சி நடத்தும்போது அரசியலிலும் நிலைத்து நிற்கின்றார்கள். ஏழைப்பங்காளன்; பெண்களின் காவலன்; தாய்மார்களின் அன்புக்குரியவன்; சினிமாவில் சம்பாதித்த பணம் என்னிடம் இருக்கிறது. எனவே ஊழல் செய்யவேண்டிய அவசியமில்லை; உங்களின் ரத்தத்தின் ரத்தமாக இருப்பேன் எனக்காட்டிக் கொண்ட அரசியல் சூத்திரம் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களுடையது. அவர் உருவாக்கிய அதிமுகவிற்கு வேறுவிதமான அரசியல் பொருளாதாரக்கொள்கை எதுவும் கிடையாது. அதே சூத்திரத்தில் மாற்றமில்லாத ஒன்று விஜய்காந்தின் தேமுதிகவின் சூத்திரமாகவும் இருந்தது. தன்னைக் கருப்பு எம்ஜிஆர் என்று சொல்லி அவரது வாரிசாகக் காட்டினார். இப்போது த...

தொல்.திருமாவளவன் - சில குறிப்புகள்

படம்
1992 // பார்வையாளராக இருந்தார் திருமா. 1968 இல் கீழவெண்மணியில் 42 பேர் உயிருடன் கொளுத்தப்பட்டார்கள்; ஆனால் கொளுத்தியவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை தருவதற்குப் பதிலாக விடுதலையை வழங்கியது. அதற்கு நீதிமன்றம் சொல்லிய வார்த்தை “ சந்தேகத்தின் பலனை” அளிப்பது என்ற அடிப்படை. இந்திய நீதி மன்றங்களும் சமூகமும் எல்லா நேரமும் சந்தேகத்தின் பலனை உடையவர்களுக்குச் சாதகமாக அளிக்கின்றன என்ற நிலையை மாற்றி “ சந்தேகத்தின் பலனை ஆதிக்க சாதியினருக்கே அளிக்கின்றார்கள்” என்ற நிலைபாட்டில் அந்த நாடகத்தை புதுச்சேரியில் நண்பர்களோடு சேர்ந்து தொடங்கிய கூட்டுக்குரல் என்ற நாடகக் குழுவின் சார்பில் கம்பன் கலையரங்கத்திற்கு வெளியே தரையில் நிகழ்த்திக் காட்டினோம். பாடலும் வசனமும் நடிகர்களின் வியர்வை வழியும் உடலுமாக விரிந்த அந்த நாடக நிகழ்வு இந்தியாவில் வெண்மணியோடு முடிந்து போகவில்லை. பல்வேறு மாநிலங்களில் இன்னும் நடந்துகொண்டே இருக்கிறது என்று காட்ட அந்த நேரத்தில் ஆந்திரத்தின் சுண்டூரில் நடந்த வன்கொலைகளை நினைவூட்டி வளர்த்தெடுத்தோம்.நடக்கும் மோதல்கள் எல்லாவற்றிலும் இருப்பது ஆதிக்கச் சாதியினரின் திமிரும் ஒடுக்கப் பட்ட மக்களுக்கான அண...

சில குறிப்புகள் : சினிமா -பயணக்குறிப்பு - விருது- விவாதம் - ஒரு எதிர்பார்ப்பு.

படம்
இந்தக்குறிப்புகள் எல்லாம் விரிவாக எழுதப்பட்டிருக்க வேண்டியவை. மனச்சோம்பலும் நிலைகொள்ளாத இருப்புமாக நாட்கள் நகரும்போது எழுதுவது இயலாமல் போகின்றது.

திறந்தநிலைப் பொருளாதாரம்: தேசிய,திராவிட இயக்கங்கள்

படம்
திறந்த நிலைப் பொருளாதாரம்:  உலகமயமும் தாராளமயமும் தனியார்மயமும் தொடங்கிய காலமாக 1991 ஆம் ஆண்டு குறிக்கப்படுகிறது. இவற்றை ஏற்றுக்கொண்ட இந்தியா பல தளங்களில் வளர்ச்சியைக் கண்டிருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த வ ளர்ச்சியில் சமநிலைப் பார்வை இல்லை. சமநிலையாக்கம் தனியார் மயம் விரும்பும் ஒன்றல்ல.

சரவணகார்த்திகேயனின் கதையாக்கம் – வாசித்த சில கதைகளை முன்வைத்து

படம்
சரவண கார்த்திகேயனின் அண்மைக்காலச் சிறுகதைகளை அவ்வப்போது வாசித்த நிலையில் அவரது எழுத்துகள் பற்றிய சித்திரம் ஒன்று எனக்குள் உருவாகியிருக்கிறது. அச்சித்திரம் பத்தாண்டுகளுக்கு முன்பு வாசித்த, அவரது தொடக்கக்காலச் சிறுகதைகள் வழி உருவான சித்திரத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டது. கடந்த சில ஆண்டுகளில் அவர் எழுதிய கதைகள் உடல், மனம் என்ற இணைவையும் விலகலையும் முதன்மையான சொல்லாடலாக ஆக்கிக் கொண்டிருக்கின்றன. அண்மைக்கால நிகழ்வுகள், ஆளுமைகளைப் புனைவுகளாக்குவதும் அவரது கதைகளின் தன்மைகள். உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த  விடுதலைப்புலி திலீபனை பாத்திரமாக்கி எழுதிய கதை அண்மையில் எழுதப்பெற்ற நல்ல கதை. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு உலகப்பரப்புக்குக் கொண்டு போகவேண்டிய கதை கல்லளை எனப் பரிந்துரை செய்துள்ளேன் . திலீபன்: தொன்மமாக்கும் புனைவு சரவண கார்த்திகேயனின் அந்தக் கதை அவரது வலைப்பக்கத்தில் காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2/2023 இல் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. கதையின் தலைப்பு: கல்லளை. உண்ணாவிரதமிருந்து உயிர்விட்ட விடுதலைப்புலி, திலீபனைத் தமிழின் தொன்மக்கதாபாத்திரமாக முன்வைத்துள்ள கதை அது. கவனிக்கவும...

தேர்தல் அரசியல்: இருவகை ஆதிக்கம்.

படம்
தேர்தல் அரசியலில் வெற்றியைத் தருவதில் முதல் இடம் பணத்திற்கா? சாதிக்கா? என்ற கேள்வி எப்போதும் இருக்கிறது. பொதுத்தேர்தல்களில் சாதியும் இடைத்தேர்தல்களில் பணமும் முதலிடம் பெற்று வெற்றியைப் பெற்றுத் தந்திருக்கின்றன என்பது தமிழகத் தேர்தல் வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும்.  கொள்கையையும் கோட்பாட்டையும் முன்வைத்து அரசியல் கட்சிகள் தொடங்கப் படுகின்றன.ஆனால் அவற்றைச் சொல்லி மட்டுமே தேர்தல் வெற்றியைப் பெற்றுவிட முடியும் என நம்பும் கட்சிகள் இந்தியாவில் மிகக்குறைவு. 75 ஆண்டு காலத் தேர்தல் அரசியலில் இடதுசாரிகள் மட்டுமே கொள்கைப்பற்றோடு, அதனை மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார்கள். அதிகமும் தோற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

பார்க்கத்தக்க இரண்டு சினிமா

படம்
இப்போது பெரும்பாலான சினிமாக்களை இணையச்செயலிகள் வழியாகவே பார்க்கிறேன், திரை அரங்கம் சென்று சினிமா பார்த்து, சுடச்சுட விமரிசனம் எழுதிய காலம் முடிந்துவிட்டது.   நான் திரை விமர்சனங்கள் எழுதிய இதழ்களின் தேவையை நிரப்பப் பலரும் காத்திருக்கிறார்கள். என்றாலும் எனது பரிந்துரைகளைச் செய்கிறேன். என்னைப் போலவே செயலிகளின் வழியாகப் படம் பார்ப்பவர்களுக்கு இந்தப் பரிந்துரைகள் பயன்படக்கூடும்.